மாமூலை வீட்டிலே வாங்குவாரோ :)
''என்னங்க ,நீங்கதான் போலீஸாச்சே ,நம்ம புள்ளைங்க போலீஸ் திருடன் விளையாட்டு விளையாடினா ஏன் எறிஞ்சு விழறீங்க ?''
''மாசம் பொறந்தா மாமூல் கொண்டு வந்து தரத் தெரியாதா நாயேன்னு கேட்கிறானே !''
இந்த தம்பதிக்குள் வாக்குவாதம் வரவே வராது !
''மாப்பிள்ளே ,என் பொண்ணுக்கு வாய் கொஞ்சம் நீளம் ,பக்குவமா நடந்துக்குங்க !''
''கவலையே படாதீங்க மாமா ,எனக்கும் கை கொஞ்சம் நீளம் !''
I T வேலை என்பதும் இப்படித்தானா ?
''முதலாளிகிட்டே கால்லே ஆணின்னு ஒருநாள் லீவு கேட்டது தப்பாப் போச்சா .ஏண்டா ?''
''நாளையிலிருந்து பம்பரமா சுத்தி சுத்தி வேலைப் பார்க்கணும்னு சொல்றாரே !''
''நாளையிலிருந்து பம்பரமா சுத்தி சுத்தி வேலைப் பார்க்கணும்னு சொல்றாரே !''
ரஜினி காந்த் ,பிரியங்கா சோப்ரா ...யார் நெனைப்பு சரி ?
நீங்கள் ஏன் அரசியலுக்கு வர விரும்பவில்லை என ...
நம்ம ஊர் சூப்பர் ஸ்டாரைக் கேட்டபோது ...
அடிப்படையில் சில மாற்றங்கள் வந்தால் மட்டுமே ,நான் அரசியலுக்கு வருவதில் அர்த்தம் இருக்கும் என்று கூறினார் !
இப்போது இருக்கின்ற சட்ட திட்டங்கள் ஊழலுக்கு வழிவகுப்பதாக இருக்கிறது என்று அவரும் நினைக்கிறார் !
இப்படியே இருந்தால் என்னால் மட்டுமல்ல ,ஆண்டவனாலும் நாட்டை திருத்த முடியாது என்பதுதான் அதன் பொருள் !
தமிழன் என்றொரு தமிழ் படத்தில் முதலும் ,கடைசியும் நடித்த பிரியங்கா சோப்ரா ...
நான் பிரதமரானால் ஊழலை ஒழித்து கட்டிவிடுவேன் என்று திருவாய் மலர்ந்தருளி யுள்ளார் ...
பிரியங்கா காந்திக்கே வராத ஆசை இவருக்கு வந்து இருக்கிறது ...
ஆசைப்படுவதில் தவறில்லை ...
பிரதமர் பதவியை கால் ஷீட் கொடுத்து பெற்று விட முடியாது ...
பொருளாதார மேதைக்கு அடித்த அதிர்ஷ்டம் ,அவருக்கும் அடிக்குமாவென தெரியவில்லை !
அவருக்கு ஒரு வேண்டுகோள் ...
ரசிகர்களின் மனம் மகிழ ,உடலை திறந்து காட்டியது போல் ...
நாட்டு மக்களின் மனம் மகிழ ,ஊழலை ஒழிக்கும் ரகசியத்தை மனம் திறந்து கூற வேண்டும் !
நம்ம ஊர் சூப்பர் ஸ்டாரைக் கேட்டபோது ...
அடிப்படையில் சில மாற்றங்கள் வந்தால் மட்டுமே ,நான் அரசியலுக்கு வருவதில் அர்த்தம் இருக்கும் என்று கூறினார் !
இப்போது இருக்கின்ற சட்ட திட்டங்கள் ஊழலுக்கு வழிவகுப்பதாக இருக்கிறது என்று அவரும் நினைக்கிறார் !
இப்படியே இருந்தால் என்னால் மட்டுமல்ல ,ஆண்டவனாலும் நாட்டை திருத்த முடியாது என்பதுதான் அதன் பொருள் !
தமிழன் என்றொரு தமிழ் படத்தில் முதலும் ,கடைசியும் நடித்த பிரியங்கா சோப்ரா ...
நான் பிரதமரானால் ஊழலை ஒழித்து கட்டிவிடுவேன் என்று திருவாய் மலர்ந்தருளி யுள்ளார் ...
பிரியங்கா காந்திக்கே வராத ஆசை இவருக்கு வந்து இருக்கிறது ...
