28 July 2017

கணவனின் ஆசியும் மனைவிக்கு சாபமா :)

            ''உன்னை 'தீர்க்க சுமங்கலி பவ 'என்று , நான் வாழ்த்தவே கூடாதா ,ஏன் ?''
             ''எனக்கு முன்பே  சீக்கிரம் தொலைஞ்சு போங்கிறதுதானே அதுக்கு அர்த்தம் ?''

விரலுக்கேற்ற  வீக்கம் தானே :)           
            ''ஆண்டிராய்ட்  செல் வாங்கிக் கொடுக்கன்னு கேட்டா ,சம்பளச் சிலிப்பை  ஏன் காட்டுறீங்க அப்பா ?''
          ''என், குறைந்த பேஸிக் சம்பளத்துக்கு பேஸிக் மாடல்தானே  வாங்கித் தர முடியும் !''
அர்த்தம் தெரியாட்டி சொல்லலாமா :)
             ''எல்லோரும் உன்னிடம்  துக்கம் விசாரிக்கிறாங்களா ,நான் என்னம்மா தப்பா சொல்லிட்டேன் ?''
             ''நான்  அபார்ட்மெண்ட்டுக்கு  போனதை ,அபார்சனுக்கு போனதா சொல்லி இருக்கீங்களேப்பா !''

சீக்கிரமே இந்நிலை வந்து விடும் :)
            ''உங்க காதிலே என்ன பிரச்னைன்னு கேட்டா , செல்போனில் கேளுங்கன்னு எதுக்கு ஜாடை காட்டுறீங்க ?''
            ''நேரிலே யார் பேசுறதும் காதுக்கு கேட்கலே ,செல்போன்லே பேசுறது மட்டும்தான் கேட்குது டாக்டர் !''

சிறப்பாய் 'குடி'த்தனம் நடத்தும் தம்பதியர் :)
         'யோவ் தரகரே ,உங்களுக்கே இது நியாயமா ?''
         ''எது ?''
          'நான் குடிகாரங்கிறதை மறைத்து  கல்யாணத்தை முடிச்சு வைச்சீங்க சரி ...பொண்ணு குவாட்டரை ராவா ஒரே மூச்சிலே குடிப்பான்னு  ஏன் சொல்லலே !''

மொபைல்வாசிகள், தமிழ்மண வாக்களிக்க  இதோ லிங்க் ....http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1467604

32 comments:

  1. ரசித்தேன்.

    த.ம. முதலாம் வாக்கு!

    ReplyDelete
    Replies
    1. தீர்க்க சுமங்கலி பவ என்பதற்கு இப்படியும் ஒரு கோணம் உண்டுதானே :)

      Delete
  2. அப்ப... ஒனக்கு முன்னாடியே நான் போய்ச் சேரணுமுன்னு நெனக்கிறியா...?!

    பேஸிக் மாடல்ன்னு பேசிக்கிட்டே இருக்காதிங்க... 1500 கட்டினா பின்னாடி பணத்தைத் திருப்பித் தாராங்களாம்... ஆகா வந்திடுச்சு... ஆசையில் ஓடிவந்தேன்...!

    அப்பரசட்டிகளுக்கு அதெல்லாம் புரியாதும்மா...!

    ‘முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்’ இதுதானோ...? காது கொடுத்துக் கேட்க... மெஷின வச்சிக்கிட்டுப் போங்க...!

    நீங்க சொன்னதத்தான் பொண்ணு வீட்லயும் சொன்னாங்க அய்ய்யா...!

    த.ம. +1

    ReplyDelete
    Replies
    1. உங்களை அனுப்பிட்டா எனக்கு நிம்மதி :)

      அந்த கீ பேட் செல் எனக்கு வேணாம் :)

      புரியாட்டி ஏன் பேசணும் :)

      o e போல எதுவும் வருமா :)

      நோ பிராப்ளம் :)

      Delete
  3. அனைத்தையும் ரசித்தேன். தீர்க்க சுமங்கலி வாழ்த்துக்கு இப்படியும் அர்த்தம் இருக்கா! அபார்ட்மெண்ட் - அபார்ஷன் ... ஹா.... ஹா.... ஹா...

