17 October 2015

இருக்கிற பெண்டாட்டியை காப்பாத்திக்க :)

பெயர் மாற்றினால் நல்லது :)

                           ''ரேஷன்  கடைக்கு வந்து  ,எதுக்கு சாக்பீஸ் இருக்கான்னு  கேக்குறீங்க ?''
                     ''நான் வாங்கிட்டு போன அரிசியில் புழுக்கள் நிறைய இருக்கே ...போர்டிலே , புழுங்கலரிசின்னு  எழுதி இருக்கிறதை 'புழுக்களரிசி 'ன்னு மாற்றலாம்னு தான் !''


அரசின் கொள்கையை இப்படியா நிறைவேற்றுவது ?           
                ''அரசு தானே சொல்லுது ?குழந்தை தொழிலாளர்களை ஒழிக்கணும்னு ...அதை செய்ஞ்சதுக்கா அவரை கைது பண்ணிட்டாங்க ?''
              ''அட நீங்க ஒண்ணு ,பட்டாசு தொழிலில் 
குழந்தைகளை  ஈடுபடுத்திக்  கொன்றவரை பாராட்டவா செய்வாங்க ?''

 இருக்கிற பெண்டாட்டியை காப்பாத்திக்க ....!

               ''என்னங்க ,சிறந்த மேக்கப்மேனுக்கான  பரிசு வாங்கி இருக்கீங்க ,உங்க  பெண்டாட்டி நான் ....எனக்கு மேக்கப் போட்டால் என்னவாம்  ?''
            '' சுமாரா இருந்த முதல் பெண்டாட்டிக்கு மேக்கப் போட்டேன் ...அவளையும் ஒருத்தன் தள்ளிக்கிட்டு போய்விட்டானே !''


ஆடம்பர உலகம் இது :)
ஆழ்கடலின் அமைதியை ...
அலைகளின் ஆர்ப்பாட்டத்தால் உணர முடிவதில்லை !



எறும்புக்கு வருமோ மலைப்பு :)

            "வீட்டுல லேசா சீனி சிந்தினாலே எறும்பு கூட்டம் வநதிருது ! ஸ்வீட் கடையிலே எறும்பு வர்றதே இல்லை ,ஏன் ?"

           "இவ்வளவு ஸ்வீட்டையும் எப்படி சாப்பிடறதுன்னு மலைச்சு நின்னுடுதோ ,என்னவோ !"


32 comments:

  1. ஆண்கள்ன்னா வல்லினமாத்தான் பேசுவீங்க... மெல்லினத்த வரச்சொல்லுங்க...! ஸ்...ஸ்... ஒரே புழுக்கமா இருக்கு...!


    செய்...அல்லது செத்து மடின்னு பண்ணறது தப்பில்லையா...? மொதல்ல அந்த மொதலாளிய வெடி வச்சு தகருங்க...!


    ‘நீ வேற ரொம்ம... நல்லாயிருக்கான்னு எல்லாம் சொல்றாங்க... ஓட்டிட்டி போயிடுவாங்க... என்னால முன்ன மாதரி அலையமுடியல...!‘
    ‘நீங்களும் என்ன ஒருத்தன்ட்ட இருந்து ஓட்டிட்டுத்தான் வந்தீங்க... மறந்திடாதீங்க...!‘


    இதுக்குத்தான் ரொம்ப ஆழ்ந்திடக்கூடாதிங்கிறது...! அலைகள் ஓய்வதில்லைல்ல...!


    பேருக்குத்தான் ஸ்வீட் கடை...ஸ்வீட்டா இல்லங்கிறத கரைட்டா கண்டு பிடிச்சிடும்...ஒங்கள மாதரியா... எறும்பு ஊற ஸ்வீட்டும் தேயுமுல்ல...!

    த.ம.1.


    ReplyDelete
    Replies
    1. அதோ ,மெல்லினம் ...கையிலே விளக்குமாறு கொண்டு வர்ற மாதிரியிருக்கே:)

      ஜெலாட்டின் குச்சியைத் திணித்தா:)

      இருந்தாலும் அட்டு பிகராவே இரு லட்டு, பிகர் ஆக்கமாட்டேன் :)

      இப்படியும் ஒரு தத்துவமா :)

      ஒரு நாளைக்கு ஒன்றரை டன் ஸ்வீட் தேயுமா :)

      Delete
  2. அனைத்தும் அருமை. எறும்பு மிக மிக.

