30 October 2015

மனைவி சொல் எல்லாமே காதில் விழுமா :)

                   

                          ''பசி மயக்கத்தில் இருந்ததால் ,நீ  வெங்காயம் நறுக்கித் தரச் சொன்னது என்  காதுலே விழலே !''
             ''டிபன் ரெடின்னா மட்டும், நல்லா விழுதே எப்படி ?''


திறமைக்கேற்ற பரிசு இது !
         
            ''கபாலி ,உன் வீட்டிலேயே கொள்ளை அடிச்ச  கொள்ளைக்காரனை 
 கண்டுபிடிச்சிட்டோம் ..அவனை விட்டுவிடுங்கன்னு ஏன் சொல்றே ?''
           
           ''அவனுக்கு என் பொண்ணைக் கொடுக்கலாம்னுதான் ''
 குண்டு மனைவியை  இப்படியா கிண்டல் பண்றது ?
            ''என்னங்க ,குக்கரைப் பார்க்கும் போதெல்லாம்  என் ஞாபகம் வருதா ,ஏன்  ?''
           ''அதுவும் வெயிட்டை  தூக்க  முடியாம எந்திரிச்சு ,உன்னை மாதிரியே  'ஸ் ..ஸ் 'ன்னு சத்தம் செய்யுதே   !''

இது காதல் தோல்வி தற்கொலை அல்ல !

 செய்தி தாளில் சமீபத்தில் ஒரு தற்கொலை செய்தி... 
விஷம் குடித்து தற்கொலை ...
           அய்யோ பாவம் எனத்தோன்றியது!
புலி வேஷம் கட்டி ஆடுபவர் ...
            இவருக்கென்ன கஷ்டமோ ?
நாலு ஆடுகளில் ஒன்று தப்பியதால் விரக்தி ...
            அதனால் இவருக்கென்ன விரக்தி ?
புலிவேஷம்போட்டு கோவில் திருவிழாவில் கலந்து கொண்டார் ...
             அது அவர் ஆசை ,அப்புறம் ?
நாலு ஆடுகளை பல்லால் கவ்வி எறியஆரம்பித்தார் ...
             இதென்ன கூத்து ?
மூன்று ஆடுகளை எறிந்து விட்டார் ...
              உலக சாதனை தான் ,அடுத்து ?
ஒரு ஆடு மட்டும் தப்பித்து விட்டது ...
             கொடுத்து வச்ச ஆடு ,அப்புறம் ?
ஆடு தப்பியது தெய்வகுற்றம் என நினைத்து விஷம் குடித்து இறந்தார் ...
              எந்த தெய்வம் இவரை புலிவேஷம் போடச் சொன்னது ?ஆடுகளை பல்லால் கவ்வி எறியச்சொன்னது ?இப்படி மூடச் செயல்களை செய்து கொண்டு இவரைப் போன்றவர்கள் வாழ்வதை விட போய் சேர்வதே நல்லது என தோன்றுகிறது !

என்றும் சிறைக் கஞ்சா சிங்கம்!

         ''ஜெயிலுக்குப்போன  தலைவர் ,கஞ்சாவிற்கு அடிமை ஆயிட்டாராமே ,ஏன்?''          
             
              ''அவர் வெளியே இருந்தா 'சிறைக்கு அஞ்சா சிங்கம் ',உள்ளே போனா 'சிறை கஞ்சா சிங்கம் 'ஆச்சே!''

28 comments:

  1. 01. அவசியமானதுக்கு மட்டும் காது கேட்கும் போல....
    02. இதுவும் நல்ல ஐடியாவா இருக்கே...
    03. காலை வாறினால் காலைப்பிடிக்க வேண்டியது வருமே...
    04. தற்கொலைக்கு காரணமே இல்லையா... என்ன கொடுமை ஜி
    05. ஸூப்பர் பட்டம்தான்

    ReplyDelete
    Replies
    1. கண்ணும் அப்படித்தானோ :)
      தேடி வந்த மாப்பிள்ளையோ :)
      வரட்டுமே ,ஆம்பளைப் பிடிக்க மாட்டானா :)
      வாழ்ந்தென்ன லாபம் ,போய் சேரட்டும் :)
      க் க்கில் அவருக்கு கிக்கே இருக்கும் போலிருக்கு :)

      Delete
  2. ரசிக்க வைத்த துணுக்குகள்

    ReplyDelete
    Replies
    1. இருந்தாலும் ,மனதில் எதுவும் சிக்கலையோ :)

      Delete
  3. ‘டீ... பண்... ரெடின்னு எ காதுல விழுந்திச்சு...டிபன் ரெடின்னு சொன்னீயாக்கும்... இதோ வந்துட்டன்டி செல்லம்...! அத்தானுக்கு வெங்காயம் உரிக்காமலே கண்ணுல தண்ணீர் வருது பாத்தியா...?‘
    ‘இங்க பைப்புல தண்ணியே மூனுநாளா வரல...கொட்டிக்கிட்டு... அடி பைப்புல பத்துக் குடம் தண்ணிய அடிங்க...!‘
    ‘பசி மயக்கத்தில நீ சொல்லறது ஒன்னும் கேக்கலை...டிபன போடுடி...எ....எ.... பொண்டாட்டி...!’


