13 August 2016

ஆணைவிட பெண்ணுக்கு 'அது 'எட்டு மடங்காமே :)

நடுவர் இப்படியா கோபப்  படுவது  :) 
              ''பட்டிமன்ற நடுவர் ரொம்ப முன் கோபக்காரர்  போலிருக்கா ,ஏன்?''
             ''மணி  அடிச்ச பிறகும்  பேசிக்கிட்டு இருந்தவர் மேலே மணியை தூக்கி எறிஞ்சுட்டாரே !''

எப்படி நம்ம வில்லேஜ் விஞ்ஞானியின் கண்டுபிடிப்பு  :)
        ''சூப்பர் ஐடியாவா இருக்கே ,ஓட்டுறவர் பெயர் என்னவாம் ?''
        ''மயில் வாகனன் !''

ஆணைவிட பெண்ணுக்கு 'அது 'எட்டு மடங்காமே  :)
       ''என்னங்க ,சாணக்கியரின் அர்த்தசாஸ்திரத்தை ஆர்வமா படிக்க ஆரம்பித்து ,முதல் அத்தியாயத்தோட மூடிட்டீங்களே,ஏன் ?''
      ''ஆணைவிட பெண்ணுக்கு பசி இரண்டு மடங்கு ,அறிவு நான்கு மடங்கு ,தைரியம் நான்கு மடங்கு ,காமம் எட்டு மடங்குங்கிறதைப் படித்ததும் போதும்னு ஆயிடுச்சே !''

அஞ்சு .பத்மாவுக்குப் பின்னாலே பையன் அலைஞ்சா ...
        ''அப்பனுக்குப் பையன் தப்பாமப் பொறந்து இருக்கானா ,எப்படி ?''
        ''பக்கத்து வீட்டுப் பொண்ணுங்க அஞ்சு ,பத்துக்குப் பின்னாடி பையன் அலையிறான் ,அப்பன்காரன் கையிலே காசில்லாமே அஞ்சு பத்துக்கு அலையிறாரே !''

I LOVE YOU...சுருக்கமாய் சொல்லலாமா ?
   பல பேரின் காதல் ...கல்யாணத்தில் முடியாமல் இழு இழு என்று 
   இழுத்துக் கொண்டே இருக்கக் காரணம் ...
   முதலில் காதலை I L U [இழு ]என்று SMSசெய்ததாலா ?

30 comments:

  1. மணி நீதிச்சோழன் பரம்பரையில வந்தவரு...நடுவர்... ஜாக்கிரதை...!

    இருசக்கர வாகனத்தில ரெண்டு பேர் (தோகையில்லா மயில்கள்) பின்னால உக்கார்ந்து போகக்கூடாதுன்னு சட்டம் வருது...!

    அதான்... தாய் எட்டடி பாயுதாக்கும்...! எட்டும் வரை அடி...!

    காலம் கெட்டுக்கிடக்கிது... அப்பன அலையவிடக்கூடாது...! அப்புறம் யார் பதில் சொல்றது...!

    சுருக்கு வச்சு இழுக்கிறது இதுதானோ...?

    த.ம. 1



    ReplyDelete
    Replies
    1. அப்படின்னா ,மணியை தூக்கி எறிவதில் தப்பில்லை :)
      இப்ப அந்த சட்டம் இல்லையா :)
      பிள்ளை பதினாறு அடி பாயாமல் போனால் சரிதான் :)
      பையனே அஞ்சு பத்து கொடுத்துட்டா அப்பன் ஏன் அலையப் போறார் :)
      சுருக்கு போடலைன்னா சறுக்கிகிட்டு போயிடுமே :)

      Delete
  2. போடு அப்படி...! அப்பத்தான் ப்ளேடு வேலை நிற்கும்!

    மயில்வாகனன் ஓட்டுவது காதல் வாகனமோ!

    எல்லாமே அதிகம்..... அதிகம்.... அதிகம்!

    .ம்ம்ம்..

    இருக்கும் இருக்கும்!

