24 July 2017

இதுக்குப் போய் பெண்டாட்டிய உதைப்பதா:)

 இவரோட பட்டப் பெயரே 'டாஸ்மாக்பிரியன் ' தானே :)
                ''உங்களுக்கு முன்னாடியே உங்க பையன் தண்ணி அடிக்கிறானாமே,உண்மையா ? ''
            ''இல்லவே இல்லை ,அவன் பிறக்கிறதுக்கு முன்னாடி இருந்தே நான் தண்ணி அடிக்கிறேனே!'' 

இதுக்குமா ஆப்ரேசன் :)         
           ''உன் மாமியாருக்கு கண் ஆப்பரேசன் பண்ணனுமா ,ஏன் ?''
            ''நான் பட்டுச் சேலைக் கட்டிகிட்டா ,அவங்களுக்கு கண் உறுத்துதே !''
இதுக்கு அப்புறமும் சாப்பிட மனசு வருமா :)
          ''நான் இங்க கால்மணி நேரமா டைனிங் டேபிள்லே காத்துக்கிடக்கேன் ,நீ எங்கே போய் தொலைஞ்சே ?''
          ''பசியெடுத்தா கத்த ஆரம்பிச்சுடும்னு  நாய்க்கு சோறு வைக்கப் போனேங்க !''

இதுக்குப் போய்  பெண்டாட்டிய உதைப்பதா:)
             ''மாப்பிள்ளே ,என் பொண்ணை தினசரி  உதைக்கிறீங்களாமே...உங்களுக்கு என்னதான் வேணும் ?''
             ''ஸெல்ப் ஸ்டார்ட் பைக் வாங்கி கொடுங்க ,உதைக்கிறதை விட்டுற்றேன் !''

காதலிக்கு இது பொருந்தாது :)
CALLசெய்துவிட்டு CUTசெய்பவர்கள் ...
பொருளாதாரப் புலிகளாய் இருப்பார்கள் !

மொபைல்வாசிகள், தமிழ்மண வாக்களிக்க  இதோ லிங்க் ....http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1467222

31 comments:

  1. முதல் ஜோக் அடிபம்பில் அடிக்கும் தண்ணீர் பற்றித்தானே!! ஹிஹிஹி...

    நாய்க்கு முதலில் சோறு வைக்கும் தாய் என்று பட்டம் கொடுத்து விடலாம்!

    ரசித்தேன் ஜி.

    ReplyDelete
    Replies
    1. நமக்கும் டாஸ்மாக்குக்கும் வெகுதூரம் ,நீங்க சொல்றது சரிதான் :)

      அது சரி ,பெற்றால்தான் தான் பிள்ளையா ?நாயும் பிள்ளை மாதிரிதானே :)

      Delete
  2. அப்படியெல்லாம் பிள்ளையத் தப்பா பேசாதிங்க... எனக்கு முன்னாடி குடிக்கவே மாட்டேன்... நா இருந்தா எனக்கு பின்னாடி போயித்தான் குடிப்பான்... அப்படி ஒரு மரியாதை...! நானும் அப்படித்தான்...! எங்க பரம்பரையே அப்பாவுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை கொடுத்திடுறது...!

    இவுங்கதான் ‘உருத்திரங் கண்ணனாரோ...!’.

    ஓ...கோ... நீ... அந்த நாயக் கவனிக்கப் போனீயா...? நா கூட வேற எங்கயும் போயிட்டியோன்னு நெனச்சேன்...! ‘தாய்ப் பாசங்கறது’ இதுதானோ...!

    அதொல்லாம் செல்ப்பா வாங்கிக்கணும் மாப்பிளை...! உழைச்சு சம்பாதிக்கனும்... அப்பத்தான் வருத்தம் தெரியும்...!

    ‘கால் கட்டு’ போட்டா எல்லாம் சரியாயிடும்...!

