''உன் நெற்றிப் பொட்டு காணாமல் போனதுக்கு ,போலீஸில் சொல்லச் சொல்றீயே,நியாயமா ?''
போலீஸ் சார்ஜ்னா இவருக்கு தெரியாது போலிருக்கு !
''போலீஸ்காரன் என்கிட்டே வந்து ,எதுக்கு செல்லில் சார்ஜ் இல்லேன்னு சொல்றீங்க ?''
''நீங்க நல்லா சார்ஜ் பண்ணுவீங்க என்று எல்லோரும் சொன்னாங்களே !''
சாப்பாட்டு ராமனுக்கு படிப்பு ஏறணும்னா....!
''என்னங்க ,நம்ம பையனுக்கு வித வித வாசனையோடு நான் சமைச்சுக் கொடுக்கிறதை ஏன் நிறுத்தச் சொல்றீங்க ?''
''படிப்பு வாசனை தெரிஞ்சுகிட்டு ,இந்த வருசமாவது பாஸாகிற வழியைப் பார்க்கட்டும்னுதான் !''
''படிப்பு வாசனை தெரிஞ்சுகிட்டு ,இந்த வருசமாவது பாஸாகிற வழியைப் பார்க்கட்டும்னுதான் !''
மீண்டும் வேண்டாம் , தர்ம[மில்லா]புரி சம்பவம் !
தோசைன்னா ரொம்ப ஆசைதான்!
"இரண்டு தோசைக் கல்லை ஏன் வாங்குறே ?"
"தோசை ரெடிஆகிற வேகத்தைவிட,நீங்க அதை உள்ளே தள்ளுற வேகம் அதிகமா இருக்கே !"
|
|
Tweet |
ரசித்தேன் நண்பரே
ReplyDeleteதம 1
இரண்டு தோசைக் கல் வாங்கியவரின் கணவரை ரசிக்க முடியுதா :)
Delete1*இப்பெல்லாம் யார் ஒருவா பொட்டு வைக்கிறாங்க மாரேரேஏஏஏ :)
ReplyDelete2*எப்படி கரண்ட் இல்லாமலா? கரன்சி இல்லாமலா? :)
3*அயோத்தி ராமன் தெரியும் இந்த சாப்பாட்டு ராமன் யாருங்கோ :)
4*ம் வேண்டிவோம் (காதலிக்கும் முன் வேண்டலாமே)
5*பசியில எல்லாத்தையும் தள்ளிடப்போறார் பாத்துக்குங்க :)
பொட்டுக்கு சொந்தக்காரன் என்பதெல்லாம் சினிமா டயலாக் ஆச்சே :)
Deleteகரன்சி இல்லாமல் காரியமாகுமா :)
பதிவர் சந்திப்பின் போது ,கேட்டிருந்தால் சொல்லியிருப்பேனே :)
வேண்டிக்கிட்டு என்ன செய்ய ?கோகுல் ராஜ் வரையிலும் தொடருதே :)
பசி வந்தா பத்தும் பறந்து போகும் :)
ரசித்தேன் ஜி...
ReplyDeleteரசிக்க நானும் காத்திருக்கிறேன் ,பதிவர் சந்திப்பு பற்றிய உங்கள் பதிவை :)
Deleteரசித்தேன்.
ReplyDeleteதோசைக் கல், அதிகம் ரசிக்க வைத்திருக்குமே :)
Deleteஉன்னை நம்பி நெத்தியிலே பொட்டு வச்சேன் மத்தியிலே...நெத்தியிலே... பொட்டு வச்ச காரணத்த புரிஞ்சிக்க மச்சான்... இல்லைன்னா போலிஸ்க்கு போறேன்...! என்ன சரியா...? அய்யோ... எனக்கு வாந்தி வாந்தியா வருது...!
ReplyDeleteஅதுக்கு சார்ஜ் கொஞ்சம் ஆகும்...! வெட்டு...வெட்டு...துட்டு...!
கேட்ரிங் காலேஜ் எதுக்கு இருக்கு...! சாப்பிட விட்டு கூட்டிட்டு போங்க...!
தர்மமும் தலை காக்கல... தர்மபுரியும் தலை காக்கல...காதல் போயின் சாதல்...!? காலம் மாறுமா?
உங்க வேகத்த ஈடுகட்ட இந்த ஒரு தோசக்கல்லால முடியல...! எதிலையுமே உங்களுக்கு ரெண்டுதான்...!
