17 August 2016

வயசுப் பொண்ணுங்களுக்கு வரக் கூடாத கோளாறு :)

கூமுட்டைக்குத்  தெரியுமா கவிஞனோட வலி:)   
      ''ஜன்னல் வழியா விடிஞ்சிருச்சான்னு ஏன் அடிக்கடி  பார்க்கிறீங்க ?''
      ''இரவிலே வாங்கினோம் சுதந்திரம் விடியவே இல்லைன்னு நேற்று டி வி யில் ஒருத்தர் சொன்னாரே !''

ஸ்ரீ தேவியை தெரியும் ,லேவா தேவி ?             
             ''பெண் சகவாசமே வேண்டாம்னு சொல்ற உங்க பையன் ,பரம்பரைத் தொழிலும்  வேண்டாம்னு சொல்றானா ,என்ன தொழில் ?''
             ''லேவா'தேவி ' தொழில்தான் !''

 நியூஸ் ரீடர்னா அழகாய் இருக்கணுமா  :)
           ''நம்ம டிவி நேயர் ஒருவர் ,நியூஸ் ரீடரை உடனே  மாற்றுங்கள் என்று சொல்லி இருக்கிறாரா ,ஏன் ?''
          '' விஷுவல் எதுவும் இல்லைன்னாலும் நியூஸ் ரீடராவது பார்க்கிற மாதிரி இருக்க வேண்டாமான்னு கேட்டு இருக்கார் !''
வயசுப் பொண்ணுங்களுக்கு வரக் கூடாத கோளாறு :)
            ''டாக்டர்  ,என் மகளுக்கு வந்திருக்கிறது வயிற்றுக் கோளாறு இல்லே ,வயசுக் கோளாறுன்னு ஏன் சொல்றீங்க?''
            ''கல்யாணத்திற்கு முன்னாலே கர்ப்பமானா வேற எப்படிச் சொல்றது?''

'குடி'மகன்களுக்குப் பிடித்த ஆத்திச்சூடி !
  அரசுப் பேருந்துகளில் திருக்குறளை 
  எழுதியிருப்பதைப் போல ...
  டாஸ்மாக் கடைகளில் ....
  ஊக்க'மது 'கைவிடேல் என 
  எழுதப்பட்டாலும் வியப்பதற்கில்லை !

27 comments:

  1. Replies
    1. கூமுட்டைக்குத் தெரியுமா கவிஞனோட வலி என்பது சரிதானே :)

      Delete
  2. வயிற்றுக்கு கோளாறு - வயசுக்கோளாறு வார்த்தைகளை ரசித்தேன். அனைத்துமே அருமை.

    ReplyDelete
    Replies
    1. இரண்டுமே வரக்கூடாத கோளாறுதானே :)

      Delete
  3. ஜன்னல் வழியா பார்கிறதெல்லாம் சரி... விழியத் திறந்து பாருங்க... இப்ப இரவு பன்னிரெண்டு மணி...! ‘ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோமென்று...!’

    வட்டி இல்லைன்னா... வட்டியில சாப்பிட முடியாதில்ல...!

    ‘சைட் சீயிங்’ நல்லா இருந்தா கண்ணுக்கழகு...!

    எங்க பரம்பரைக்கு இது புதுசு இல்லைங்க... கலைங்க...!

    ‘உடையது விளம்பேல்...’ அதுக்கு முன்னாடி இதச் சொல்லலையே...!

    த.ம. 3





    ReplyDelete
    Replies
    1. அக விழியை திறந்து பார்த்தால்தானே தெரியும் விடியல் :)

      குட்டியே வேணாம்னு சொல்றவர் வட்டிக்கா ஆசைப் படப்போறார் :)

      இமைக்காமல் பார்த்தால் கண்ணுக்கழகா :)

      உங்களுக்கு கலையா இருக்கலாம் ,வயிற்றில் வளரும் சிசுவை அழிப்பது கொலையாச்சே :)

      ஐந்து ரூபாயை சேர்த்துக் கொடுத்தா, இருக்கிறதை சொல்லிட்டு போறார் :)

      Delete
  4. வயசுக்கோளாறால்..... வயிறு கோளாறாகிவிட்டது..ஆ.....

    ReplyDelete
    Replies
    1. காதும் காதும் வைச்ச மாதிரி இந்த கோளாறை சரி பண்ணிடுங்க ,இல்லேன்னா ,பொண்ணோட எதிர்காலமே கோளாறு ஆயிடும் :)

      Delete
  5. கூமுட்டை என்றால் என்ன.?
    பெண்சகவாசத்துக்கும் லேவாதேவிக்கும் என்ன சம்பந்தம் ?
    எந்த டிவி நியூஸ் ரீடர்?
    வயசுக் கோளாறு என்றால் கர்ப்பம் தரிக்கணுமா ?
    டாஸ்மாக் கடைகளில் திருக்குறள் கூடாதா ?