    ReplyDelete
    Replies
    1. கொடுமை என்னவென்றால் மணியை நெற்றியில் படும்படி எறிந்தார் அவர் :)

      எனக்கு தெரிந்தது புரட்சி தலைவரின் காதல் வாகனம் மட்டும்தான் :)

      சாணக்கியர் சரியாதானே சொல்லியிருக்கார் :)

      வம்சமே அலையுறதுக்குன்னே பிறந்தது போலிருக்கு :)

      sms செயாதவர்களின் காதல் உடனே கல்யாணத்தில் முடிந்து விட்டதா :)

      Delete
  3. அஞ்சு... பத்து...
    மயில்வாகணன்....
    அருமை ஜி...
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துக்கும் ,..........க்கும் நன்றி குமார்ஜி :)

      Delete
  4. கட்டுக் கோப்புடன் நடத்துகிறாரோ
    இரண்டு பெண்டாட்டிக் காரர் என்பது தெரிகிறது
    அர்த்த சாஸ்திரத்தின் ஆரம்பத்தில் இதுதான் சொல்லி இருக்கிறதா
    அலைதல் அவரவர் தேவைக்கு ஏற்றபடிதானே
    ILU என்பதை தமிழில் இழுக்கிறீர்களே

    ReplyDelete
    Replies
    1. சரிதானே ஒரே ஆள் அறுத்துக் கொண்டிருந்தால் எப்படி :)
      மூணு டிக்கெட் எடுப்பதை விட இந்த சவாரி பெட்டர்தானே :)
      சத்தியமாக ,நீங்கள் வேண்டுமானால் சரி பார்த்துக் கொள்ளுங்கள் :)
      வயசுக்கு ஏற்ற மாதிரியும் கூட :)
      தமிழில் சரி ,இழு என்று தொடங்கும் ரம்மியமான ஹிந்திப் பாடலை நீங்கள் கேட்டதில்லையா :)

      Delete
  5. அப்பன்காரன்
    அஞ்சு பத்துக்குத் தெருவில அலைய
    பையன்காரன்
    பத்துக்குப் பின்னாடி
    பக்கத்து வீட்டு அஞ்சுக்கு
    அலையலாமோ...?

    ReplyDelete
    Replies
    1. அலையலாமோ என்று என்னிடம் கேட்டால் எப்படி ?நீங்கதான் சொல்லணும் நியாயத்தை :)

      Delete
  6. அஞ்சுக்கும் பத்துக்கும் அலையற ஜோக்ஸ் சூப்பர்! மற்றவையும் ஜோர்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. ஜோக்சை விட படம் அருமை இல்லையா :)

      Delete
  7. வாய் பதினெட்டு மடங்கு! இது பத்தலை என்றால் உங்களுக்கு பிடித்த பகாங்களை இரண்டால் பெருக்கிக் கோண்டே போகவும்!

    ReplyDelete
    Replies
    1. உங்க அனுபவமே,என் அனுபவமும் !ஒரு வேளை எல்லோரின் அனுபவமும் அப்படித்தான் இருக்குமோ :)

      Delete
  8. Replies
    1. நம்ம வில்லேஜ் விஞ்ஞானியின் கண்டுபிடிப்பை,டெல்லியில் கூட நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்களே :)

      Delete
  9. Replies
    1. எப்போ ஊருக்கு வர்றீங்க ஜி :)

      Delete
  10. தகிரியம் எட்டு மடங்கு என்பதால்...தமிழநாட்டு வேட்டி கட்டின ஆம்பிளைகள் எல்லாம் அடங்கி கிடக்குறார்களோ....???

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் சொல்வது சரிதான் போலிருக்கே :)

      Delete
  11. தகிரியம் எட்டு மடங்கு என்பதால்...தமிழநாட்டு வேட்டி கட்டின ஆம்பிளைகள் எல்லாம் அடங்கி கிடக்குறார்களோ....???

    ReplyDelete
    Replies
    1. எனக்கொரு சந்தேகம் ,வேட்டி கட்டுபவர்கள் எல்லாம் ஆம்பளைகள் தானா :)

      Delete
  12. Replies
    1. உங்களின் மகிழ்ச்சியே என் மகிழ்ச்சி ,நன்றி :)

      Delete
  13. அஞ்சுக்கும் பத்துக்கும் ..ஹ்ஹஹ

    மயில்வாகனனையும் ரசித்தோம்...

    அனைத்தும்...ரசித்தோம்

    ReplyDelete
    Replies
    1. அவங்க அவங்க தகுதிக்கு ஏற்ற மாதிரி அலையுறாங்க போலிருக்கே :)

      மனைவிகளின் பெயர் வள்ளி ,தெய்வானைதானா:)

      Delete
  14. எட்டு மடங்கு பத்து மடங்குன்னு சொல்றீங்க. இதுக்கும் போர்கொடி தூக்கிட போறாங்க

    ReplyDelete
    Replies
    1. சொன்னது சாணக்கியராச்சே,எப்படி போர்க்கொடி தூக்க முடியும் :)

      Delete