11 July 2017

(கள்ளக்)காதல், இரண்டுக்கும் உள்ள வேறுபாடு :)

 பட்டாசுக்குப் பதிலாய் இதுவா :)           
               ''தலைத்   தீபாவளிக்கு வர முடியலே ,போகிக்குத் தான் வர முடிந்தது என்று  மாமனாரிடம் சொன்னது, தப்பா போச்சா ,ஏன் ?''
                  ''நீங்க எரிக்க  பழைய பாய் ரெண்டு தயாராயிருக்கு  மாப்பிள்ளைன்னு சொல்றாரே !''

இது கலக்கல் கமெண்ட் தானே :)
(கள்ளக் )காதல், இரண்டுக்கும் உள்ள வேறுபாடு :)
1.நம்ம மதுரைத் தமிழன் அவர்களின் வலைப் பூவில் படித்தது....
அந்த காலத்தில் ஒரு பெண்ணை காதலிக்கிறதுக்குஅவ அப்பன் மோசமான ஆளா ? 
அண்ணன்காரங்க எத்தனை பேர் அவங்க எப்படி என்று பார்த்து 
பார்த்து காதல் பண்ணினாங்க 
ஆனால் இந்த காலத்தில் காதலிக்கிறதுக்கு முன்னாடி  அவ புருஷன் மோசமான ஆளா ?பிள்ளைங்க எத்தனை பேர் அவங்க எப்படி என்று பார்த்து என்று பார்த்து காதல் பண்ண வேண்டியிருக்கு 
ச்சே காலம் எப்படி எல்லாம் மாறுது பாருங்க ..
அன்புடன் 
மதுரைத் தமிழன் 
இதற்கு என் கமெண்ட்......
அப்பனையும் அண்ணனையும்பற்றி  விசாரித்து  செய்தால், அது காதல் !புருசனையும் ,பிள்ளையையும் பற்றி விசாரித்து செய்தால் ,அது  கள்ளக் காதல் !இந்த தத்துவத்தை நீங்க புரிஞ்சிக்கலே போலிருக்கே !
------------------------------------------------------------------------------------------------------------------

2.நம்ம யாழ் பாவாணன் அவர்கள் 'ஊடகங்களும் எழுத்துப் பிழைகளும்'என்ற தலைப்பில் எழுதி இருந்தார் ,எழுத்துப் பிழைகளைத் தவிர்க்க வேண்டுமென ஊடகங்களுக்கு  வேண்டுகோள் விடுத்து இருந்தார் ....
இதற்கு என் கமெண்ட்  ....
சமீபத்தில் தொலைக் காட்சி ஒன்றில் ...குண்டி வெடித்து பத்து பேர் 
பலி என்று போட்டதைப் பார்த்ததும் அதிர்ச்சியாகி போனேன் 
அய்யா !நீங்கள் சொல்வது சரிதான் ,குண்டு வெடித்து என்று 
திருத்த வேண்டாமா?
------------------------------------------------------------------------------------------------------------
3..நம்ம பதிவர் பரிதி முத்துராஜன் ஜி அருமையான தகவலை G+ ல் அனுப்பி இருந்தார்,அது .... 

இதற்கு என் கமெண்ட்  ...
        அதைப் பிடித்து என்னதான்  செய்யப் போறீங்க ?

மொபைல்வாசிகள், தமிழ்மண வாக்களிக்க  இதோ லிங்க் ...http://tamilmanam.net/rpostrating.php?s=P&i=1465928

33 comments:

  1. Replies
    1. இப்படி கொட்டையைப் பிடித்துக் கொண்டிருந்தால் தமிழ் எப்படி வாழும் :)

      Delete
  2. Replies
    1. டிவி செய்தியைத் தானே :)

      Delete
  3. எதுக்கெடுத்தாலும் எரிந்து விழுறீங்களே...!

    ஆணும் பெண்ணும் காதலிக்கிறார்களே...!

    திருத்து... திருந்து...!

