14 August 2016

மனைவியின் முன் எச்சரிக்கை சரிதானா :)

கண் அளக்காததா கை அளக்கப் போவுது :)
        ''என்னங்க ,என் ப்ளட் டெஸ்ட் ரிசல்ட்டில் , கொழுப்பு அதிகம்னு காட்டுதுங்க !'
        '' என்னைக் கேட்டாலே  இதைச் சொல்லியிருப்பேனே ,இதுக்கு ஐந்நூறு ரூபாய் செலவு வேறயா  ?''
உங்களுக்கும் மண்டையைப் பிய்ச்சிக்கத் தோணுதா :)          
               ''என் பையனையா  அரைக் கிறுக்கன்னு  சொல்றே ,நீ  நாசமா போயிடுவே !''
               ''ஹிஹி ''
               ''சிரிப்பென்ன வேண்டிக் கிடக்கு ?''
               ''முழுக் கிறுக்கன் யாரென்று சொன்னால் ,உங்களுக்கு இன்னும்  எப்படி கோபம் வரும்னு நினைச்சேன் !''

ஊரு விட்டு ஊரு போனா பேரும் மாறுமா?
          ''கர்நாடகாவிலே  எல்லா ஊர் பெயரும்  'ஹள்ளி'ன்னுதான்  முடியுமோ ?''
          ''ஊரை மட்டுமல்ல ,நம்ம ஊரு அல்லி ராணியைக் கூட   , அவங்க ஹள்ளி ராணின்னு தான் சொல்வாங்க!''

மனைவியின் முன் எச்சரிக்கை  சரிதானா  :)
           ''வேலைக்காரி ,என் ஜீன்ஸ் பேன்ட் ,சட்டைப் போட்டுக்கிட்டு  வர்றாளே ,ஏன் கொடுத்தே ?''
           ''என் சேலையைக் கட்டிக்கிட்டு வந்தவளை..நான்னு நினைச்சு   நீங்க  கட்டிப் பிடிச்சதை  மறந்துட்டீங்களா ?''

முரண்பாடுகள் நிறைந்தது சினிமா உலகம் :)
   எக்ஸ்ட்ரா பிட்டிங்ஸ் மாட்டியவர்கள் 
   சிலநாள் அழகு ஹீரோயின்களாக   ...
   இயற்கையாகவே அழகாய் இருப்பவர்கள் 
   காலமெல்லாம் எக்ஸ்ட்ரா நடிகைகளாக ...

34 comments:

  1. அனைத்தும் ரசித்தேன் நண்பரே!
    த ம 1

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி :)
      தங்கள் தளத்தில் கருத்துரைப் பெட்டி காணவில்லையே,ஏனோ ?வாக்களிக்க முடிகிறது !

      Delete
  2. நா வேணுமுன்னாலும் பொய் சொல்லலாம்... அதிலும் நல்ல கொழுப்பு... கெட்ட கொழுப்புன்னு இருக்காமே... ஒனக்கு கெட்ட கொழுப்புதானே அதிகமாக இருக்கும்... மெஷின் பொய்யே சொல்லாது...!

    ஒனக்கென்ன கிறுக்கா...?

    அடி கள்ளி... நல்லா புரிஞ்சுக்கிறியே...!

    அதுக்காக வேலைக்காரியோட வீட்டுக்காரனுக்கு என் ஜீன்ஸ் பேன்ட் சட்டையை நீ எதுக்காகக் கொடுத்தாய்...?

    அவுங்க எக்ஸ்ட்ரா... இவுங்க எக்ஸ்ஸட்ரா...!

    த.ம. 2

    ReplyDelete
    Replies
    1. அட ஆமாம்லே ,LDL யை HDL கொலஸ்ட்ரால் அதிகம்னே காட்டுது :)
      கிறுக்கன் கிறுக்கனைப் பார்த்து கேட்கிற கேள்வி இதுவாத்தான் இருக்கும் :)
      அடி ஹள்ளியும் புரிஞ்சுக்கவா :)
      அடடா கணக்கு எக்குதப்பா போகுதே :)
      அப்படித்தான் அவங்க வாழ்ந்து கிட்டிருக்காக :)

      Delete
  3. Replies
    1. அவரோட பேச்சு ,அவரோட கொழுப்பைத்தானே காட்டுது :)

      Delete
  4. கொழுப்பைக் குறைக்க
    நாள்தோறும் 5km ஓடினால் போதுமென
    ஒரு குழந்தை ஓடுவதைப் படமாகப் போட்டு
    உளநல வழிகாட்டலும் வழங்குகிறீர்களே!

