10 October 2015

தேவதைகள் உலா வரும் நேரம் :)

  இப்படியும் ஒரு சங்கடம் :)          
            ''நீங்க கட்சி  தாவுனதுக்காக , தூத்துக்குடி மாவட்டத்தையே அசிங்கமாப் பேசுறாங்களா ,ஏன் தலைவரே ?''
         ''உப்பு விளையுற ஊர்லே பிறந்துட்டு ,உப்பு போட்டு  சாப்பிடுற மாதிரி தெரியலேன்னு 
சொல்றாங்களே !''

 இப்படி சொல்லி தப்பிக்க நினைக்கிறாரோ ?  
            
                 ''கைதாகி இருக்கிற தலைவர் மேல் நீதிபதி காட்டமா இருக்காரே ,ஏன் ?''
                    ''பிணை நீங்க தராவிட்டாலும் பரவாயில்லை .சுப்ரீம் கோர்ட்டில்  வாங்கிக்கிறதுக்காவது  என்னை வெளியே விடுங்க என்று கேட்டாராம் !''



காண்டம் என்றால் ஆங்கில அர்த்தமே வேறு !

             ''பதுங்கு குழியை பார்வையிட்ட மன்னர் ...இதென்ன ஒதுங்கு குழியான்னு  கோபமா சத்தம் போடுறாரே ,ஏன் ?''
               ''உள்ளே நாலு காண்டம் கிடக்குறதை பார்த்துட்டாரே !''




காதலிக்கவும் இனி கற்றுக் கொள்ளலாம் !

இன்னும் சில வருடங்களில் ...
டாக்டர் வக்கீல் ஆடிட்டர் போல் 
காதல் ஸ்பெசலிஸ்ட்களும் கடை திறக்க இருக்கிறார்கள் ...
குறைந்து விடுமா ?ஒரு தலைக் காதல்...
மறைந்து விடுமா ?ஆசிட் வீச்சுக்கள்...
காதலர்கள் தற்கொலைகள் காணாமல் 

போய்விடுமா? 
விடை காண காத்திருப்போம் ...
2014ம் ஆண்டு முதல் கொல்கத்தா பிரெசிடென்சி 
பல்கலைகழகம் 'காதல் 'படிப்பை துவங்கி இருக்கிறது  !
காதல் ஏன் வருகிறது ?
காதலின் நன்மை தீமைகள் என்னவென்று 
சொல்லித் தருவார்களாம் !
இந்த படிப்பில் சேர காதலித்து  இருக்க வேண்டுமா ?
காதலில் தோற்றவர்களுக்கு கட்டண சலுகை உண்டாவென்று  தெரிவித்தால் நல்லது  !
புதுப் பாடப் பிரிவில் ...
கள்ளக் காதல்,காமசூத்ரா விளக்கங்களும் தந்தால் நாட்டிற்கு மிகவும் நல்லது !


மருமகள் துடிப்பது ....நடிப்பா ?

                  ''உன்  மாமியாருக்கு இரக்கமே இல்லையா ,ஏன்?''

                ''நான் காக்கா வலிப்புலே துடிக்கிறப்போ கூட ,தன் இடுப்புலே 
இருக்கிற இரும்பு சாவியை என் கையிலே தரவே இல்லையே!''


தேவதைகள் உலா வரும் நேரம் !

அந்தி மாலை ,விளக்கேற்றும் நேரம் ..
தேவதைகள்  உலா வரும் நேரம் என 
கதவு ஜன்னலை திறந்து வைத்ததெல்லாம் 
அந்தகாலம் !
தேவை இல்லாத பூச்சிகள் எல்லாம் நுழையுமென 
எல்லாவற்றையும் இழுத்து மூடுவது 
இந்த காலம் !

16 comments:

  1. 01. அடடே அந்த ஊரு ஆளுகள் அரசியல்வாதிகளானால்... இப்படியொரு பிரட்சினையா ?
    02. நல்ல அறிவாளி இவர்தான் நாட்டை ஆளவேண்டும்
    03. எந்த முண்டம் இதை போட்டது...
    04. ஆமா இது ஒண்ணுதான் பாக்கி
    05. அருவாள்மனையாவது கொடுத்திருக்கலாம்
    06. ஸூப்பர் ஜி

    ReplyDelete
    Replies
    1. கில்லர் ஜி ,
      வலைப்பதிவர் சந்திப்பு திருவிழாவை வெற்றிகரமாக முடித்து விட்டு வந்து சேர்ந்தாச்சு ,விழாவில் உங்கள் மருமகனும் வந்து கலந்துகொண்டு சிறப்பித்தார் அவருடன் பேசி மகிழ்ந்தேன் !

      1.இதெல்லாம் அரசியல் வாதிகளுக்கு சகஜமப்பா :)
      2.அவர் ஆண்ட பரம்பரைதான் :)
      3.அதானே ,எச்சரிக்கை வேண்டாமா இதில்கூட :)
      4.வல்லரசு ஆக வேண்டாமா :)
      5.மீண்டும் வாய்ப்பு வராமலா போய்விடும் :)
      6.தேவதைகள் வர வேண்டாம் என்கிறார்களோ :)

      Delete
  2. கதை முடிஞ்சா 'காண்டம்' அப்படியே கண்டம் (condemn) ஆவது தானே!

    ReplyDelete
    Replies
    1. பிறகென்ன ,பிரேம் போட்டா வைக்க முடியும் :)

      Delete
  3. சும்மா என்ன கொறை சொல்லாதிங்க... இப்பல்லாம்... உப்பு உப்பு மாதரியா இருக்கு...சப்புன்னு இருக்கு...சுரணையே இல்ல...!