    த.ம. + 1

    ReplyDelete
    Replies
    1. நல்ல மரியாதைத் தெரிந்த வம்சமா இருக்கே :)

      கண்ணனார் இல்லே ,கண்ணியார் :)

      நாய்ப்பாசம்னூ சொல்லுங்க :)

      உதை பட்டாதான் நீங்களும் திருந்துவீங்க :)

      புலி எலி ஆகி விடுமே :)

      Delete
  3. நல்ல தகப்பன் மகன் குடும்பம் விளங்கிடும்.

    ReplyDelete
    Replies
    1. வீடு இல்லே ,நாடு விளங்கிடும் :)

      Delete
  4. ஹா ஹா ரசித்தேன்.

    த.ம. +1

    ReplyDelete
    Replies
    1. புதுக் கல்யாணம் ஆன பல பேருக்கு , புது ஸெல்ப் ஸ்டார்ட் பைக் இப்படித்தான் வந்தது போலிருக்கா :)

      Delete
  5. //அவன் பிறக்கிறதுக்கு முன்னாடி இருந்தே நான் தண்ணி அடிக்கிறேனே!''//

    சமாளிப்பு! எல்லாம் காலத்தின் கோலம்!!

    ReplyDelete
    Replies
    1. இந்த சாதனையையும் விட்டுத்தர மனசில்லை :)

      Delete
  6. மாமனார் வீட்டில எப்படியெல்லாம் புடுங்கிறாங்க...

    ReplyDelete
    Replies
    1. வீட்டில இல்லை ,வீட்டில் இருந்து :)

      Delete
  7. Replies
    1. ஒப்பிட்டாலும் உறைக்க மாட்டேங்குதே :)

      Delete
  8. காதலிக்கு பொருந்தாது நல்ல ஜோக்

    ReplyDelete
    Replies
    1. பொருந்தினால் காதலே பணால் :)

      Delete
    2. த.ம. வாக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது

      Delete
  9. சேச்சே என்கண்படாமல்தான் தண்ணி அடிப்பான்
    கணுறுத்தலுக்கெல்லாம் ஆப்பரேஷனா
    நாய்க்கு சோறு பழைய ஜோக்
    உதைப்பதற்கு வண்டி அல்லது உங்களையா உதைக்க முடியும்
    எங்களுக்கெல்லாம் புரியாதது

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப மரியாதைதான் :)
      உறுத்தலுக்கு வேண்டாமா :)
      பழைய சோறா:)
      உதைத்துப் பாருங்க ,அப்புறம் தெரியும் சேதி :)
      பேரனிடம் கேட்டுப் பாருங்க :)

      Delete
  10. தண்ணி அடிக்கிறவரு எந்த ஊரோ!!? சென்னைநா தண்ணியே இல்லயே...அதான்...அதை விடுங்க அப்பன் முன் மகன் அடிக்க மாட்டான் மகன் முன் அப்பா அடிக்க மாட்டான் போல....

    ரசித்தோம் ஜி

    ReplyDelete
    Replies
    1. குடிக்க தண்ணி கிடைக்காட்டியும் ,டாஸ்மாக் தண்ணி எங்கே போனாலும் கிடைக்குதே ஜி :)

      Delete
  11. நல்ல ஜோக் தொகுப்பு. வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. தொகுப்புக்கு நீங்கள் தரும் ஊக்குவிப்புக்கு நன்றி :)

      Delete
  12. நல்லா இருக்கிறது.

    ReplyDelete
    Replies
    1. இப்படி மிரட்டி வாங்கும் மாப்பிள்ளையை என்ன செய்யலாம் :)

      Delete
  13. Replies
    1. நாய்க்கு சோறு வைப்பது புண்ணியம்தானே :)

      Delete
  14. நல்ல ஜோக்குகள்!

    ReplyDelete
    Replies
    1. செல்லப்பா சார் ,இன்னைக்கு என்ன இந்த புனைப் பெயரில் வந்திருக்கீங்க ?எந்தப் பெயரில் வந்தாலும் என் நன்றி உண்டு :)

      Delete