த.ம.6
போலீசுக்கே போக வேணாம் ,பொட்டு உங்க உடம்பிலேயே ஒட்டிகிட்டிருக்கே :)
Deleteஇந்த சார்ஜ் சர்வீசும் உண்டா :)
வித வித வாசனையோடு படிப்பும் ,அருமை :)
வேதனை இன்றும் தொடருதே (:
மனைவிக்கு புரிந்தால் சரி,அனுமதி கிடைக்குமான்னு தெரியலே :)
நியாயமே...இல்லை..நண்பரே.....
ReplyDeleteஐந்தில் எது நியாயமில்லை :)
Deleteநியாயமே...இல்லை..நண்பரே.....
ReplyDeleteமறுபடியுமா ......அதான் கேட்டேனே எது நியாயம் இல்லைஎன்று :)
Deleteஅதானே பொட்டுக்குக் காரணமானவரே அப்படி கேட்கலாமா?போலிஸ்காரர் வாங்குவது செர்விஸ் சார்ஜ் அல்லவாபடிப்பு பூர்வ ஜன்ம வாசனையோ?காதலித்தது அரசியல் வாதிக்கும் பிடிக்கவில்லைதானே அவரை தோசை தின்பதில் இருந்து அவுட்டாக இரு தோசைக்கல்லா
ReplyDeleteபொட்டுக்குக் காரணமானவர் தயங்கக் காரணம் ,போலீஸார் கேள்விகளால் துளைத்து எடுத்து விடுவார்களே என்ற பயம்தான் :)
Deleteமாமூலுக்கு அப்படியும் ஒரு பெயர் இருக்கா :)
வாசனையுமா ஜென்மம் ஜென்மமாய் தொடரும் :)
அவர் அரசியலே ஜாதியை வைத்துதானே :)
இனிமேல்தான் தெரியும் அவர் அவுட்டாவாரா என்று :)
ரசித்தேன்
ReplyDeleteபொட்டுக்கு சொந்தக் காரரை உங்களுக்குத் தெரியுமா :)
Deleteசுவை நன்று!
ReplyDeleteபிறந்த நாளில் மறக்காமல் வந்து கருத்து சொன்ன உங்களுக்கு நன்றி அய்யா :)
Deleteஹ ஹ ஹா!
ReplyDeleteதொடர்கிறேன் பகவானே!
ஆனால் ,நீங்கள்தான் நேரில் முகம் காட்ட மறுக்கிறீர்கள் ,விருது பெறக் கூட புதுகைக்கு வரவில்லையே :)
Deleteபோலீஸ் சார்ஜ் ஜோக் அருமை!
ReplyDeleteத ம 13
மக்களின் நண்பன் ,இதை செய்தால் தப்பா :)
Delete01. ஆமா இதையெல்லாம் சும்மா விடக்கூடாது...
ReplyDelete02. வாயைக்கொடுத்துட்டு.... இப்படித்தான்......
03. இப்படியும் செய்யலாமா ?
04. உண்மைதான் ஜி
05. தோசை ராமன்.
CBI விசாரணை தேவைன்னு சொல்லலாமா :)
Deleteபுரியுது புரியுது ,நீங்க சொல்ல வந்தது :)
புத்தக வாசனையை மட்டும் முகர்ந்து பார்த்துக்கிட்டு இருக்கப் போறான் :)
உண்மை ,உணரத்தான் ஆளில்லே :)
ராமன் எத்தனை ராமனடி :)
நெற்றிப் பொட்டு என்ன தங்கத்தில் செய்ததா?
ReplyDeleteசரிதான்.
அது சரி.
அடப்பாவமே..
எல்லா இடத்துலயுமே அது வழக்கம்தானுங்களே
வைரக்கல் பதித்தது:)
Deleteசார்ஜ் பண்ணிடுவார் :)
மல்லிகா வாசனை பிடிக்காமல் போனால் சரிதானே :)
நாட்டு நடப்பு அப்படித்தானே இருக்கு :)
ஆனாலும் இந்த வேகம் ,விவேகம் இல்லையே :)
இப்ப புருஷன் காணமப் போனாலே பிராது கொடுக்கிறது இல்லையாமே ஜி... பொட்டுக்கா?
ReplyDeleteபோலீஸ் எப்பவுமே நல்லா சார்ஜ் பண்ணுவாங்க... ஆனா எதுக்குமே சார்ஜ் கொடுக்க மாட்டாங்க...
மற்றவையும் ரசித்தேன்...
ஆனால் ,இருக்கிறப் புருஷனை வாட்டி எடுத்துதானே ஆகணும் :)
Deleteஎன் அனுபவத்தில் பொம்பளை போலீசும் அப்படித்தான் இருக்கு :)