25 October 2015

பொம்பள டாக்டரையும் நம்ப முடியலே!:)

 தெரிந்ததை  பையன் சொன்னா தப்பா :)           

              ''என் பையன் சரியான சாப்பாட்டு ராமனா வருவான்னு  ஏன் சொல்றீங்க ?''

                       '' ஆனாவுக்கு  அப்பம் ,ஆவன்னாவுக்கு  ஆப்பம் ,ஈனாவுக்கு  இடியாப்பம்னு சொல்றானே !''

வம்பு பிடிச்ச ஆட்டோ டிரைவர் !                 
              '' ஆஸ்பத்திரி  வாசலில் இறக்கி விட்டுட்டு காசு  கேட்கிறே,பிறகேன்  'பிரசவத்துக்கு இலவசம்'னு ஆட்டோவிலே எழுதியிருக்கே?''
               ''ஆட்டோவில் பிரசவமானால்தான் இலவசம் !''


சமர்த்துப் பேச்சால் கணவனை ஜெயிக்கலாம்...ஆனால் ?

             ''இந்த ஒரு கீரைக்கட்டை ஐந்து ரூபாய்னு சொல்றீயே ,நேற்றுக்கூட இரண்டு ரூபாய்னு தானே சொன்னே ?''
              ''இப்பவும் ஒண்ணும் மோசம் போயிடலே.. .அந்த கீரைக்கட்டு இப்பவும் இருக்கு ,ஒரு ரூபாய்க்கே தர்றேன் ,வாங்கிக்கிறீங்களா ?''

பொம்பள டாக்டரையும் நம்ப முடியலே! 

கோவிலபாக்கம்  சகோதரிகள் கைது செய்யப் பட்டிருக்கிறார்கள் ...
சூலமங்கலம் சகோதரிகளைத் தெரியும் ...
யாரிந்த புது சகோதரிகள் ?
ஐந்து வருசமா நடிச்சுக்கிட்டு  இருந்திருக்காங்க ...
ஒரு படத்தில் கூடப் பார்த்ததில்லையேன்னு நீங்க கேட்கிறது எனக்கும் புரியுது !
அவங்க படத்தில் நடிக்கலே...
நிஜத்திலே 'வசூல் ராணி MBBS 'களாய் கிளினிக் வைத்து நடத்தி வந்திருக்கிறார்கள் ...
ஒரிஜினல் டாக்டர்களே செய்யத் தயங்கும்
கருக்கலைப்புக் கூட செய்து இருப்பதாக புகார் வந்து உள்ளதாம் ...
இந்த புண்ணிய காரியங்களை ஒரு வருஷம் ,இரண்டு வருசமல்ல ...
ஐந்து ஆண்டுகளாய் செய்துள்ளார்கள் ...
பத்தாவதுகூடப் படிக்காத சமீனா அன்ட் 'சபீனா' சகோதரிகள் சென்னை மாநகரத்திலேயே ...
போலி டாக்டர்களாய்  கொடிகட்டிப் பறக்க முடியும் என்றால் ...
கிராமங்களில் நிலை என்ன என்பதை யாராவது 'சபீனா'வாய்  விளக்கி சொன்னால் நல்லது !
தமிழகத்தில் இன்னும் ஐந்தாயிரம் போலி டாக்டர்கள் இருப்பதாக அபாயச் 'சங்கு ' ஊதுகிறார் ஒரிஜினல்  டாக்டர்கள் சங்கத் தலைவர் !

வரக்கூடாத அந்நியன்!

          "புருஷனோட சொற்ப  வருமானத்திலே இவ்வளவு ஆடம்பரமா அவ இருக்க காரணம் அன்னிய முதலீடா ?''

