9 July 2017

அழகான பெண் பெயரைச் சுருக்கலாமா :)

பகலிலும் விளக்கு தேவையா :)
               ''வாஜ்பாய் காலத்தில் வந்த 'இந்தியா ஒளிர்கின்றது 'என்ற விளம்பரம்  இன்றைக்குத்தான் சாத்தியம் ஆகியிருக்கா ,எப்படி ?''
             ''இப்போ புதுசா வர்ற 4G வண்டிகளில் பகலிலும் ஹெட் லைட் எரிவது கட்டாயயாமே !''
விளக்கமாறுக்கு பட்டுக் குஞ்சம் :)       
            ''கீ  ஹோல்  ஆபரேஷன்  எக்ஸ்பெர்ட்ன்னு  அந்த கொள்ளையனை   சொல்றாங்களே,ஏன் ?''
             ''சாவியே இல்லாம திறப்பதில் அவர்  கில்லாடியாமே  !''

சந்தேகப் பட்டது சரிதானே :)
           ''என் பையன் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டரா  இருக்கான்னு சொன்னா,ஏன் நம்ப மாட்டேங்கிறீங்க ?'' 
           ''படிக்கிற காலத்தில் அவன் எடுத்ததெல்லாம் சைபர் மார்க்தானே !''

அழகான பெண் பெயரைச் சுருக்கலாமா :)
             ''கரடிக்குளம் ஜெயபாரதிப்பிரியன் எழுதிய  ஜோக்கே வர மாட்டேங்குதே ,ஏன் ?''
            ''அவரோட ஜோக்கை எடிட் செய்ற மாதிரி அவர்  பெயரையும் கரடிப்பிரியன்னு சுருக்கினால் அவருக்கு எழுத மனசு வருமா ?''

லகரம் தெரியும் ,அதென்ன லுகரம் :)
எனக்கு என்பது குற்றியலுகரம் ...
தெரியாது என்பதும் குற்றியலுகரம் !
கவிதை எழுதி லகரங்களைச் சேர்த்தவர்களுக்கு 
இந்த தமிழ் இலக்கணம் எல்லாம் தெரிந்து இருக்குமா ?
எனக்குத் தெரியாது !

மொபைல்வாசிகள் தமிழ்மண  வாக்களிக்க  இதோ லிங்க் ......http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1465751

31 comments:


  1. ​லகரங்கள் கிடைத்தால் லுகரங்கள் பற்றிக் கவலையில்லை! கரடிக்குளம் ஜெபா ப்ரியனுக்கு நிஜமாகவே நேர்ந்த அனுபவமா அது?

    ReplyDelete
    Replies
    1. லுகரம் அறியாமல் லகரம் சேர்த்தவர்கள் கில்லாடிகள் தான் :)
      நீளமான பெயர் இப்படியும் ஆகலாம் என்ற கற்பனைதான் ஜி :)

      Delete
  2. இந்தியா ஒளிர்கிறது உண்மை ஜி

    ReplyDelete
    Replies
    1. பகலில் ஒளிர்ந்து என்ன பலன் :)

      Delete
  3. Replies
    1. ஒரு மேதை பகல் வேளை கையில் விளக்குடன் சென்றானாம் மனிதன் எங்கே காணவில்லை தேடுகிறேன் என்றானாம் இந்த பாடல் புது வாகன ஓட்டிகளுக்கு பொருந்துகிறதே ,ஜி :)

      Delete
  4. ''படிக்கிற காலத்தில் அவன் எடுத்ததெல்லாம் சைபர் மார்க்தானே !''//
    படிப்பென்ன படிப்பு, வைட்டமின் 'ப’ இருந்தா எதையும் சாதிக்கலாமே!!

    ReplyDelete
    Replies
    1. வைட்டமின் 'ப’ செய்த வேலையை சமீபத்தில் பார்த்தோமே .....தமிழே தெரியாத பிகாரிகள் தமிழில் பாஸாம் ,தபால் துறை வேலைவாய்ப்புத் தேர்வில் :)

      Delete
  5. கவிதை எழுதி லகரங்களைச் சேர்க்கிறார்கள் - யாரு? சினிமாக் கவிஞர்களைச் சொல்கிறீர்களா அல்லது கவிதை என்ற பெயரில் வெளி நாட்டு டூர் போகிறவர்களைச் சொல்லுகிறீர்களா?

