5 October 2015

143 ன்னா I LOVE YOU ,144 ன்னா:)

  --------------------------------------------------------------------------------

முதலில் எல்லோரும் ஜோரா கையைத் தட்டுங்க ...
இன்று ,ஜோக்காளியின் மூன்றாவது பிறந்த நாள் !

---------------------------------------------------------------------------------
டாக்டர்களுக்கு தன்னடக்கம் கூடாது :)
             
              ''என் பிள்ளை உயிரைக் காப்பாத்தின நீங்க, தெய்வம் டாக்டர் !''
              ''அதுக்காக ,ஃபீஸை கோவில் உண்டியலில் போட்டுறாதீங்க!''




 திருடனுக்கும் இது தெரிஞ்சுப் போச்சா ?               

                        ''என்னங்க ,நேற்று நம்ம வீட்டுக்கு வந்த திருடன் ,உங்களை 'நீயெல்லாம் ஆம்பளை'யான்னு கேட்டானே ...ஏன் ?''
           '' பீரோ சாவி  என் கிட்டே இருக்கு ,லாக்கர் சாவி உன்கிட்டே இருக்குங்கிறதைச் சொன்னேன் !''


ஜோக்காளியின் முதல் கன்னி பதிவு ,இதோ....

அன்னிய நேரடி முதலீடு நாட்டுக்கு ...வீட்டுக்கு ?  


           ''உங்க அண்ணன் கல்யாணம் ஆனவுடனே சூப்பர் மார்க்கெட் ஆரம்பிச்சுட்டானே ,எப்படி ?

        ''எல்லாம் அண்ணியின் நேரடி முதலீடு தான் !''


143 ன்னா I LOVE YOU ,144 ன்னா...?

             ''நீ அந்த பொண்ணு கிட்டே 143 ன்னு சொன்னதுக்கு ,அவங்க வீ ட்டிலே அவளுக்கு 144  போட்டுட்டாங்களா, என்னடா சொல்ற ?''
              ''ஐ லவ் யு ன்னு சொன்னேன் , அவளை வீட்டை  விட்டு வெளியே போகக்கூடாதுன்னு  தடை உத்தரவு போட்டுட்டாங்களே !'' 

இசை கேட்டால் புவி அசைந்தாடுமா ?

மன்னர் அக்பர் அவையில் இசைக் கலைஞராக இருந்த தான்சேன்
தீபக் ராகத்தை  பாடியபோது ...
மெழுகுவர்த்திகள் தானாக எரிந்தனவாம் ...
மேக் மல்ஹார் ராகத்தைப் பாடி மழையை வரவழைத்தாராம்...
நம்ம சிவாஜியும் தான்சேன் வேடமணிந்து பாடி ...
கோமா நிலையில் இருந்த ராணியை உயிர்த்தெழ வைக்கிறார் ...
இசை கேட்டால் புவி அசைந்தாடும் என்ற அந்த பாடல் அமைந்த  ராகத்தின் பெயர் ...
'எமன் 'கல்யாணியாம்,நம்ப முடிகிறதா ?  

24 comments:

  1. முதற்கண் ஜோக்காளிக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

    டாக்டரின் அச்சம் சிரிப்பை வரவழைத்தது.

    உசுப்பேற்றிச் சென்ற திருடன் புன்னகைக்க வைத்தான்!

    புரியாதா ஜோக்கானாலும் புன்னகைத்து வைக்கிறேன்.

    144 பார்த்து சிரிப்பு வருவது இங்கேதான்!

    ராகம் நம்பத்தான் முடியவில்லை!

    ReplyDelete
    Replies
    1. நாட்டிலே அன்னிய முதலீடு ,வீட்டிலே அண்ணியின் முதலீடு ,எனக்குத் தான் சரியாக சொல்லமுடியலை :)

      Delete
  2. கண்ணே... கலைமானே கன்னி மயில் எனக் கண்டேன் உனை நானே...! மூன்றாம் பிறை (ஆண்டு) வாழ்த்துகள்!


    என்னத் திட்டுறதுனா ஏ மறைமுகமா திட்டுறீங்க...தெய்வம் நின்று கொல்லுன்னுதானே... சொல்லீறீங்க...!


    திருடன கையெடுத்துக் கும்பிடனும்... இப்பவாவது புரிஞ்சிக்கிட்டீங்களே...!


