10 July 2017

கல்யாணத்துக்கு முன்னும் பின்னும் :)

படித்ததில் இடித்தது :)
           ''என்ன சொல்றீங்க ,நாடு உருப்படும் போலத் தெரியலையா ?''
           ''நம்மாளுங்க கூகுளில் தேடின லட்சணம் அப்படியிருக்கே !''
 இடித்த செய்தியின் தொடுப்பு ...   (2015ம் ஆண்டு இந்தியாவில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட நபர் பட்டியலில் முதல் இடத்தில் சன்னி லியோன்,மூன்றாம் இடத்தில் அப்துல் கலாம் :) 
                                                                
எதை எப்போ சொல்றதுன்னு விவஸ்தை வேண்டாமா :)
             ''தலைவலி மாத்திரைத் தானே வாங்கிவரச் சொன்னேன் ,அதுக்கு ஏன் முடியவே முடியாதுன்னு சொல்றீங்க ?''

             ''எங்கம்மா வர்றாங்கன்னு சொன்னதும் ,வாங்கி வரச் சொல்றீயே !''

கல்யாணத்துக்கு முன்னும் பின்னும் :)
        ''உனக்கு கல்யாணம் ஆயிடுச்சே,ஏதாவது மாற்றம் இருக்கா ? ''
        ''என் பாக்கெட்டில் இருந்த பணம் ஜாக்கெட்டில் போனதுதான் ,பெரிய மாற்றம் !''

மருமகளின் நல்ல 'காரியம் 'மாமியாருக்கு :)
          '' குளிக்கப் போன எங்கம்மா வழுக்கி  விழுந்துட்டாங்களா ,டாக்டருக்கு  போன்  பண்ணி  வரச்  சொல்லிட்டியா  ?''
         ''பக்கத்து ஊர் டாக்டருக்கு சொல்லிட்டேங்க !'' 

அன்னைக்கு நிகர் அன்னையே ,என்னைக்கும் :)
கோழி மிதித்து குஞ்சு சாகுமானால் ...
நிச்சயமாய்  நாம் நம்பலாம் ...
மிதித்தது தாய்க் கோழியாக இருக்காது !

மொபைல்வாசிகள் தமிழ்மண  வாக்களிக்க  இதோ லிங்க் ...http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1465819

35 comments:

  1. ​​ஜாக்கெட் பாக்கெட் ஜோக்கையும், கடைசி தத்துவத்தையும் அதிகம் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ஜாக்கெட் to பாக்கெட்டுக்கு போன காரணம் ,டாஸ்மாக்கா இருக்குமோ :)
      அன்னை என்றாலே அருமைதானே :)

      Delete
  2. எப்படியோ பணம் வீட்டுக்குள்தானே இருக்கு

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ,டாஸ்மாக் கடைக்குப் போகாமல் தடுக்கப் பட்டிருக்கு :)

      Delete
  3. கல்யாணத்துக்கு முன்னும் பின்னும்
    என் வீட்டிலும் அப்படித் தான்...

    ReplyDelete
    Replies
    1. பணம் எங்கே இருந்தாலென்ன ?நல்ல வழியில் பயன்பட்டால் சரிதானே :)

      Delete
  4. Replies
    1. மாமியாரை இப்படி வரவேற்கும் மருமகளை ரசிக்க முடியுதா :)

      Delete
  5. அங்குதான் பணம் பத்திரமாக இருக்கும்!

