பதவிக்கு தகுந்த மரியாதை வேண்டாமா :)
''பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கி பிடிபட்ட நீதிபதியை ,அவரோட மனைவியே டைவர்ஸ் பண்ணிட்டாங்களாமே!''
''கேவலம் ஒரு பத்தாயிரம் ரூபாய் வாங்கியா மாட்டிக்கிறது என்று அவருக்கு வருத்தமாம் !''
ஆஹா ,என்ன பொருத்தம் :)
''இத்தனை வருடமா டார்வின் தியரி தப்புன்னு இருந்த ,உங்களை ஒரு படம் மாத்திடுச்சா ,அப்படியென்ன படம் ?''
''இதோ ,இந்த படம்தான் !''
மாமியார் மேல் இம்புட்டு பாசமா :)
''கல்யாணம் ஆனதும் பிள்ளையைப் பெத்துக்கணும்னுஅவசரப் படுறீயே,ஏண்டி ?''
''பேரப்பிள்ளையே கண்ணாறப் பார்த்த பிறகுதான் ,நிம்மதியா கண்ணை மூடுவேன்னு என் மாமியார் சொல்றாங்களே !''
மனுஷன் ,மனைவிகிட்டே நிறைய வாங்குபட்டிருப்பாரோ :)
''மாப்பிள்ளே ,நீதிபதியா இருந்த நான் ,இதுவரை யாருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை கொடுத்ததில்லை.... அதை நீங்க ஏன் ஏத்துக்க மறுக்கிறீங்க ? ''
''அந்தக் கொடுமையை நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேனே !''
தண்டவாளத்தில் தலை வைத்தும் மரணிக்காத தலைவர்கள் :)
கையைக் காட்டினால் நிற்கும் மினி பஸ் மாதிரி
நூறு கிமீ வேகத்தில் செல்கின்ற ரயிலும் நிற்கும் என
நினைக்கும் பாமர ஜனங்கள் ...
ரயில் மறியல் செய்யும் நம்ம ஊர் அரசியல்வாதிகளிடம் இருந்து
நிறைய கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது !
''பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கி பிடிபட்ட நீதிபதியை ,அவரோட மனைவியே டைவர்ஸ் பண்ணிட்டாங்களாமே!''
''கேவலம் ஒரு பத்தாயிரம் ரூபாய் வாங்கியா மாட்டிக்கிறது என்று அவருக்கு வருத்தமாம் !''
ஆஹா ,என்ன பொருத்தம் :)
''இத்தனை வருடமா டார்வின் தியரி தப்புன்னு இருந்த ,உங்களை ஒரு படம் மாத்திடுச்சா ,அப்படியென்ன படம் ?''
''இதோ ,இந்த படம்தான் !''
மாமியார் மேல் இம்புட்டு பாசமா :)
''கல்யாணம் ஆனதும் பிள்ளையைப் பெத்துக்கணும்னுஅவசரப் படுறீயே,ஏண்டி ?''
''பேரப்பிள்ளையே கண்ணாறப் பார்த்த பிறகுதான் ,நிம்மதியா கண்ணை மூடுவேன்னு என் மாமியார் சொல்றாங்களே !''
மனுஷன் ,மனைவிகிட்டே நிறைய வாங்குபட்டிருப்பாரோ :)
''மாப்பிள்ளே ,நீதிபதியா இருந்த நான் ,இதுவரை யாருக்கும் இரட்டை ஆயுள் தண்டனை கொடுத்ததில்லை.... அதை நீங்க ஏன் ஏத்துக்க மறுக்கிறீங்க ? ''
''அந்தக் கொடுமையை நான் அனுபவித்துக் கொண்டிருக்கிறேனே !''
தண்டவாளத்தில் தலை வைத்தும் மரணிக்காத தலைவர்கள் :)
கையைக் காட்டினால் நிற்கும் மினி பஸ் மாதிரி
நூறு கிமீ வேகத்தில் செல்கின்ற ரயிலும் நிற்கும் என
நினைக்கும் பாமர ஜனங்கள் ...
ரயில் மறியல் செய்யும் நம்ம ஊர் அரசியல்வாதிகளிடம் இருந்து
நிறைய கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது !
|
|
Tweet |
த.ம. +1
ReplyDeleteடார்வின் தியரி சரிதானே ஜி :)
Deleteவலிப்போக்கன் பதிவுல பாருங்க 25,000 வாங்கின நீதிபதி பற்றி போட்டிருக்காரு!
