31 October 2015

கனவுக் கன்னி தெரிவாளா :)

 கூகுளில் தேடச் சொன்ன கூமுட்டை :)

                           ''கூகுள்ளே தேடினா எல்லாமே கிடைக்கும்னு  அவர்கிட்டே சொன்னது தப்பா போச்சா ,ஏன் ?''

              '' வீட்டை விட்டு ஓடிப் போன அவரோட பொண்ணு ,எங்கே இருக்கான்னு பார்த்துச் சொல்லணுமாம் !''


கனவுக் கன்னி தெரிவாளா :)

               ''பகல் கனவு பலிக்காதுன்னு சொல்றாங்க டாக்டர் !''
               ''அதுக்கு நான் என்ன பண்ணனும் ?''
              ''ராத்திரி கனவு வர்ற மாதிரி பண்ணனும் !''

தீர்த்தம் குடிப்பதில் தீர்க்கமான முடிவு:)

                 

             ''குடிகாரன்பேச்சு விடிஞ்சாலே போச்சுன்னு கேவலமா 

சொல்றாங்க ,அதனாலே ....''

                     
             ''குடிக்கிறதை நிறுத்தப் போறீங்களா ?''
                  
            ''ஊஹும் ...விடிஞ்ச பிறகு குடிக்கப் போறேன் !''

                                                                                                                

                                

மனிதம் மறந்தவர்களுக்கு மகாத்மாவும் ,மலாலாவும் ஒன்றுதான் !

அன்று ...
'இந்து 'மகாத்மாவைக் கொன்றது இந்து மதத் தீவிரவாதம் ...
இன்று ...
'முஸ்லீம் 'மலாலாவைக் கொல்லத் துடிக்கிறது  முஸ்லீம் தீவிரவாதம் ..
மகாத்மா காந்தி நல்லவர்தான் ,நாட்டுக்காக பாடுபட்டவர்தான் ...
வெள்ளையருக்கு எதிராகவும் ,முஸ்லீம்களுக்கு ஆதரவாகவும்தான் பதினெட்டு முறை உண்ணாவிரதம் இருந்தார் ...
ஒருமுறைக் கூட இந்துக்களுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருந்ததில்லை ...
நான் ஒரு இந்து ,ஆனால் காந்தி இந்துவாக ஒருபோதும் நடந்துக் கொள்ளவில்லை ...
முகமத் கரம்சந்த் காந்தி என்றே அவரை சொல்வேன் ...
இது ...மகாத்மாவைக் கொன்ற கோட்சேயின் கருத்து !
அதே நேரத்தில் ...ஒரு உண்மை இந்து மறைந்தார் என கருத்தை சொன்னார் முகமது அலி ஜின்னா !
தாலிபான்களின் துப்பாக்கி சூட்டிலிருந்து உயிர் தப்பிய மலாலா 'நான் மலாலா 'என புத்தகம் எழுதியுள்ளார் ...
அதை பாகிஸ்தானில் விற்கவிடாமல் தடைசெய்த தாலிபான்கள் ...
மலாலா எங்களிடம் சிக்குவார் ,கொல்லுவோம் என்று கொக்கரித்து இருக்கிறார்கள் !
அன்றும் ,இன்றும் ...
எந்த ம[ட ]தத் தீவிரவாதிகள்  ஆனாலும் மனிதம் மறந்துதான்  செயல்படுகிறார்கள் !


மலை முழுங்கி அவர்தானா ?
             ''நீண்ட  நாளுக்கு  பிறகு இப்போதான் ஊருக்கு வர்றேன் ,யானை மலை ஸ்டாப்பிலே இறக்கி விடச் சொன்னா ,கண்மாய்க் கரையில் இறக்கி விடுறீயே ,நியாயமா கண்டக்டர் ?''
              ''உங்க நியாயத்தை அங்கிருந்த மலையை  உடைச்ச குவாரி காண்ட்ராக்டர்கிட்டே போய்க் கேளுங்க  !''

28 comments:

  1. ரசித்தேன் நன்றி நண்பரே
    தம +1

    ReplyDelete
    Replies
    1. மலை முழுங்கியைத் தானே:)

      Delete
  2. அனைத்தும் அருமை கடைசி ஜோக் அல்ல உண்மை

    ReplyDelete
    Replies
    1. இங்கே மதுரையில் அப்படித்தான் ஆகயிருந்தது :)

      Delete
  3. Replies
    1. தீர்க்கமான முடிவைத் தானே :)

      Delete
  4. திவீரவாதிகள் சிறுவயதிலேயே மூளைச் சலவை செய்யப்பட்ட ரோபோக்கள். அவர்கள் சுயமாக சிந்திப்பதே இல்லை. தலைமை சொல்வதை கண்ணை மூடிக்கொண்டு செய்வார்கள். அவ்வளவுதான்.

    ReplyDelete
    Replies
    1. மூளை இருந்தும் அற்றவர்கள் :)

      Delete
  5. வெத்தலைல்ல மை போட்டு பொன்னத் தேட கூகுளுக்கு யாரும் சொல்லித்தரல போல இருக்கு... சுந்தர்ட்ட எடுத்துச் சொல்ல பிச்சை பூசாரிய அனுப்ப வேண்டியதுதானே!


    பகல்ல இனி தூங்காதிங்க...!


    குடிகாரன்பேச்சு விடிஞ்சாலே போச்சுன்னு கேவலமா இனி யாரும் பேச முடியாதில்ல...விடியும் போதே கடை திறக்கச் சொல்லப் போறேன்...! என்னோட வர்றவங்கெல்லாம் வாங்க...வாங்க...வாங்க...!


