4 October 2015

வெள்ளை சேலைன்னா விதவைதானா :)

          ''நர்ஸ்  யூனிபார்ம் போட்டுக்கிட்டுத்தான் டூட்டி பார்ப்பேன்னு  ஏன்  சொல்றீங்க ?''

                '' நான் வெள்ளை சேலை கட்டிட்டு போனா ....பேஷண்ட்  ஒருவர், 'மறுமணம் பண்ணிக்க நான் ரெடி ,நீங்க ரெடியா 'ன்னு  கேட்கிறாரே !''

இவரோட கொள் 'கை'ப் பிடிப்பு யாருக்கு வரும் :)
  
             ''பிச்சைப் போடும் போது இடது கையை  பின்னாலே  வைச்சுக்கிறீங்களே ,ஏன்?''
                ''வலது கை கொடுப்பது  இடது கைக்கு தெரியக் கூடாதுன்னு நினைக்கிறவன் நான்  !''

நடிகை சமந்தா ரெட்டி ஞாபகமாவே இருக்காங்க :)

             ''காலத்திற்கேற்ற மாதிரி விளம்பரம் பண்றதாலே ,வியாபாரம் ஓஹோன்னு இருக்கா ,எப்படி ?''
                ''இன்றைய ஸ்பெசல் 'சமந்தா ரொட்டி 'ன்னு போட்டேன் ,பய புள்ளைங்க அள்ளிகிட்டு போயிட்டாங்களே!''

இந்தியா சுய காலில் நிற்பது எப்போது ?

யானைக்கும் அடி சறுக்கும் ...
அமெரிக்காவில் எட்டு லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் ...
தென்னையில் தேள் கொட்டினால் பனையில் நெறி கட்டணுமே...
இங்கே ரூபாய் மதிப்பு வீழ்ச்சிக்கு அமெரிக்க பொருளாதாரச் சரிவு தான் காரணம் என்றார்கள் !
உலக தாதா அமெரிக்க யானை தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்ளட்டும் ...
அந்த மண் நம் தலையிலும் விழும் என்றால்... 
நாம் கடைப் பிடிப்பது சுய சார்பு பொருளாதாரக் கொள்கைதானா ?

  1. KILLERGEE DevakottaiSat Oct 04, 12:11:00 a.m.
    01. அப்படீனாக்கா, இடது கண்ணுக்கும் வலது கண்ணுக்கும் தெரியலாமா ?

    02. நம்ம நாட்டான்தான் சமைஞ்ச ரொட்டினு போட்டாலும் அள்ளிக்கி்ட்டு போவாங்களே...

    03. அரசியல்வாதிகள் 1000 கோடி, 1500 கோடினு அடிச்சுக்கிட்டு போயி ஸ்விஸ்ல கொட்டிக்கிட்டு வந்தாங்கன்னா அப்புறம் எப்படி சுயகாலில் நிற்பது நொண்டிக்காலுதான்.




    1. 1.இனிமேல் கண்ணை மூடிக்கிட்டு தரச் சொல்லிடலாமா ?அவர் மனைவி ஒத்துக்கணுமே ௦

      2.பூஞ்சான் பிடிச்ச ரொட்டியைக் கூட விடலைன்னு கேள்வி பட்டேன் )

      3.2020 ல் நாடு வல்லரசு ஆகிவிடும்னு சொல்றாங்களே ,ஒருக் 'கால் ' ஆகுமா )


18 comments:

  1. வலது கை கொடுப்பதை இடது கை தடுத்துப் பிடுங்கி விடும் என்று பின்னால் வைத்துக் கொள்கிறாரோ!

    அனைத்தையும் ரசித்தேன்.

    ReplyDelete
  2. “மறுமணமா... ? எனக்கு திருமணமே இப்பதான் முடிஞ்சிச்சு...!”
    “அப்ப மஞ்ச கயித்த வெளியில தெரியிற மாதறி போட வேண்டியதுதானே...!”
    “சீக்கிரம் போயி சேர்றதப் பாரு... ஆஸ்பத்திரியவிட்டு...ஆமா... இதுக்குத்தான் அப்பவே சென்னேன் வெள்ளச் சேல வேணான்னு!”


    எவ்வளவு நேரம் ஒங்க வலது கையால எ இடது கைய பிடிச்சிக்கிட்டு இருப்பீங்க... பிச்சை போட்டு எவ்வளவு நேரமாவுது...? பொம்பளப் புள்ள எனக்கு வெக்கமா இருக்கு...ரோட்டுல போறவங்க வாரவங்க எல்லாம் நம்மலயே பார்க்கிறாங்க...சினேகிதனே... ரகசிய சினேகிதனே...!


