பெயர் பொருத்தம் சரியில்லையே :)
மாமல்லனைத் தெரியும் :)
''என் பையன் பிறந்த நேரம் ,மாமூல் வந்து கொட்டிகிட்டே இருக்கு !''
''அதுக்காக பையனுக்கு மாமூலன்னு என்றா பெயர் வைப்பது ?''
உண்மையில் அந்தக் காலம் தேவலையே !
''என்னப்பா சொல்றீங்க ,உங்க காலத்தில் இந்த அநியாயம் இல்லையா ?''
''ஆமா ,அன்னைக்கு நடந்தது குழந்தைத் திருமணம்தான் ...இன்னைக்கு திருமணம் ஆகாத குழந்தைக்கே குழந்தைப் பிறக்குதே !''
ராணியின் மோகம் யார் மீதோ ?
''ராஜாவின் பார்வை ராணியின் மீதே இருக்கிறதே ,ஏன் ?''
''இருக்காதா பின்னே ,அந்தப்புரச் சயன அறையில் ஒரு ஆணின் நிழலைப் பார்த்து விட்டாரே !''
வசதிகள் போக்குமா உடலின் அசதியை ?
மாவு ஆட்ட சோம்பல் ...கிரைண்டர் வந்தது
கல்லைக் கழுவ சோம்பல் ...டில்டிங் வந்தது
வழித்தெடுக்க சோம்பல் ...பாக்கெட் மாவு வந்தது
தோசை வார்க்க சோம்பல் ...பிரிட்ஜிலேயே மாவு...
டாக்டரிடம் போக சோம்பல் ...எழுந்து நிற்க முடியாமல் !
''இறுதி ஊர்வலம் போய்கிட்டு இருக்கு ,உனக்கென்னடா யோசனை ?''
''மயானம் வரைக்கும் போற இந்த வண்டியிலே நல்லவனும் போறான் ,கெட்டவனும் போறான் ...ஆனால் ,இந்த வண்டிக்கு எதுக்கு சொர்க்க ரதம்னுபெயர் வச்சிருக்காங்க ?''
மாமல்லனைத் தெரியும் :)
''என் பையன் பிறந்த நேரம் ,மாமூல் வந்து கொட்டிகிட்டே இருக்கு !''
''அதுக்காக பையனுக்கு மாமூலன்னு என்றா பெயர் வைப்பது ?''
உண்மையில் அந்தக் காலம் தேவலையே !
''என்னப்பா சொல்றீங்க ,உங்க காலத்தில் இந்த அநியாயம் இல்லையா ?''
''ஆமா ,அன்னைக்கு நடந்தது குழந்தைத் திருமணம்தான் ...இன்னைக்கு திருமணம் ஆகாத குழந்தைக்கே குழந்தைப் பிறக்குதே !''
ராணியின் மோகம் யார் மீதோ ?
''ராஜாவின் பார்வை ராணியின் மீதே இருக்கிறதே ,ஏன் ?''
''இருக்காதா பின்னே ,அந்தப்புரச் சயன அறையில் ஒரு ஆணின் நிழலைப் பார்த்து விட்டாரே !''
வசதிகள் போக்குமா உடலின் அசதியை ?
மாவு ஆட்ட சோம்பல் ...கிரைண்டர் வந்தது
கல்லைக் கழுவ சோம்பல் ...டில்டிங் வந்தது
வழித்தெடுக்க சோம்பல் ...பாக்கெட் மாவு வந்தது
தோசை வார்க்க சோம்பல் ...பிரிட்ஜிலேயே மாவு...
டாக்டரிடம் போக சோம்பல் ...எழுந்து நிற்க முடியாமல் !
|
|
Tweet |
''அன்னைக்கு நடந்தது
ReplyDeleteகுழந்தைத் திருமணம்தான்...
இன்னைக்கு
திருமணம் ஆகாத குழந்தைக்கே
குழந்தைப் பிறக்குதே!'' என்பது
கால மாற்றமா
பண்பாடு மாற்றமா
ஒழுக்க மீறலா - அந்த
கடவுளே வந்து பதில் தரணும்
குழுப் (வாட்ஸ் அப், வைபர்) பகிர்வு, பதிவர்களுக்குப் பயனுள்ளதா?
http://www.ypvnpubs.com/2016/08/blog-post.html
Deleteஆசாமியின் தவறுக்கு சாமி வந்து பதில் தருவாரா :)
அனைத்தையும் ரசித்தேன். குழந்தை கர்ப்பம் செய்தி கண்டு பதைத்தேன்.
ReplyDeleteஇனி மேலாவது மச்சான் கிட்டே ஜாக்கிரதையாய் இருப்பது நல்லது :)
Deleteநரகரதமுன்னு எழுதியிருந்தா ‘சொர்க்கம் மதுவிலே சொக்கும் அழகிலே... மது தரும் சுகம் சுகம் எதில் வரும் நிதம் நிதம்...’ ன்னு குத்தாட்டாம் போட்டுட்டு ஆடிப்பாடிப் போவாங்களா...?
