படித்ததில் இடித்தது :)
''உங்களுக்கு ஜெயில் தண்டனைன்னு உறுதியாச்சு ,எதுக்கு கர்நாடக சிறைக்கு அனுப்பச் சொல்றீங்க ?''
''அங்கே சமைத்துச் சாப்பிட வசதியிருக்கே,ஜட்ஜ் அய்யா !''
இடித்த செய்தியின் தொடுப்பு ....சிறையில் சசிகலாவுக்கு மட்டும் அல்ல:)
தூங்கிக் கொண்டே காரோட்டுவாரோ :)
''என் கூட கார்ல வர பயமாயிருக்கா ,ஏன் ?''
''தூக்கத்திலேயே உயிர் போறது ,நல்ல சாவுன்னு அடிக்கடி சொல்றீங்களே !''
இதைக் கேட்ட பிறகும் உயிரோட இருக்கலாமா :)
''உங்க பையன் , அவன் நண்பர்கள்கிட்டே உங்களைக் கேவலமா அறிமுகப்படுத்துறானா ,எப்படி ?''
''அவங்க அம்மாவை 'மம்மி'ங்கிறான்,என்னை 'டம்மி 'ங்கிறானே !''
சுயநலவாதிகளின் இன்னொரு பெயர் :)
நழுவுற தண்ணியிலே நழுவுற மீனாய் நடந்துக் கொள்பவர்களை
செல்'பிஷ் 'என்பதில் தவறே இல்லை !
ப்ரீத்தி செனாய் வழங்கிய டிப்ஸ்களை மீண்டும் மீண்டும் படித்தாலும் தப்பில்லை :)
பார்ப்பதற்கு ஒயிலாய் காட்சி தரும் இவரை உங்களுக்கு தெரியுமா ?
நம்மைப் போன்றே ப்ளாக் (ஆனால் ஆங்கிலத்தில் )எழுதிக் கொண்டிருந்த இவர் ,தற்போது முழுநேர எழுத்தாளர் ஆகி விட்டார் ....
இவர் பிளாக்கில் எழுதியதை புத்தகமாய் வெளியிட அது சூப்பர் ஹிட் ...தொடர்ந்து 'டைம்ஸ் ஆப் இந்தியா 'வில் மட்டுமல்ல 'ரீடர்ஸ் டைஜஸ்ட் 'டிலும் எழுதி புகழ்பெற்றார் ...
தற்போது பெங்களூரில் கணவர் ,இரண்டு குழந்தைகளுடன் வசித்து வரும் ...இவர்தான் ப்ரீத்தி செனாய் !
இவர் எழுதிய புத்தகங்கள் நம் நாட்டில் மிக அதிகம் விற்பனையாகின்றன ...'போர்ப்ஸ் 'பத்திரிக்கை கடந்த ஆண்டு நடத்திய ஆய்வில் ...
'இந்தியாவின் செல்வாக்கான முதல் நூறு பிரபலங்கள் 'பட்டியலில் இவரும் ஒருவர்...இவர் எழுத்தைப் பற்றி இவரே கூறியது ...
'நான் தீவிர இலக்கியமெல்லாம் எழுதாததால் என் புத்தகங்கள் சாதனை புரிகின்றன '
நாமும் ,இவரைப் போன்று புகழ் பெற அவரே தந்த டிப்ஸ் ...
ஒரு வலைப் பூ என்பது வாசகர்களை ஈர்க்க கூடியதாகவும் .அவர்களுக்கு ஒரு புதிய விஷயத்தை அறிமுகப் படுத்தக் கூடிய தன்மையை கொண்டதாக இருக்க வேண்டும் .எழுத சோம்பேறித் தனம் உள்ளவர்கள் வேலைக்கு ஆக மாட்டார்கள் ,தொடர்ச்சியாக எழுதிக் கொண்டே இருக்க வேண்டும் .போலித் தனம் கூடாது .உங்களை உங்கள் எழுத்துக்கள் வாயிலாக வாசகர்கள் நேரில் பார்ப்பதைப் போன்று உணர வைக்க வேண்டும் .எனவே உங்களைப் பற்றி எழுதும் போது 'பில்டப் 'கொடுத்து எழுதவே கூடாது .பொய்யையும் உண்மையையும் பிரித்துப் பார்க்க வாசகர்களுக்கு தெரியும் ,எழுதுபவர்களை விட வாசகர்கள் புத்திசாலிகள் .
உங்கள் நண்பர்கள் உறவினர்கள் தவிர்த்து நிறைய பேர் உங்கள் வலைத் தளத்திற்கு வருகிறார்கள் என்றால் நீங்கள் காலரை தூக்கி விட்டுக் கொள்ளலாம் ,எழுத்தாளர் ஆகி விட்டீர்கள் என்று !வெற்றி பெற்றால் மட்டும் போதாது ,அதை நாளுக்கு நாள் ,வாரத்துக்கு வாரம் ,மாதத்துக்கு மாதம் ,வருடத்துக்கு வருடம் தக்க வைத்துக் கொள்ள உழைக்க வேண்டும் .மற்ற எல்லாமே உங்களை தேடி வரும் !
ப்ரீத்தி செனாய் வழங்கிய டிப்ஸ்களைப் படித்தீர்களா ? நீங்களும் கடைப் பிடிக்கலாமே !
மொபைல்வாசிகள், தமிழ்மண வாக்களிக்க இதோ லிங்க் ..http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1466607

|
|
Tweet |
பயல் எதுகைமோனையோடு மம்மி-டம்மி'னு பேசினால் பெருமை படலாமே ?