ஆசைப்படுவதில் தவறில்லை ...
பிரதமர் பதவியை கால் ஷீட் கொடுத்து பெற்று விட முடியாது ...
பொருளாதார மேதைக்கு அடித்த அதிர்ஷ்டம் ,அவருக்கும் அடிக்குமாவென தெரியவில்லை !
அவருக்கு ஒரு வேண்டுகோள் ...
ரசிகர்களின் மனம் மகிழ ,உடலை திறந்து காட்டியது போல் ...
நாட்டு மக்களின் மனம் மகிழ ,ஊழலை ஒழிக்கும் ரகசியத்தை மனம் திறந்து கூற வேண்டும் !
அதுக்கு இப்படியும் அர்த்தமா?
''பொண்ணுக்கு காது சரியா கேட்காதுன்னு ஏன் முன்னாடியே சொல்லலே?''
''எள்ளுன்னா எண்ணெயா நிற்பான்னு சொன்னேனே!''
|
|
Tweet |
ரெண்டு பேருமே திருடனாத்தான் இருப்பாங்களாம்... போலீஸ் வேலை போக்கத்தவன் வேலைன்னு யாருமே போலீஸ்ஸாக விளையாட்டுக்கூட இருக்க மாட்டேங்கிறாங்க...!
ReplyDeleteநா ஏன் கவலைப்படுறேன்... சங்கக் கடிச்சு துப்பிடுவா...மொத புருஷன அப்படித்தான் செஞ்சு போய் சேர்ந்திட்டாரு... ஒங்க பாதுகாப்புக்குச் சொன்னேன்...! நானெல்லாம் வாக்குச் சுத்தமா இருப்பேனாக்கும்... நீங்க அப்பவே சொல்லக்கூடாதின்னு கேட்கப்படாதிலல... கேக்க நீங்க இருக்கமாட்டிங்கங்கிறது வேற விஷயம்... ஒரு பேச்சுக்குச் சொன்னேன்!
பம்பரமா சுத்தி வேலை பாக்கிறப்ப சுத்தி கால்மேல விழுந்திடுச்சு நாளைக்கு லீவு போடலாமுன்னு சொல்லு...!
ஊழலை ஒரேயடியா ஒழிக்க வருமானத்த முறையா முதல்ல காட்டி வருமான வரியைக் காட்டினா போதுமே! மானம் உள்ளவங்க மொதல்ல இந்த ஊழலை ஒழித்து கட்டி வழிகாட்டியா இருக்க யாரும் முன்வருவாங்களா...? என்ன வரும்... ஆனா வராது...?
எள்ளுன்னா எண்ணெயா நிற்பான்னு சொன்னேனே... கேக்கலையோ...? ஒங்களுக்கு ஸ்பீக்கர் அவுட்டுங்கிறது இப்பத்தான் தெரியுது...!
த.ம.1
உடையில் மட்டும்தான் வித்தியாசமா :)
Deleteஆஹா ,மாமனாரின் எச்சரிக்கை ,சூப்பர் :)
கால் மேலே கால் போட்டு உட்கார்ந்து செய்ற வேலை தர்றேன் ,வேலைக்கு வந்திடு :)
எப்படியா உழைச்ச காசை வரியா கட்ட மனசு வரும் :)
குறையை உங்களிடம் வச்சுகிட்டு பொண்ணைச் சொல்றீங்களே :)
ரசித்தேன் நண்பரே
ReplyDeleteதம +1
பார்த்தும் ரசீத்தீர்களா :)
Deleteஹா... ஹா... பையன் சரியாத் தான் கேட்டிருக்கான்....!
ReplyDeleteஅப்பன் சொன்னதை மறக்காம இருக்கானே :)
Deleteநல்ல போலீஸ் திருடன்..!
ReplyDeleteத ம 5
போலீஸ்லே இருக்கக்கூடும்,திருடன்லே ஏதுங்க நல்ல திருடன் :)
Delete*போட்டதுதானே முளைக்கும் :)
ReplyDelete*அளந்தது யாரு ஜி :)
*பம்பரம் விளையாண்டா சம்பளம் தருவாங்களா? :)
அவுக ச.சேவைக்கு தர்றது எல்லாமே ஊழல் பணம்தானே :)
*கொள்ளுனா கொல்லுவாளா :)
களை,யாரும் போட்டா முளைக்குது :)
Deleteமுடியாமல் அளப்பதை விட்டுட்டாங்க :)
சினிமாவில் தருகிறார்களே ,நாயகன் நாயகி தொப்புளில் பம்பரத்தை சுழலவிட்டால்:)
கடைத் தேங்காய் வழிப் பிள்ளையார் எனபது இவர்களுக்குத்தானா :)
குதிரையை வேண்டுமானால் கூட்டி வரலாம் :)
வாய் நீண்டால்
ReplyDeleteகை நீளுமாம்
நல்ல
மணப்பொருத்தம்
பாருங்கோ
சரி நிகர் சமானமாய் இருந்தால் சரிதானே :)
Deleteவாயும் கையும் நீளம்! சரியான பொருத்தம்!
