21 October 2015

படுக்கை மேல் அவருக்கு பிடித்த காரியம் :)

 பருப்பு விலை இன்னும் கூடுமாமே :)              

                 ''என்ன சொல்றீங்க ,உங்க மனைவி  சமையல்லே கெட்டிக்காரியா ?'' 
               ''ஆமா ,பருப்பில்லாமலே சாம்பார் வைக்கிறாளே!''

குடிகாரனுக்கு நியாயம் கேட்க உரிமையிருக்கா ?                      
            ''ரிஜிஸ்டர் ஆபீஸில் போய்,இலஞ்சம் வாங்குவது கேவலம்னு சொன்னீயே ,என்னாச்சு  ?''
               ''மது வீட்டிற்கும் ,நாட்டிற்கும் கேடுன்னு போட்டிருக்கு,நீங்க குடிக்காமலா இருக்கீங்கன்னு  கேட்டு கேவலப் படுத்திட்டாங்க  !''
IQ இல்லைனா கல்தாதான் !
             ''உணவு மந்திரிக்கு கல்தாவாமே ...ரேசன் கடையிலே இலவச வேட்டி சேலை வாங்க வந்த நெரிசல்லே சிக்கி நாலு பேர் இறந்தாங்களே ,அதுக்காக இந்த கல்தாவா ?''
           ''அதுக்காக இல்லை ...'கியூ ' பிரிவு  போலீசார் கியூவை  ஒழுங்குபடுத்தலைன்னு  கண்டனம் தெரிவிச்சதுக்காக  !''


படுக்கைமேல் இவருக்கு பிடித்த காரியம் ?

அற்பனுக்கு வாழ்வு வந்தா அர்த்த ராத்திரியில் குடைப் பிடிப்பான் என்பதை நிரூபித்துள்ளார் ...
திரிபுரா மாநில கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சமர் ஆசார்ஜி என்பவர் !
அவர் செய்தது ,இருபது லட்ச ரூபாயை படுக்கையில் அடுக்கி ,அதன் மீது புரண்டு புரண்டு செல்போன் மூலம் வீடியோ வேறு எடுத்துக் கொண்டுள்ளார் ...
அவரது நண்பர் மூலமாகவே அந்த வீடியோ வலையுலகில் வெளியாகிவிட்டது ...
அவர் பேட்டியில் சொல்கிறார் ...
'இது எனது நீண்ட நாள் ஆசை,மற்ற தலைவர்கள் போல் நான் மறைக்க விரும்பவில்லை '!
கழிவறைக்குப் போகவே காசில்லாத பல கோடி ஏழைகள் வாழும் நாட்டில் ...
இவரைப் போன்றவர்கள் கழிவறைக் கட்டியே கோடிக் கணக்கில் கொள்ளை அடிக்கிறார்கள்!

இந்த மொக்கைக்கு 'ஜல்பே 'பரவாயில்லே!

           ''உனக்கு ஜலதோஷம்  பிடிக்குமா?''

           ''எப்பவாவது  பிடிக்கும்!''

           ''அப்படின்னா எப்பவும் என்ன பிடிக்கும்?''    

26 comments:


  1. திறமை! து.ப விக்கற விலையிலே..

    ஹா...ஹா....ஹா...

    ஹா.... ஹா... ஹா...

    அடப்பாவி!

    என்ன பதிலை எதிர்பார்க்கறாராம்?


    ReplyDelete
    Replies
    1. விட்டால், பருப்பில்லாமல் கல்யாணமே முடித்து விடுவார் போலிருக்கே :)

      நீங்கள் அத்தனை பேரும் உத்தமர்தானா என்று பாடுவார்களோ :)

      விவரமான அமைச்சர்தானே :)

      பணத்திலே விழுந்து புரண்டாலும் ஒட்டுறதுதானே ஒட்டும் :)

      உங்க பொண்ணைப் பிடிக்கும்னு சொல்லிடப் போறார் :)




      Delete
  2. ரசித்தேன்.....