    ‘மலேசியா போயி கொள்ளக்காரன கண்டு பிடிச்சதெல்லாம்...வாஸ்தவம்தான்...இந்தக் கபாலியோட பொன்னயும் சேத்துல்ல கொள்ளக்காரன் கொண்டுட்டு போயிட்டான்... போயிட்டு போறான்... மாப்பிளைய விட்டுடுங்க!’
    ‘மாப்பு ஒனக்கு வைக்ககலைய்ய ஆப்பு...!’


    ‘கொடுத்து வைத்தவர்... நல்ல வெயிட்டான பார்ட்டி மாட்டியிருக்கிறாங்க...!‘
    ‘கொடுத்து வைத்தவரா... கோபத்த கிளறாதிங்க...நானே ‘மாட்டுக்கார வேலா... மாட்டக் கொஞ்சம் பாத்துக்கடான்னு’ பாடிக்கிட்டு இருக்கேன்.
    ‘மாட்டிக்கிட்டாரு...மச்சன் மாட்டிக்கிட்டாரு...!’ ன்னு பாடிக்கிட்டே போறேன்... டா...டா...!


    ‘குட்டி ஆடு தப்பிவந்தா குள்ள நரிக்குச் சொந்தம்..... தட்டுக்கெட்ட மனிதனிக்கு கிட்டியதெல்லாம் சொந்தம்...’ சாமிக்குப் பலியிடுவதாகச் சொல்லி திங்கிறது என்னமோ இந்த ஆசாமிகள்தானே!


    ‘கஞ்சன் சிங்கா’ -வுக்கு அவர கூட்டிட்டு போகலாமே!

    த.ம.1

    ReplyDelete
    Replies
    1. இப்போதானே சாப்பிட்டேன் ,உண்ட மயக்கமா இருக்கு ..நீயே தண்ணி பிடிச்சிடு :)

      அட்வான்ஸ் வரதட்சனையா வச்சுக்கட்டும் :)

      கொஞ்ச நஞ்சம் இல்லே கொடுத்து வைத்தது :)

      எல்லோருக்கும் தானம் பண்றதா சொல்லிக்கலாம் :)

      போதையின் உச்சிக்கு போறவருக்கு ,சிகரத்தைப் பார்க்க மனமிருக்காதே :)

      Delete
  4. காது வரைக்கும் பசி ஜி...

    ReplyDelete
    Replies
    1. டிபனை வெட்டினாலும், தொண்டை வரைக்கும் உள்ளே தள்ளுவார் :)

      Delete
  5. அனைத்தும் அருமை. குக்கர் நகைச்சுவை மிக அருமை.

    ReplyDelete
    Replies
    1. குக்கர் வெயிட்டை சிம்மும் ,அவரோட வெயிட்டை ஜிம்மும் கண்ட்ரோல் செய்யுமா :)

      Delete
  6. கபாலிக்கு ஏற்ற மருமகன்
    த ம 4

    ReplyDelete
    Replies
    1. நீங்க 'சுள்ளானை ' சொல்றீங்களா :)

      Delete
  7. குக்கர் நகைச்சுவை சூப்பர்.

    ReplyDelete
    Replies
    1. குக்கரில் சமைத்தால் எதுதான் சுவைக்காது :)

      Delete
  8. சிறை கஞ்சா சிங்கம்! ஹா ஹா! சூப்பர்

    ReplyDelete
    Replies
    1. உண்மையான சிங்கம் இவர்தானே :)

      Delete
  9. ஹஹஹ் எங்களுக்கு எது காதுல விழணுமோ அதுமட்டும்தான் விழும்....

    கபாலிக்கு வாரிசு??!!! குக்கர் அஹ்ஹஹஹ

    அனைத்தும் அருமை ஜி!

    ReplyDelete
    Replies
    1. இதையே ஃ பாலோ பண்ணுங்க :)

      Delete
  10. இந்த சிங்கம் புதுசால்ல இருக்கு?

    ReplyDelete
    Replies
    1. கஞ்சா சிங்கம்னா சும்மாவா :)

      Delete
  11. வயித்துக்குதானே பசி..காதுக்கு இல்லே...அதான் டிபன் ரெடின்னு சொன்னவுடன் கேட்கிறது.....

    ReplyDelete
    Replies
    1. வயித்துக்குதானே பசி ,அது தானா சாப்பிட்டுக்கவேண்டியதுதானே ?அப்ப மட்டும் கையும் வாயும் தேவைப் படுதா :)

      Delete
  12. ஹாஹஹா! வெயிட்டான நகைச்சுவை! ரசித்தேன்!

    ReplyDelete
    Replies
    1. ' வெயிட்'டின் வேலை முடிந்தது ,குக்கரை திறக்க வேண்டியது தான் பாக்கி ,சாப்பிட்டு போங்க :)

      Delete
  13. வணக்கம்
    ஜி
    அனைத்தும் அருமை இரசித்தேன் ஜி
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. முதலில் சாப்பிட்ட டிபன் சூப்பர்தானே :)

      Delete
  14. ரசித்தேன்.

    மூட நம்பிக்கையால் உயிரை மாய்த்துக் கொண்டவர்... அடக் கொடுமையே!

    ReplyDelete
    Replies
    1. ஆட்டுக்கும் மனுசனுக்கும் வித்தியாசம் இல்லாமல் ஆக்கி விட்டாரே :)

      Delete