27 October 2015

ஒட்டு கேட்பது பெண்கள் குணம் மட்டுமல்ல :)

 இலவசமா கொடுத்தாலும் வாங்க மாட்டாங்க :)                 
                    ''டிவி வாங்கினா கவிதைப் புத்தகம் இலவசம்னு போட்டீங்களே ,வியாபாரம் அமோகம்தானா ?''
             ''அட நீங்க ஒண்ணு,புத்தகத்தை நீங்களே வைச்சுகிட்டு  , டிவி  விலையில் தள்ளுபடி கொடுங்கன்னு கேட்கிறாங்களே!''

இனியும் தொண்டர்களை ஏமாற்ற முடியாதோ ?             
           ''ஆண்ட பரம்பரை ஆள நினைப்பதில் என்ன குறைன்னு தொண்டர்களிடம் கேட்டது தப்பாப் போச்சா ,ஏன் தலைவா ?''
             ''ஆளும் கட்சி முதல்வரின் காலை நக்கிட்டு இருந்தா ஆள முடியாது ,நீங்க வேணா வாழ முடியும்னு திருப்பித் தாக்குறாங்களே !''

கிளி மூக்கு பொண்ணுக்கு மூக்குடைந்த மாப்பிள்ளையா ?

               ''தரகரே ,நீங்க சொன்ன பையன் ...எல்லா விசயத்திலேயும் மூக்கை நுழைச்சி 'மூக்குடை'படுவாராமே ,உண்மையா ?''
               

         ''அப்படின்னா மூக்கிலே தழும்பு இருக்குமே ,நீங்களே நேரிலே பார்த்து முடிவு பண்ணுங்க !''








ஒட்டு கேட்பது பெண்கள் குணம் மட்டுமல்ல !

அடுத்தவர் பேசுவதை ஒட்டுகேட்பது பெண்கள் குணம் என்றுதான் நம் தமிழ் திரைப்படங்களில் காட்டி வந்து இருக்கிறார்கள்...
அமெரிக்க வெள்ளை மாளிகைக்கும் ,ராணுவ மையமான பென்டகனுக்கும் அந்த குணம் உண்டென்று தெரிய வந்துள்ளது ...
உலகில் உள்ள முக்கிய தலைவர்கள் முப்பத்தைந்து பேரின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டு கேட்கப் பட்டுள்ளது ...
இதனால் கொதிப்படைந்த ஜெர்மன் தன் கண்டனத்தை தெரிவிக்க ...
இனிமேல் இப்படி நடக்காதென்று உறுதி  அளித்துள்ளார் ஒபாமா !
ஏற்கனவே பேஸ்புக் ,கூகுள்,யாகூ இணைய தளங்கள் மூலமாய் நம் அனைவரின் அந்தரங்கத்திலும் 'கழுகு'மூக்கை நுழைத்தது அம்பலமானது...
அமெரிக்கா தனி மனித சுதந்திரத்தை ...மிகவும் மதிக்கும் நாடல்ல ...
மிதிக்கும் நாடு என்பது தற்போது வெட்ட வெளிச்சமாகி விட்டது !
இந்த கேடு கேட்ட காரியத்திற்கு கண்டனம் தெரிவிக்க வேண்டிய நம் இந்தியா ...
நம் பிரதமருக்கு செல்போனும் இல்லை ,இ மெயில் முகவரியும் இல்லை ...
ஒட்டு கேட்டிருப்பதற்கு வழியே இல்லை என இயலாமையை பறைசாற்றிக் கொண்டுள்ளது !

(குறிப்பு ,இது ஒரு காங்கிரஸ் காலத்து பதிவு )



143ன்னா I love you ஆச்சே !
               ''எந்த  வருடமும் இல்லாத அளவிற்கு இந்த வருட  காந்தி ஜெயந்தியை காதலர்கள் கொண்டாட காரணம் என்ன?''
              ''காதலர்களுக்கு பிடித்த '143'வது காந்தி ஜெயந்தி  ஆச்சே இது !''


(குறிப்பு ,இது வெளிவந்தது சென்ற ஆண்டு )

26 comments:

  1. கவிதை தொல்லையவிட தொலைக்காட்சி தொல்லையே மேல் எனப் புரிந்து கொண்டு நூல்விட ஆரம்பிச்சிட்டாங்களா...?


    ஆண்ட காலமெல்லாம் மலையேறிப் போச்சுன்னு சொல்லுங்க...!


    மூக்கு உடைபடப் போறான்னு மாப்பிளைய கேக்க முடியாதுன்னு சொல்லுங்க...!


    நமக்குத்தான் ஒட்டுக் கேட்பது பிடிக்காதே... ஓட்டுத்தானே கேட்கப் பிடிக்கும்...!