       " ஆமா ,ஒரு அந்நியன் நடமாட்டம் அந்த வீட்டிலே அடிக்கடிதெரியுதே ! "

27 comments:

  1. இனிக்கு ஏன் இவ்வளவு லேட்டு
    சரி சரி இனிமே லேட்டா வந்தா அர்ச்ச்னாவோடதான் வரனும்னுல்லாம்
    நாங்க சொல்லமாட்டோம். சொல்லிட்டு உங்களுக்கு வீட்டில் அர்ச்சனை கிடைக்க வழி செய்ய மாட்டோம்.

    ReplyDelete
    Replies
    1. எங்க பக்கமெல்லாம் வரமாட்டீங்களா ஜி. (இங்கு மொய் விலக்கப்பட்டது அதனால கவலைப்படாம எட்டிப்பாருங்க தப்புன்னு தெரிஞ்சா கொட்டிட்டும் போங்க..)

      Delete
    2. சிவம் ஜி ,
      இன்று தாமதமான காரணம் ,சமூகம் அவசியம் அறிய வேண்டிய ஒரு முக்கிய விசயத்தை ,நேற்றைய பதிவில் சொல்லியிருந்தேன் .அது த ம வாசகர் பரிந்துரையில் வரட்டுமென்று இன்றைய பதிவை தாமதப் படுத்தினேன் ,அதான் லேட் :)

      Delete
    3. உங்களின் #ஸ் அப்பா... அவந்தானாய்யா... இவன்#தானுக்கு போயிட்டு வந்தாச்சு சிவம் ஜி ,தொடர்கிறேன் :)

      Delete
  2. ஒரிஜினயே நம்பி மோசமாகும்போது... டூப்ளிகேட்ட..நம்பி மோசவது பெரிய விசயமில்லையெ நண்பரே....

    ReplyDelete
    Replies
    1. கோழி குருடாயிருந்தாலும் குழம்பு ருசியா இருந்தா சரிதானே :)

      Delete
  3. சாப்பாட்டு ராமனை ரசீத்தீர்களா :)

    ReplyDelete
  4. Replies
    1. உங்க 'சம்சாரி வியர்வை' யை நானும் ரசித்தேன் ஜி :)

      Delete
  5. *எல்லாத்தையும் ரசித்தேன்!!

    ReplyDelete
    Replies
    1. நானும் உங்க தளத்துக்கு சென்று பதிவை வாசித்தேன் ,அங்கே கேட்ட கேள்வியை இங்கேயும் கேட்கிறேன் ..
      எதற்காக திருமணம் நிறுத்தப் பட்டது?புரியலே :)

      Delete
  6. எல்லா நகைச்சுவையும் அருமை.

    ReplyDelete
    Replies
    1. உங்க 'பாவக்காய்'ரெசிபியும் அருமை , உங்க செய்முறையைப் பார்த்தால் ,பாவக்காய் கூட கசக்காது போலிருக்கே :)

      Delete
  7. ‘இலையில் சோறு போட்டு ஈயைத் தூரம் ஓட்டு’ன்னு சொன்னா பழைய சோறுதான் கிடைக்குமுன்னு தெரியுமுல்ல... ! அப்ப...எப்ப அப்பம்...ஆப்பம்...இடி...ஆப்பம் ---போடப் போறீங்க...ராமன் எத்தனை ராமனடி?


    அப்ப கொஞ்சம் பொறு... பிரசவம் ஆனால் காச வாங்கிட்டுப் போலாம்...வெயிட் பண்ணு...!


    அப்ப நாளைக்கு வர்றேன்... இன்னைக்கு உள்ள கீரைய பாதிவிலைக்கு நாளை வாங்கிக்கிறேன்... நாளைக்கு வர்ற கீரை என்ன விலைக்கு கிடைக்குமுன்னு இன்னைக்குச் சொல்ல முடியுமா?


    இப்பெல்லாம் டாக்டர் பட்டம் வாங்கின எல்லாம் ஆப்ரேசன் பண்ண ஆரம்பிச்சிட்டாங்க... பிறகுதான் விசாரிச்சா முனைவர் பட்டமும் டாக்டர் பட்டம்தானே என்கிறார்கள்...!


