6 July 2017

எப்போ புளிப்பா திங்கணும்னு ஆசை வரும் :)

மக்கள் சேவைன்னா இதுவல்லவா மக்கள் சேவை :)
             ''இந்த ரயில்லே டிக்கெட் செக்கர்  கூடவே ஒரு பாடி பில்டரையும் கூட்டிட்டு வர்றாரே ,எதுக்கு ?''              
               ''திறக்காத ஜன்னல்களைத் திறந்து விடத்தான் !''

இதுக்குமா கைது பண்ணுவாங்க :)             
         '' என் பையனை எதுக்கு கண் டாக்டரிடம் காட்டச் சொல்றீங்க ?''

          ''ஹெராயினுடன்  வந்த ஹீரோ கைதுங்கிறதை ,ஹீரோயினுடன் வந்த ஹீரோ கைதுன்னு வாசிக்கிறானே !''

எப்போ புளிப்பா திங்கணும்னு ஆசை வரும் :)
               ''என் காதலி கழுத்துலே சீக்கிரம் தாலியைக் கட்டுறது நல்லதா  ஏன் ?''
               ''சுண்டல் மட்டுமே தின்னுக்கிட்டிருந்த உங்க காதலி, புளிச்ச மாங்காய்  கேட்டு வாங்கி சாப்பிடுறதைப் பார்த்தா சந்தேகமாயிருக்கே !''

யுஸ்டு சப்பல் ஷோ ரூம் வச்சிருப்பாரோ :)
        ''உள்ளூர்லே இருந்தும் என் கல்யாணத்திற்கு நீ ஏன் வரலே ?''
        ''செருப்புக்கு டோக்கன் குடுக்கிற  கல்யாண மகால்லே நுழையக்கூடாதுங்கிறதை என் பாலிசியா வச்சிருக்கேனே !''

பழைய வர்ணனை இப்போது பொருந்தாது :)
 ஆப்பிள் போன்ற கன்னங்கள் என்று வர்ணிக்க முடியவில்லை ...
ஆப்பிள் மேலும் செயற்கையாய் மெழுகுப் பூச்சு !
மொபைல்வாசிகள் தமிழ்மண  வாக்களிக்க  இதோ லிங்க் .......http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1465491:)

34 comments:

  1. ஆம் ஆப்பிள் மேலும்
    கன்னத்தைப் போலவே..

    மாங்காய் ஆசை விஷயம்
    ஒரு எச்சரிக்கை மணிதான்

    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
    Replies
    1. இரண்டுமே மெழுகு பூச்சா ஆயிடுச்சே :)

      திருமணத்தன்றே வளைக்காப்புமா:)

      Delete
  2. ரசித்தேன்.

    தமிழ்மணம் வாக்களிக்க முடியவில்லை. பாஸ்வ்ர்ட் மறந்து விட்டது. 'நினைவில் கொள்' வகையறாவில் வைத்திருந்ததால் வந்த வினை. ஓ எஸ் ரீ இன்ஸ்டால் செய்ததில் தடுமாற்றம்.

    ReplyDelete
    Replies
    1. நேற்று தமிழ்மணப்பட்டையைக் காணோம் ,இன்று தமிழ்மண பாஸ்வேர்ட் மறந்து விட்டதா ?அய்யகோ,ஸ்ரீ ராம் ஜிக்கு வந்த சோதனை :)

      Delete
    2. தம வாக்கிட்டு விட்டேன்!!!!

      Delete
  3. பெண்களிடமிருந்து பாதுகாக்க ஒரு தற்காப்பு நடவடிக்கையா...?!

    எதுக்கு கண்டாக்டர்... எழு(த்)தப் படிக்க கத்துக் கொடுங்க...!

    கவலைப்படாதே... இன்னும் மூனுமாசம் திங்கப் போறாள்... அவ ஆசைய ஏன் கெடுப்பானே...!

    இனிமே... செருப்புக்கு டோக்கன் குடுக்கிறவனா மாறிட வேண்டியதுதான்...!

    ஆ...ப்பிள்... கன்னத்தில் என்னடி காயம் அது வண்ணக்கிளி செய்த மாயம்...!

    த.ம. 4

    ReplyDelete
    Replies
    1. பாடி பில்டர் ஜாக்கிரதையா இருந்தால் சரி :)

      கண் கோளாறு இல்லையா :)

      வளைக்காப்பு நடத்தி விடலாமா :)

      வேலியே பயிரை மேயலாமா :)

      மெழுகுப் பூச்சை கீறியதால் வந்த வினை :)

      Delete
  4. மெழுகு போன்ற கன்னங்கள் என்று ஜொள்ள"லாமோ..

