ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம் ?
''அந்த ஆள் ஒரு வரி பாடினதைக் கேட்டே ...அவனொரு குடிகாரன்னு எப்படி சரியா கண்டுபிடீச்சீங்க ?''
''துன்பம் வரும் வேளையிலே குடிங்கன்னு பாடினாரே !''
இயக்குனரிடம் ஏமாறாத நடிகை :)
''அந்தப் படத்திலே உங்களுக்கு வெயிட்டான ரோல் தானே ,ஏன் வேண்டாம்னு சொல்லிட்டீங்க ?''
''ஒரே ஒரு சீன்லே வர்ற கர்ப்பிணி வேஷம் யாருக்கு வேணும் ?''
''அந்த மந்திரவாதி பொண்ணுங்களை குறி வைச்சு ஏமாத்தி இருக்கானே ,எப்படி ?''
''தலையணை மந்திரம் இலவசமாகத் கற்றுத்தரப்படும்னு சொல்லித்தான் !''
Thir'teen'ஐ லக்கி நம்பர் ஆக்குவது 'teen' ager கையில்தான் !
டீனேஜ் என்பது ...
கனாக்காணும் காலம் மட்டுமல்ல ,
வினாக்காணும் காலமும் கூட !
தேர்வு வினாவுக்கு விடை சொல்லவேண்டிய பருவத்தில் ...
வேறு உணர்ச்சிக்கு விடை தேடிக் கொண்டிருந்தால்...
வாழ்க்கை முழுதும் கேள்விக் குறிதான் எஞ்சி நிற்கும் !
- உலகளந்த நம்பிWed Oct 01, 07:57:00 a.m.//தலையணை மந்திரம்.......//
இப்போதெல்லாம்’அம்மாக்காரிகள்’கற்றுக் கொடுப்பதில்லையோ!?
|
|
Tweet |
அருமை
ReplyDeleteஅருமை எது டீனேஜ் தானே :)
Deleteதம +1 உடன் ரசித்தேன், சிரித்தேன்.
ReplyDelete:))))
நல்ல காரியம் செய்தீர்கள் ,நன்றி :)
Deleteநேக்கு சாதம் தான் தெரியும்.
ReplyDeleteஅதென்ன சோறு!
அம்மா தாயே சோறு போடுங்கன்னு சொல்வாளே அந்த சோறா"
என்ன இழவுடா இது!
சோறு சாதம் ...ஏழு வித்தியாசம் இருக்கா ஜி :)
Deleteபானை சோற்றுக்கு ஏமாறத நடிகை பானைவயித்திர்க்கு ஒத்துக்குவா!
ReplyDeleteஜாதியாது மதமாவது? பானைவயிறான் பணம் வைத்து உள்ளான் என்றால் மடியாவது மன்னான்கட்டியாவது
எண் ஜாண் உடம்புக்கு ஒரு ஜாண் வயிறே பிரதானமா :)
Deleteதுன்பம் நேர்கையில் பீர் கொடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா.கர்ப்பிணி வேஷம் என்றாலும் நிறைய சீன்களில் வரவேண்டாமா
ReplyDeleteடீனேஜுக்கு அறிவுரைகள் நன்று.
ரசித்தேன் நண்பரே
Deleteதம +1
பாரதி தாசன் வரிகளை இப்படியும் மாற்றிப் பாடலாமோ :)
Deleteடெலிவரியைக் கூட படத்தில் சேர்த்து விடலாமா :)
சில டீனேஜர்களை செயல்களைப் பார்த்தால் பாவமாய் இருக்கே :)
கரந்தையாரே ,உங்களின் கருத்தை நானும் ரசித்தேன் :)
Deleteஊத்திக் கொடுத்தாண்டி ஒரு ரவுண்டு... இந்த உலகம் சுத்துதடி பல ரவுண்டு... ஊத்தாதோ... ஊத்தாதே... கொஞ்சமா ஊத்தாதே...!
ReplyDeleteகர்ப்பிணி வேஷம் போடுறதுக்கொல்லாம் என்ன கூப்புடாதிங்க... எப்பமே என் நடிப்பு ஒரிஜினலாத்தான் இருக்கும்...!
மந்திரவாதி கைக்குள் அடக்கம்... வச்ச குறி தப்பாதடி...!
‘கனா காணும் கண்கள் மெல்ல உறங்காதோ பாடல் சொல்ல நிலாக்கால மேகம் எல்லாம் உலாப் போகும் நேரம் கண்ணே...’
‘அட என்னடா பொல்லாத வாழ்க்கை...! இதுக்கு போயி அலட்டிக்கலாமா...?’
த.ம.5
அதானே பார்த்தேன் :)
Deleteமாத்திரை செலவு மிச்சம் :)
மந்திரவாதி என்ன தலையணை மந்திரம் போட்டாரோ :)
மானத்தைக் கழட்டிவிட முடியுமா :)
பிடித்தன அனைத்தும்!
ReplyDeleteஎன் பாக்கியம் அய்யா :)
Deleteஅனைத்தும் அருமை ஜீ,,,,,,
ReplyDeleteபடமும் பிடித்து இருக்குமே :)
Deleteஅனைத்தும் ரசிக்கும் படியாக இருந்தது.
ReplyDeleteகுறிப்பா ,குடிகாரன் வாய்ப் புனல்,அப்படித்தானே :)
Delete01. அப்பக் காலம் பூராம் குடிதான்...
ReplyDelete02. ஒரிஜினலாக ஆக்க வில்லையே...
03. எல்லா மந்திரவாதியுமே இவ்வழிதானே...
04. 100க்கு100 உண்மை ஜி
சாகும் வரை :)
Deleteஇப்படியும் சந்தோசமா :)
ஒன் வேயா இது :)
அதுக்கும் மேலே இது :)
பதின்ம வயதுக்கு உரைத்த செய்தி அருமை
ReplyDeleteஆனால் ,உரைக்குமான்னு தெரியலே :)
Deleteஇயக்குநாரிடம் ஏமாறாத நடிகையா....???? நம்ப முடியவில்லை......இல்லை....
ReplyDeleteஏன் இப்படி ஒரு முடிவுக்கு வந்துட்டீங்க :)
Deleteஹஹஹஹ அனைத்துமே ரசித்தோம்....வேலைப்பளு விரிவாக எழுத முடியய்வில்லை ஆனால் வாசிக்கின்றோம் ஜி!
ReplyDeleteஎனக்கும் ,ஆணி பிடுங்கிற வேலைக் கூடி போச்சு ,உடனே மறுமொழி கூற முடியலே :)
Deleteஅனைத்தையும் ரசித்தேன்.
ReplyDelete#எனக்கும் ,ஆணி பிடுங்கிற வேலைக் கூடி போச்சு ,உடனே மறுமொழி கூற முடியலே :)#
Deleteஇதையும் ரசீத்தீர்களா :)