16 July 2017

நல்ல சமையலை நள[ன்]பாகம் என்பதால் ...:)

 இதுக்குமா பஞ்சு உதவுது :)            
           '' பனி இன்னும் கொட்ட ஆரம்பிக்கலையே ,தூங்கப் போறதுக்கு முன்னால் காதுலே ஏன் பஞ்சை அடைச்சுக்கிறே?''
             ''உங்க குறட்டைச் சத்தம் நுழையக் கூடாதுன்னுதான் !''

இந்த யோசனைக்கு நிச்சய பலன் உண்டு  :)
          ''  தியானத்தில் ஓம்னு  சொல்லிப் பார்த்தேன் ,நிம்மதி  கிடைக்கலே !''

          ''பெண்டாட்டிப் பேச்சுக்கெல்லாம் ஆம்னு சொல்லிப் பாரேன் !''

இளநீராய் இனித்த காதல் ,இப்போ ?
            ''நீ காதலிக்கு வாங்கிக் கொடுத்த இளநீரால் காதலே முறிஞ்சுப்போச்சா ,ஏன் ?''
            ''அவ குடிச்ச இளநீர் வழுக்கையை,நானே சாப்பிட்டது  அவளுக்குப் பிடிக்காம போச்சே  !''
நல்ல முன் எச்சரிக்கைதான் :)           
             '' கூட்டிப்  பெருக்க மட்டும் தெரிந்த வேலைக்காரி தேவைன்னு உங்க மனைவி சொல்றாங்களே ,ஏன் ?''
             ''வர்ற வேலைக்காரி ,என் மனைவி கிட்டேயிருந்து என்னைக் 'கழித்து' , புது வாழ்க்கை 'வகுத்து' விடக் கூடாதுன்னுதான் !''

நல்ல சமையலை நள[ன்]பாகம் என்பதால் ...:)
இடதுகைப் பழக்கமோ ,வலது கைப் பழக்கமோ ...
சமையல் தெரிந்தால் போதும் என்பதே 
இன்றைய மணமகளின் எதிர்பார்ப்பு !

மொபைல்வாசிகள், தமிழ்மண வாக்களிக்க  இதோ லிங்க் ...http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1466512

24 comments:

  1. வழக்கம் போல

    ReplyDelete
    Replies
    1. அருமையா .ரசித்தேனா :)

      Delete
  2. கணக்குப் பண்ணும் கணவன் பற்றிய ஜோக்கை ரசித்தேன்!​

    ReplyDelete
    Replies
    1. ஓ ,இதுக்கு பேர்தான் கணக்கு பண்றதா :)

      Delete
  3. Replies
    1. கூட்டிக் கழித்து பார்த்தால் சரியாகுதா :)

      Delete
  4. முன்னெச்சரிக்கை சரிதான் ஜி

    ReplyDelete
    Replies
    1. சும்மா ஜோக்குக்கு சொல்லலாம் ,உண்மையில் பாவம்க வேலைக்காரிகள் :)

      Delete
  5. Replies
    1. நளபாகச் சமையல் அருமைதானே :)

      Delete
  6. பஞ்சுக்கு பல உபயோகம்
    ஒன்றின் திரிபுதான் இன்னொன்று அல்லவா
    இளநீரை விட வழுக்கையை ரசிப்பவர் என்று தெரியவில்லையோ
    கூட்டிப் பெருக்கி கழித்து வகுக்கக் கூடாது போல் தெரிகிறது
    சமைக்கத்தெரிவது நல்லதுதானே இருவருக்கும்



    ReplyDelete
    Replies
    1. இது ரொம்ப முக்கியமில்லையா :)
      ஓமில் ஆமும் அடக்கம்தானே :)
      காதலியும் மறக்கும் அளவுக்கா :)
      நாலையும் செய்தால் நாலு பேர் நாலு விதமா பேசுவாங்களே :)
      இருவருக்கும் தெரிந்தால் இன்னும் நல்லது :)

      Delete
  7. என்ன சத்தம் இந்த நேரம் உயிரின் ஒலியா...?!

    பெண்டாட்டிப் பேச்சுக்கெல்லாம் தலையாட்டணும்...!

    இளநீர அவ குடிச்ச வாயில நீங்க ஸ்டாரா போட்டு உறிஞ்சினா... ஸ்டாங்காயிருக்கும்...காதல்...!

    வாழ்க்கையே டிவைடிங் சிஸ்டம்தானே... சிஸ்டம்தான் ரொம்ப கெட்டுப்போச்சோ...!

    பாஸ்... பாஸ்... நீங்க பிக் பாஸ்...!

    த.ம. 8


    ReplyDelete
    Replies
    1. உயிரின் ஒலி குறட்டைக் காரனுக்கு மட்டுமா :)

      நீங்க முட்டாளான்னு கேட்டாலுமா :)

      டபுள் 'ஸ்ட்ரா'ங் ஆகுமே :)

      சிஸ்டம் கெட்டுப் போச்சுன்னுதான் எல்லோருக்கும் தெரியுமே :)

      சமையல்தான் பீக் ஆப் த பாஸ்ஆ:)

      Delete
  8. // ''பெண்டாட்டிப் பேச்சுக்கெல்லாம் ஆம்னு சொல்லிப் பாரேன் !''//

    பயனுள்ள வாழ்க்கைத் தத்துவம்!

    ReplyDelete
    Replies
    1. இல்லாதவங்க யாருக்கு ஆம்னு சொல்றது :)

      Delete
  9. இந்த யோசனைக்கு நிச்சயம் பலன் உண்டு உங்களுக்கும் எல்லோருக்கும்தான்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் சாமிக்கு எந்த கஷ்டமும் வராது :)

      Delete
  10. கோழி குருடாகவோ..நொண்டியாகவோ இருந்தால் என்ன கொழம்பு ருசியா இருந்தால் சரி....அப்படித்தானே ...நண்பரே

    ReplyDelete
    Replies
    1. பிளாஸ்டிக் அரிசியை தின்னும் போது குருட்டுக் கோழியைச் சாப்பிடலாமே :)

      Delete
  11. என்ன ஜி..இங்க உள்ள லுங்க் பிய ஒட்டு போட்டாலும்...போட்டாச்சு னு சொல்லுது...

    அனைத்தும் ரசித்தோம் ஜி..

    ReplyDelete
    Replies
    1. சில நேரம் எனக்கும் இதே பிரச்னை ஒரு சில மணி நேரம் கழிந்த பின் சரியாகிறது :)

      Delete
  12. இந்த யோசனைக்கு நிச்சய பலன் உண்டு :)//
    நல்ல யோசனை.

    ReplyDelete
    Replies
    1. நீங்களே கூறுவதால் நம்பத்தான் வேண்டியிருக்கு :)

      Delete