27 July 2017

பொண்ணைப் பெத்த அப்பாவி :)

இதுவும் வெளிநாட்டு மோகம்தானே :)
           '' உன் மக... திடீர்னு சேலைக் கட்டிக்க ஆரம்பித்து விட்டாளே,என்ன காரணம் ?''
           ''அதுக்கு  இந்த படம்தான் காரணம் !''
பிறந்ததும் பள்ளியில் சேர்க்கும் காலம் வருமோ :) 
            ''பையன் மூணு வருஷ படிப்பை முடிச்சிட்டான்னு சொல்றீங்க ,வேலைத் தேடுறானா ?''

           ''அட நீங்க ஒண்ணு,ஃபிரி கே ஜி ,எல் கே ஜி ,யு  கே ஜி யை இப்போதானே முடிச்சிருக்கான்  !''

பொண்ணைப் பெத்த அப்பாவி :)
            ''நல்ல மாப்பிள்ளையை,  அப்பா தேடித் தரமாட்டார் போலிருக்கா ,ஏம்மா?''
            ''நீங்க போடுற ஒண்ணரைப் பவுன் நகைக்கு , 'சின்ன வீடாய் ' வச்சிக்கிற வரன்தான் அமையும்னு  தரகர் சொல்றார் ,அதுக்கும் சரின்னு சொல்றாரே !''

இவரிடம் மனைவிகூட முடியலேன்னு சொல்லமாட்டா :)
           ' 'என்னங்க ,நீங்கதான் டாக்டராச்சே ,மரணத்தை உணர முடியுமா ?''
            ''முடியும்னு என்னிடம் ஆபரேசன் செய்துகிட்டவங்க யாரும் இதுவரை சொல்லலே !''

24 X 7 புரோட்டா மணக்கும் மதுரை :)
  கற்புக்கரசி மதுரைக்கு முன்னையிட்ட தீயோ...
  இன்றுவரையிலும் அணையாமல் இருபத்து நான்கு மணி நேரமும் ...
  புரோட்டா வேகும் கல்லின் கீழே !

மொபைல்வாசிகள், தமிழ்மண வாக்களிக்க  இதோ லிங்க் ....http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1467501

30 comments:

  1. ரசித்தேன் அனைத்தையும்.

    ReplyDelete
    Replies
    1. சேலை அழகு வேறு எதிலும் வராதுதானே :)

      Delete
  2. Replies
    1. இதை மூன்றாண்டு பால்ய படிப்பு எனலாமா :)

      Delete
  3. சேலை கட்டும் பெண்ணுக்கொரு ஆசை உண்டு... கண்டதுண்டா கண்டவர்கள் சொன்னதுண்டா...? சொல்லியாச்சில்ல...!

    அவன் எத்தனை கே.ஜி....? ரொம்ப இளைச்சுப் போயிட்டானே...!

    ‘சிறுகக் கட்டிப் பெருக வாழனும்’மா...!

    போன ஜென்மத்தில கசாப்புக் கடை வச்சிருந்திங்களா...? போட்டுத் தாக்குறீங்களே...!

    உன்னைத் தீக்கு இரையாக்குவேங்கிறது... இதுதானோ...?!- ‘புரோட்டா...’

    த.ம. +1






    ReplyDelete
    Replies
    1. அதென்ன அவர்களுக்கு மட்டும் வரும் ஆசை :)

      அவனை விட அதிக கே ஜி உள்ள பாடப் புத்தகப் பையை சுமக்கிறானே :)

      டாஸ்மாக் இல்லாட்டி பல வீடுகளில் பெருகலாம் :)

      இந்த ஜென்ம ஞாபகமே இல்லை ,போன ஜென்மமா :)

      மனுஷன் தான் புரோட்டாவுக்கு இரையாகி கொண்டிருக்கானே :)

      Delete
  4. நகையைப் பொறுத்து... அடப்பாவி...

    ReplyDelete
    Replies
    1. தரகர்கள் பலரும் படு பாதகர்களே?:)

      Delete
  5. புரோட்டாவால்தான் தூங்கா நகரம் ஆனதோ ஜி ?

    ReplyDelete
    Replies
    1. இதுக்கொரு கமிஷன் போட்டு ஆராயணும் :)

      Delete
  6. ரசித்தேன்.

    த.ம. ஆறாம் வாக்கு.

    ReplyDelete
    Replies
    1. மதுரையில் இருக்கும் அளவுக்கு புரோட்டா கடைகள் வேறெங்கும் இருக்கான்னு தெரியலே ஜி :)

      Delete
  7. பெண்ணைப் பெத்த அப்பாவி!
    எனக்கு ஓட்டு பதிவாகிறதா உடன் தெரிவுக்கவும் த ம 7

    ReplyDelete
    Replies
    1. உங்கள் பதிவுக்கு ஒட்டு போட்டு விட்டேன் அய்யா :)

      Delete
    2. ஓட்டின் எண்ணை குறிப்பிடவும்

      Delete
    3. முதல் வாக்கு என்று குறிப்பிட்டு இருக்கிறேன் அய்யா :)

      Delete
  8. மரணத்தை உணர்ந்தவங்க பாவம்

    ReplyDelete
    Replies
    1. இந்த புண்ணியம் அந்த டாக்டருக்கே சேரும் :)

      Delete
  9. ஓட்டு போட போனேன். ராஜி! நீ ஏற்கனவே ஓட்டு போட்டுட்டே. நான் பார்த்தேன்னு பிக்பாஸ் ஜூலி மாதிரி பொய் சொல்லுது. அதை பிக்பாஸ்கிட்ட சொல்லனும்

    ReplyDelete
    Replies
    1. அசோகன் ஜியும் இதைதான் சொல்கிறார் ,ஜோக்காளிக்கு எதிரா சதி ஏதும் நடக்குதா :)

      Delete
  10. சேலை கவர்ச்சிதானே உடலின்பல உறுப்புகள் தெரிந்தும் தெரியாமலும்
    பையனின் வயதைச் சொல்லவில்லையே
    ஒன்னரைப் பவுன்தந்தும் சின்ன வீடாய் வெச்சுக்கவா
    இதுவரை சொல்ல இருக்கவில்லை
    தூங்கா நகரம் அல்லவா மதுரை எப்பவும்கனன்று கொண்டே இருக்கும் அடுப்புகளும் மனித உள்ளங்களும்

    ReplyDelete
    Replies
    1. இந்த கவர்ச்சிதான் அனைவரையும் இழுக்குதா :)
      காலம் இப்படியாகி போச்சே :)
      இருக்காவிட்டால் தானே :)
      அதான் கூலிப் பட்டாளம் பெருக காரணமா :)

      Delete
  11. புரோட்டா நன்றாக உள்ளது

    ReplyDelete
    Replies
    1. இருந்தாலும் இது உடம்புக்கு கெடுதல் :)

      Delete
  12. தரகர் சொல்லியது என்னைக்கு பலித்தது...கமிசனுக்கு அலையும் புரோக்கர் அல்லவா...!!!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. சொல்வதெல்லாம் பொய் ,ஆனாலும் வாழ்வுதான் அவருக்கு :)

      Delete
  13. புரோட்டாவுடன் எல்லாமே ரசித்தோம் ஜி

    ReplyDelete
    Replies
    1. சேலையை கண்டு பிடித்தவன் ரசனைக் காரன் தானே :)

      Delete
  14. பிறந்ததும் பள்ளியில் சேர்க்கும் காலம் வருமோ :)
    அப்படித்தான் காலம் இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. மழலை இன்பம் இல்லாமலே போய் விடுமா :)

      Delete