    கடைசி கேள்வி... :)

    ReplyDelete
    Replies
    1. யாருக்கும் பிடிக்கும் கேள்வி இது :)

      Delete
  3. *பாத்திரம் இல்லாம சாம்பார் வைக்கிறாங்க? இது பெரிசா? :)
    *கண்டிப்பா இருக்கு :)
    *இலவச இறப்புனு ஈசியா எடுக்கலயா? :)
    *பஞ்சு மெத்தை போரடிச்சிருக்கும் இவனையெல்லாம் காறிதுப்பியே சாவடிக்கனும் :)
    *விக்ஸ் இருக்கே கவலை ஏனாம்? :)

    (உங்க பதிவு என் கைபேசியில பாதிதான் தெரியுதுங்க???? :)

    ReplyDelete
    Replies
    1. ஹோட்டலில் வாங்கிய பாக்கெட் சாம்பாரா இருக்கும் :)
      இருக்கு ,ஆனால் ,தார்மீக உரிமையில்லே:)
      இறப்பிலும் உண்டா இலவசம் :)
      இதுக்கெல்லாம் அந்த ஆள் அசரமாட்டானே:)
      அதுக்காக எப்பவும் உறிஞ்ச முடியுமா :)

      (சரி செய்ய முயற்சிக்கிறேன் )

      Delete
  4. Replies
    1. எங்கள் வீட்டில் நடந்த ஒரு உண்மை நிகழ்வு: மட்டன் குழம்பு வைக்கும்போது எப்போதாவது மட்டனுடன் உருளைக்கிழங்கு சேர்த்துப் போடுவது உண்டு. ஒருமுறை மட்டன் பிரிட்ஜில் இருந்ததால் உருளைக்கிழங்கு மட்டும் போட்டுவிட்டு மட்டன் போட மறந்துவிட்டது. சாப்பிட்டபின்பு அனைவரும் சொன்னது: “மட்டன் குழம்பு மிக அருமை ஆனால் கறி மட்டும் முழுவதும் கரைந்து விட்டது. அதனால் தான் குழம்பு இவ்வளவு சுவையோ?”

      Delete
    2. கரந்தையாரே ...
      தினமணியில் வந்த உங்கள் பதிவுக்கு வாழ்த்துக்கள் :)

      Delete
    3. செல்வதுரை அய்யா ....
      பரவாயில்லை,நீங்கள் ஒரு முறை கறி வாங்கி இரண்டு நாள் சாப்பிட்டு இருக்கிறீர்கள் ,திருப்தியா இருந்திருக்குமே :)
      புதுகையில் சந்தித்தமைக்கு மிக்க நன்றி !

      Delete
  5. நீ என்ன பெரிய பருப்பான்னு எல்லாம் கேக்க ஆரம்பிச்சுடுவாங்க...! கஞ்சி வருது... கஞ்சி வருது... கஞ்சி வருதப்பா...!


    ரோசம்... மானம்...சூடு... சொரணை... இருக்கிறவனப் பாத்து இந்தக் கேள்வி கேட்டு இருக்கனும்... தப்பா என்னிட்ட வந்து கேட்டிட்டிங்க...!


    மந்திரின்னா... எதுவும் பேசக்கூடாதுன்னு வெரமா எடுத்துச் சொல்லி இருக்கனுமல்ல...! கல்த்தா கொடுத்ததுக்கு கவலைப்படாம கல்கத்தாவுக்கு போயி பார்ல்ல டான்ஸ் பாருங்க...!


    இரு(ப்)பது இலட்சாதிபதின்னு படுக்கையில் எடுத்துக்காட்டிட்டாரு... ! எடுத்துக்காட்டா வாழ்ந்து காடடிட்டாரு...! பதிபக்தியுடன் இருக்கிறாராம் இவரது மனைவி...!


    ஜல்பகுறி சுற்றுலாத்தளம்தான் எனக்கு எப்பவும் பிடிக்கும்...! கூட்டிட்டுப் போறேளா...!