    அண்ணியின் சூப்பர் மார்கட்டுக்கென்ன... சூப்பரோ...சூப்பர்...!


    ஒனக்கு 111 -ன்னு போட்டாச்சுன்னு இம்பூட்டு மாத்திரைய சாப்பிட்டிட்டியே படுபாவிப் பயலே... 112-க்கு போனப் போடுறேன்...!


    ஏமன் நாட்டுக்கு அனுப்பி வையுங்க அவரை...! போயி சேரட்டும்...!

    த.ம.+ 1


    ReplyDelete
    Replies
    1. ஏமனில் என்ன விசேஷம்:)

      Delete
  3. வாழ்த்துக்கள் பகவான்ஜி . தொடர்ந்து சிரிக்க வைக்கும் பணியை தொடருங்கள். புதுக் கோட்டையில் சந்திப்போம்

    ReplyDelete
    Replies
    1. நிச்சயம் சந்திப்போம் :)

      Delete
  4. வாழ்த்துகள் பகவான் ஜி. மூன்று வயதிலேயே இந்த ஓட்டமா?

    ReplyDelete
    Replies
    1. ஓட்டத்துக்குக் காரணம் ,உங்கள் ஆதரவுதான் :)

      Delete
  5. நாளும் சிரிக்க வைக்கும் உங்கள் பணி வளரட்டும்!

    ReplyDelete
    Replies
    1. வளரத்தான் நினைக்கிறேன் :)

      Delete
  6. ஜோரா கை தட்டினேன்“ ஜோக்காளியின் மூன்றாவது பிறந்த நாள்” வாழ்த்தாக ..ஜோரா கை தட்டினேன்“

    ReplyDelete
    Replies
    1. வீட்டிலே யாரும் சந்தேகமா பார்க்கலையே :)

      Delete
  7. முதலில் எமது மனமார்ந்த வாழ்த்துகள் ஜி
    01. அதானே இப்படியே தப்பிச்சு போயிடக்கூடாதே..
    02. சாமர்த்தியமான புருஷன்
    03. அப்பட பைனான்ஸியர் அவ(ர்)ள்தான்.
    04. 142 சொல்லியிருக்கலாமோ ?
    05. இசை கேட்டால் புலியே அசைந்தாடுமே...

    ReplyDelete
    Replies
    1. என் நன்றியும் முதலில் :)
      கேட்டைத் தாண்ட முடியாது :)
      அதான் அப்படி சொல்லி விட்டார் :)
      சைலென்ட் பார்ட்னர்:)
      142 ?
      சினிமா புலி வேண்டுமானால் ஆடும் :)

      Delete
  8. 3 வயசுக் குழந்தை உசேன் போல்ட் மாதிரி ஓடுதே!

    ReplyDelete
    Replies
    1. ஓட மட்டுமில்லே உசேன் போல் வரையவும் ஆசை :)

      Delete
  9. வாழ்த்துக்கள் ஜி! ஜோக்குகள் அனைத்தும் சூப்பர்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. உங்களிடம் , நேரில் நன்றி சொல்லணும் ,புதுகைக்கு வருகிறீர்களா :)

      Delete
  10. சிரிக்க வச்சுப்புட்டீங்களே...!

    வாழ்த்துகள்!!!

    ReplyDelete
    Replies
    1. அதுக்கு ஏன் இவ்வளவு வருத்தம் :)

      Delete
  11. கைகள் தட்டும் ஒலி மதுரையை எட்டும் என்கிற நம்பிக்கையுடன்.






    ““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““““


    வாழ்த்துகள் ஜி

    ReplyDelete
    Replies
    1. அடேங்கப்பா ,கைத் தட்டல் அடங்கவே இவ்வளவு நேரமாகிறதே ,நன்றி :)

      Delete
  12. ஜோக்காளியின்
    மூன்றாவது பிறந்த நாள் வாழ்த்துகள்!
    நகைச்சுவை என்பது
    வெறும் பொழுதுபோக்கல்ல - அது
    பலரது நோய்களைக் குணப்படுத்தவல்ல
    மருந்து - எனவே
    தங்கள் பணி தொடர வாழ்த்துகள்!

    http://www.ypvnpubs.com/

    ReplyDelete
    Replies
    1. உண்மையாவா ,நானும் மருந்து சாப்பிட வேண்டாமா :)

      Delete