இன்று நமது நாள் ...ஆம் ,அனைவருக்கும் 'உலக சிரிப்புத் தின 'வாழ்த்துக்கள் !
-----------------------------------------------------------------------------------------------------------------------------
இனி நம்மாளுக்கு பால்கோவா கிடைக்குமா :)
-----------------------------------------------------------------------------------------------------------------------------
இனி நம்மாளுக்கு பால்கோவா கிடைக்குமா :)
'' தினசரி ஒரு பூனை பால் குடிக்க வருமே ,அது ஏன் இப்போது வர்றதில்லே ?''
''நீ செய்த பால்கோவாவை அது டேஸ்ட் பார்த்திருக்கும் ,அதான் !''
''நீ செய்த பால்கோவாவை அது டேஸ்ட் பார்த்திருக்கும் ,அதான் !''
மயிர் பிளக்கிற ஆராய்ச்சின்னா இதுதானா ?
''என்னடா ,ரொம்ப நேரமா 'ஏர் பட்ஸ் 'சோட இரண்டு முனைப் பஞ்சையும் பார்த்துகிட்டே இருக்கே ?''
''இதிலே எந்த பக்கத்தை எந்த பக்க காதுலே நுழைக்கிறதுன்னு தெரியாம யோசிச்சுகிட்டு இருக்கேன் !''
''இதிலே எந்த பக்கத்தை எந்த பக்க காதுலே நுழைக்கிறதுன்னு தெரியாம யோசிச்சுகிட்டு இருக்கேன் !''
வீட்டிலே நாலு வத்தல் வறுக்கும் போதே
உட்கார முடியவில்லை ,தும்மல் வருகிறது ...
இரண்டாயிரத்து பதிமூணு கிலோ வத்தலைப் போட்டு ...
யாகம் செய்யப் போகிறார்களாம் , மழைவர வேண்டுமென்று !
வர்ற மழையையும் விரட்டி விடுவார்கள் போலிருக்கிறது ...
இப்படி சுற்று சூழலைக் கெடுத்து!
உட்கார முடியவில்லை ,தும்மல் வருகிறது ...
இரண்டாயிரத்து பதிமூணு கிலோ வத்தலைப் போட்டு ...
யாகம் செய்யப் போகிறார்களாம் , மழைவர வேண்டுமென்று !
வர்ற மழையையும் விரட்டி விடுவார்கள் போலிருக்கிறது ...
இப்படி சுற்று சூழலைக் கெடுத்து!
- அந்த சரஸ்வதியும் இவனை மாதிரியே இருந்தா என்ன பண்றது?
|
|
Tweet |
வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப்போகுமா...? நோய் வீட்டுக்குப் போகுமா...? அது வீட்டுக்குத்தானே போகுது....! 'உலக சிரிப்புத் தின 'வாழ்த்துக்கள் !
ReplyDeleteஇனி இந்தப் பூனையும் பால் குடிக்காதுன்னு சொல்லலாம்...!
”கூர் மழுங்கிருச்சுன்னு பார்க்கிறேன்...!”
“யாருக்கு...?”
சரஸ்வதியின் தீந்தமிழ் சொல்லெடுத்து எழுத வந்தோன்... அருள்வாய் நீ...!
”மழை வருது... மழை வருது... குடை கொண்டு வா... மானே உன் மாராப்புலே...”
“இந்த ரப்புதானே வேணாங்கிறது...!”
த.ம.1
நோய் விட்டுப் போனாலும் ,வீட்டைவிட்டு போனாலும் சரிதான் :)
Deleteபூனையை இப்படி துரத்தலாமா:)
கத்தியைத் தீட்டாதே ,புத்தியைத் தீட்ட வேண்டுமா :)
சரஸ்வதி நம்ம தமிழ்நாடுதானா :)
என்ன ஒரு சுயநலம் ?இவர் மட்டும் நனையக் கூடாதாம் :)
அனைத்தையும் ரசித்தேன். சரஸ்வதி துணையைச் சற்றே அதிகமாக.
ReplyDeleteஇந்த துணை பரீச்சைக்குப் பிறகும் தொடருமான்னு தெரியலை :)
Deleteரசித்தேன், சிரித்தேன்.
ReplyDeleteர சி (ரி ) ப்புக்கும் நன்றி :)
Deleteபகவான் ஜி நீங்க சரஸ்வதி துணை என்று போட்டுப் பாருங்கள் பாஸ் ஆகிடுவீங்க !
ReplyDelete(நான் அண்ணிக் கிட்ட உங்கள போட்டுக் கொடுப்பேனே :)))))) )
Boss ஆவேனா ,Pass ஆவேனா ?சரியாய் சொல்லுங்க :)
Delete01. பால்கோவா பாலில் செய்ததால் வந்த விணை
ReplyDelete02. இவன் பெரிய விஞ்ஞானியாக வர சாத்தியம் உண்டு ஜி
03. நல்லவேளை எதிர்த்தாப்புல பாத்திமா உட்கார்ந்து இருக்கலை
04. உண்மைதான் மழையை நிறுத்த வழி.
