27 August 2016

14 நொடிக் கணக்கு , சரிதானா:)

            ''பெண்ணை பதினான்கு நொடி தொடர்ந்து பார்த்தாலே தப்புன்னு தெரியுமில்லே ,ஒரு கண்ணை வேற தொடர்ந்து  அடிச்சியாமே  ,ஏன் ?''
             ''கண்ணை  மூடித் திறந்தா ஒரு நொடியாமே , கணக்கு தெரியணும்னுதான் , அப்படி செஞ்சேன் !''

இது உண்மைதானா :)              
            ''என்னங்க , நாய்கள் எல்லாம் என்னைக் கண்டவுடன்   குரைக்குதே,ஏன் ?'' 
           ''  பேய் வர்றது நாய்ங்க கண்ணுக்கு தெரியுமாமே  ,அதனால் ஆயிருக்கும் !''

பெயர் ராசியில்லாம போயிடுச்சே :)
         ''இலஞ்சம் வாங்கின அதிகாரியை CBI கைது பண்ணியிருக்கு ...இந்த செய்தியைப் படிச்சிட்டு சிரிக்கிறீங்களே ,ஏன் ?''
         ''மாட்டிக்கிட்டவர் பெயர் மனுநீதிச் சோழன் ஆச்சே !''

புதிய காதலரா ,பழைய கணக்கை முடிப்பார் :)
              ''பீச்சிலே உன் காதலரோட இருக்கும்போது ,ஐஸ் விற்கிறவன் வந்து மானத்தை வாங்கிட்டானா,என்னவாம் ?''
              ''போன மாசம் வரைக்கும் உன்கூட சுத்திக்கிட்டு இருந்த ஆளை எங்கே காணாமேன்னு கேட்டுட்டான் !''
              ''எதுக்காம் ?''
              ' ஐஸ் வாங்கின கணக்கை செட்டில் பண்ணாம போயிட்டானாம் !''

புத்திசாலிகள் பத்து சதம் என்றால் அதில் NRIக்கள் எத்தனை சதம் :)
 தொண்ணூறுசதம் இந்தியர்கள்  முட்டாள்கள் என 
 சொன்னதை வாபஸ் வாங்கிக் கொண்டாராம் முன்னாள் நீதிபதி ...
 பொய் என்பதைக் கூட உண்மைக்கு புறம்பானது என வழக்காடு மன்றத்தில் வார்த்தை ஜாலம் காட்டுவதுபோல் ...
 பத்து சதம் இந்தியர்கள்  புத்திசாலிகள் என்பாரோ?

27 comments:

  1. மனுநீதிச் சோழன்...
    நொடிக்கணக்கு...
    ஐஸ் பாக்கி...
    என எல்லாம் ரசித்தேன் ஜி.

    ReplyDelete
    Replies
    1. ரசித்ததோடு நில்லாமல் முதலாம் வாக்களித்து த ம கணக்கைத் துவக்கி வைத்ததுக்கு நன்றி ,குமார் ஜி :)

      Delete
  2. இமைக்கின்ற நேரம்... கை நொடிக்கின்ற நேரம் ஒரு மாத்திரை என்பதைச் சோதனை செய்ய விடமாட்டீர்களா...?இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காது இருப்பவளான மாத்திரையே ஏ...மாத்திரையே... ஏமாத்திரியே...! ‘கண்ணை நம்பாதே... உன்னை ஏமாற்றும் நீ காணும் தோற்றம் உண்மை இல்லாதது...!’

    நாய்கள் ஜாக்கிரதை...! பேய் வீடு...!

    மனுநீதிச் சோழனே... வார்த்தை தவறி விட்டாய்... மார்பு துடிக்குது... கையூட்டில் பாதியை அதிகாரிக்கு... கொடுப்பதாய் சொன்ன வார்த்தை தவறி விட்டாய்...!

    ஐஸ் விக்கிற உனக்கு... இப்ப இவனுக்கு நான் ஐஸ் வைக்கிறது பிடிக்கலையா...? இதக் கேள்விப்பட்ட உடனே கோவிச்சிட்டு போறான்... ஒ கணக்க செட்டில் பண்ணத்தானே இந்தப் பாடு படுறேன்... அதுக்குள்ள அவசரப்பட்டுட்டியே... சரி நாளைக்கு எவன் சிக்குறான்னு பார்ப்போம்...!

    பத்து சதம் இந்தியர்கள் புத்திசாலிகள் என்று மீண்டும் உண்மைக்கு புறம்பானதைச் சொல்ல நீதிபதி விரும்பவில்லை...!