ReplyDeleteபையன் ஜாதகப்படி அப்பனுக்கு ஆயுள் தண்டனை தானாம்...!
‘இறைவன் இரண்டு பொம்மைகள் செய்தான் தான் விளையாட... அவை இரண்டும் சேர்ந்தொரு பொம்மையை செய்தன தாம் விளையாட...!’
‘சீசரின் மனைவி சந்தேகத்துக்கு அப்பாற்பட்டவள்...’ அப்படின்னு ஏன் சொன்னாங்கன்னு தெரியலை...! நிழல் நிஜமாகிவிட்டதே...!
'பட்டனை தட்டிவிட்டா இரண்டு இட்லி தட்டுல வந்திடணும்'னு கலைவானர் பாடிட்டு போயிட்டாரே...!
த.ம. 2
சொர்க்கம் மதுவில்தானா ?அப்படின்னா ,பொண்த்து வாயிலேயும் ஒரு குவார்ட்டர் ஊத்தச் சொல்லுங்க :)
Deleteமாமூலன் வந்த நேரம் அப்படியா :)
இவங்க உயிரில்லா பொம்மையை செய்து இருந்த பிரச்சினையே இல்லையே :)
அரசர் நகர் வலம் என்று தினசரி டிமிக்கி கொடுத்தால் ,இப்படித்தானே ஆகும் :)
நல்ல வேளை ,வந்த இட்லி தொண்டையில் தானா இறங்கணும்னு பாடாமல் போனாரே :)
சொர்க்க ரதமா அமரர் ஊர்தியா
ReplyDeleteஏன் பெயருக்கென்ன நல்லாத்தானே இருக்கு
ஒருவேளை பிஞ்சிலேயே பழுக்கிறதோ
ராணியின் பார்வை நிழலின் மீதா
சோம்பலா அசதியா
அமரர் ஊர்தின்னா நாங்கு சக்கரமும் ,இன்ஜினும் இருக்கும் ,ரெண்டு சக்கர ,குதிரை இழுக்கிற வண்டிக்கு சொர்க்க ரதம் என்றுதானே பெயர் வைத்திருக்கிறார் :)
Deleteவிசுவாசாமா பெயர் வைத்தால் அது தப்பா :)
பழுக்குதாவா,வெம்பி வெடிக்குதே அய்யா :)
நிழலுக்கு காரணமான நிஜ மனிதனின் மீது :)
இரண்டும்தானே :)
01. சொபக்கா ரதம்னு சொல்லலாம்
ReplyDelete02. பொருத்தமாகத்தான் இருக்கு
03. இன்னும் என்னவெல்லாம் நடக்கப்போகுதோ....
04. பாதுகாவலராக இருப்பான்
05. ஸூப்பர் உண்மை ஜி
சொபக்கா ரதம் ?புரியவில்லையே ஜி :)
Deleteசாதாரண மூலன் இல்லை இவன் ,மாமூலன் :)
இன்னும் என்ன நடக்கும் ,அடுத்து பிரசவம்தான் :)
வேலியே பயிரை மேயுதா :)
பெண்களுக்கு மட்டுமா இந்த வசதிகள் :)
ஒவ்வொன்றும் ஒருவிதம் நன்று
ReplyDeleteகொடிக்கு கொடிக்கு ஒரு விதம் போலவா :)
Deleteதங்கள் தளத்தில் வாக்களிக்க முடிகிறது
ReplyDeleteஅது என் அதிர்ஷ்டம் தான் ,நன்றி ஜி :)
Deleteகல்யாணமாகாத சிறுமி கர்ப்பம்..... கொடுமை.....
ReplyDeleteமற்றவை ரசித்தேன். த.ம. +1
இந்த கொடுமையை எங்கே போய் சொல்வது :)
Deleteநான் பார்த்த ஓர் அமரர் ஊர்தியில் தேவலோக ரதம்னு எழுதி சீரியல் லைட்டெல்லாம் போட்டிருந்தாங்க! சாவு கூட இப்ப காஸ்ட்லியா மாறிகிட்டு வருது!
ReplyDeleteமனுஷனுக்கு அங்கே என்ன வேலை?ரம்பா ஊர்வசி மேனகா டான்ஸ் பார்க்கவா :)
Deleteஇந்த ராணி பராவாயில்லை,எங்கத் தெருவிலே இருக்கிற ராணி ....ஒரு ஆளையும் விட்டு வைக்கமாட்டாள்....
ReplyDeleteசில நாட்களுக்கு முன்உங்களுக்கு போன்மூலம் 'நேரம் கிடைச்சா வர்றது 'என்று அழைப்பு விடுத்தாளே அந்த ராணியா :)
Deleteதம +1
ReplyDeleteவசதிகள் ,உடலின் அசதியை போக்காதுதானே :)
Delete