15 July 2017

கணவனின் செல்லப் பெயர் 'டாபர்மேன் ' :)

போக வேண்டியது போகவில்லை :)            
                      ''ஏண்டி  ' நாலே  நாளில் முகத்தில் உள்ள   கரும்புள்ளிகள்  மாயமா மறைஞ்சுடும்,இல்லேன்னா பணம் வாபஸ் 'னு போட்டு இருந்ததை நம்பி பத்தாயிரம் ரூபாய் கட்டினியே ,என்னாச்சு ?''
                 ''மாயமாப் போச்சு ,அந்த பியூட்டி பார்லர் !''

நாத்திகம் வளர இதுவும் ஒரு காரணமா :)
              ''என்னங்க ,கல்யாணமான ஒரே மாசத்தில் நாத்திகனா மாறிட்டீங்களே .ஏன் ?''
               ''அறிவான மனைவி வேணும்னு வேண்டிகிட்டிருந்தேன் ,அது நடக்கலையே !''
கணவனுவனின் செல்லப் பெயர் 'டாபர்மேன் ' :)
             ''எப்போ பார்த்தாலும் உன் வீட்டுக்காரர்  கத்திகிட்டே இருக்காரே , அவர்கூட  எப்படி வாழ்ந்துகிட்டிருக்கே ?''
             ''குரைக்கிற நாய் கடிக்காதுங்கிற நம்பிக்கையில்தான் !''

வேலைக்காரி அவசியம் வேணும் :)
           ''உன் வீட்டுக்காரர் எப்போ காணாம போனார் ?''
            ''வேலைக்காரி  வராத நாளில்  இருந்து !''
            ''அடப்பாவமே ,இனி என்ன செய்யப்போறே ?''
            ''வேற வேலைக்காரியைத் தேட வேண்டியதுதான் !''

உன்னில் விழுந்தேன் எழத்தான் முடியவில்லை :)
     இதயத்தில் CATWALK வந்துக் கொண்டிருந்த 
     உலக அழகிகளும்  உள்ளூர் அழகிகளும் எங்கே போனார்களோ தெரியவில்லை ...
     என் கண்ணில்  நீ விழுந்த பின்பு !

மொபைல்வாசிகள், தமிழ்மண வாக்களிக்க  இதோ லிங்க் ...http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1466418

24 comments:

  1. பியூட்டி பார்லரே மாயமாப்போச்சா ?

    ReplyDelete
    Replies
    1. போனால்தானே ,அடுத்து பெரிய ஊர்லே பெரிய அளவில் பியூட்டி பார்லர் ஆரம்பிக்க முடியும் :)

      Delete
  2. Replies
    1. டாபர் மேன் குரைத்தாலும் அழகுதானே :)

      Delete
  3. கரும்புள்ளிகள் எல்லாம் மறைந்து முகமே கருப்பா மாறிடுச்சு...!

    அரிவா(ள்)னா மனைவின்னு கேட்டிடுச்சு போல...!

    அந்த நாய் வாலை ஆட்டாதில்ல... ஒட்டி நறுக்கிட்டேன்...!

    வேலைக்காரியைத் தேடுவதைவிட வேலைக்காரனைத் தேட வேண்டியதுதானே...!

    எங்கு போய் இருப்பார்கள்... வேறு யார் நம்மை பார்ப்பார்கள் என்று அங்குதான் சென்றிருப்பார்கள்...!

    த.ம. 4

    ReplyDelete
    Replies
    1. இதுக்கு பத்தாயிரம் வேறு தண்டம் :)

      கையைத் தட்டி எழுப்பி வேண்டிகிட்டிருக்கணுமோ:)

      வால் ஆட்டாது ,குரைக்காம இருக்குமா :)

      உங்க யோசனையை ஏற்கனவே செயல் படுத்தியதால் வந்த வினைதானே இது :)

      அதானே ,உலகத்திலே ஜொள்ளு விட ஆளா இல்லே:)


      Delete
  4. //''குரைக்கிற நாய் கடிக்காதுங்கிற நம்பிக்கையில்தான் !''//

    காது போனா பரவாயில்லையா?!

    ReplyDelete
    Replies
    1. காதுலே பஞ்சை அடைச்சுக்க வேண்டியதுதான் :)

      Delete
  5. கரும்புள்ளிகள் மறைந்ததா
    உலகில் நிறைய பேர் நாத்திகர்களாகி இருக்க வேண்டுமே
    சில நேரங்களில் நம்பிக்கை பொய்க்கலாம்
    வேலைக்கார வீட்டுக்காரர்
    கண்ணில் விழுந்து ஐ வாக் செய்கிறாயே

    ReplyDelete
    Replies
    1. பியூட்டி பார்லர் நடத்தின பெரும்புள்ளி தலைமறைவாகி விட்டார் :)
      எதுக்கு ரிஸ்க் என்று யாரும் வேண்டிகிட்ட மாதிரி தெரியலையே :)
      அது விதிவிலக்கு ஆனதால் கடியை வாங்கிக்கலாம் :)
      சேட்டைக் கார வீட்டுக்காரரும் :)
      சும்மா ஐ வாஷ் இல்லையே நீங்க சொல்றது :)

      Delete
  6. இதுக்குதான் நான் பீட்டி பார்லருக்கே போறதில்லண்ணே

    ReplyDelete
    Replies
    1. அப்படியே வாரிசுகளையும் வளர்த்துவிட்டா நல்லது :)

      Delete
  7. சபாஷ்..வீட்டுக்காரி என்று சொல்லலாம்ல.......

    ReplyDelete
    Replies
    1. நாய்க்கு நல்ல மரியாதை கொடுக்கும் வீட்டுக்காரிதானே:)

      Delete
  8. குரைக்கிற நாய் கடிக்காது நல்ல ஜோக்கு

    ReplyDelete
    Replies
    1. உண்மைதானே ,குரைக்கும்போது எப்படி கடிக்க முடியும் :)

      Delete
  9. மாயமாய் மறைந்தது
    டாபர்மேன், வேலைக்காரி
    மூன்றையும்
    நினைத்து நினைத்துச் சிரித்தோம்
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்களுடன்

    ReplyDelete
    Replies
    1. மாயமாய் மறைவது எல்லாமே வில்லங்கம் தானே :)

      Delete
  10. எல்லாம் ரசித்தேன்.

    "என் கண்ணில் நீ விழுந்த பின்பு !" - இன்னுமா உலகம் இந்த ஸ்டேட்மென்ட்லாம் நம்புது. அதான் 'மோ 30 நாள் ஆ 60 நாள்' னு எழுதியிருக்காங்களே

    ReplyDelete
    Replies
    1. நீங்க சொல்ற பழமொழி ,கழுத்தில் தாலி விழுந்த பின்பாச்சே :)

      Delete
  11. அறிவான மனைவி வாய்ப்பது அரிதுதானே அய்யா :)

    ReplyDelete
  12. 'டாபர்மேன் 'பொருத்தமான பெயர்தானே :)

    ReplyDelete
  13. மிக மிக இரசித்தேன் சகோதரா.
    தமிழ் மணம் - 18
    https://kovaikkothai.wordpress.com/

    ReplyDelete
    Replies
    1. ஐந்தாம் நாள் வருகைக்கு மிக்க நன்றி சகோ :)

      Delete