13 October 2015

எலைட் பார் விளம்பரத்திலே பஞ்ச் டயலாக்கா :)

இப்படியும் சில பேர் :)
         ''பந்தியிலே சாப்பிட உட்கார்ந்தவரை அடிச்சு விரட்டுறாங்களே ,ஏன் ?''
           ''வெறும் கையோட வந்து சாப்பிடுறதும் இல்லாம ,புது செருப்பு காலோட போறதே அவர் வழக்கமாம் !''



நெருப்பென்றால் சுடும் ,ஆனால் ..?

         ''நெருப்புன்னா  வாய் வெந்துடாது என்பதை உங்க வாத்தியார் பொருத்தமாச் சொன்னாரா,எப்படி  ?''
        ''பட்டாசுக் கடையிலே நெருப்புக் கோழி புகுந்தாலும் ஒண்ணும் ஆகாதுன்னுதான் !''


எலைட் பார் விளம்பரத்திலே பஞ்ச் டயலாக்கா ?

              ''பேப்பரில் வந்த ,ஏசி  வசதியுடன் கூடிய   டாஸ்மாக் எலைட்  பார் விளம்பரத்திலே பஞ்ச் டயலாக்கா ,எப்படி ?''
             ''போருக்கு போகாதவன் அரசனும் இல்லை .பாருக்கு வராதவன் குடிமகனும் இல்லைன்னுதான் !''


ஜெயிக்கப் போறது கொள்கையா ?காசு பணமா ?

வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் இருந்து வாக்காளர்களுக்கு ...
ஓட்டு போட்டதற்கான ஒப்புகைச் சீட்டை தேர்தல் கமிஷன் தரவிருக்கிறதாம்!
அதிலே எந்த கட்சிக்கு ஓட்டுபோட்டுள்ளார்கள் என்ற விபரமும் இருந்தால் பேமென்ட்டுக்கு வசதியாய் இருக்கும் என ஓட்டை விற்கும் இந்நாட்டு மன்னர்களும் ,கட்சிகளும் எதிர்ப்பார்க்கிறார்கள் !
இதுவரை குதிரை பேரம் MLA,MPகளுடன் தான் நடந்து கொண்டுள்ளது ...
இனிமேல்  வாக்காளர்களுடணும் நடக்கும் !வாழ்க 'பண'நாயகம் !

18 comments:

  1. வணக்கம்
    ஜி
    சிலரது தொழில் இப்படியான இடங்களில் திருடுவது வழக்கம்
    நெருப்புக் கோழி செம கிட்டு.மற்றவைகளை இரசித்தேன் வாழ்த்துக்கள் ஜி த.ம1
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. நல்ல தொழில் ' தொழில் வித்தகர் ' விருது தருவோமா :)

      Delete
  2. ‘பணம் பந்தியிலே...குணம் குப்பையிலே’ -என்று எண்ணிவிட வேண்டாம்! புதுச் செருப்பு யாரையும் கடித்துவிடக் கூடாதுன்னு எடுத்துட்டு... வெறுங்கைய வீசுட்டுப் போகாக்கூடாதுன்னு போறார்... தப்பா நினைக்க வேண்டாம்...!


    நெருப்புக் கோழிக்கு விருப்பம் நெருப்புதானே...! நெருப்புக்கும் விருப்பம் நெருப்புக் கோழிதானாம்...!


    பாருக்குள்ளே நல்ல நாடு எங்கள் நாடு...! நாடு... அதை நாடு... அதை நாடாவிட்டால் எதுக்கு எலைட் ஏ.சி. பாரு...!


    ஒரு நாள் தன்னைக் காசுக்கு விற்றுவிட்டு...ஆள்பவனாக்கிய பிறகு... பல ஆண்டுகள் அரசியல் வியாபாரத்தில் லாபம் சம்பாதிக்கிறான்... இலவசத்திற்காக இவன் காசை வாங்குவதற்கு இன்னும் எத்தனை காலம்தான் கையேந்தியாகவே வைத்திருப்பானோ...?

    த.ம.2

    ReplyDelete
    Replies
    1. ஆஹா ,என்னேவொரு நல்ல எண்ணம் :)

      சேர்ந்து மகிழட்டும் :)

      குடிமகன்களின் சந்தோசமே அரசின் சந்தோசம் :)

      மக்கள் ஏமாந்த சோனகிரிகளாய் இருக்கும் வரை இவர் ஆட்டம் தொடரும் :)

      Delete
  3. கல்யாணத்தில் இரண்டு பயன்களை பெரும் அந்த நண்பருக்கு வாழ்த்துக்களை தெரிவியுங்கள்!
    த ம 3

    ReplyDelete
    Replies
    1. சீரும் செருப்புமாய் வாழ்க :)

      Delete
  4. ஹாஹாஹா! அனைத்தும் சிறப்பு!

    ReplyDelete
    Replies
    1. நெருப்புக் கோழியை ரசீத்தீர்களா :)

      Delete
  5. அனைத்தையும் ரசித்தேன் ஜி

    ReplyDelete
    Replies
    1. பஞ்ச் டயலாக் ,கொஞ்சம் ஓவர்தானே அய்யா :)

      Delete
  6. 01. சாப்புட்டு மொய் எடுத்துப்போறவரோ..
    02. நெருப்புக்கோழி நெருப்புக்குள்ளே புகுந்தால் ?
    03. ஸூப்பர் ஜி
    04. வரட்டும் வரட்டும்.

    ReplyDelete
    Replies
    1. அது வேறயா:)
      அருமையான ரோஸ்ட் கிடைக்கும் :)
      போர்டிலே எழுதச் சொல்லிடலாமா :)
      மக்களையும் குதிரையாக்கப் போகிறார்கள் :)

      Delete
  7. செருப்பாலயே அடிச்சாங்களோ!
    சூப்பர்

    ReplyDelete
    Replies
    1. அவர் கால் செருப்பைக் கழட்டி அடிச்சிருந்தாலும் தப்பில்லே :)

      Delete
  8. 'போருக்கு போகாதவன் அரசனும் இல்லை .பாருக்கு வராதவன் குடிமகனும் இல்லைன்னுதான் !'----கரிகெட்டு..

    ReplyDelete
    Replies
    1. கரிகெட்டு இல்லே ,காலம்தான் தறிகெட்டு ஓடுது :)

      Delete
  9. அனைத்தையும் ரசித்தேன். நன்றி.

    ReplyDelete
    Replies
    1. அரசனுக்கும் ,குடிமகனுக்கும் உள்ள கடமையைத் தெரிந்து கொண்டீர்களா :)

      Delete