8 July 2017

மாமியார் அவ்வளவு மோசமா :)

            ''உன்  மருமகள் நடத்துற பியூட்டி பார்லர்  கடைக்குப் போய் ,எதுக்கு சண்டை போட்டே ?''
          ''என் போட்டோ கீழே 'என்னைப் பார் யோகம் வரும்'னு  எழுதி போட்டிருக்காளே!''


பதவி உயர்வு எப்படி வந்ததுன்னு தெரியுதா :)          
           ''எனக்கு சீக்கிரமே பிரமோஷன் வந்ததை  பாராட்டி , ஊது வத்தி பாக்கெட்டை பரிசா தர்றீங்களே,ஏன் ?''

             ''நீங்கதான் வத்தி வைக்கிறதில் கெட்டிகாரராச்சே !''

இது ஒரு குற்றமாய்யா :)         
           ''நீங்க வெள்ளையை  கருப்பாக்கிறதா ,எங்களுக்கு தகவல் வந்திருக்கு ,அதனாலே கைது பண்றோம் !''
           ''தப்பா புரிஞ்சுகிட்டு இருக்கீங்க ,நான் வெள்ளை மயிருக்கு கருப்பு டை அடிக்கிற சாதாரண பார்பர் ,சார் !''  
இவருக்கு தேச பக்தி  ஜாஸ்தி :)
            ''உன் வீட்டுக்காரருக்கு புட் பால்னா   பிடிக்காதுன்னு  சொல்றே,பிறகேன் மேட்ச் பார்க்க பிரேசிலுக்கு போயிருக்கார் ?''
            '' நூறு கோடி ஜனத்தொகை உள்ள இந்தியாவில் இருந்து விளையாடத்தான் ஆளில்லை ,வேடிக்கைப் பார்க்கவுமா   ஆளில்லேன்னு யாரும் கேட்டுறக் கூடாதுன்னு தான் ! ''

ஊரே டாஸ்மாக் 'தண்ணி 'காடாயிடுச்சே :)
       ''ஊர்லே மழை எல்லாம் எப்படி பெய்யுது ?''
       ''தண்ணியா தான் !''

கன்னியை கடவுளாய் காண்கிறாரோ கவிஞர் :)
'சேலைக் கட்டும் பெண்ணுக்கொரு வாசமுண்டு கண்டதுண்டா ,
கண்டவர்கள் சொன்னதுண்டா 'ங்கிற பாடலைக் கேட்கையில் நினைவுக்கு வருவது ...
கண்டவர் விண்டிலர் ,விண்டவர் கண்டிலர் !

மொபைல்வாசிகள் தமிழ்மண  வாக்களிக்க  இதோ லிங்க் ......http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1465669

36 comments:

  1. மழை தண்ணியாக பெய்யுதா ?

    ReplyDelete
    Replies
    1. அமிலமாக பெய்யும் நாள் வரத்தானே போவுது :)

      Delete
  2. மழை தண்ணியா மேல இருந்து
    பெய்யும் எனக் கூட குழ்ந்தைகளுக்கு
    சொல்லித் தருகிற நிலைகூட
    போகிற போக்கைப் பார்த்தால்
    வந்து விடும் போலத்தான் உள்ளது

    மாமியார் பட விஷயம் அருமை

    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
    Replies
    1. மழையைப் பார்க்கும் பாக்கியம்,இன்னும் எத்தனை தலை முறைக்கோ :)
      இப்படியா அவமானப் படுத்துவது :)

      Delete
  3. அந்தக் கழுதைக்குத் தெரியுமா கற்பூரவாசம்...?!

    நெருப்பு இல்லாமல் புகை(ய) இலையை விக்க கையூட்டு வாங்கிய கெட்டிகாரராச்சே...!

    கருப்பு என்று சொன்னால் அஃது இரு கட்சிக்கும் பொதுவில் வைப்போம்...!

    ‘காலா’ இங்கே வாடா... உன்னை காலால் உதைக்கிறேன்...!

    ‘பெய்யெனப் பெய்யும் மழை...!’

    ‘கண்டவர்கள் சொன்னதில்லை... பாடியதுண்டு...!’ சொல்லாதே யாரும் கேட்டால்...!

    த.ம. 4





    ReplyDelete
    Replies
    1. எந்தக் கழுதைக்குத் தான் தெரியும் :)
      அது வேற உண்டா :)
      இரு பாலுக்கு பொதுவிலும் வைக்கலாமே :)
      பாலுக்கும் அதே பெயரா :)
      பேயாகவும் பெய்யக் கூடும் :)
      சொல்லில் வராதா அந்த வாசம் :)

      Delete
  4. //''நீங்கதான் ‘வத்தி’ வைக்கிறதில் கெட்டிகாரராச்சே !''//

    புத்திசாலி!

