2 July 2017

இளம்மனைவிக்கு தகுதி இருக்கா :)

படித்ததில் இடித்தது :)
               ''என்ன சொல்றீங்க ,சொன்னதைச் செய்யலே ,சொல்லாததைச் செய்யுதா இந்த அரசாங்கம் ?''
               '' நதிகளை ஒண்ணா இணைப்போம்னு சொன்னாங்க ,செய்யலே .....வரிகளை ஒரே வரி  ஆக்கிட்டோம்னு  சொல்றாங்களே !''
இடித்த செய்தி .....வரிகளை விட நதிகள் இணைவதுதானே முக்கியம் :)

இப்படி சொன்னா என்ன அர்த்தம் :)               
            ''ஏண்டி ,பேய் வர்றது நாய்ங்க கண்ணுக்கு தெரியும்னு  சொல்றாங்களே ,உண்மையா ?''

             ''என் கணவரிடம் கேட்டுச் சொல்றேண்டீ !''

இதில் கோபப்பட என்ன இருக்கு :)            
              ''போலீஸ்காரங்க  மட்டும் வசிக்கிற காலனியில் என்ன கலாட்டா ?''
             ''மாருதி காலனி  என்பதை யாரோ மாமூல் காலனின்னு அடிச்சு எழுதியிருக்காங்களாம்!''

மனைவி சொல்லே மந்திரம்னு இருந்தது , அந்தக் காலமா :)
          ''இது என்னடி அநியாயமா இருக்கு ,உன் வீட்டுக்காரர் திடீர்னு நாத்திகரா மாறிட்டாரா ,ஏண்டி ?''
          ''நம்ம ஒண்ணு நினைச்சா தெய்வம் ஒண்ணு நினைக்கும்னு சொன்னேன் ...அப்படின்னா,நாம எதுக்கு தெய்வத்தை நினைக்கணும்னு  கேட்கிறார்டி !''

குற்றமுள்ள நெஞ்சு குத்துதோ :)
         ''ரேசன் கடையைப் பூட்டுனோமா ,மாசமா இருக்கிற பெண்டாட்டியைப் போய் பார்த்தோமான்னு இல்லாமே ...தினசரி கோவிலுக்கு போய் என்ன வேண்டீக்கிறே ?''
         ''எடைக் குறைஞ்சாலும் பரவாயில்லை ,குறைப் பிரசவம் ஆகிவிடக்கூடாதுன்னுதான் !''

இளம்மனைவிக்குத்  தகுதி இருக்கா :)
முழுக்கைச்  சட்டையில்...
கணவன்  அழகாய் இருப்பதாக சொன்னாள் ...
ஜன்னல் ஜாக்கெட்டில் இருந்த இளம் மனைவி !
இந்த லிங்க் ...http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1465129செல் மூலமாய் 'தம'ன்னா  வோட் போடுவோரின் வசதிக்காக :)

22 comments:

  1. ஜன்னல் ஜாக்கெட் மனைவியின்
    குசும்பும், ரேசன் கடைக்காரரின் நினைப்பும்
    மாமூல் காலனியும் சூப்பர்
    வாழ்த்துக்களுடன்...

    ReplyDelete
    Replies
    1. தன்னை உணர்வாரா இளம் மனைவி :)
      குறை எடையைப் பற்றி அவருக்கு கவலையில்லை :)
      பாதிக்கப் பட்டவரின் செயல்தானே இது :)

      Delete
  2. நதிகள் இணைப்பில் வேறு சில பிரச்னைகள் வரும் என்றும் வாட்டர்மேன் உள்ளிட்ட சில நிபுணர்கள் கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்!

    மாமூல் நகர் சிரிக்க வைத்தது!

    ReplyDelete
    Replies
    1. வரிகள் இணைப்பில் பிரச்சினை இல்லையா என்ன ?நல்ல காரியத்தை இன்னும் எத்தனை நாள் தள்ளிப் போடுவார்கள் ?கஜானாவை நிரப்புவதில் செலுத்தும் கவனத்தை நதிகள் இணைப்பிலும் காட்டலாமே :)

      கையில் காசோடு மாமூல் நகர் பக்கமே போகக் கூடாதோ :)

      Delete
  3. அனைத்தையும் ரசித்தேன். முழுக்கை சட்டை ரசனை அருமை.

