20 October 2015

ஐ யை விற்றா ஐ போன் வாங்குவது :)

 இதைக் கேட்ட மனைவி என்ன செய்திருப்பாள்  :)      
             ''மனைவி செத்ததுக்கு ஷாஜஹான் தாஜ் மகாலைக் கட்டி இருக்கார் ,நான் செத்தா நீங்க என்ன செய்வீங்க ?''
                      ''உன் பெயருள்ள இன்னொருத்தியைக் கட்டிக்குவேன் !''


இந்த சிம்பிள் பதில் சரிதானே ?

              ''நீங்க எப்படிப்பட்ட வரனை எதிர்ப்பார்க்கிறீங்க ?''
           

               ''அதிக சவரன் கேட்காத வரனைத்தான் !''


கடவுளும் எவ்வளவுதான்  தாங்குவார் ?

                ''சாமி சிலை நொறுங்கி கிடக்குன்னு என்னை ஏன் கைது பண்றீங்க ?''
              ''என் பாரத்தை உன் மேலே போட்டுட்டேன்னு  நீங்க சொன்னதை நாங்க கேட்டுகிட்டுதானே இருந்தோம் !''

ஐ போனுக்காக ஐ யையும் விற்பார்களோ?

கண்ணை விற்று சித்திரம் வாங்கலாமா என்ற  நமது பழமொழியை  பொய்ப்பித்து விட்டார்கள் சீனர்கள் ...
தம்பதிகள் இரண்டு வயது மகளை விற்று இருக்கிறார்கள் ...
இளைஞர் ஒருவர் கிட்னியை விற்று இருக்கிறார் ...  
வந்த காசில் இவர்கள் வாங்கியது ...
வாழ்க்கைக்கு தேவையான ...
அடிப்படை தேவைகளில் ஒன்றான ...
ஐ போனை தான்  !



அதுவும் பாதி இதுவும் பாதியா?

             "நீங்க சைவமா ,அசைவமான்னு கேட்டா,யானை பாதி ,சிங்கம் பாதின்னு சொல்றீங்களே ,ஏன் ?"
                 "யானை சைவம்,சிங்கம் அசைவம் சாப்பிடும்,அதனாலேதான் !"

23 comments:

  1. நாட்டு நடப்பை நகைச்சுவையாய்த் தந்துள்ளீர்கள். அருமை

    ReplyDelete
    Replies
    1. நடப்பு சிரிக்கும் படியாத் தானே இருக்கு :)

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
  2. சதி பக்தி!

    நல்ல விவரந்தான்!

    ஹா....ஹா...ஹா....

    அட இழவே...

    தமிழ்ப் புலவரா இருப்பார் போல!

    ReplyDelete
    Replies
    1. இப்படியுமா :)
      பவுனுக்கு இவ்வளவு கமிசன்னு வாங்கிற தரகர் எப்படி இதுக்கு ஒத்துக்குவார் :)
      சுமையை என்னிடம் இறக்குங்கள் என்று எந்த சாமியும் சொன்னதா தெரியலே :)
      ஐ போன் மோகம் இப்படியுமா படுத்தும் :)
      கலந்து செய்த கலவை நான்னு கூட பாடுவார் :)

      Delete
  3. சொல்லிட்டீங்கல்ல... அது நிச்சயம் நடக்காது... நா போறதுக்கு முன்னாடி... நீங்க உயிரோட இருக்க விட்டாத்தானே...!


    மாப்பிள்ள சலூன் கடை வச்சிருக்காரு... சவரம் செஞ்சு பொழச்சுக்குவாரு...சவரன் அவர் வாயால கேட்கவே மாட்டாரு... தெரியுங்கலா... ஆனா நீங்களா எத்தன சவரன் போட்டாலும் வேண்டானும் சொல்லமாட்டாரு... மாப்பிள்ள தங்கமானவரு...!



    ‘சோதனை மேல் சோதனை போதுமடா....!’ -சாமி பாட வேண்டியதுதான்...!


    ஐ.... போனா...! போனா வராது... பொழுது சாஞ்சா கிடைக்காது... ஐ...போன தூக்கிட்டு போன பொண்டாட்டிய காணா... அவள் வருவாளா...? மாட்டாளா...?


