9 August 2016

சொல்லி(ல்) தெரியுமோ மன்மதக் கலை :)

 ஒலிம்பிக் போட்டி இந்தியாவில் நடந்தால் :)         
          ''ஒலிம்பிக்  போட்டியை அக்ஷய திருதியை  அன்று  நடத்தணும்னு ஏன் சொல்றீங்க ?''
           ''அன்னைக்கு  தங்கம் வாங்கத்தானே  நாம  போட்டி போடுவோம் ? ''

சொல்லி(ல்) தெரியுமோ மன்மதக் கலை :)    
        ''அந்த மந்திரவாதி பொண்ணுங்களை குறி வைச்சு ஏமாத்தினது  ,எப்படி ?''
        ''தலையணை மந்திரம் இலவசமாகத் கற்றுத் தரப்படும்னு  சொல்லித்தான் !'' 

பார்க்கவும் ,கேட்கவும் அழகா எல்லோருக்கும் அமையுமா ?
                   ''என்னங்க ,புளியந்தோப்பில்  நடந்து வரும் போது,என்னை ஏன் பாடச் சொல்றீங்க ?''
                   ''காத்து கருப்பு எதுவும் இருந்தா பயந்து ஓடட்டும்னுதான் !''

உப்பு  போடத் துப்பில்லே,ஆனா வாய் ?
           " சாப்பிட்டவங்க 'உப்பில்லை ,நமக் நஹி ,நோ சால்ட்,உப்பு லேதுன்னு சொல்றாங்க,சமையலிலே கவனம் வேணாமா,மாஸ்டர் ? " 
            "நாலு பேர் நாலு விதமா சொல்லுவாங்க அதையெல்லாம் கண்டுக்காதீங்க முதலாளி ! "

கும்கி யானையின் கேள்வி !
      ஏ மானிடனே ...
      வெந்ததைத் தின்று விதிவந்தால் சாவோம் என்பதை
      உன்னுடனே வைத்துக் கொள்ளக் கூடாதா ?
     வெந்ததை உண்டக்  கட்டியாய்  உண்ணக் கொடுத்து ..என்னையும் 
     எம்மினத்தை துரத்தும் இனத்துரோகியாக்குவது நியாயமா ? 
இது பரவாயில்லை ,அடுத்ததைப் பார்க்கும் போது >>>

18 comments:

  1. முதல் ஜோக் செம!

    மற்றவற்றையும் ரசித்தேன்.

    தமிழ்மணம் சுற்றிக்கொண்டே இருக்கிறது!மெதுவாக வாக்கு விழும்! கணினிதானே.. சுற்றட்டும்!!

    ReplyDelete
    Replies
    1. தங்கம் .இப்படித்தான் வாங்க முடியுமோ :)

      தமிழ் மணம் அடிக்கடி சோதிக்கிறது :)

      Delete
  2. தங்க பதக்கத்தின் மேலே ஒரு முத்து பதித்தது போலே இந்த பட்டு கன்னங்களின் மேலே ஒன்று தொட்டு கொடுத்திடலாமோ நீயும் விட்டு கொடுத்திடலாமோ...? எதையுமே விட்டுக் கொடுத்து வாழனும்... அதான் வாழ்க்கைன்னு கத்துக்கொடுத்தாங்க...!

    ‘மதன மாளிகையில் மந்திர மாலைகளாம் உதய காலம் வரை உன்னத லீலைகளாம்...!’

    ‘என்னப் பாடச் சொல்லாதே, நான் கண்டபடி பாடிப்புடுவேன்...!’

    அவனுங்க எல்லாம் சுரணை கெட்டவங்க... இதுக்குப் போயி நீங்க ஏன் என்மேல ‘லொல்’லுன்னு விழுறீங்க... நாற்பது வயதில் நாய் குணம்... நாலும் தெரிஞ்சு நடக்கனும்...!

    என்னப் பத்தி பா‘ரதி’ட்ட கேட்டுப் பாருங்க...! நல்லவேளை நான் பிழைத்துக்கொண்டேன்...!

    த.ம. 1

    ReplyDelete
    Replies
    1. நம்ம முன்னோர்கள் 'பிறர்க்கு வாழ் 'என்றது இதற்குதானோ:)

      உதய காலத்தை மந்திரவாதி அஸ்தம காலம் ஆக்கிட்டாரே :)

      எப்படியும் பாடு, காத்து கருப்பு போனா சரி :)

      எவ்வளவு உப்பு போட்டாலும் அவங்களுக்கு உறைக்காதோ :)

      யானைகளுக்கு பாரதி அப்படி என்ன செய்தாரோ :)

      Delete
  3. ரசித்தேன் நண்பரே
    த.ம.முயன்று கொண்டே இருக்கிறேன்
    சுற்றிக் கொண்டே இருக்கிறது

    ReplyDelete
    Replies
    1. உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள் :)

      Delete
  4. உண்மைதான். இதைப்பார்க்கும்போது அது எவ்வளவோ மேல்.

    ReplyDelete
    Replies
    1. சின்னப் பசங்களை இப்படியா வளர்ப்பது :)

      Delete
  5. அக்ஷய திருதியை அன்று பெண் வீராங்கனைகள் தங்கம் வாங்குவார்கள் ( வெல்வார்கள்)
    தலையணை மந்திரம் மந்திர வாதியை ஏமாற்ற வில்லையா
    பாட்டுக்கு காத்து கருப்பு அடிமையாகி விட்டால் கூடவே வருமே
    நாலுபேர் சொல்ல வேண்டும் என்பதற்காக உப்பு அதிகம் போடக்கூடாது

    ReplyDelete
    Replies
    1. வீரர்கள் இதைகூட வாங்க மாட்டார்களா :)
      மந்திரவாதி எப்படி ஏமாறுவான் :)
      இப்படியொரு ஆபத்தும் இருக்கா :)
      அதானே ,உடம்புக்கு கேடாச்சே :)

      Delete
  6. Replies
    1. என்ன ஜி ,பக்கத்துக்கு நாட்டுக்கு /ஊருக்கு விஜயமா :)

      Delete
  7. மந்திரவாதியா..இருப்பது போன ஜென்மப் புன்னியமோ....???

    ReplyDelete
    Replies
    1. அவரிடம் ஏமாறுபவர்கள் ,போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தார்களோ யாருக்குத் தெரியும் :)

      Delete
  8. Replies
    1. கும்கி யானையின் கேள்வி,சரிதானே :)

      Delete
  9. Replies
    1. உப்பு போடத் துப்பில்லே,ஆனா வாய் இவ்வளவு நீளம் இருப்பது சரிதானா :)

      Delete