28 October 2015

பெண்களின் லெக்கின்ஸ் உடைக்கு 'அது'தான் முன்னோடியோ :)

   

                ''என்னங்க ,வெள்ளை நிற லெக்கின்ஸ் டிரஸ்ஸை நான் போட்டுக்கவே கூடாதுன்னு ஏன் சொல்றீங்க ?''


                  ''ஜெகன் மோகினி படத்திலே வர்ற பேய் ஞாபகம் வருதே !'' 


ஃபேஷன் டீவியை இன்னுமா மறக்கலே ?

                  ''குருவே ,அந்த சிஷ்யன்   என்ன கேட்டார் ,ஆசிரமத்தில் இருந்து உடனே 'கல்தா 'கொடுத்து விட்டீர்களே ?''
             ''ஞானக் கண்ணால் ஃபேஷன் டீவியைப் பார்க்க அருள் புரியுங்கள் என்று கேட்கிறானே !''

சர்வருக்கும் அவருக்கும் ஏழாம் பொருத்தம் ?

               ''சர்வர் யாருமே ஒத்துழைக்காம நஷ்டமாகி ஓட்டலை மூடிட்டீங்க ...கம்ப்யூட்டர் சென்டர் வைங்கன்னு  சொன்னா ,ஏன் வேண்டாங்கிறீங்க?''
                

            ''அதுக்கும் 'சர்வர் 'ஒத்துழைப்பு  தேவைப்படுமே!''

பேஸ் புக் வடிவில் வந்த எமன் !

எமன் எருமை வாகனத்தில் வருவான்னு சொல்வார்கள் ...
இந்த நவீன காலத்தில் ...
சென்னையில் பணிபுரிந்த சாப்ட்வேர்  என்ஜினியருக்கு பேஸ் புக் வடிவில் எமன் வந்துள்ளான் ...
ஜார்கண்ட் பையன் ,கேரளக் குட்டியை மூன்றாண்டு டாவடித்து  ...
இரு வீட்டார்  சம்மதமின்றி பதிவுத் திருமணம் முடித்து ...
ஹனி மூனை வெளிநாட்டில் கொண்டாடி மூன்று மாதமாகி விட்டது ...
இளம் மனைவி ஹனிமூன் படங்களை பேஸ் புக்கில் போட ...
படங்களைப் பார்த்த பையனின் பெற்றோர்க்கு கோபம் தலைக்கேற ...
படங்களை டெலிட் செய்ய பெற்றோரின் கட்டளை ஒருபுறம் ...
முடியவே முடியாதென்று மனைவியின் பிடிவாதம் மறுபுறம் ...
செய்வதறியாதவன் தொங்கிவிட்டான்  தூக்கில் !
பேஸ்புக்கில்  படங்கள் சிரிக்கின்றன ...
போட்டோவில் சிரிப்பவன்தான் உயிருடன் இல்லை !


ஊரு விட்டு ஊரு போனா பேரும் மாறுமா?

          ''கர்நாடகாவிலே  எல்லாமே 'ஹள்ளி'ன்னுதான் முடியுமோ ?''

            ''நம்ம ஊரு அல்லி ராணி கூட அங்கே போனா ஹள்ளி  ராணிதான்  !''

30 comments:

  1. உன்னைப் பார்த்தாலே எனக்கு ‘ஜெர்க்கா’ இருக்கு... இதுல ஜெர்க்கின்ஸ் வேறயா...? ‘கண்ணுக்குள்ள ‘கன்’ன வச்சு என்னக் கொல்லாததே...! நீ உயிரோட அலையிற பேய்தான்னு உண்மைச் சொன்ன நீ என்னா தப்பாவா நெனச்சுக்கப் போறாய்..?!


    தப்பாவே புரிஞ்சிக்கிறீங்கள் குருவே...ஞானம் இல்ல... நாணம்... நாணக்கண்ணால்...!


    எல்லாப்பக்கமே இந்தர் சர்வர் பிராபளம்தான்...! சர்வர் ‘சுந்தரமும்‘ இல்ல... ஹோட்டல் ‘சந்தர்’ மொதலாளியும் இல்ல... ரெண்டு பேரும் போயே சேர்ந்திட்டாங்க...!


    ‘பேசும் படம்’-ங்கிறது இதுதானோ...? பேஸ் புக்கெல்லாம் பேச ஆரம்பிச்சிடுச்சு... காலம் இணைய காலமாகி அவனைக் காலமாக்கிடுச்சு...!


    நம்ம நாட்டுல ‘கள்ளி’ப்பால்ல முடிக்கிறாங்க...அவுங்க ‘ஹள்ளி’யில முடிக்கிறாங்க... அந்தத்த ஆதியாக்கிட்டீங்க...ஓ இதுதான் அந்தாதியோ...?

    த.ம.1


    ReplyDelete
    Replies
    1. காதல் பிசாசே காதல் பிசாசே என்று பாடத் தோன்றுகிறதா :)

      நாணமா ,அது போய் பல வருசமாச்சே :)

      சர்வர் சுந்தரம் போயிட்டாலும் சிலை எடுத்தான் சின்னப் பெண்ணுக்கு காதில் ஒலிக்குதே :)

      அழவைக்கும் படமா ஆகிப்போச்சே :)
      கள்ளிப் பால்லே முடிக்கிறது கொடுமைதானே :)

      Delete
  2. வணக்கம்
    ஜி
    அனைத்தும் அருமை... படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் த.ம 4
    எனது பக்கம் கவிதையாக வாருங்கள் அன்புடன்
    ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: உன் நினைவுக் கீற்றுக்கள்:

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. பார்த்தும் மகிழ்ந்து இருக்கணுமே :)

      Delete
  3. Replies
    1. அதுவும் அடுப்பில் கால் நீட்டியபடி :)

      Delete
  4. ஹஹஹ! சரியாகச் சொன்னீர்கள்.