ReplyDeleteஅப்படி பெருமைப் படுபவர்கள் எண்ணிக்கை கம்மி என்று சொல்ல முடியலையே ஜி :)
Deleteசமைத்துச் சாப்பிட மட்டுமா? பெரிய டீவி, கைகால் பிடித்துவிட ஆட்கள்....!!
ReplyDeleteமம்மி -டம்மி = ஹா... ஹா... ஹா....
ப்ரீத்தி செனாய் டிப்ஸ்களை கடைப்பிடிப்போம்.
நாடு நல்லாவே முன்னேறி வருது ,சிறையிலேயே இவ்வளவு வசதி வந்திருச்சே :)
Deleteஇன்று ஆடி பிறந்து இருப்பதால் அம்மியையும் சேர்த்துக்கலாமா :)
நல்லா வருவோம் :)
ப்ரீத்தி செனாய் போற்றுதலுக்கு உரியவர்
ReplyDeleteதம+1
நம் முன்னோடின்னு அவரைச் சொல்லலாம் தானே :)
Deleteகோடி கொடுக்க வசதியில்லைங்க அய்யா... பாத்து கொஞ்சம் குறைச்சு போட்டுக்கங்க...!
ReplyDeleteஒரு காலை எடுத்திடுங்க... துக்கத்திலே உயிர் போறது...!
அப்படி தப்பா நெனக்காதிங்க... 'மம்மி'ன்னா பொணம்... நீங்க ‘டம்மி’தானே... பொழச்சுக்கிட்டீங்க...!
‘கழுவுற தண்ணியிலே நழுவுற மீனா...?!’ நழுவுனாலும் விடமாட்டோமில்ல...... மீனம்மா...!
செனாய்... நல்ல இசையுடன் வாழலாம்...!
த.ம. 4
முடிஞ்சா நீயே இங்கேயே கரெக்ட் பணணிக்கோ :)
Deleteஅப்படியும் உயிர் போகுதா :)
பிணத்துக்கு இது பரவாயில்லை :)
மீனை விட்டாலும் மீனாவை விட மாட்டீங்களா :)
பசையுடன் இருந்தால் சிறப்பாய் வாழலாமே :)
மம்மி, டம்மி ஹஹஹ. செலபிஷ். ஹாஹா..அனைத்தும் ரசித்தோம் ஜி..த ம ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளதுன்னு வருது ஜி...இப்பத்தான் த ம போட முயற்சி...ஏற்கனவே போட்டாச்சுன்னு சொல்லிதே....
ReplyDeleteஇப்போ த ம வாக்கு போட்டு பாருங்கோ ,விழும் :)
Deleteப்ரீத்தி செனாய்
ReplyDeleteஜோக்காளி ஜி
வாழ்க...
அவர் மாதிரி எனக்கு காசு பார்க்கத் தெரிய வில்லையே ஜி :)
Delete'நல்லவேளை, நம்மஊர்ல கீழ இருக்கறமாதிரி ஜோக்கைத் தொடரும் நிலைமை இல்லை.
ReplyDelete"சமைத்துச் சாப்பிட வசதியிருக்கே,ஜட்ஜ் அய்யா !''"
"உங்கிட்ட கோடிக்கணக்கா பணம் இருக்கா"
"இருக்குங்கய்யா"
"அப்படின்னா ....கேயே வெட்டினா, தீர்ப்பே மாறியிருக்குமே. இதுக்கு ஏன் ஜெயில்லபோய் பணம் செலவழிக்கற'
இதெல்லாம் பலிக்காமல் தானே இந்த நிலைமை :)
Deleteநல்ல தகவல். நன்றி
ReplyDeleteரூட் கிடைத்து விட்டது ,பயணத்தை தொடருங்க ஜி :)
Delete//''அவங்க அம்மாவை 'மம்மி'ங்கிறான்,என்னை 'டம்மி 'ங்கிறானே !''//
ReplyDelete‘டொம்’னு முதுகில் ஒரு குத்து விடவேண்டியதுதானே?!
விடலாம் ,மம்மியுடன் சேர்ந்து திருப்பி அடித்தால் தாங்க முடியாதே :)
Deleteஅருமை! தாங்கள் என் பதிவுக்கு மதிப்பெண் வழங்குவது சிக்கலா!?
ReplyDeleteஉங்கள் பதிவு இன்னும் த ம திரட்டியில் ஏறவில்லை ,அதனால் வாக்கு அளிக்க முடியவில்லை அய்யா :)
Deleteஅனைத்தும் அருமை கடைசி டிப்ஸ் மிக அருமை
ReplyDeleteதமிழில் எழுதி சம்பாதிக்க முடியுமா :)
Deleteவலைப்பூ டிப்ஸ் அருமை
ReplyDeleteதாங்கள் தொடர்ந்து முன்னிலை வகிக்கும்
காரணம் இப்போதுதான் தெரிகிறது
வாழ்த்துக்களுடன்...
இன்னும் நான் நிறைய உழைத்தால் தான் உச்சத்தைத் தொட முடியும் :)
Deleteசிறப்பு. அவரைப் போலவே நாமும் ஒருநாள் ஆகலாம் பிரபலம்!எமது இணையத்தளம் : https://www.sigaram.co
ReplyDeleteஉச்சத்தைத் தொட முடியும் என்று நான் கூறிய நேரத்தில் 'சிகரம் 'பாரதியான உங்கள் வாக்கு பலிக்கட்டும் :)
Deleteநல்ல செய்தி ஐயா.
ReplyDeleteஊக்கம் தரும் செய்தியாச்சே :)
Delete