    சைவமுன்னு ரொம்பத்தான் பிளிர்றீங்க... காட்டுராஜாவுக்கு இன்னைக்கு நீதான் விருந்துன்னு ஒரு பிடி பிடிச்சிடுறேன்னு முழங்கிட்டு அசிங்கமா இருக்கு...!

    த.ம.1

    ReplyDelete
    Replies
    1. மனுஷன் உளறிக் கொட்டிட்டாரோ :)

      சவர மாப்பிள்ளை ஜோர்தான் :)

      அசையாம இருக்கும் போதே ஜனங்க திருந்தலே ,பாடினா ....:)

      போனும் வராது ,போனவளும் வர மாட்டா :)

      புல்லுங்களை சாப்பிட்டு யானைக்கு இந்த பிளிறலா:)

      Delete
  4. Replies
    1. தாஜ் மகாலை மட்டுமா :)

      Delete
  5. *ஷாஜஹான் பரம்பரை இப்ப யாருமில்லங்க :)
    *நாங்களும் அதிக பேசாத வரனை எதிர்பார்கிறோம்ங்க :)
    *அய்யோ பாவம்:)
    *இது ஏற்கனவே வந்த செய்தி :)
    *புதுசாயிருக்கு :)

    ReplyDelete
    Replies
    1. சரித்திரத்தில் ஒரே ஒரு ஷாஜகான்தான்:)
      பேசினாலும் அனுமதிக்கவா போறீங்க :)
      சிலைஎன்ன சுமைதாங்கியா :)
      'ஐ' யோ பாவம் என்பதே சரி :)
      எது புதுசு ,எது பழசு :)

      Delete
  6. *ஷாஜஹான் பரம்பரை இப்ப யாருமில்லங்க :)
    *நாங்களும் அதிக பேசாத வரனை எதிர்பார்கிறோம்ங்க :)
    *அய்யோ பாவம்:)
    *இது ஏற்கனவே வந்த செய்தி :)
    *புதுசாயிருக்கு :)

    ReplyDelete
    Replies
    1. ஐயோ ,மறுபடியும் முதலில் இருந்தா :)

      Delete
  7. Replies
    1. ஒரே பெயர் உள்ள இரண்டு மனைவிகளை, தேடுபவரை ரசிக்க முடியுதா :)

      Delete
  8. கண்ணைவிற்று சித்திரம் வாங்கும் நாட்டிற்கு பக்கத்து நாட்டில்.. ஐ..யை விட்டு ஐ பொபோனை வாங்கியது... வளர்ச்சியாக இருக்கிறது கொடுமைதான். நண்பரே...

    ReplyDelete
    Replies
    1. ஜனத் தொகையில் முதலிடம் இருக்கும் நாட்டில் இப்படியும் சிலர் இருக்கத்தானே செய்வார்கள் :)

      Delete
  9. 01. அடடே நல்ல கணவன் மனதில் உள்ளதை சொல்லி விட்டான்.
    02. ச—வரன் ஸூப்பர் ஜி
    03. நல்ல மெய்ஞானம்தான்.
    04. இனிமேல் கோயிலுக்கு போனால் போலீஸ் இருக்கும் பொழுது மௌனமாக வேண்டிக்கணும்.
    05. அவன் விற்கிறதுக்கு கிடைச்சது அதுதான் போல..
    06. மொத்தத்துல மிருகம்னு சொல்றானோ....

    ReplyDelete
    Replies
    1. அப்புறம் அவன் என்ன பாடு பட்டானோ :)
      பவுனான வரன் என்றும் சொல்லலாமோ :)
      எனக்கா மெய் ஞானமா :)
      மௌனம் சம்மதமாகும் :)
      வாங்கினது சூப்பரில்லே:)
      கடிக்காம விட்டானே :)

      Delete
  10. எதையோ கட்டணும்! சரிதான்

    ReplyDelete
    Replies
    1. இதைக் கட்ட வலிக்குமா :)

      Delete
  11. Replies
    1. பதிவர் விழாவின் புரவலரே ..ரசித்தமைக்கு நன்றி :)

      Delete