    ReplyDelete
    Replies
    1. சொல்லப் போனால், பெண்தானே முழுக்கை சட்டைப் போடணும்:)

      Delete
  4. சொல்லாதே யாரும் கேட்டால்... எல்லோரும் தாங்க மாட்டார்...!

    நாய்கள் கண்களுக்குத்தான் கலர் தெரியாதாமே... எல்லாமே கருப்புதான்... அதான்...!

    காலனி ஆதிக்கம் இன்னும் நம்ம விட்டுப்போனாபாடில்லை...! ‘மாருதி’ உட்பட...!

    ‘தெய்வம் நின்னு கொல்லு’முன்னு சொல்லலையா...!

    கோவில்லதான் எல்லா (ஆ)சாமிகளையும் பார்க்கலாம்...!

    அவளுக்கு மூட(ப்)பழக்கமில்லை...!

    த.ம. 4





    ReplyDelete
    Replies
    1. டிவியில் இன்று காட்டுவதைப் பார்த்தால் பற்றிக்கொண்டு வருகிறது ,பல வட மாநிலங்களில் வெள்ளம் ,இங்கோ குடிப்பதுக்கே தண்ணியில்லே :)

      எமன் என்ன ப்ளு ஜீன்ஸிலா வரப் போறார் :)

      இப்போதான் வானரப் படையின் அட்டகாசம் அதிகமாகி விட்டதே :)

      ஏன் உட்கார்ந்த நிலையில் தேவையான வேகம் கிடைக்காதோ:)

      சாமிகளை மட்டுமா :)

      இந்த பழக்கம் நடிகைக்குத் தானே தேவை :)


      Delete
  5. ஏதோ ஒன்று இணைந்தால் சரிதான் ஜி

    ReplyDelete
    Replies
    1. மக்களுக்கு எது இணைந்தால் நல்லது ஜி :)

      Delete
  6. எது முக்கியம் என்று தீர்மானிப்பது அரசல்லவோ
    இவர்களில் யார் நாய் யார் பேய்
    மாமூல் காலனி சரியில்லையா
    எடையைக் குறைப்பது வழக்கம்தானே பிரசவமப்படியா
    மூடுவது கணவனுக்கு அழகு காட்டுவது பெண்ணுக்கழகு


    ReplyDelete
    Replies
    1. தீர்மானிக்கட்டும் ,நதி நீர் இணைப்பு தேர்தல் வாக்குறுதியாச்சே,முதலிடம் கொடுக்க வேண்டாமா :)
      அந்த மனைவியின் கோணத்திலேயே பாருங்க :)
      ஒட்டுமொத்தமா இப்படி சொல்லலாமோ :)
      அவரவர் எண்ணம் போலத்தானே நடக்கும் :)
      கணவனுக்கு மட்டுமே காட்டினால் இன்னும் அழகு :)

      Delete
  7. மாமூல் நகர் ஹஹஹஹ்ஹ்ஹ்

    அனைத்தும் ரசித்தோம் ஜி

    ReplyDelete
    Replies
    1. மாமூல் நகர் போகும் வழி என்றால் நல்லாவா இருக்கு :)

      Delete
  8. ஜோக்குகள் ஒன்னை ஒன்னு மிஞ்சுது. எதுக்கு நம்பர் 1 தர்றதுன்னு புரியல!

    ReplyDelete
    Replies
    1. நீங்க இப்படி கஷ்டப் படக்கூடாது என்றுதானே, தமிழ் மணமே நம்பர் கொடுத்திருக்கே :)

      Delete
  9. கடைசில சொன்னது ஜோக்கா? அதானே நடைமுறைல நடக்குது

    ReplyDelete
    Replies
    1. நடைமுறையில் உள்ளதை என்னால் காணச் சகிக்கலே ஜி :)

      Delete
  10. அனைத்தும் இரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. இல்லத்தில் இருக்கலாம் ஜன்னல் ,இல்லத்தரசி வைத்துக் கொள்ளலாமா ஜன்னல் :)

      Delete
  11. ''எடைக் குறைஞ்சாலும் பரவாயில்லை ,குறைப் பிரசவம் ஆகிவிடக்கூடாதுன்னுதான் !''//

    நல்ல வேண்டுதல்.

    ReplyDelete
    Replies
    1. வேண்டுதலில் கூட என்ன ஒரு சுயநலம், எடைக் குறைந்தாலும் பரவாயில்லையாம் :)

      Delete