    ReplyDelete
    Replies
    1. செம் சைடு கோல் அடிக்காமல் ,ரசித்து சொன்ன கருத்துக்கு நன்றி :)

      Delete
  5. வெள்ளை நிற லெக்கின்ஸ் டிரஸ்ஸை கண்டால்
    பேய் ஞாபகம் வருதா - அதைவிட
    பேரூந்தில் பயணித்தால்
    பேரூந்து இருக்கைகளில் இருந்த
    ஊத்தைகளும் பளிச்சிடுமே!

    ReplyDelete
    Replies
    1. உங்க நாட்டு பஸ்களிலும் இதே அழுக்குதானா :)

      Delete
  6. லெக்கின்ஸ் போட்ட பேய்தான் ஜகன் மோகினியா? அந்த பேயை பார்த்தாலும் சிரிப்புத்தான் வருது! சர்வர் ப்ராப்ளம் எல்லா இடத்திலேயும் இருக்கு போல!

    ReplyDelete
    Replies
    1. பேய்களுக்கேல்லாம் லெக்கின்ஸ் டிரஸ்தான் :)
      சர்வர் பிரச்சினை வராமல் இருக்க டிப்ஸ் உண்டா :)

      Delete
  7. 01. அந்த ட்ரெஸ் போடாமல் மட்டும் எப்படியாம் ?
    02. விஞ்ஞானமும், மெய்ஞானமும் இணையட்டும்னு நினைச்சிருப்பான்.
    03. உண்மைதான் இவரு பிழைச்சுக்கிருவாரு...
    04. வேதனையானதே..
    05. சரியாக சொல்லிட்டீங்க....

    ReplyDelete
    Replies
    1. பேயைக் கேட்கிறீங்களா ,பெண்களைக் கேட்கிறீங்களா :)
      இணைந்தால் பிறக்குமா புது ஞானம் :)
      வியாபாரம் செய்யாமலேயா :)
      முக நூலும் வில்லனாகி விட்டதே :)
      ஒரு மில்லி கிராம்கூட தப்பில்லை :)

      Delete
  8. *வெள்ள ட்ரஸ் போடற ஆம்பிள்ளைகளுக்கு என்ன பேராம் :)
    *கன் வைத்து சுடலையா? :)
    *சரியான சர்வர் சந்தரமாயிருப்பானா? :)*அச்சச்சே பாவம் வேற என்ன பன்றது ' :)
    *கள்ளி ஹள்ளி :)

    ReplyDelete
    Replies
    1. பிசாசுன்னு சொல்லலாமா :)
      குரு அதையுமா வச்சுருக்கார் :)
      சர்வர் சுந்தரத்தை யாராலும் மறக்க முடியலே போலிருக்கே :) அதுக்காக சாகிறதா :)
      அங்கே பிறக்கிற குழந்தையை செல்லமா 'ஹள்ளி ராணி 'ன்னே சொல்வாங்களோ :)

      Delete
  9. லெக்கிங்க்ஸ், சர்வர், ஃபேஷன் டிவி செம சரவெடி....லெக்கிங்க்ஸ் அந்தப் பேய் ஹஹஹ அட அப்ப பேய்கல் உலத்தில் லெக்கிங்க்ஸ் ஃபேமஸ்...அப்படின்னா மாத்திப்போட்டா பெண்கள்....பே...பே...பே...

    ReplyDelete
    Replies
    1. அய்யோ பேயா... பேயப்பத்தி யார் பேசுறது..

      Delete
    2. துளசிதரன் ஜி ...
      பேய்ங்க பேவரிட் டிரஸ் லெக்கின்ஸ் மட்டும்தானே :)

      Delete
    3. இன்னொரு பேய்தான் :)

      Delete
  10. Replies
    1. உடை பொருத்தம்தானே :)

      Delete
  11. பேய் அணிந்திருக்கும் உடை லெக்கின்ஸ் அல்ல பாடீன்ஸ்... ஃபாஷன் டிவி பார்க்கத்தானே ஞானக்கண் கேட்டார் டிவியில் நடிக்க அனுமதி கேட்கவில்லையே

    ReplyDelete
    Replies
    1. நல்ல விளக்கம் ,பேய்ங்க எந்த கடையிலே வந்து பாடீன்ஸ் வாங்குமோ :)
      நடிப்பை தன்னோட நிறுத்திக்கலாம் என்று குரு நினைத்து இருப்பாரோ :)

      Delete
  12. Replies
    1. ஜெகன் மோகினியை தானே சொல்கிறீர்கள் :)

      Delete
  13. "ஞானக்கண்ணால் பேஷன் டிவி", பேஷ் பேஷ் அருமை

    ReplyDelete
    Replies
    1. நமக்கு தெரிகிறதே ,கும்மாச்சி :)

      Delete
  14. ரசித்தேன்.....

    கடைசி விஷயம் சோகம்....

    ReplyDelete
    Replies
    1. இனி லெக்கின்சை பார்த்தால் என்ன ஞாபகம் வரும் :)

      Delete