    த.ம. 3

    ReplyDelete
    Replies
    1. அதுக்கு பழைய பாயை எரித்தால் சரியாக போகுமா :)

      அது ஒரு தப்பா :)

      திருந்தலைன்னா வருந்த வேண்டி வரும் :)

      Delete
  4. Replies
    1. போகிப் பண்டிகை கொண்டாட்டம் அருமைதானே :)

      Delete
  5. Replies
    1. ....வெடித்து செத்ததையுமா :)

      Delete
  6. // அதைப் பிடித்து என்னதான் செய்யப் போறீங்க ?//

    அதை இறுக்கிப் பிடிச்சா ஆள் காலி!!!

    ReplyDelete
    Replies
    1. இதுக்கா அந்த கட்சியை ஆரம்பித்து இருக்கிறார்கள் :)

      Delete
  7. கோழி குருடா இருந்தா என்ன... குழம்பு ருசியா இருந்தா சரி!..

    அப்படின்னு சினிமா வசனம் ... ஊரும் நாடும் வெளங்கிடும்!..

    ReplyDelete
    Replies
    1. அன்பின்ஜி ,நீங்க கள்ளக் கோழிக் குழம்பைத்தானே சொல்றீங்க :)

      Delete
  8. சுவைத்தேன்!

    ReplyDelete
    Replies
    1. தத்துவமும் சரிதானே அய்யா :)

      Delete
  9. எங்கயோ பெய்டிங்க
    அருமை

    ReplyDelete
    Replies
    1. உங்க தமிழைப் பார்த்து கில்லர்ஜி கோபித்துக் கொள்ளப் போகிறார் :)

      Delete
  10. ஹஹஹ....ரசித்தோம் ஜி

    ReplyDelete
    Replies
    1. தங்கிட்டு போகலாமுன்னு நினைக்காதீங்க மாப்பிள்ளே ,இருந்த பாயையும் எரிச்சாச்சுன்னு சொல்லாமல் சொல்றாரா மாமனார் :)

      Delete
  11. அனைத்தையும் ரசித்தேன், வழக்கம்போல.

    ReplyDelete
    Replies
    1. இப்படி வழக்கம் போல், கருத்தை மட்டும் சொல்வதைத் தவிர்க்கலாமே முனைவர் அய்யா :)

      Delete
  12. தீபாவளி ஜோக்குக்கு இப்போ என்ன அவசரம் - 3 மாதங்கள் இருக்கிறதே.

    குண்டி வெடித்து பத்து பேர் பலி - இதை சன் நியூஸ் தொலைக்காட்சியில் அப்போது பார்த்தேன். செய்தி டைப் பண்ணுபவர் தமிழர் அல்ல போலிருக்கிறது.

    எல்லாவற்றையும் ரசித்தேன். த. ம போட்டாச்சு

    ReplyDelete
    Replies
    1. மைசூர் பாக்கை இங்கே ஏன் தின்கிறீங்க என்று கேட்கிற மாதிரி இருக்கே :)

      இந்த வேலைப் பார்க்க தமிழனே கிடைக்கலையா :)

      Delete
  13. நாலும் சிரிக்க வைத்ததா ஜி :)

    ReplyDelete
  14. தமிழ் படும்பாடு இருக்கிறதே ! அனைத்தும் நன்று

    ReplyDelete
    Replies
    1. தப்பாக டைப் செய்தவரே நொந்து இருப்பாரோ :)

      Delete
  15. ஆகா....காதல் வேறுபாட்டை தெரிந்து கொண்டென்........

    ReplyDelete
    Replies
    1. சொர்க்கத்தில் உங்களுக்கு ஒரு இடம் உறுதியா கிடைக்கும் :)

      Delete
  16. தமிழர்களில் பலருக்கு தமிழை தவறில்லாமல் எழுதவோ பேசவோ இயலாது. என் செய்ய!

    ReplyDelete
    Replies
    1. ஊடகம் இப்படி தவறு செய்யலாமா :)

      Delete
  17. பரவலான வாசிப்பு பதிவுகள் எழுதக் கை கொடுக்கிறது

    ReplyDelete
    Replies
    1. இன்புட் என்று இருந்தால் தானே அவுட் புட் வரும் :)

      Delete