ReplyDeleteஎன்ன பொருத்தமான படம்!
மாமியார் மேல இம்பூட்டு பாசமா!
மச்சினியையும் சேர்த்து கட்டிக்கச் சொல்றாரோ!
ம்ம்ம்...
இந்த மொக்கை எனக்கு க்ளிக் ஆனதே அதை பார்த்துத்தான்:)
Deleteஅந்த பொருத்தம்தானே அவரோட கொள்கையை மாற்றிக்க வைத்திருக்கு :)
பேரன் பிறந்தால் பேத்தியை பார்த்தால் கண்ணை மூடுவேன்னு மாமியார் சொல்லத்தான் போறாங்க :)
அது ஆயுள் தண்டனையாகி விடுமே :)
இன்னும் கற்றுக்க வேண்டியது நிறைய இருக்கோ :)
கணக்கு வழக்கு ஒழுங்கா தெரியாத நீதிபதியா இருப்பாரோ...? குன்றத்திலே குமரனுக்கு கொண்டாட்டம்...! ஓ... சாமியோ...!
ReplyDeleteமனித(ன்) குரங்காய் மாறிவிட்டான்...!
உனக்கு விவாகரத்து ஆனப்பவே... உன்னோட மொதப் பிள்ளையை உன்னோடவே கூட்டிட்டு வரச்சொன்னேன்...!
அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்... பொன்னான கை பட்டுப் புண்ணான கன்னங்களே...!
‘Rail’ என்றாலே தண்டவாளம்தானே...! வண்டவாளத்தைத் தண்டவாளத்தில் ஏற்றலாமா...?
த.ம. 1
இவராலே பாருங்க ,நீதிபதிகள் என்றாலே கணக்கிலே வீக் தான் என்ற எண்ணம் வருதே :
Deleteமுன்னாடியே போய்கிட்டு இருந்தா எப்படி ,கொஞ்சம் ரிவர்சிலும் போவதில் தப்பில்லே :)
கூட்டிட்டு வந்திருந்தா அதிர்ச்சியிலேயே மாமியா உசுரு போயிருக்குமே :)
இந்த அனுபவம் உங்களுக்கு வேணா புதுமையா இருக்கலாம் ,வீட்டுக்கு வீடு இல்லை இல்லை கன்னத்துக்கு கன்னம் விழுந்துகிட்டே தானே இருக்கு :)
அதானே ,ஊரையே கூட்டிட்டு போய் தண்டவாளத்தில் தலை வைத்துப் படுக்கிறதுன்னா சும்மாவா :)
மாமியார் பாசம் மகத்தானது!
ReplyDeleteமகத்தானது ஆனால் மகள்மேல் உள்ள பாசத்துக்கு ஈடாகாது :)
Deleteடார்வின் தியறி யுடன் அனைத்தும் ரசித்தேன் சகோதரா.
ReplyDeleteபடம் சுப்பர்.
டார்வின் கூட இப்படியொரு படத்தைப் பார்த்திருப்பாரா என்று தெரியவில்லை :)
Deleteபடம் சூபர்தானே :)
ReplyDeleteதாலி கட்டிக்கிட்டவளுக்கு உள்ள உரிமை தெரிந்ததுதான் என்பதால் நேற்று வரவில்லையா நண்பரே :)
ReplyDeletetha.ma.
ReplyDeleteஆமா ,உங்கள் வாக்கும் விழுந்திருக்கே :)
Deleteவலிப்போக்கன் பதிவில் 25000 ரூபாய் வாங்கின நீதிபதி இருப்பதையறிந்து, பத்தாயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கி பிடிபட்ட நீதிபதி மீது அவரோட மனைவிக்க வருத்தம் வந்திருக்கும்!
ReplyDeleteஎல்லாமே நல்ல ஜோக்குகள்.
சம்பளம் லட்சக்கணக்கில் இருந்தும் ,ஆயிரக்கணக்கில் லஞ்சம் வாங்குவது என்றால் ....மை லார்ட், உங்களுக்கே இது நியாயமா :)
Delete''இதோ ,இந்த படம்தான் !''//
ReplyDeleteபடம் அழகோ அழகு! வெகுவாக ரசித்தேன்!!
