23 July 2017

ஓடிப் போய் கல்யாணம்னா , எங்கே போகலாம் :)

படித்ததில் இடித்தது :)
            ''போலீஸ் வேலையை எதுக்கு ராஜினாமா  பண்றீங்க ?''
            ''தக்காளிக் கூடைக்கெல்லாம் பாதுகாப்புக்கு நிற்க வேண்டியிருக்கே !''
இடித்த செய்தியின் தொடுப்பு ....தக்காளிக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு:)
காரணம், பொது நலம் அல்ல :)       
          ''பரவாயில்லையே ,டாஸ்மாக் மதுக் கடைகளை மூடணும்னு நம்ம ஏட்டு ஏகாம்பரமும் சொல்றாரே  ?'',
           ''அட நீ வேற ,கள்ளச் சாராய மாமூல் நிறைய கிடைக்கும்னு  அப்படி சொல்றாரு !''

TVதொடர்களில் இப்படியும் கார்டு போடலாமே :)
      '' டி வி தொடர் டைட்டில் கார்டில் ,ஒரு எழுத்தைத் தப்பா எழுதியதால் ,வேலையில் இருந்து உன்னை தூக்கிட்டாங்களா ,என்ன எழுதினே ?''
       ''இந்த தொடர் யாரையும் 'பண் 'படுத்தும் நோக்கில் எடுக்கப் பட்டதல்லன்னுதான் !''

ஓடிப் போய் கல்யாணம்னா , எங்கே போகலாம் :)
         ''ஓடிப் போய்  கல்யாணம் கட்டிக்கிறவங்க ரெஜிஸ்டர் ஆபீசுக்குத்தான் போவாங்க ,நீங்க  வங்கிக்கு  ஏன்  வந்தீங்க ?''
          ''உங்கள் கனவை  நனவாக்க நாங்கள் தயார்னு   விளம்பரம் போட்டு இருந்தீங்களே  !''

செம்மொழித் தமிழுக்கே இந்த சோதனையா :)
பசுவின் மணி ஒசைக்கும் மதிப்பளித்து தமிழன்  நீதி  சொன்னதெல்லாம் அந்தக் காலம் ...
நீதிமன்றத்தில் தமிழில் வழக்காட நாதியற்று தவிப்பது இந்தக் காலம் !

மொபைல்வாசிகள், தமிழ்மண வாக்களிக்க  இதோ லிங்க் ..http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1467165

26 comments:

  1. தக்காளிக்கு க் காவல்!! ஹாஹா

    பேங்குக்குப ஓடிப் போன ஜோடிகள் ஹாஹா

    ரசித்தோம் ஜி

    ReplyDelete
    Replies
    1. தக்காளிக்கு வந்த வாழ்வு :)

      திருமணக் கடன் கேட்கலாம்தானே :)

      Delete
  2. ​தக்காளின்னு திட்டியிருப்பாரோ!

    ரசித்தேன் ஜி!

    ReplyDelete
    Replies
    1. நம்ம ஊர் போலீஸ் என்றால் வேற மாதிரி திட்டியிருப்பார் :)

      Delete
  3. இனி வங்கிக்கும் போகலாமோ.... புது ஜோடிகள்

    ReplyDelete
    Replies
    1. ஏற்கனவே வங்கியில் வேலைப் பளு அதிகம் ,இந்த தொல்லை வேற :)

      Delete
  4. தக்காளி...செய்தி அடிப்படையில் நகைச்சுவை. ரசித்தேன்,சற்றே வேதனையோடு.

    ReplyDelete
    Replies
    1. அரசு இந்த வேதனையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்க மாட்டேங்குதே :)

      Delete
  5. //''இந்த தொடர் யாரையும் 'பண் 'படுத்தும் நோக்கில் எடுக்கப் பட்டதல்லன்னுதான் !''//

    உண்மை இதுதானே?!

    ReplyDelete
    Replies
    1. பிக் பாஸ்ஸும் அப்படித்தானே :)

      Delete
  6. ரசித்தேன்.

    தமிழ் மணம் ஏழாம் வாக்கு!

    ReplyDelete
    Replies
    1. டெல்லியிலும் தக்காளி இதே விலைதானா :)

      Delete
  7. Replies
    1. போலீஸ் காவல்தானே ,அருமை :)

      Delete
  8. இதென்ன கொடுமை... போலீஸ் வேலைக்கு வந்தா இதெல்லாம் சகஜமப்பா... தக்சகாளி ஆப்பிள் விலையா...?ச(கிச்)சிக்கிலைன்னா... கலாச்சிடு வாங்க...!

    இது மாமூல் தானே...! ஒரு சேஞ்சுக்கு சிறைக்கு மாத்துங்க... எங்க தொழில்ல சேவை செஞ்சு அப்பத்தான் ‘பரப்பன’முன்னு இருக்கும்... அங்கதான் கோடி கோடியா கிடைக்குதாம்...!

    புண்பட்ட மனத்திற்குப் பா(ட்)டு... பண் பாடு பாடியதால் பெரும் பாடு... பாஸ்... பிக் பாஸ்...!

    எங்களுக்கு சேப்டி வேணும்... லாக்கர் சாவியைக் கொடுங்க...!

    அன்று நீதி கேட்ட அரசனுக்குத் தமிழ் தெரிந்திருந்தது... இன்று நீதி கேட்ட பதி பக்திகளுக்கு நிதி கேட்கத் தெரிந்திருக்கிறது... சாமியோ... குன்றத்திலே குமரனுக்குக் கொண்டாட்டம்...!

    த.ம.9




    ReplyDelete
    Replies
    1. ரெண்டு தக்காளி கூடையை கொண்டு போறதை விட்டுட்டு ராஜினாமாவா :)

      கைதி வேணா வேற மாநிலம் மாறலாம் ,போலீஸ் மாற முடியாதே :)

      பண்பாட்டைச் சொன்னால் Trp ரேட்டிங் ஏறாதே :)

      நகையை வேண்டுமானால் சேப்டி லாக்கரில் வைத்துக் கொள்ளுங்க :)

      அந்த நிதிகூட மக்களுக்கு வந்து சேரலையே :)

      Delete
  9. டிவி தொடர், ஓடிப்போய் கல்யாணம், தக்காளிக்குக் காவல் - ரசிக்கவைத்தது. த ம

    ReplyDelete
    Replies
    1. தக்காளி போடாத ரெசிப்பி போடுங்க மேடம் ,நல்ல வரவேற்பு இருக்கும் :)

      Delete
  10. எல்லாமே ரசிக்க வைத்தது

    ReplyDelete
    Replies
    1. புண் படுத்த வில்லைதானே :)

      Delete
  11. போலீஸ்காரனுக்கு மாமூல் எவ்வளவு தக்காளியோ

    ReplyDelete
    Replies
    1. அவங்களுக்கு போகத்தானே வியாபாரத்துக்கு :)

      Delete
  12. உங்கள் கனவை நனவாக்க நாங்கள் தயார் நன்று

    ReplyDelete
    Replies
    1. ஆளாளுக்கு ஒரு கனவு ,நிறைவேற்ற முடியுமா :)

      Delete
  13. Replies
    1. நீதிமன்றத்தில் தமிழில் வழக்காட முடியாதது ,நமக்கெல்லாம் அவமானம்தானே :)

      Delete