    ReplyDelete
    Replies
    1. #சேவல் சேராமல் கோழியிடும் முட்டை கூமுட்டையாகிவிடும். இதைத் தவிர்க்க 10 பெட்டைக்கு 1 சேவல் என்ற விகிதத்தில் கோழிகள் வளர்க்கப்படவேண்டும்# நீங்கள் கேட்டதால் கூகுளில் தேடி நானும் தெரிஞ்சிகிட்டேன் :)

      பெயரில் கூட தேவி வரக்கூடாதாம் :)

      நியூஸ் ரீடர்கள் துட்டு அதிகம் தர்ற சேனல்களுக்கு மாறிக்கொண்டேதானே இருக்கிறார்கள் :)

      தாலி ஏறாமல் கர்ப்பம் தரிப்பதை வேறெப்படி சொல்றது :)

      தாராளமா எழுதலாம் ,திருக்குறளைப் படிக்கத்தானே டாஸ்மாக்குக்கு போறாங்க :)

      Delete
  6. ஹாஹாஹா! சிரித்தேன்! ரசித்தேன்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. கூமுட்டைக்கு அர்த்தம் என்னவென்று தெரியுமா ஜி :)

      Delete
  7. ஆத்திச் சூடி அருமைதானே :)

    ReplyDelete
  8. 01. கூமுட்டைக்கு தெரியுமா கூல்ட்ரிங்ஸ் ருசி ?
    02. எவ இவ ?
    03. சரிதான்
    04. மேற்படியான் யாரு ஜி ?
    05. பொருத்தமானதுதான்.

    ReplyDelete
    Replies
    1. நாறும் கூமுட்டைக்கு தெரிந்து இருக்கும் அன்னிய கூல் டிரிங்க்ஸ் ருசி :)
      கீழே கேட்டுள்ள மேற்படியானின் கீப்புதான் :)
      குறைந்த பட்ச எதிர்பார்ப்பு தப்பா :)
      மேற்படியாள்தான்:)
      அவ்வையார் இருந்தால் நொந்திருப்பாரோ:)

      Delete
  9. நகைச்சுவைகள் நவரத்தினங்களாய் மின்னுகின்றனவே

    ReplyDelete
    Replies
    1. அப்படியொண்ணும் மின்னுவதை தெரியவில்லையே :)

      Delete
  10. வாக்கு அளித்துள்ளேன். மிக்க நன்றி

    ReplyDelete
    Replies
    1. த ம வாக்கு நவ எண்ணிக்கை ஆகவும்,நீங்க சொன்ன மாதிரி , நவரத்தினமாய் மின்னுது ஜி :)

      Delete
  11. '' விஷுவல் எதுவும் இல்லைன்னாலும் நியூஸ் ரீடராவது பார்க்கிற மாதிரி இருக்க வேண்டாமான்னு கேட்டு இருக்கார் !''//

    பார்க்கிற மாதிரி இருந்தாத்தானே வேலை கொடுக்கிறாங்க!

    ReplyDelete
    Replies
    1. DD யுமா ?நான் திவ்யதர்சினியை சொல்லவில்லை ,Doordarsan யை சொன்னேன் :)

      Delete
  12. 'குடி'மகன்களுக்குப் பிடித்த ஆத்திச்சூடி
    ஊக்க'மது 'கைவிடேல்

    :)

    ReplyDelete
    Replies
    1. அவர் கைவிட நினைச்சாலும் அரசு குடிச்சுத்தான் ஆகணும்னு கட்டாயப் படுத்துதே :)

      Delete
  13. லேவா தேவி.... வயசுக் கோளாறு... ஊக்க மது...
    எல்லாம் ரசித்தேன் ஜி...

    ReplyDelete
    Replies
    1. மதுவையும் ,மாதுவையும் வேண்டாம் என்றால் ,அவர் வயசுக் கோளாறில் இருந்து தப்பிவிட்டார் என்றுதானே அர்த்தம் :)

      Delete
  14. வயசுக் கோளாறு வயிற்றுக் கோளாறு, ஊக்கமது ஹஹஹ் ரசித்தோம்...ஜி

    பேட்டைப் பக்கம் வருவது தாமதமாகிறது. வேலைப்பளு.

    ReplyDelete
    Replies
    1. எதுக்கு பழைய பேட்டைப் பக்கம் ஒதுங்கிறீங்க ?புது பேட்டைக்கு வாங்க :)

      Delete