படம் எடுத்த ரசனைக்காரர் யாரோ ? அவருக்கும் ,துணிச்சலாய் போஸ் கொடுத்துள்ள பெண்மணிகளுக்கும் வாழத்துகள் :)
Deleteஅருமையான வரிகள்
ReplyDeleteதொடருங்கள்
தொடருவோம்
கேவலம் ஒரு பத்தாயிரம் ரூபாய் வாங்கியா மாட்டிக்கிறது.. இருக்கும் வரிகளில் இதுதான் நம்பர் ஒன்,அப்படித்தானே :)
Deleteமருமகளின் பாசம் புல் அறிக்க வைக்கிறது.....ஹா.ஹா....ஹா.....
ReplyDeleteகொஞ்சமா சொறிஞ்சிக்குங்க,இரத்தம் வந்துவிட போவுது :)
Deleteவணக்கம்
ReplyDeleteஜி
ஒவ்வொன்றும் அருமை படித்து மகிழ்ந்தேன் த.ம 9
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நம்ம ஊர் அரசியல்வாதிகளிடம் இருந்து
Deleteநிறைய கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது என்பது உண்மைதானே ,ரூபன் ஜி :)
ரசித்தேன் ஜி...
ReplyDeleteரசிக்கும்படி எழுதிய எனக்கு ,நான் ரசிக்கும்படி இன்னொரு நல்ல காரியமும் செய்யலாமே குமார் ஜி :)
Deleteஇரண்டு நீதிபதிகளையும் ரசித்தோம்..அஹ்ஹஹ்
ReplyDeleteஅது போல டார்வின் தியரியையும் ரசித்தோம்...ஜி
அட ஆமாம் ,இன்னைக்கு இரண்டு நீதிபதிகள் மாட்டிக்கிட்டாங்களே:)
Deleteஅந்த படத்துக்கு டார்வின் தியரி என்றே தலைப்பைக் கொடுத்து விடலாமா :)
மாமியார்மீதான பாசம் இதற்குத்தானா?
ReplyDeleteபாசமா ?எல்லாம் வெளி வேஷம் :)
Deleteமாட்டிக் கொண்டதால்தானே மனைவிக்குத் தெரிந்தது
ReplyDeleteபடத்தில் பேன் பார்ப்பது பெண்குரங்கா ஆண்குரங்கா
மாமியார் கண்ணை மூடுவதைப் பார்க்க அத்தனை முனைப்பு
மனுஷன் இரண்டு பெண்டாட்டிக் காரரோ
ரயில் மறியல் என்றால் ஏன் கல்லக் குடி நினைவுக்கு வருகிறது
அவர் தகுதிக்கு லட்ச ரூபாயாவது வாங்கியிருந்தால் டைவர்ஸ் செய்திருக்க மாட்டாரே :)
Deleteஇந்த சந்தேகத்தைத் தீர்க்க தனியொரு மனிதனான என்னால் முடியாது ,சான்றோர்கள் பலரும் இருக்கும் தமிழ் சங்கத்தில் கேட்டு சொல்கிறேன் :)
அதுக்காக 'ஃபிரி மெச்சூர் பேபி'யைக் கூட பெற்றுக்க கூடும் :)
ஒரே பெண்டாட்டி தான் ,இரட்டை ஆயுள் தண்டனைக் கொடுத்து விட்டாராம் :)
அந்த பாட்டு அந்த அளவுக்கு இம்ப்ரெஸ் பண்ணியிருக்கே :)
சிரித்து மகிழ்ந்தேன்! நன்றி!
ReplyDeleteபதவிக்கு தகுந்த மரியாதை இல்லாதது உங்களுக்கு சிரிப்பாயிருக்கா :)
Deleteநல்ல கருத்து
ReplyDeleteமுதல் வருகைக்கும் ,நல்ல கருத்துக்கும் நன்றி ,பால முருகன் ஜி :)
Deleteஎப்பவுமே நல்ல கருத்துக்களை நகைசுவையுடன் தருவார் பகவான்ஜீ.
Deleteஇந்த 'பாக்யராஜ் பாணி 'எல்லோருக்கும் பிடிக்கும்தானே :)
Delete