    ‘ஜெயந்தி’-ய யாருக்குப் பிடிக்காமல் போகும்...?!

    த.ம.1

    ReplyDelete
    Replies
    1. நூல் படிப்பதை விட ஆரம்பித்து விட்டார்கள் என்றே தோன்றுகிறது :)

      இனி ஆளும் காலமும் கூட :)

      ஏற்கனவே உடைபட்டிருப்பதாலா :)

      கேட்காமலே ஓட்டு போடும் உங்களை எனக்கு ரொம்பப் பிடிக்கும் :)

      மேனி வண்ணம் செவ்வந்தி என்று பாடியவர்கள் தானே நாம் எல்லோரும் :)

      Delete
  2. அனைத்தையும் ரசித்தாலும், நான்காவதை அதிகமாய்!!
    தம +!

    ReplyDelete
    Replies
    1. பிரதமருக்கு செல்போனும் இல்லை ,இ மெயில் முகவரியும் இல்லை என்பதை நம்ப முடிகிறதா :)

      Delete
  3. Replies
    1. மூக்குடைந்த மாப்பிள்ளையை ரசிக்க முடிகிறதா :)

      Delete
  4. கவிதை புத்தக ஜோக்கும், காந்தி ஜெயந்தி ஜோக்கும் அருமை.
    த ம 5

    ReplyDelete
    Replies
    1. நீங்களே சொல்லுங்க ,புத்தகம் போட்டால் தமிழ்நாட்டில் விற்க முடிகிறதா :)

      Delete
  5. காஙகிரஸ்காலத்து பதிவு என்றாலும் ஒட்டு கேட்கும் குணம் மாறலீடீய.......

    ReplyDelete
    Replies
    1. ஏகாதிபத்திய குணம் எப்படி மாறும் ?

      Delete
  6. 2* செம கலக்கல் சூப்பர்! மற்றவையும் தேன் ரசி சுவை பார்!

    ReplyDelete
    Replies
    1. காந்தி ஜெயந்தியை கொண்டாடினீர்களா :)

      Delete
  7. பையன் ...எல்லா விசயத்திலேயும் மூக்கை நுழைச்சி 'மூக்குடை'படுவாராமே ,
    ஒட்டுகேட்பது அமெரிக்க வெள்ளை மாளிகைக்கும் ,ராணுவ மையமான பென்டகனுக்கும் --.....
    அனைத்தும் ரசித்தேன்.
    நன்று...நன்று சகோதரா....

    ReplyDelete
    Replies
    1. மூக்குடைப் பட்டு பையன் திருந்த வாய்ப்புண்டு ,பென்டகன் திருந்தவே திருந்தாது:)

      Delete
  8. Replies
    1. நம்ம ஊர்லே எழுத்தாளர்களுக்கு மரியாதை இப்படித்தானே இருக்கு :)

      Delete
  9. காதலி பெயர் ஜெயந்தியாக இருந்தால் இன்னும் விசேஷம்!
    அருமை

    ReplyDelete
    Replies
    1. ஜெயந்தி காந்தியை மணந்தால் திருமதி .காந்தி ஜெயந்தி ,இதுவும் நல்லாதானே இருக்கு :)

      Delete
  10. 01. ஆஹா ஜி சந்தர்ப்பம் பார்த்து யாரையோ குத்துறீங்களே... இதுதான் டைமிங் பாய்ண்ட்
    02. ஸூப்பர் பஞ்ச்
    03. இது நல்ல பொருத்தமே...
    04. ஒட்டுக்கேட்டு வாழ்வோரே வாழ்வார் மற்றவர் எல்லாமே ஓட்டுக்கேட்டே சாவார்..
    05. இதுவும் நல்ல பொருத்தமே...

    ReplyDelete
    Replies
    1. ஐயோ ,அப்படியெல்லாம் இல்லே ,அவர் என் அபிமான எழுத்தாளர் :)
      அந்த பஞ்ச்சுக்கு சொந்தக் காரன் நானில்லே :)
      உண்மையைத்தான் சொல்றீங்களா :)
      ஓட்டுப் போட்டே சாவார் என்பதே சரி :)
      பொருத்தம் ,சைவக் காதலர்களுக்கு மட்டுமே :)

      Delete
  11. சிரித்து மகிழ்ந்தேன்!

    ReplyDelete
    Replies
    1. கிளி மூக்கு பொண்ணு அழகிதானே :)

      Delete
  12. ஹஹஹ் அனைத்தையும் ரசித்தோம் ஆனால் ஒட்டுக் கேட்டல் ஓட்டு வாங்குகின்றது!!!

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் புகழும் ஒபாமாவிற்கே :)

      Delete
  13. அனைத்தையும் ரசித்தேன். பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
    Replies
    1. யார் ஒட்டு கேட்டாலும் தப்புதானே :)

      Delete