ReplyDeleteஎன்ன பொருத்தம் நமக்குள் இந்த பொருத்தம் என்று பாடி ஆடுவார்களோ :)
Deleteஹாஹாஹா! அனைத்தும் வெடிச்சிரிப்பு! நன்றி!
ReplyDeleteதீபாவளி நெருங்குவதால் இனி தினசரி ' வெடி'சிரிப்புதான் :)
Delete
ReplyDeleteபோலீஸ் அப்பாவிடமே கேட்கிறானா மகன் ?பெண்ணுக்கேற்ற மாப்பிள்ளை எள் என்பது எண்ணை என்று கேட்குமோ
உங்க ஆலோசனையை மகனிடம் சொல்லி விடுகிறேன் :)
Deleteஇது சாதகப் பொருத்தம் தானே :)
தீபாவளி ஸ்நானம் செய்துக்க அப்படி கேட்குதோ :)
வாய் கொஞ்சம் நீளம்
ReplyDeleteகை நீளம் !'' supper!...
காது சரியா கேட்காது
''எள்ளுன்னா எண்ணெயா நிற்பா...atumai....
நல்ல சிரிப்புத் தான்!....
ஜெயிக்கப் போறது கையா ,வாயா :)
Delete01. அப்பனைப்போல புள்ள..
ReplyDelete02. கணக்கு சரிதான்
03. அடடே இப்படியும் வேலை வாங்கலாமா ?
04. தங்களது கோரிக்கை நன்று ஜி
05. அதானே புரியாதவன்
இருக்கத் தானே செய்வான் :)
Deleteதாலி கட்டியதுக்கு கணக்கு tally ஆயிடிச்சே :)
இரண்டு காலிலும் ஆணி என்றால் எப்படி முடியும் :)
கோரிக்கை உரியவருக்கு போய் சேரவில்லையே :)
போக போகத் தானே புரியும் :)
சபாஷ் வாய்க்கும் கைக்கும் சரிதான்...
ReplyDeleteஇனி ரெண்டுமே நீளாது :)
Deleteஎட்டப்ப மகனா! ஹா... ஹா... ஹா...
ReplyDeleteஅடடா... என்ன பொருத்தம்!
சுவர்ல அடிச்சு மாட்டாம இருந்தாரே!
நடிகர்கள் பேச்சை எல்லாம் கணக்கில் எடுத்துக் கொண்டு.... ஹ!
அப்போ எண்ணெய்னா என்னவா நிற்பாள்?!!
ஏட்டையா மகனை அப்படி சொல்லப்படாது :)
Deleteமாப்பிள்ளை உஷார் பார்ட்டிதான் :)
அதுவும் தலைகீழா :)
நாடே ,அவங்களைத் தானே நம்புது :)
சீயக்காயும் கையுமா நிற்கலாம் :)
ஹஹஹஹ் அனைத்தையும் ரசித்தோம் ஜி!
ReplyDeleteரஜினிகாந்த் சொல்லும் அதிசயம் நம்ம நாட்டில் நடக்குமா :)
Deleteவாய் நீளத்துக்கும் கைநீளத்துக்கும் சரியாப் போச்சு!
ReplyDeleteஅதை நீங்களோ நானோ தீர்மானிக்க முடியாதே :)
Delete'''''''''''மாசம் பொறந்தா மாமூல் கொண்டு வந்து தரத் தெரியாதா நாயேன்னு கேட்கிறானே !'''''''''
ReplyDeleteபாத்திரத்தோடு ஒன்றிப்போய்விட்டான் போல..!
:)
அதான் ,நெஞ்சின் ஆழத்தில் இருந்து உண்மை வெளி வருகிறது :)
Deleteஓ...
ReplyDeleteஇதுக்கு அப்படி ஓர் அர்த்தமா?
பலே!
நீங்க வேறென்ன நினைச்சீங்க :)
Deleteரசித்தேன்....
ReplyDeleteபிரியங்கா சோப்ரா சொல்லி இருப்பதையுமா :)
Delete