5 August 2016

ஒண்ணு கொடுத்தா போதுமா ?இன்னொண்ணு :)

கற்புக்கோர் கண்ணகி செய்தது சரியா :)       
             ''என்னைப் போலவே என் பையனும் அரசியல்வாதியா வருவான்னு  எப்படிச் சொல்றீங்க ?''
             ''நியாயம் தவறிய பாண்டியனின்  கொடும்பாவியை  கண்ணகி எரித்து இருக்கலாம்  ,மதுரையை  எரித்தது எப்படி நியாயமாகும்னு கேட்கிறானே !''

ஐம்புலனும்  போனால் ஆம்புலன்ஸ் :)
         ''ஐம்புலனை  அடக்கினாரே ,அவருக்கு ஞானம் வந்ததா ?''
         ''ஊஹும் ,தூக்கிட்டுப் போக ஆம்புலன்ஸ் தான்  வந்தது !''

ஒண்ணு  கொடுத்தா போதுமா ?இன்னொண்ணு :)
           '' தொழில்  தொடங்க ,நீங்க கொடுத்த  பெட்டிசனுக்கு பதிலே 
இல்லையேன்னு மந்திரிகிட்டே  கேட்டதுக்கு என்ன  சொன்னார் ?''
            ''பெட்டிசன் வந்திருச்சு ,பெட்டி வரலையேன்னு கேட்கிறார் !''

பொண்ணு பிடிக்கலைன்னு இப்பவா சொல்றது ?
                ''விடிஞ்சா உங்களுக்கு அறுபதாம் கல்யாணம் ,ஏன் சோகமாவே இருக்கீங்க ?''
                ''பொண்ணு பிடிச்சிருக்கான்னு  இப்பக்கூட  யாரும் கேட்க மாட்டேங்கிறாங்களே !''

ஒட்டாக் காதல் என்பது இதுதானா ?
        தழுவவந்த பனித்துளியை 
        நழுவவிட்டது தாமரைமுகம் 
        தாமரை இலைத் துளி !

18 comments:

  1. நியாயம் தவறிய அந்தப் பாண்டியனையே எரிச்சுட்டாங்க.. அப்புறம் எங்கே கொடும்பாவியை எரிக்க!!

    லென்ஸ் வச்சுப் பார்த்தாங்களாமா?

    பெட்டிக்குப் பொறந்த சன் போலிருக்கு!

    பிடிக்க முடியலை, கையெல்லாம் நடுங்குதுன்னு பதில் சொல்லிட்டா என்ன பண்றதுங்கற பயம்தான் காரணம்!

    ம்ம்ம்...

    ReplyDelete
    Replies
    1. அவர் போக வேண்டியவர்தான் மற்றவங்க என்ன பாவம் பண்ணினாங்க :)

      அவர் கண்ணை லென்ஸ் மூலமா பார்த்ததில் உறுதியானது ,ஆள் அவுட் :)

      சன்னுக்கு பெட்டி மாறியது உண்மைதானா :)

      எதைப் பிடிக்க முடியலே ,தாலிக் கயிறையா :)

      என்ன புரிந்தது ,இந்த ம்ம்ம் :)

      Delete
  2. ‘இடமுலை கையால் திருகி மதுரை
    வலமுறை மும்முறை வாரா அலமந்து
    மட்டார் மறுகின் மணிமுலையை வட்டித்து
    விட்டாள் எறிந்தாள் விளங்கு இழையாள்...’

    ‘பார்ப்பனர், அறவோர், பசு, பத்தினிப் பெண்கள், மூத்தோர், குழந்தைகளைக் கைவிட்டுவிடச் சொல்லி கண்ணகி தீக்கடவுளை ஏவினாளாம்...’ தீக்குத் தெரியுமா...? இது கண்ணகிக்குத்தான் நியாயம்...!

    அடக்கம் அமரருள் உய்க்கும்...!