    ReplyDelete
    Replies
    1. ஜொன்னாலும் தப்பில்லை :)

      Delete
  5. ''என் காதலி கழுத்துலே சீக்கிரம் தாலியைக் கட்டுறது நல்லதா ஏன் ?''//

    மாம்பழக் கன்னங்களைச் சுவைத்தவனுக்குப் புளிப்பு மாங்காய் வாங்கித் தரணும்னு தெரியாதா என்ன?!

    ReplyDelete
    Replies
    1. இவ்வளவு சீக்கிரம் வாங்கித் தரணுமான்னு யோசிக்கிறார் :)

      Delete
  6. புளிப்பு மாங்கா இனித்தது!

    ReplyDelete
    Replies
    1. உங்களுக்கு இனித்தால் தப்பில்லே :)

      Delete
  7. இயற்கை அழகுக்கு செயற்கை அழகு தேவையில்லைதானே :)

    ReplyDelete
  8. ஆப்பிள் கன்னங்கள்-அங்கயும் செயற்கைப் பூச்சுதான். பகவான்'ஜி கவனித்ததில்லையா?
    காதலி கழுத்துலே சீக்கிரம் தாலியைக் - இது காதலிச்சவனுக்கா அல்லது அவன் நண்பனுக்கா?
    ஹீரோயினுக்கும் ஹெராயினுக்கும் வித்யாசம் இருக்கா?
    த ம +1

    ReplyDelete
    Replies
    1. மெழுகுப் பூச்சு முதலில் வந்தது ஆப்பிளுக்கா ,கன்னத்துக்கா :)
      ஏற்கனவே உலப்பல்,இதில் நண்பன் வேறா:)
      ஹீரோவைப் பொறுத்தவரை வித்தியாசம் இருக்காது :)

      Delete
  9. ரசித்தேன் ஜி

    ReplyDelete
    Replies
    1. புளிச்ச மாங்காய் ருசிதானே :)

      Delete
  10. Replies
    1. மக்கள் சேவை சரிதானே ஜி :)

      Delete
  11. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. இங்கே விளம்பரம் வேண்டாமே விஜய் ஜி :)

      Delete
  12. ஜன்னல்கள் திறக்க பாடி பில்டரா ஆச்சரியம்தான்
    கண் டாக்டரிடம் அல்ல இப்படிப் படிப்பது வேறு ஒரு நோய் என்பார்கள் பெயர் மறந்துவிட்டது
    புளிச்ச மாங்காய் தின்பவர் எல்லாம் கருத்தரித்தவரா
    தொலைந்த செருப்புகளுக்கு அணுகவும் என்கிறாரோ பழைய செருப்புக்கடை வைத்திருப்பார்
    மாம்பழக்கன்னங்கள் எனலாமா

    ReplyDelete
    Replies
    1. ஒரு சில ஜன்னல்கள் திறக்க அவரால்தானே முடியும் :)
      வயசுக் கோளாறா :)
      அப்படித்தானே சொல்கிறார்கள் :)
      இன்று ஒரு செய்தி படித்தேன் ,அமெரிக்காவில் ஒருவர் விளம்பரத் தகடுகளை திருடுவதையே தொழிலாய் வைத்திருந்தாராம் :)
      கல்லிலே பழுக்காத மாம்பழம் எனலாம் :)

      Delete
  13. அத்திப்பழ கன்னம் என்று வர்ணிக்கும்போது ஆப்பிள் கன்னம் என சொல்லக்கூடாதா ? பதிவை இரசித்தேன்!

    ReplyDelete
    Replies
    1. அத்திப் பழம் நம்ம ஊர் பழம் ,ஆப்பிள் அப்படியா :)

      Delete
  14. சந்தேகம் சரியே...........

    ReplyDelete
    Replies
    1. சுண்டல் விற்கிறவர் தீர்க்கதரிசிதானா :) :)

      Delete
  15. ரசித்தேன் அனைத்துமே அருமை

    ReplyDelete
    Replies
    1. யுஸ்டு சப்பல் ஷோ ரூம் உங்க ஊர்லேயும் இருக்கா ஜி :)

      Delete
  16. காட்டுப்புலீயா.??... வீட்டுப்புளியா???

    ReplyDelete
    Replies
    1. புலியைக் கண்டால் வயிற்றில் வேண்டுமானால் புளி கரைக்கும்:)

      Delete
  17. அனைத்தும் ரசித்தோம்.....ஜி

    ReplyDelete
    Replies
    1. சுண்டல்காரனின் கிண்டலும் அருமைதானே :)

      Delete