    அதான்... மேல்.... நீதிபதி பிணைக்கைதியாக்கிட்டாரோ...! ’மீன்...மீன்...’னுன்னு யாரு கூவுறது....சா...மீனோ... சாகாத மீனோ... எனக்கு ஒன்னு கொடு...!


    யுத்த காண்டத்துக்குக் குழி வெட்டுனது... ஆமாம் மன்னா... யாரோ இதை சுந்தர காண்டமாக மாற்றி விட்டார்கள்... இதுல எதிரி நாடுகளோட சதிலீலை ஏதாவது இருக்குமா மன்னா...?


    ‘காதலிக்க கற்றுக் கொள்ளுங்கள்... என் அழகினிலே என் விழிகளிலே... காதலிக்க சொல்லும் வண்ணங்கள்... காதலிக்க சொல்லும் வண்ணங்கள்...’ இந்த வாழ்த்துப் பாடலைச் சொல்லி பாடத்தை ஆரம்பிங்க... அமோகமா இருக்கும்...!


    மாமியார் சொல்றாங்க... இரும்பு... சாவியெல்லாம் குடுகிறதுனால வலிப்பு எல்லாம் நிக்காதுன்னு டாக்டர் சொல்லிட்டாராம்... படிச்சும் பதரா இருக்காதிங்கன்னு சொன்னாராம்... அதோட மட்டுமில்ல... ஒங்கள்ட்ட இருந்து சாவிய வாங்கப் போடும் நாடகம்... நம்பாதிங்கன்னும் சொல்லிட்டாராம்...!


    விளக்கேத்தும் நேரத்துல வந்தால் என்ன? வயித்தில பூச்சி புழு உண்டாகாமல் இருந்தாச் சரி...!

    த.ம. 2



    ReplyDelete
    Replies
    1. அப்போ நாக்கு கோளாறு இல்லையா :)

      மீனுக்கு பொரி போட்டிருந்த ஜாமீன் கிடைத்து இருக்குமே :)

      நல்ல வேளை,சுந்தர காண்ட அறை என்று போர்டு வைக்காமல் போனார்களே :)

      தமிழ்த் தாய் பாடலுக்குப் பதில் தமிழ் காதலி வாழ்த்துப் பாடலா :)

      டாக்டர் இது வேறைய சொல்லிட்டார் :)

      அது ,விளக்கு வச்ச நேரத்திலே மாமன் வந்தா உண்டாகிற வில்லங்கமாச்சே:)

      Delete
  4. அனைத்தையும் ரசித்தேன்.

    தமிழ் மணம் வேலை செய்யவில்லையே... பிறகு முயற்சிக்கிறேன்.

    ReplyDelete
    Replies
    1. முயற்சி செய்திருப்பதை உணர்ந்தேன் ,நன்றி :)

      Delete
  5. அண்ணா! நம் தலைவர் புகழ் ஓங்குக! இந்த சில வரிகளை அனுமதிப்பீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கு.

    முத்துநிலவன் மற்றும் அவர் குழுவிற்கு என் அநேக நமஸ்காரங்கள்! இப் படை வெற்றி அடையாவிடின் எப்படை வெற்றி கொள்ளும். இனி, அடுத்த பதிவர் விழாவிற்கு புதுக்கோட்டை சந்திப்பை தான் எல்லோரும் உதாரணமாக கொள்வார்கள்------கொள்ளவேன்டும்!

    புதுக்கோட்டை பதிவர் சந்திப்பு ஒரு Bench Mark--என்று எடுத்துக் கொள்ளவேண்டும். இது மாதிரி இனிமேல் இப்படி ஒரு விழாவை, முத்துநிலவன் குழுக்கள், மாதிரி மற்றவர்கள் நடத்துவது கடினம் என்று சொல்வதைவிட---Impossible---என்று சொல்லலாம்.

    முத்துநிலவன் குழு உழைப்ப்பு வாழ்க!

    ReplyDelete
    Replies
    1. #புதுக்கோட்டை பதிவர் சந்திப்பு ஒரு Bench Mark--#
      நீங்கள் சொல்லி இருப்பதை நேரிலேயே கஆண்டு மகிழ்ந்தோமே !அயராது பாடுபட்ட விழாக் குழுவினருக்கு வாழ்த்துக்கள் :)

      Delete
  6. மனதினை இலேசாக்கும் தங்களின் இச்சேவை தொடரட்டும்.

    அனைத்தையும் ரசித்தேன்.

    நன்றி.

    ReplyDelete
    Replies
    1. உங்களை பதிவர்கள் மிகவும் எதிர் பார்த்தேன் !
      பரிசை வென்றதுக்கு வாழ்த்துக்கள் விஜூ ஜி :)

      Delete
  7. வணக்கம்
    அனைத்தும் அரமையாக உள்ளது இரசித்தேன் பகிர்வுக்கு நன்றி. த.ம 6

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
    Replies
    1. இன்று ,பதிவர் திருவிழாவில் தங்களின் புத்தக வெளியீடுசிறப்பாக நடந்தேறியது ,ரூபன் ஜி :)

      Delete
  8. தேவதைகள் கூட சுதந்திரமாக உலாவ முடியாத நிலைக்கு ஆக்கி விட்டார்கள் ஆளா வந்த ஆட்சியாளர்கள்......

    ReplyDelete
    Replies
    1. தேவதைகளுக்கு தேவைதானா இந்த நிலை :)

      Delete