    சமத்தா முன்னேறக் கத்துக்கிட்டீங்க... சீக்கிரம் பெரிய மனுசியா ஆயிருவீங்க... ஆமா... சமந்தா ரொட்டி சமச்(ஞ்)சது எப்படி?


    அமெரிக்க யானை நம்ம தலையில மன்ன வாரி போட்டுச்சு... ‘தலைவாரி பூச்சூடி உன்னை.......... விலை போட்டு வாங்கவா முடியும்... ’ வாங்கிட்டாளே...!

    த.ம.2

    ReplyDelete
  3. வெள்ளை சேலை என்றால் எனக்குப் பிடிக்கும் அதற்காக விதவைகளை மணமுடிக்கப் பிடிக்கும் என்னும் அர்த்தமா

    ReplyDelete
  4. கண் அடிக்கும் போது கூட ஒரு கண்செய்வது மற்றதற்குத் தெரியாது நீங்கள் என்ன சமாந்தா ரசிகரா? அடிக்கடி அவர் பற்றி எழுதுகிறீர்கள்.எங்கோ இடி விழுந்தால் எங்கோ மழை பெய்யுமாம்

    ReplyDelete
  5. அனைத்துமே சிரிக்க வைத்தன! சூப்பர்!

    ReplyDelete
  6. ....சினிமாவுில் வெள்ளை சேலை என்றால் கவர்ச்சி என்று ஒரு அர்த்தம் இருக்கிறதே...???

    ReplyDelete
  7. 01. பயவுள்ளையை நம்ம Dr. 7 மலையிடம் அனுப்புங்க ஒரு ஊசியைப்போட்டுக் கொல்லட்டும்.
    02. பின் கையிலே எவனும் பிச்சை போட்டுறாம...
    03. சமந்தா வீட்டு ரொட்டினு போட்டால் அடுப்புலருந்து இறக்கும்போதே வித்துடுமே...
    04. பொருளாதாரத்தில் இந்தியா வீழ்ச்சியடைந்தாலும் எந்த அரசியல்வாதியும் பாதிக்கப்போறதில்லையே... எல்லா கஷ்டமும் மக்களுக்குக்கு மட்டும்தான் ஜி

    ReplyDelete
  8. ஸ்ரீராம்.Sun Oct 04, 06:03:00 a.m.
    வலது கை கொடுப்பதை இடது கை தடுத்துப் பிடுங்கி விடும் என்று பின்னால் வைத்துக் கொள்கிறாரோ!>>.
    கொடுக்கும் போதுகூட இரண்டு மனசோடு கொடுப்பாரோ :)

    ReplyDelete
  9. manavai jamesSun Oct 04, 06:22:00 a.m.
    “மறுமணமா... ? எனக்கு திருமணமே இப்பதான் முடிஞ்சிச்சு...!”
    “அப்ப மஞ்ச கயித்த வெளியில தெரியிற மாதறி போட வேண்டியதுதானே...!”
    “சீக்கிரம் போயி சேர்றதப் பாரு... ஆஸ்பத்திரியவிட்டு...ஆமா... இதுக்குத்தான் அப்பவே சென்னேன் வெள்ளச் சேல வேணான்னு!”


    எவ்வளவு நேரம் ஒங்க வலது கையால எ இடது கைய பிடிச்சிக்கிட்டு இருப்பீங்க... பிச்சை போட்டு எவ்வளவு நேரமாவுது...? பொம்பளப் புள்ள எனக்கு வெக்கமா இருக்கு...ரோட்டுல போறவங்க வாரவங்க எல்லாம் நம்மலயே பார்க்கிறாங்க...சினேகிதனே... ரகசிய சினேகிதனே...!


    சமத்தா முன்னேறக் கத்துக்கிட்டீங்க... சீக்கிரம் பெரிய மனுசியா ஆயிருவீங்க... ஆமா... சமந்தா ரொட்டி சமச்(ஞ்)சது எப்படி?


    அமெரிக்க யானை நம்ம தலையில மன்ன வாரி போட்டுச்சு... ‘தலைவாரி பூச்சூடி உன்னை.......... விலை போட்டு வாங்கவா முடியும்... ’ வாங்கிட்டாளே...! >>.