    அப்ப அந்நியன் முதலீடுன்னு சொல்லுங்க...! அந்நியன் நடமாட்டத்தில் புருஷன் ஆடிப்போயிருப்பானே...என்ன ஓடிப்போயிட்டானா...?

    த.ம.6


    ReplyDelete
    Replies
    1. ஜேம்ஸ் ஜி ,முதலில் ஒரு கேள்வி ..உங்க 'தூது -சிற்றிலக்கியம்'காணலையே ,எங்கே போச்சு ?

      ஈயை தூர ஓட்டி சாப்பிட வேண்டிய சுகாதாரச் சூழ்நிலையில் இன்னும் நாம் இருந்தால் வெட்கக் கேடல்லவா :)

      இப்போ வலி ஆட்டோ ஓட்டுனருக்கு வந்திருக்குமே :)

      வாடிப் போன கீரையை சாப்பிடாமல் இருப்பதே நல்லது :)

      அரசியல்வாதி கூட டாக்டர்தான் ,அவரும் பண்ணலாம் ஆப்ரேசன்:)

      மானஸ்தன் என்றால் ஓடியிருக்கணும்:)

      Delete
  8. Replies
    1. உங்க அடுத்த கலக்கல் பதிவை எதிர்ப்பார்க்கிறேன் :)

      Delete
  9. வணக்கம்
    ஜி
    அதிலும் அந்நியன் நன்று...சரியாத்தான் சொன்னார்கள். இரசித்தேன் த.ம 7
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. வேண்டாதவங்களுக்கு மட்டும், அவன் அந்நியன் ஆச்சே :)

      Delete
  10. 01. இவன் நிச்சயமாக கேட்டரிங் வச்சு நடத்துவான் ஜி
    02. சரிதானே...
    03. உண்மையான வியாபாரி
    04. யாரைத்தான் நம்புவது பே(த்)தை நெஞ்சம் ?
    05. அந்நியன் கும்பிமேளாவுக்கு வந்துருப்பாரோ.. ?

    ReplyDelete
    Replies
    1. நல்லா வருவான்னு சொல்றீங்க ,அப்படித்தானே :)
      சரிதான் ,சரியான வம்பன் :)
      என்னிக்கும் ஒரே விலை ,முடியாதே :)
      அதுக்காக போதையில் தஞ்சம் அடைத்து விடாதீர்கள் :)
      அழகா பாத் டப்பில் நடக்கும் விழாவா இது :)

      Delete
  11. தமிழகத்தில் இன்னும் ஐந்தாயிரம் போலி டாக்டர்கள் இருப்பதாக அபாயச் 'சங்கு ' ஊதுகிறார் ஒரிஜினல் டாக்டர்கள் சங்கத் தலைவர்!
    அப்படியாயின்
    இந்தியா முழுவதும் எத்தனை கோடி
    போலி டாக்டர்கள் இருப்பதாக
    எண்ண வேண்டி இருக்கிறதே!
    லைசென்ஸ் இல்லாத டாக்டர்களை
    மக்கள் நாடாமல் இருப்பதே நலம்!

    ReplyDelete
    Replies
    1. நோய் நாடி நோய் முதல் நாடி டாக்டர் லைசென்ஸ் நாடி வாய்ப்பச் செயல் என்று சொல்லலாமா :)

      Delete
  12. ஹாஹாஹா! அனைத்தும் அட்டகாசம்!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் கோவில் பக்கம் போவீர்கள் ,கோவில வாக்கம் பக்கம் போயிருக்க மாட்டீர்கள் ,அப்படித்தானே :)

      Delete
  13. சாப்பாட்டு ராமன்.... ரசித்தேன்!

    ReplyDelete
    Replies
    1. அப்பம் ஆப்பம் இடியாப்பம்னா ஈன்னு இளிப்பான் போலிருக்கே :)

      Delete