    த.ம. 3



    ReplyDelete
    Replies
    1. என் கண்ணை நானே நம்பலைன்னா வேற யார் நம்புறது :)

      கதவு இலக்கம் 13 ஆக இருக்குமோ :)

      மாட்டிகிட்ட பின்பாவது பெயரை மாத்திக்குவாரா :)

      எவன் சிக்கினாலும் சரி ,இனிமேல் கையிலே காசு ,வாயிலே ஐஸ் கிரிம்:)

      நீதிபதி எந்த சதத்தில் வருவார்ன்னு புரியலியே :)

      Delete
  3. அனைத்தையும் ரசித்தேன். நீதியை அதிகமாக.

    ReplyDelete
    Replies
    1. நீதியை ரசிக்கலாம் , சதவீத கணக்குதானே உதைக்குது :)

      Delete
  4. கணக்குப்புள்ளை!!

    பேநாய்கள்!!

    பெயரில் பொருத்தமில்லாதவர்கள்!

    கடன்காரன்!

    புத்திசாலிகள்!!!!

    ReplyDelete
    Replies
    1. வேற எப்படித்தான் கணக்கு பண்றது :)

      பே'ய்', நா'ய்' பேய் நாய் என்பது சரி :)

      லஞ்சம் வாங்க பெயரையா மாற்றிக்க முடியும் ?கெட்ட பெயர் வேண்டுமானால் வரும் :)

      கடன்கார காதலனோ :)

      யார் ,பத்தா ,தொண்ணூறா :)




      Delete
  5. Replies
    1. நாய்ங்க கண்ணுக்கு பேய்ங்க தெரிவதை ரசிக்க முடியுதா :)

      Delete
  6. நகைப்பணி தொடர்க
    தம +

    ReplyDelete
    Replies
    1. நகைப் பணி தொடர்வதற்கு பதினான்கு நொடி போன்ற தீனிகள் கிடைத்துக் கொண்டே தானே இருக்கிறது :)

      Delete
  7. ரசித்தேன் நண்பரே!
    த ம 8

    ReplyDelete
    Replies
    1. மனுநீதிச் சோழன் விவகாரம் என்னாச்சு என்றே தெரியவில்லையே :)

      Delete
  8. என்னப் பார்வை உந்தன் பார்வை எத்தனை நொடிகள்
    பேயாய் அலையக் கூடாது. நாய் குரைக்கும் ---- கடிக்கும்.....?
    பலநாள் லஞ்சம் வாங்கியவன் ஒரு நாள் பிடிபடுவான் யாராயிருந்தால் என்ன
    இதுபோல் எத்தனை பேரோ
    எந்தக் குழுவிலும் புத்திசாலிகள் இருபது சதம் , முட்டாள்கள் இருபது சதம் சராசரி அறுபது சதம் என்று என்று என் நண்பர் கூறுவார் இது உலகப் பொது வழக்கு

    ReplyDelete
    Replies
    1. நொடிகளைப் பார்த்தா சைட் அடிக்க முடியும் :)
      பேய்க்கு என்றே பங்களாவா கட்டி வைத்திருக்கு :)
      பல நாள் திருடன் ...போலத்தானா :)
      சுண்டல் ,ஐஸ் விற்பவர்களைத்தான் கேட்க வேண்டும் :)
      ஆனால், யாரும் அறுபது சதத்தில் இருக்கிறோம் என்பதை ஒப்புக் கொள்வதே இல்லை :)

      Delete
  9. Replies
    1. வில்லன் உருவத்தில் ஐஸ்வண்டிக்காரன் வந்ததை ரசிக்க முடியுதா :)

      Delete
  10. Replies
    1. நீங்கள் ரசித்ததை புரிந்து கொண்டேன் :)

      Delete
  11. நொடி கணக்கு சரியாகத்தான் தெரியுது....!!!!!!

    ReplyDelete
    Replies
    1. ஒரே நேரத்தில் ரெண்டு வேலை செய்யக்கூடாதோ :)

      Delete
  12. Replies
    1. பத்து சதம் இந்தியர்கள் புத்திசாலிகள் என்பதை ரசிக்க முடியுதா :)

      Delete
  13. இது நேற்று ok,இன்னைக்கு ok பண்ணலையே :)

    ReplyDelete
  14. தெருவில 14 நொடிகள் அப்போ கணினில நிறைய நேரம் பார்க்கலாமோ...ஹிஹி

    மனு நீதிச் சோழன் ரசித்தோம்...

    ReplyDelete
    Replies
    1. நேரில்பார்த்தால்தானே பத்திக்குது :)

      சகோதர பதிவர்களின் வலைப்பூக்களுக்கு உடன் சென்று கருத்திட்டு,த ம வாக்கும் அளித்து விட்டு ,ஜோக்காளியை இரண்டு நாள் கழித்து நீங்கள்பார்க்க வருவது நியாயமாவென்று மனுநீதி சோழனிடம் நான் முறையிடப் போகிறேன் :)

      Delete