    ஃபோட்டோவைத் தேர்ந்தெடுத்துட்டு ஜோக் ரெடி பண்றீங்களா? கடந்த ரெண்டுமுறையும் அப்படித்தான் தோன்றியது. த ம

    ReplyDelete
    Replies
    1. எல்லாக் கவிஞர்களுக்கும் இப்படி வாய்ப்பு கிடைப்பதில்லையே :)

      அப்படியும் உண்டு ,இப்படியும் உண்டு :)

      Delete
  6. பதிவில் காணு சில செய்திகளைத் தகவல்கள் என்று எடுத்துக் கொள்ளலாமா

    ReplyDelete
    Replies
    1. தகவல் என்றால் வேண்டாம் என்றா இருக்கிறது :)

      Delete
  7. வழக்கம் போல!

    ReplyDelete
    Replies
    1. அருமை ,அப்படித்தானே :)

      Delete
  8. நண்பரே தெரியாது என்பதும் குற்றியலுகரம்தான்

    ReplyDelete
    Replies
    1. தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற நீங்கள் சொன்னால் சரியாகத்தான் இருக்கும் ,திருத்தி விடுகிறேன் அய்யா :)

      Delete
  9. இந்தியா ஒளிர்கிறது சொல்லிக்கலாம்ல

    ReplyDelete
    Replies
    1. நாம சொல்லிக்கலாம் ,உலக வங்கி நம்பணுமே :)

      Delete
  10. கவிதை எழுதி லகரங்களைச் சேர்க்க
    பிறமொழியைத் திணித்தால்
    குற்றியலுகரம், முற்றியலுகரம்
    எப்படி வரும்?

    ReplyDelete
    Replies
    1. முற்றுப் பெறா எதிர்வினை எச்சம் கூட வராதுதான் :)

      Delete
  11. சரிதான் பெயரை சுறுக்கினால் எப்படி எழுத வரும்...????

    ReplyDelete
    Replies
    1. ஜெயபாரதியைத் துண்டித்தால் கோபம் வரத்தானே செய்யும் :)

      Delete
  12. நிகழ்கால செய்திகள் நகைசுவையாக ஓளிர்கிறது.
    அருமை.

    ReplyDelete
    Replies
    1. இப்படியும் யோசிக்கலாம்லே :)

      Delete
  13. விளக்கமாறுக்கு பட்டுக் குஞ்சம் ,அழகுதானே ஜி :)

    ReplyDelete
  14. கவிஞர்கள் எல்லாரும் லகரத்தில் கொ ழிப்பதில்லையே....
    ரசித்தோம்ஜி

    ReplyDelete
    Replies
    1. அரை குறைகளே ஆகாயத்தில் பறக்கின்றன :)

      Delete
  15. சாவி இல்லாது திறக்கும் கில்லாடி -
    சைபர் மார்க் -
    கரடிப் பிரியன்
    குற்றியலுகர - லிகரம் அனைத்தும் சிறப்பு சகோதரா.
    தமிழ் மணம் - 15.
    https://kovaikkothai.wordpress.com/

    ReplyDelete
    Replies
    1. எனக்குத் தெரிந்ததெல்லாம் ஆகாரம் மட்டுமே ::)

      Delete
  16. 'இந்தியா ஒளிர்கின்றது ' ஜோ ஜோ...ன்னு ஒளிர்கின்றது...!

    கடப்பாரை இருக்கும் போது சாவி எதற்கு...?!

    அந்த சுழிதான் அவன விடலை...!

    கரடி விடக்கூடாதில்ல...!

    கூனி குறுகி ஒலிக்க வேண்டியதுதானே...!

    த.ம.16

    ReplyDelete
    Replies
    1. அப்போது ஜோதிகா முன்னணியில் இருந்ததாலா :)

      சத்தம் வராமல் உடைக்க முடியுமா :)

      பிறப்பில் வந்ததாசசே ,விடுமா :)

      அதுக்கு இந்த தண்டனையா :)

      எப்படி என்றாலும் காசுதானே முக்கியம் :)

      Delete