    த.ம.4





    ReplyDelete
    Replies
    1. பருப்பு இல்லாமல் சாம்பார் வைத்தால் பெரிய பருப்புதானே :)கஞ்சி கலயம் தன்னை தலையில் வைத்து வஞ்சி வருவதை ரசித்தேன் !

      நானொரு முட்டாப்பய,உங்க கிட்டே கேட்டேன் பாருங்க :)

      தலைவர் முன்னால் பேசாம இருக்கலாம் ,மைக் முன்னாடி பேசித்தானே ஆகவேண்டியிருக்கு :)

      லட்சாதிபதியா ,கோடீஸ்வரன் ஆச்சே ?பணத்தைக் கண்டால் பதிமேல் ஏன் பாசம் வராது :)

      ஜல்பைகுரியை விட அங்கிருந்து மேலே சென்றால் வரும் 'டார்ஜிலிங்'குக்கு கூட்டிட்டுப் போறேன் வாங்கோ :)

      Delete
  6. அற்பனுக்கு வாழ்வு வந்தா அர்த்த ராத்திரியில் குடைப் பிடிப்பான் சரி.... இருப்பவன் எல்லாம் இழந்தால் எதை எடுப்பான்....???

    ReplyDelete
    Replies
    1. இன்று 'ஆயுத' பூஜை அதுவுமா எதை எடுப்பான்னு நான் சொல்லித்தான் ஆகணுமா :)

      Delete
  7. பருப்பில்லாமல் குழம்பு வைப்பார் என்றிருந்திருக்க வேண்டுமோஇவர் குடிப்பது ரெஜிஸ்தர் ஆஃபீஸ் வரை தெரிந்திருக்கிறதேஇந்த க்யூ பதிவு முன்பே படித்த நினைவு. பணத்தின் மேல் படுத்தாலும் தூக்கம் போயிருக்குமே

    ReplyDelete
    Replies
    1. அய்யா நீங்க சமையல்லே ரொம்ப வீக் :)
      அங்கே போய் சளம்பினால் தெரியாமல் போகுமா :)
      முதல் ஜோக் மட்டுமே இன்றைய ஸ்பெசல் ,வயதானாலும் உங்களுக்கு நல்ல ஞாபக சக்தி :)
      பணம் அவருக்கு இரண்டாம் மனைவி ,எப்படி தூக்கம் வரும் :)

      Delete
  8. 01. நல்லாக் கேளுங்க ஜி ரசமாக இருக்கும்.
    02. ஸூப்பர் பஞ்ச் ஜி
    03. கண்டனம் சரிதானே...
    04. இந்திய மக்களுக்கு இப்படியும் நடக்கும், இன்னமும் நடக்கும்.
    05. பிடிச்சது.

    ReplyDelete
    Replies
    1. பருப்பு ரசம்னா சொல்றீங்க :)
      நம்ம ஊர்லே போர்டுக்கு பஞ்சமா என்ன ?கடைப்பிடிக்கத்தான் ஆளில்லை :)
      இவரை ,கியூவில் நிற்க வைக்காமல் சுடணும்:)
      அரசியல்வாதி திட்டம் போடுறதே கொள்ளை அடிக்கத்தானே :)
      அத்தை மகளையா :)

      Delete
  9. பருப்பு விக்கிற விலையிலே உண்மையிலே திறமைதான்

    ReplyDelete
    Replies
    1. ஒரு வேளை,சாம்பார் பொடி கிடைக்குதே ,அதை பயன்படுத்துவாங்களா :)

      Delete
  10. Replies
    1. எது நல்லாயிருக்கு ,பருப்பு போடாத ஷால்சாவா :)

      Delete
  11. வணக்கம்
    ஜி
    அனைத்தும் அருமை இரசித்தேன் வாழ்த்துக்கள் த.ம 11
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. உங்க ஊருலேயும் பருப்பு விலை கூடிப் போச்சா :)

      Delete
  12. சிறப்பான ஜோக்ஸ்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. உங்க கருத்துக்கு நானல்லவா நன்றி சொல்லணும் :)

      Delete