    மடச் சாம்பிராணிகளே...பிராணிகளாக அலையாமல் மனிதர்களாக வாழ்ந்து மனிதத்தை வாழவிடுங்கள்!


    யானை மலை ஏறுன காலமெல்லாம் மலையேறிப் போச்சு... இப்ப கண்மாய்க் கரையில யானை தண்ணீ குடிச்சிட்டு இருக்கிறதான்னு பாத்திட்டு பேசமா போயிச் சேருங்க... குவாரிக்காரங்க நரபலி கொடுக்க ஆளத் தேடிக்கிட்டு இருக்காங்களாம்...!


    த.ம.5

    ReplyDelete
    Replies
    1. பட்டை நாமம் போட்டுட்டு போன பொண்ணு மை போட்டு பார்த்தாலும் தெரிவாளா :)

      ராத்திரி தூக்கம் வர மாட்டேங்குது ,பகல்லே அப்படி வருதே :)

      விடியும் வரை காத்திருப்பாரா:)

      எங்கே வாழவிடுகிறார்கள் ,நேற்றுகூட 224 பயணிகளுடன் சென்ற விமானத்தைச் சுட்டு வீழ்த்தி இருக்கிறார்களே :)

      குளத்துலே காலைக் கூட நனைக்க விட மாட்டாங்க போலிருக்கே :)

      Delete
  6. ஹ்ஹ்ஹ் மலை முழுங்கி அருமை இப்படித்தான் பல பேருந்து நிறுத்தங்களும் ஆகி உள்ளன..ஹஹ்

    மனிதம் .....பற்றியது அருமை...

    ReplyDelete
    Replies
    1. மலையை மட்டுமல்ல ,பல மனித உயிர்களையும் முழுங்கி இருப்பாங்க போலிருக்கே :)

      Delete
  7. கூகுள் ப்ளாகருக்கு இன்று கோபமோ? ஏன் யார் என்ன செய்தார்கள் அவரை? ஒட்டுப்பெட்டி உங்கள் தளத்திலும் காணவில்லையே...வெங்கட்ஜி தளத்திலும் காணவில்லை....ம்ம்ம் பிரபலமான பதிவர்கள் நீங்கள் எல்லாம் என்று இருக்குமோ...

    ReplyDelete
    Replies
    1. கூகுள் ஆண்டவர் காணிக்கை எதிர்ப்பார்க்காமலே மனம் கனிந்து அருள் பாலித்து விட்டார் :)

      Delete

  8. எதை யாரை எங்கே தேடுவது என்னும் விவஸ்தை இல்லாமல் கூகிள் தேடல் ரசித்தேன் அப்துல் கலாம் பகலில் கனவு காண்ச் சொன்னாரெ..விடிஞ்ச பிறகும் குடித்தால் பேச்சே இருக்காது. ஆதலால் மத வாதிகளாகாதீர். இடம் மாறினாலும் பெயர் மாறுவதில்லை என்று அந்த பஸ் கண்டக்டருக்குச் சொல்ல வேண்டியதுதானே

    ReplyDelete
    Replies
    1. கூட்டிப் போன மாப்பிள்ளையை தேடினால் அவருக்கு நல்லது :)
      அவர் காணச் சொன்ன கனவே வேற :)
      மூச்சும் இல்லாமல் போனால் நல்லதுதான் :)
      ஐ நா சபை 'ஆதலால் மத வாதிகளாகாதீர்.'என்று கோஷத்தை பிரச்சாரம் செய்தால் நல்லது :)
      மலை இருந்ததற்கு ஞாபகார்த்தமா இருக்க வேண்டாமா :)

      Delete
  9. அனைத்தும் அருமையான ஜோக்ஸ்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. உண்மையில் பகல் கனவு வருமா ?

      Delete
  10. தேடினா கிடைக்கும் என்பதை ..என்று மாற்ற வேண்டும் நண்பரே..

    ReplyDelete
    Replies
    1. தேடினால் காணாமல் போவாய்னு ,என் அபிமான எழுத்தாளர் சொல்லி இருக்காரே :)

      Delete
  11. 01. அதானே இதை தேட முடியாதோ..
    02. ராத்திரியில் மட்டும் தூங்கணும்.
    03. ஐடியா நன்று
    04. ஸூப்பர் விடயம் ஜி
    05. மலையவே காணோமா.... அதனாலதான் மழை வரமாட்டுது.

    ReplyDelete
    Replies
    1. இடுப்பு கயிறில் பிளாக் பாக்ஸ் கட்டி இருந்தால் தேடலாம் :)
      அதான் வர மாட்டேங்குதே:)
      குடிகாரன் ஐடியா எப்படி நல்லாயிருக்கும் :)
      மசாலா மட்டுமில்லே மலாலாவும் மணக்கும் :)
      அப்புறம் குளம் எங்கே நிறையும் :)

      Delete
  12. வணக்கம்
    ஜி
    இப்படியும் சம்பவமா... காணமல் போன மனிதரையும் தேடித்தருகிறதா... ஹா...ஹா..ஹா..
    மற்றவைகளை இரசித்தேன் வாழ்த்துக்கள். த.ம 9
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. அனைவர் உடலிலும் சிம் கார்டு இருந்தால் தேடித் தரும் காலம் வரத்தான் போகிறது :)

      Delete
  13. கண்மாய் கரையாவது இருக்கிறதே, சந்தோஷம்.

    ReplyDelete
  14. மலை முழுங்கி..... தில்லியில் அலுவலகத்தில் ஒரு நபருக்கு இந்த பெயர் வைத்திருக்கிறோம்.... :) வேறு காரணங்களுக்காக!

    ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. அதைப் பற்றி ஒரு பதிவைப் போடுங்க ஜி :)

      Delete