2 October 2015

' பெரிய வீட்டிலே 'சின்ன வீடும் ' இருக்க முடியுமா :)

 புருஷனை வீட்டு தராத உத்தமி :)    

         ''உன் வீட்டுக்காரரை  ரொம்ப 'டார்ச்சர் 'பண்ணாதேடி! ஆண்டியாப் போயிடப் போறார் !''

             ''அவராவது ஆண்டியா போறதாவது ?வேற 'ஆன்டி 'யை வேணா தேடித் போவார் !''



பெரிய வீட்டுலே 'சின்ன வீடும் ' இருக்க முடியுமா ?

                                ''இரண்டு பெட் ரூம் உள்ள வீடு    வாங்கலாம்னு  என் 
வீ ட்டுக்காரர்  சொன்னார் ,சந்தோசப் பட்டேன்..... ''
                    ''அதுக்கென்ன இப்போ ?''
                      ''இரண்டு பெட் ரூமுக்கும் ஒரே மனைவியான்னு யோசிக்கிறாரே ?''



'குல தெய்வம்' லாலுவை பழி வாங்கி விட்டதா ?

 பசு மாட்டை தெய்வமாய் வணங்க வேண்டிய 'யாதவ் '...
அதற்கு போட வேண்டிய தீவன கணக்கிலேயே ஊழல் செய்ய ...
'நின்று கொல்லவேண்டிய  தெய்வம் 'கூட நிற்காமல் ...
 அவரை ஜெயிலில் தள்ளி இருக்கிறது ...
செய்வது தெய்வ குற்றம் என எண்ணிப் பார்க்காததால் ...
ஜெயில் கம்பிகளை எண்ணிக் கொண்டு இருக்கிறார் !
தண்டனை விபரம் கிடைத்த பின் அப்பீல் பண்ண இருக்கிறாராம் ...
அப்பவும் ஃபீல் பண்ணுவதாக தெரியவில்லை !





16 comments:

  1. 01. சரியாக புரிந்து கொண்டவள்
    02. சரிதானே... அரபிக்காரன் ஸ்டைல்
    03. குலதெய்வம் ராஜகோபாலாச்சே...

    ReplyDelete
    Replies
    1. அதான் புருஷனை இந்த அடி அடிக்கிறாரோ :)
      ஏற்கனவே அமுலில் இருக்கா :)
      இதை ,பிகாரி மொழியில் எப்படி சொல்லிக்குவாரோ:)

      Delete
  2. ஹா.... ஹா... ஹா...

    ஆபத்தான சிந்தனை! நல்லவேளை 3 பெட்ரூம், 4 பெட்ரூம் உள்ள ஃபிளாட் பார்க்கவில்லை!

    பசுக்கணக்கு பழைய கணக்கு!


    ReplyDelete
    Replies
    1. அவர் வசதி அவ்வளவுதான் :)

      பசுவைக் கட்டி வைக்கலாம் ,தீவன வழக்கில் கட்டி போட முடியலியே:)

      Delete
  3. 1. ஆண்டியா போனா சரி! ஆனால், இதான் சாக்கு என்று "ஆண்டி மடம்" கட்டிடப்போகிறார்!
    2. ரவுடிங்க சொல்வாங்களே, "ஊடு கட்டி அடிப்பேன்" என்று! அதன் அர்த்தம் இதுதானோ!
    3.இந்த குல தெய்வம்- பழி & பலி வாங்குகிற்து எல்லாம் சூத்திரனை மட்டுமே! இந்த கோ மாதா என் குலமாதா என் தெய்வம் என்று சொல்லி வெட்டு வெட்டு என்று வெட்டி வெளி நாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் அவாளை என்று கோ மாதா தெய்வம் பழி & பலி எல்லாம் வாங்காதா?

    ReplyDelete
    Replies
    1. ஆண்டி மடம் கட்டட்டுமே ,நமக்கு ஆகி வந்தா அந்த மடம் ,ஆகாட்டி அடுத்த மடம்:)

      அவங்க வூடு கட்டுறது நல்ல காரியம் இல்லையே :)

      ஏற்று மதியுமா ..கோ மாதாவுக்கு சக்தி இருந்தால் தண்டிக்கும் :)

      Delete
  4. அனைத்தும் அருமை. ஆன்டி நகைச்சுவை மிக அருமை.

    ReplyDelete
    Replies
    1. ஆன்டி கிளைமாக்ஸ் ஆகாமல் போனால் சரி :)

      Delete
  5. ஹஹஹஹ் ஆண்டி ஆண்டி!!!!!

    ஐயையோ....2 பெட் ரூமுக்கே இப்படினா...இன்னும் பெரிசா 3 ரூம்னா..

    ரசித்தோம்....

    ReplyDelete
    Replies
    1. இவர் வீடு வாங்கி அதில் நிம்மதியாய் வாழ்வாரா :)

      Delete
  6. நந்தவனத்திலோர் ஆண்டி அவன் நாலாறுமாதமா குயவனை வேண்டி கொண்டு வந்தானொரு தோண்டி கூத்தாடி கூத்தாடி உடைத்தான்டின்னு... ஆன்டிய பாட வச்சிடப் போறார்டி...!


    ரெண்டும் ஒன்றோடு ஒன்று சேர்ந்ததே...! கண்டும் காணாமல் வந்து சேர்ந்ததே...! வந்தாரை வாழ வைத்துத்தானே பழக்கம்...!


    லாலுவுக்கு இந்த லொல்லுதானே ஆகாதுங்கிறது...! ‘கோ மாதா எங்கள் குலம் மாதா கோமந்தர் குறை தீர்க்கும் குண மாதா
    எங்கள் கோமாதா ...’ கம்பிய என்னிக்கிட்டே சத்தம் வெளிய வராம பாடவேண்டியது தான்...!

    த.ம.5



    ReplyDelete
    Replies
    1. நாலாறு மாதம் வேண்டி இப்படி நாலு நொடியில் உடைத்ததற்கு என்ன காரணமோ :)

      இரண்டும் வால் கிளாக்கில் சேரும் வாழ்க்கையில் சேருமா :)

      உள்ளேயே இருக்க அவர் என்ன விவரம் இல்லாதவரா :)

      Delete
  7. /வேற 'ஆன்டி 'யை வேணா தேடித் போவார் !''/ இருந்தாலும் கவலை இல்லாத மனைவிஒரு பெட் ரூமுக்கு ஒரு மனைவி..!

    ReplyDelete
    Replies
    1. காலை வாரி விட்டு போக மாட்டார் என்ற நம்பிக்கைதான் :)
      பிள்ளை குட்டிங்களுக்கு பெட் ரூம் வேண்டாமா :)

      Delete
  8. ம்ம் ,,,,,, இருக்கலாமோ,,,,
    அனைத்தும் அருமை ஜீ,,,,,

    ReplyDelete
    Replies
    1. கூடாதுதான் ,அவர் வாழ்க்கை அவரே முடிவு பண்ணட்டும் :)

      Delete