    பெட்டி வரலையேன்னு கேட்டதை செல்போன் பெட்டிக்குள்ள அடைச்சுட்டேன்... கட்சி அடிப்படை உறுப்பினரே ஆட்டங்கானப் போவுது... மரியாதையா தொழில் தொடங்க ஆவன செய்யுங்க...!

    விவாகரத்தான 59 மனைவிமார்களும் விளக்கமாறுகளோட நிக்கிறாங்களே...!

    கட்டி அணைத்திட கையாலாகாத தாமரைஇலை...!

    த.ம. 1

    ReplyDelete
    Replies
    1. கண்ணகியிடம் இருந்து இப்படியும் ஒரு வேண்டுதலா ?இது அநியாயமா இருக்கே :)

      இந்த அடக்கம் உயிரை எடுத்து விட்டதே :)

      நீங்க நினைக்கிற மாதிரி ,தலைமையும் அவவளவு யோக்கியம் இல்லை :)

      விவாக ரத்துக்கு அவரே விளக்கம் சொல்லட்டும் :)

      இதுவே சுகமென நினைக்கிறதோ :)

      Delete
  3. 01. நல்ல கேள்விதானே
    02. அதாவது வந்துச்சே
    03. வரும், வரும்
    04. இனி கேட்டு என்ன ஆகப்போகுது
    05. ஸூப்பர் ஜி

    ReplyDelete
    Replies
    1. கண்ணகி என்றாலும் குற்றம் குற்றம்தானே :)
      பக்கத்தில் தான் 108 ஆம்புலன்ஸ் ஸ்டாண்ட் :)
      பெட்டி வந்தால் ஒப்புதல்தானே :)
      அறுக்க மாட்டாதவரோ:)
      படமும் தானே :)

      Delete
  4. ''பெட்டிசன் வந்திருச்சு ,பெட்டி வரலையேன்னு கேட்கிறார் !'நூத்திலே ஒன்னு சரியான பேச்சு.......

    ReplyDelete
    Replies
    1. இதை எல்லாம் சொல்லும்படியாவா வச்சுக்கிறது :)

      Delete
  5. பொண்ணுக்கு பிடிச்சிருக்கா...? அவருக்கு பொண்ண பிடிச்சிருந்தா இதுவரைக்கும் இருந்தாருன்னு யாராச்சும் கேட்டாங்களா...

    ஹா... ஹா... ரசித்தேன்...

    ஸ்பெஷல் பூங்கொத்து அழகிய ஹைக்கூவுக்கு...

    வாழ்த்துக்கள் ஜி.

    ReplyDelete
    Replies
    1. பிடிக்காமத் தான் பல பெரும் ஒற்றுமையா வாழ்ந்து கிட்டிருக்காங்க :)

      Delete
  6. அனைத்தும் அருமை. முதல் ஜோக், சிறுவயதில் நானே அப்படி நினைத்திருக்கிறேன். என் குழந்தைகளும் இப்போது என் தம்பி மகனும் அப்படியே கேட்கிறான். இன்றைய குழந்தைகள் பல மிகவும் புத்திசாலிகள். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு நம்மிடம் பதிலில்லை என்பதுதான் உண்மை.!
    த ம காணவில்லை.

    ReplyDelete
    Replies
    1. சிறு வயதில் தொடங்கிய கேள்விக்கு இன்று வரை விடை கிடைக்கவில்லை என்பது தானே உண்மை :)

      Delete
  7. Replies
    1. த ம வை ஒரு வழியாக கண்டுபிடித்து விட்டீர்கள் போலிருக்கே ,நன்றி :)

      Delete
  8. தழுவ வந்த பனித்துளி மிக நன்று, மற்ற பதிவுகளும் நன்று

    ReplyDelete
    Replies
    1. கண்ணுக்குக் குளிர்ச்சியா இருக்கா ஜி :)

      Delete
  9. அனைத்தும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆம்புலன்ஸ் வந்தது நிஜம்தானே :)

      Delete