    ReplyDelete
    Replies
    1. காலம் மாறுது அர்த்தமும் மாறத்தானே செய்யும் :)



      Delete
  4. Replies
    1. செல் மூலமா ,இது போதும் :)

      Delete
  5. குடிகாரனுக்கு குடிகாரி நல்ல பொருத்தம்தானே...

    ReplyDelete
    Replies
    1. சம உரிமை வேண்டாமா :)

      Delete
  6. குடிகாரனுக்கு குடிகாரி நல்ல பொருத்தம்தானே...

    ReplyDelete
    Replies
    1. யாருக்கு அமையும் இப்படி பொருத்தம் :)

      Delete
  7. தீர்க்க சுமங்கலி பவ... சூப்பர்

    தம.6

    ReplyDelete
    Replies
    1. பெண்ணை ஏமாற்றும் ஆசி தானே இது :)

      Delete
  8. அபார்ட்மெண்ட் அபார்ஷன் ஹஹஹ

    தீர்க்க சுமங்கலி பவ... அட!....

    ரசித்தோம் ஜி

    ReplyDelete
    Replies
    1. ஒன்று பிளஸ் ஒன்று மைனஸ் அர்த்தமாகி விடுதே :)

      பெண் மட்டும் ஈனா வானாவா :)

      Delete
  9. Replies
    1. மாதேவி நீங்களே சொல்லுங்க ....தீர்க்க சுமங்கலி சரிதானா :)

      Delete
  10. Replies
    1. சுமங்கலி கேட்பது நியாயம்தானே :)

      Delete
  11. குடிகாரனுக்கு ஏத்த குடிகாரி நன்று
    த.ம. வாக்கு

    ReplyDelete
    Replies
    1. குழந்தைங்க பாவம் :)

      Delete
  12. பவ என்றாலே..தொலஞ்சு போ...என்றுதானே அர்த்தமாகிறது

    ReplyDelete
    Replies
    1. தொலஞ்சு போக மனசு வருமா :)

      Delete
  13. விரலுக்கேற்ற வீக்கம் தானே :)

    'தீர்க்க சுமங்கலி பவ '
    அருமை.

    ReplyDelete
    Replies
    1. இந்த காலத்து பிள்ளைங்களுக்கு இது புரிய மாட்டேங்குதே ;)

      Delete
  14. “நேரிலே யார் பேசுறதும் காதுக்கு கேட்கலே ,செல்போன்லே பேசுறது மட்டும்தான் கேட்குது டாக்டர் !''
    உங்களின் கணிப்பு சரிதான்.சீக்கிரமே இந்த நிலை வந்துவிடும்.
    இரசித்தேன்!

    ReplyDelete
    Replies
    1. ஒரு சிலர் செல்லும் காதுமாவே இருப்பது சரிதானா :)

      Delete
  15. தீர்க்க சுமங்கலி பவ வாழ்த்தை கணவனுக்கு எப்படிக் கூறலாம்கணவன் தொல்லை நீங்க இதுஒரு வரம் போலும்
    போனின் முக்கிய பணி பேசவும் கேட்கவும்தானே அதைப் பேசிக் போனில் செய்யலாமே
    இதுக்குப் போய் அலடிக்கலாமா டங் ஆஃப் தெ ஸ்லிப்தானே
    இந்த நிலை வந்தாலும் வரலாம்
    எத்தனை முறை பெண்ணை குடிக்க வைக்கிறீர்கள்

    ReplyDelete
    Replies
    1. பெண்ணை ஏமாற்ற கதைகட்டி வைத்து இருக்கிறார்கள் :)
      பிள்ளைங்க செல் மூலம் நிறைய வேலை செய்கிறார்களே :)
      நல்லபடியா ஸ்லிப் ஆனால் பரவாயில்லை :)
      நமக்கு வராது :)
      அடிமையானபின் செய்ய வேண்டியதில்லை :)

      Delete
  16. தமிழ் மணம் 14
    அருமை .அனைத்தும் இரசித்தென் சகோதரா.
    https://kovaikkothai.wordpress.com/

    ReplyDelete
    Replies
    1. கணவன் வாழ்த்துக்கும் இப்படி குற்றம் சொல்லலாமா :)

      Delete