இயற்கைப் பாலே தேவலே :)
Deleteநோபல் பரிசும் பெறக்கூடும் :)
பாத்திமாவை பார்த்து எழுதினால் பாஸாவானா:)
மழை வந்ததாய் தகவலில்லை :)
சரஸ்வதி..துணையிருந்தால் வாழ்க்கையில் பாசாயிடுவான் என்று சரஸ்வதி அம்மா சொன்னாங்களாம்...
ReplyDeleteரசித்தேன் நண்பரே
Deleteதம +1
அம்மாக்காரி சொன்னதில் தவறேயில்லை ,ஒரு பாரம் குறைந்தது அவங்களுக்கு :)
Deleteகரந்தையாரே ...கருத்து போடுற உங்க பாணி நல்லாயிருக்கே :)
Deleteபாலில் இருந்து செய்த பால்கோவாதானே . காரணம் தெரியாத ஆராய்ச்சி. அது என்ன மயிர் பிளக்கும் ஆராய்ச்சி. சரஸ்வதிக்கு முன்னால் அமர்ந்திர்ந்தது யார். குடை எடுத்துப் போகவா கைக்குட்டை எடுத்துப் போகவா?
ReplyDeleteஆனால் இந்த அம்மா கைராசி ,பூனையைக் கூட விரட்டி விட்டதே :)
Deleteமயிர் பிளந்தும் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதால் அப்படி சொல்லக்கூடாதுதான் :)
சரஸ்வதியே அவரை நம்பித்தானா ,விளங்கிடும் :)
குடைக்கு வேலை இருக்காது :)
வணக்கம்.வலைப்பதிவர் விழாவிற்கு விழாக்குழு சார்பாக அன்புடன் வரவேற்கிறோம்..
ReplyDeleteநன்றி ,நான் வராமல் விழா முழுமை அடையாதே :)
Deleteபால்கோவா கிடைச்சிருக்காது! முறுக்கா பிழிஞ்சிட்டிருப்பாங்கன்னு நினைக்கிறேன்! அனைத்தும் சிறப்பு!
ReplyDeleteபுது அயிட்டமா இருக்கே ,அது சரி ,இதை யார் சாப்பிடுறது :)
Deleteசரஸ்வதி துணை!
ReplyDeleteஎப்பவும் ஒரு யுவதி துணை வேணும் :)
Deleteரசித்தேன் ஜி....
ReplyDeleteபையன் காப்பி அடிப்பதையா :)
Deleteசரஸ்வதி துணை! சூப்பர்!
ReplyDeleteஉங்க காப்பி பேஸ்ட் கருத்தும் சூப்பர் :)
Deleteகல்விக்கு அரசி
ReplyDelete'சரஸ்வதி துணை' ன்னு
நான் நினைத்தேன்
ஆனால்,
தேர்வுக்குத் தகவல் தரும்
'சரஸ்வதி துணை' ன்னு
நான்
நினைத்துப் பார்க்கவில்லையே!
உங்களுக்கு பிஞ்சு மனசு :)
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅன்பே தமிழ் ,வம்பே தமிழ் ஆயிடுச்சா ,ஏன் இந்த நீக்கம்:)
Deleteவம்பே தமிழ் இல்லை அம்பி! அன்பே தமிழ்!
Deleteசரஸ்வதிக்கு என் அன்பு தமிழ் மட்டுமல்ல--எல்லாமே! மேலும், என் பதில் நூற்றுக்கு நூறு உண்மையாக இருக்கும். ஓகேவா?
சரி வாறேன்...
சரஸ்வதி என்னை முன்னேற்றுகிறார்களோ இல்லையே, சரஸ்வதி என்னோட நெருங்கி பழகியதாலே...சரஸ்வதியை நான் "முன்னுக்கு" கொண்டு வந்து விட்டேன் ; எல்லாம் "அவா" கொடுத்த அன்பு தான்!
சரஸ்வதி ""முன்னுக்கு"" வந்துட்டா! நல்லது தானே! நாம் இருவர்-நமக்கு ஒருவரும் இல்லை,
சரஸ்வதி நான் எனக்கு துணை; ஆனால், அவள் நான் தான் அவளை முன்னுக்கு கொண்டு வந்தேன் என்று சொல்லமாட்டாள்.
இவதாண்டா-சரஸ்வதி!
நாமதான் முன்னுக்கு வரமாட்டோம் ,முன்னுக்கு கொண்டுவருவதில் கில்லாடிகள் ஆச்சே !இந்த விஷயத்தில்,சீனாவை விட இந்தியாவை சீக்கிரம் முன்னுக்கு கொண்டு வந்து விடலாம் :)
DeleteThis comment has been removed by a blog administrator.
Deleteநீங்கள் எவ்வளவு சம்பாதித்தீர்கள் என்பதை தக்க சான்றுடன் தெரிவியுங்கள் ,கார்த்திக் சேகர் ஜி :)
ReplyDeleteஹஹஹ் அனைத்தும் ரசித்தோம் ஜி!
ReplyDeleteபால்கோவா நல்லா இருந்ததா :)
Delete