    ReplyDelete
    Replies
    1. எறும்பிடம் இருந்து கற்ற பாடம் சரிதானே :)

      Delete
  3. 1*பாவம் புழுவாவது தின்னுட்டு போகட்டும் :)
    2*கைது அப்புறம் ஜாமின் சிறை அப்பீல் மறுபடியும் ஜாமின், கை கால எடுக்க சட்டத்துல இடமிலுலையா????? :)
    3*பெண்டாட்டியை காப்பாத்திக்க எதுவேனா செய்ய தெரியாத மடப்பையலா அவன்????? :)
    4*அலைகள் ஓய்வதில்லைனுதான் பார்த்திருக்கேன் இதை எப்படி உணர்வது???? :)
    5*ஸ்வீட்ல பூச்சி மரந்துஅடிச்சா எப்பூடி வருமாம்??? :)

    ReplyDelete
    Replies
    1. அதையேன் கடைக்குக் கொண்டு வரணும் :)
      நம்ம நாட்டிலே இல்லேதான் :)
      பெண்டாட்டிக்கு பேய் மேக்கப்பா போட முடியும் :)
      ஓய்ந்த பிறகா உணரமுடியும் :)
      கவுண்டமணி செந்தில் ஜோக்காச்சே இது :)

      Delete
  4. Replies
    1. உங்க ஊர் ரேசன் அரிசியும் இப்படித்தானா :)

      Delete
  5. வணக்கம்
    ஜி
    என்ன சிந்தனை... ஆகா...ஆகா... சிறப்பாக உள்ளது வாழ்த்துக்கள் த.ம 3
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் அந்த அரிசி செய்யும் மாயம்தான் :)

      Delete
  6. அரிசி ஜோக் சிறப்புங்க.

    ReplyDelete
    Replies
    1. புழுங்க வைக்குதா புழுங்கலரிசி :)

      Delete
  7. புழுக்களரிசி.......சரி தான்..
    மற்றவைகளும் ரசித்து வாசித்தேன்
    மிக்க நன்றி

    ReplyDelete
    Replies
    1. இந்த அரிசியை கோழிக்கு வேண்டுமானால் போடலாம் :)

      Delete
  8. 01. உண்மையை எழுதுவதில் தப்பில்லை
    02. கொல்லணும் - ஒழிக்கணும் 2-ம் 1-தானோ ?
    03. ஆமாமா இருப்பதையாவது காப்பாற்றிக் கொ''ல்ல''ணும்
    04. ஸூப்பர் ஜி
    05. ஸ்வீட் கடையில இன்னும் உயரமா வைக்க சொல்லணும்

    ReplyDelete
    Replies
    1. 1.துயரம் பருப்பையும் சேர்த்து எழுதி விடலாம் :)
      2.குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்கணும் என்பதை தவறாய் புரிந்து கொண்டிருக்கிறார் :)
      3. அவரோட அனுபவம் அப்படி :)
      4.கண்டதை மட்டுமே கொண்டாடும் உலகமாச்சே இது :)
      5.எறும்பு ஏறாத உயரமும் உண்டா :)

      Delete
  9. ஹஹஹாஹ்

    ஆழ்கடலின் அமைதியை ...
    அலைகளின் ஆர்ப்பாட்டத்தால் யாராலும் உணர முடிவதில்லை !// அட இது நாங்க எழுதின பதிவு மூளைக்கும் ஒத்துப் போகுமோ...

    ஸ்வீட் கடை ஹஹஹஹஹ் சூப்பர்

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் ,'தலை'மைச் செயலகத்துக்கும் இது மிகவும் பொருந்தும் :)

      Delete
  10. அனைத்தும் நன்று!

    ReplyDelete
    Replies
    1. எறும்பை போல மலைத்து போகலையே :)

      Delete
  11. புழுக்களரிசி! சூப்பர் ஐடியா!

    ReplyDelete
    Replies
    1. இனி ,நல்ல அரிசி வந்தால் கூட நம்மாளுக்கு போட மாட்டாங்களே :)

      Delete
  12. புழுக்களரிசி! சூப்பர் ஐடியா!

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் மறுபடியும் சொல்வதைப் பார்த்தால் ,உண்மையில் சூப்பர் தான் போலிருக்கு :)

      Delete
  13. This comment has been removed by the author.

    ReplyDelete
    Replies
    1. தப்பா எதுவும் எழுதி விட்டீர்களா,நம்பள்கி :)

      Delete
  14. ரோஷம் இருந்தால் ரேஷன் கடைக்கு செல்ள்ளக்கூடாது!

    ReplyDelete
    Replies
    1. வயிறு ,பலபேரோட ரோஷத்தைக் கொன்று விடுகிறதே :)

      Delete