    தாலியை வெளியே காட்ட மேரியால் எப்படி முடியும் :)


    கோவை சரளாவை கண் முன் கொண்டு வந்து நிறுத்தி விட்டீர்களே :)

    எப்படி எப்படின்னு பாட்டு பாடியா இதை கேட்பீங்க :)

    us ஜம்போ பின்னால் போனால் நம் பொருளாதாரம் அம்போதான் :)

    ReplyDelete
  10. G.M BalasubramaniamSun Oct 04, 11:22:00 a.m.
    வெள்ளை சேலை என்றால் எனக்குப் பிடிக்கும் அதற்காக விதவைகளை மணமுடிக்கப் பிடிக்கும் என்னும் அர்த்தமா>>.

    உங்க அகராதி வேறு ,அதில் அர்த்தமும் வேறுதான் :)

    ReplyDelete
  11. G.M BalasubramaniamSun Oct 04, 11:26:00 a.m.
    கண் அடிக்கும் போது கூட ஒரு கண்செய்வது மற்றதற்குத் தெரியாது நீங்கள் என்ன சமாந்தா ரசிகரா? அடிக்கடி அவர் பற்றி எழுதுகிறீர்கள்.எங்கோ இடி விழுந்தால் எங்கோ மழை பெய்யுமாம்>>>

    அதுக்காக கண் அடிக்காமல் இருக்க முடியுமா :)

    அய்யா உங்களுக்கு நல்ல ஞாபக சக்தி :)

    அது நம்ம நாட்டு பொருளாதாரத்துக்கும் மிகவும் பொருந்தும் :)

    ReplyDelete
  12. ‘தளிர்’ சுரேஷ்Sun Oct 04, 03:41:00 p.m.
    அனைத்துமே சிரிக்க வைத்தன! சூப்பர்!>>
    மணவையாரின் கருத்தும் கூட சிரிக்க வைக்கிறதே :)

    ReplyDelete
  13. வலிப்போக்கன் -Sun Oct 04, 04:33:00 p.m.
    ....சினிமாவுில் வெள்ளை சேலை என்றால் கவர்ச்சி என்று ஒரு அர்த்தம் இருக்கிறதே...???>>.
    சினிமாவில் வெள்ளைத் தோல் கூட கவர்ச்சிதான் :)

    ReplyDelete
  14. KILLERGEE DevakottaiSun Oct 04, 06:00:00 p.m.
    01. பயவுள்ளையை நம்ம Dr. 7 மலையிடம் அனுப்புங்க ஒரு ஊசியைப்போட்டுக் கொல்லட்டும்.
    02. பின் கையிலே எவனும் பிச்சை போட்டுறாம...
    03. சமந்தா வீட்டு ரொட்டினு போட்டால் அடுப்புலருந்து இறக்கும்போதே வித்துடுமே...
    04. பொருளாதாரத்தில் இந்தியா வீழ்ச்சியடைந்தாலும் எந்த அரசியல்வாதியும் பாதிக்கப்போறதில்லையே... எல்லா கஷ்டமும் மக்களுக்குக்கு மட்டும்தான் ஜி>>>

    தனக்கு போட்டியா யாரும் வந்தா 7மலைக்கு பிடிக்காதோ :)

    போட்டா லாபம்தானே :)

    அடுப்புலே குதிக்காம சரிதான் :)

    வளர்ச்சி அடைந்தாலும் மக்களுக்கு வந்து சேராது :)

    ReplyDelete
  15. இடது கை கொடுப்பதைத் தடுத்து விடுமோ....

    சமந்தா ரொட்டி...அஹஹஹ அந்த வகைலதான் குஷ்பு இட்லி, அமலா பால்.....

    நம்ம நாட்டுப் பொருளாதாரம் கேயோட்டிக் தியரி அடிப்படைதான் ஜி!

    ReplyDelete
  16. அனைத்தும் நன்று! மதிப்பெண் பதிய மறுக்கிறது

    ReplyDelete
  17. Thulasidharan V Thillaiakathuஜி >>
    உங்கள் கமெண்டை எப்படி கவனிக்காமல் விட்டேன் என்று தெரியவில்லை !

    இடது கைக்கும் தனியாவா ஒரு மனசிருக்கு :)

    முன்பு சேலைகளுக்கு தான் நடிகை பெயர் வைப்பார்கள் ,இப்போ :)

    என்ன தியரியோ ,திவால் ஆகாமல் போனால் சரிதான் :)


    ReplyDelete
  18. மதிப் பெண் பதியாட்டி விடுங்க ,பாஸ் ஆயிடுச்சு :)

    ReplyDelete