    ReplyDelete
    Replies
    1. தீயாய் வேலை செய்யும் குமார் இவர்தானா :)

      Delete
  5. ரசித்தேன்.

    தமிழ்மணம் - ஏழாம் வாக்கு!

    ReplyDelete
    Replies
    1. நல்லது ,ஏழாம் வாக்குதான் பல நேரம் ஏழரைச் செய்யும் :)

      Delete
  6. Replies
    1. தொழிலில் சிறக்க வாய்ப்புண்டா :)

      Delete
  7. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. விளம்பரம் இங்கே வேண்டாமே :)

      Delete
  8. வத்தி மழை அருமை!

    ReplyDelete
    Replies
    1. அந்தி மழை உண்டு ,வத்தி மழையா :)

      Delete
  9. மோசம் என்னதால்தானே...யோகம் வரும் என்று மாட்டியிருக்கு....

    ReplyDelete
    Replies
    1. நல்ல யோகம் வரட்டும் :)

      Delete
  10. மோசம் என்பதால்தானே...யோகம் வரும் என்று மாட்டியிருக்கு....

    ReplyDelete
    Replies
    1. மோசத்துக்கு இப்படியும் ஒரு நல்ல குணாம்சம் இருக்கா :)

      Delete
  11. கழுதைப்படத்தின் கீழ் அல்லவா அப்படி எழுதுவார்கள்
    வத்தி வைத்தால் ப்ரொமோஷனா
    கருப்பை வெள்ளையாக்குவது தானேகுற்றம்
    மழை தண்ணியாகத்தானே பெய்யும்
    அப்போது எத்தனை கடவுளைக் காணலாம்

    ReplyDelete
    Replies
    1. அதனாலேதானே இந்த சண்டை :)
      ஜால்ராவும் இதுவும் ஒண்ணுதானே:)
      பதுக்கினாலும் குற்றம்தானே :)
      நிறைய பெய்யுதான்னு கேட்டிருக்கணுமோ :)
      சொன்னால்தானே தெரியும் :)

      Delete
  12. ​​வத்தி வைக்கிற ஜோக் அருமை!

    ReplyDelete
    Replies
    1. சுயநலக் காரனுக்குப் புத்தி மட்டு :)

      Delete
  13. வத்தி வைக்கறது..ஹஹஹஹ.அனைத்தும் ரசித்தோம்..ஜி

    ReplyDelete
    Replies
    1. இதை பரிசாய் தந்து மற்றவர்கள் கிண்டல் செய்வதைக் கூட புரிந்து கொள்ள முடியாதவனுக்கு ஏது சுயமரியாதை :)

      Delete
  14. நல்ல மருமகள்.
    மழை தண்ணி பெய்து நாடு நன்றாக இருக்கட்டும்.அமில மழை வேண்டாம்.

    ReplyDelete
    Replies
    1. பியூட்டி பார்லருக்கு வருகிறவர்களுக்கு அலங்காரம் செய்துவிட்டு,மாமியாரை அலங்கோலம் செய்யும் இவரா நல்ல மருமகள் :)
      நல்லவர்கள் இருப்பதால் மழை பெய்கிறது ,நல்லவர்கள் இல்லைன்னா அமில மழைதானே :)

      Delete
  15. வத்தி ஜோக் நல்லாருக்கு. நம்ம ஊருலதான் நல்ல மழைனா என்னன்னு காண்பிக்கலாம். போகிறபோக்கில் அதற்கும் பிரச்சனை வந்துடும்போலிருக்கிறது. த ம

    ReplyDelete
    Replies
    1. வத்தி வைக்கிறவனுக்கு மனசாட்சியே இருக்காதா :)
      கார்பன் வானத்தில் அதிகம் சேர சேர ஆபத்துதானே :)

      Delete
  16. சிரிப்பு மழை.தொடர்ந்து தூறலாய்,,,/

    ReplyDelete
    Replies
    1. தூறலில் நனைவதும் சுகம்தானே :)

      Delete
  17. கறுப்பு வெள்ளை - பார்பர் கதை - தண்ணீர் - ஓதவத்திக் கதைகளை இரசித்தென் சகோதரா.......
    தமிழ் மணம். .16
    https://kovaikkothai.wordpress.com/

    ReplyDelete
    Replies
    1. வழுக்கைமண்டைக் காரனுக்கு இந்த கருப்பு வெள்ளைப் பிரச்சினையே இல்லை :)

      Delete
  18. வத்தி வைச்சு பதவிக்கு வந்தவருக்கு யார் வத்தி வைப்பது ?

    ReplyDelete
    Replies
    1. வில்லனுக்கு வில்லன் வராமலா போயிடுவான் :)

      Delete