    ReplyDelete
    Replies
    1. மினி சேப்டி லாக்கரா :)

      Delete
  6. தேடுதல்..
    விளங்கிரும்

    ReplyDelete
    Replies
    1. கனா காணுங்கள் என்றார் கலாம் அய்யா ,நம்மாளுங்க கனவுக் கன்னியை தேடிக் கொண்டிருக்கிறார்களே :)

      Delete
  7. கலாமுக்கு மூணாவது இடமாவது கொடுத்தாங்களேன்னு சந்தோசப்படுங்கண்ணே

    ReplyDelete
    Replies
    1. இப்படியும் சந்தோஷப் படலாமா :)

      Delete
  8. Replies
    1. அன்னையின் மகத்துவம் இது :)

      Delete
  9. பாக்கெட் ஜாக்கெட்டுக்குப் போனது...ஹஹஹ

    தத்துவம் அருமை ஜி

    ரசித்தோம் ஜி

    ReplyDelete
    Replies
    1. நல்ல மாற்றம்தானே :)
      தத்துவமும் புரியுதா :)

      Delete
  10. Replies
    1. முதல் இடத்தை ரசிக்க முடியுதா :)

      Delete
  11. //''எங்கம்மா வர்றாங்கன்னு சொன்னதும் ,வாங்கி வரச் சொல்றீயே !''//

    "தலைவலி வருது. தலைவலி மாத்திரை வாங்கி வாங்கன்னு சொல்லலையே?

    ReplyDelete
    Replies
    1. ஏன் தப்பாவே நினைக்கிறீங்க ?மாமியாருக்கு தேவைப் படுமென்று வாங்கி இருக்கலாமே :)

      Delete
  12. This comment has been removed by a blog administrator.

    ReplyDelete
    Replies
    1. பல முறை கூறிவிட்டேன் ,இங்கே விளம்பரம் வேண்டாமே :)

      Delete
  13. சிலவற்றை ரசித்தேன்

    ReplyDelete
    Replies
    1. இருந்தாலும் நன்றி :)

      Delete
  14. யாரென்று தெரியாதவரைத் தேடத்தானே வேண்டும் எனக்கு சன்னி லியோன் தெரியாது தெரிய கூகிளில் தேடத்தான் வேண்டும் ஆனால் அதே அலை வரிசையில் கலாமை வைக்க மனமில்லை

    ReplyDelete
    Replies
    1. உங்களைப் போல் தேடுபவர்கள் குறைவு ,தெரிந்தவர்கள் தேடிய காரணமே வேறு !அதை நீங்களே கண்டு பிடித்து விட்டீர்களே :)

      Delete
  15. பரவாயில்லையே... தேடல் தொடருட்டும்...‘கேளுங்கள் கொடுக்கப்படும்... தேடுங்கள் கண்டடைவீர்கள்...!’

    மாத்திரைக்கு எல்லாம் இந்த தலைவலி போகாது...!

    இதுக்குத்தான் ஜாக்கெட் போடாத பெண்ணாப் பார்த்துக் கல்யாணம் பண்ணணுங்கிறது...!

    ஏன் என்ன அப்படி பார்க்குறீங்க... சோப்பை பாத்ரூம்ல நான் கீழே போடலைங்க...!

    தந்தை சேவலாக இருக்குமோ...!

    த.ம. 12


    ReplyDelete
    Replies
    1. இதையா கண்டு அடைவது சீ :)

      என்னதான் செய்வது :)

      எங்கே போய் தேடுவது :)

      எப்படி நம்புறது :)

      தந்தை மிதித்தும் சாவதில்லையே குஞ்சு :)

      Delete
  16. அன்னைக்கு நிகர் அன்னையே ,என்னைக்கும் :)//
    அருமை.


    ReplyDelete
    Replies
    1. அம்மா என்பதைக் கூட கொச்சைப் படுத்தி விட்டார்களே :)

      Delete
  17. அந்த மாற்றமாவது நடந்துச்சே... என்று திருப்தி பட்டுக் கொள்ள வேண்டியதுதான்..

    ReplyDelete
    Replies
    1. இதுக்குத் தானே ஆசைப் பட்டாய் ஆசை நாயகனே :)

      Delete
  18. தமிழ் மணம் - 16
    வாசித்த இரசித்தேன் சகோதரா.
    https://kovaikkothai.wordpress.com/

    ReplyDelete