    ReplyDelete
    Replies
    1. அது குழந்தைப் படம் போலவா இருக்கு ?அனுஷ்கா கோவிச்சுக்கப் போறாங்க :)

      Delete
  5. அனைத்தையும் ரசித்தேன். அரைக்கிறுக்கன் அருமை.

    ReplyDelete
    Replies
    1. இந்த முழு கிறுக்கன் எழுதியது அருமையிலும் அருமைன்னு சொல்றீங்க ,நன்றி :)

      Delete
  6. அனைத்தும் ரசித்தேன். த.ம. +1

    ReplyDelete
    Replies
    1. நீங்கதான் போட்டோகிராபர் ஆச்சே ,படம் எப்படி ,நல்லாயிருக்கா :)

      Delete
  7. அசந்துங்க அத்திம்பேர்

    ReplyDelete
    Replies
    1. உங்க தங்கச்சி ஆதரவு இருக்கும் போது அசத்தாமல் இருக்க முடியுமா ,மைத்துனரே :)

      Delete
  8. Replies
    1. நீண்ட நாள் கழித்து நீங்கள் தந்த ஆதரவால் ,தமிழ் மண மகுடம் சூடிக் கொண்டுள்ளது இன்றைய என் பதிவு !நன்றி மது ஜி :)

      Delete
  9. Replies
    1. மௌனமான உங்கள் ஆதரவுக்கு நன்றி, தமிழ் இளங்கோ ஜி அவர்களே :)

      Delete
  10. நமக்குத் தெரிந்த கொழுப்பு வேற டாக்டர்கள் சொல்லும் கொழுப்பு வேற. நல்ல கொழுப்பும் இருக்கிறதாமே
    சில விஷயங்கள் சொல்லாமலேயே தெரிய வேண்டும்
    கன்னடத்தில் பெரும்பாலும் ப வுக்கு ஹ என்று சொல்வார்கள் அ வுக்கு அல்ல அல்லி என்றால் அங்கே என்று அர்த்தம்
    மனைவி அவளைக் கணவன் என்று எண்ணக்கூடாதே
    எக்ஸ்ட்ரா ஃபிட்டிங்ஸ் என்ன என்று சொல்ல வில்லையே

    ReplyDelete
    Replies
    1. திரு . செந்தில் குமார் அவர்கள் கொழுப்பைப் பற்றி எழுதி இருந்தாரே ,படித்து இருப்பீர்கள் என நினைக்கிறேன் !பெண்ணுக்கு கொழுப்பு சேரும் இடங்களை படம் அழகா படம் பிடித்துக் காட்டிமிருக்கே :)
      மன்மதக் கலையைப் போலவா :)
      பாவுக்கு ஹாவா ?என் பெயரை எப்படி சொல்வார்களோ :)
      அந்த ஆபத்தும் இருக்கா :)
      அதை விவரித்துக் கொண்டிருந்தால்,என் இல்லாளிடம் நான், பூரிக்கட்டை அடி வாங்க வேண்டியிருக்குமே :)

      Delete
  11. ''என் சேலையைக் கட்டிக்கிட்டு வந்தவளை..நான்னு நினைச்சு நீங்க கட்டிப் பிடிச்சதை மறந்துட்டீங்களா ?''---அட ..இந்த கூத்தும் நடக்குதா...!!! நடக்கட்டும..நடக்கட்டும்..நல்லா நடக்கட்டும்...

    ReplyDelete
    Replies
    1. தெரிஞ்சே நடக்குதுன்னு தெரியாம என்னன்னா நடக்குதோ :)

      Delete
  12. அனுஷ்க்கா படத்தைப்போட்டு கவர்ந்து விட்டீர்களே ஜி..

    அனைத்தையும் ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. குந்தாணி அனுஷ்கா படம் எனக்கு அனுகூலமா இல்லை என்பதுதான் உண்மை !நேற்றைய பார்வைகளின் எண்ணிக்கையில் பாதியைக் கூட இன்றைய பதிவு ,இந்த நொடிவரைத் தொடவில்லை !கவர்ச்சியான அனுஷ்கா படம் போட்டிருந்தால் ,இன்னும் நிறைய பேருக்கு பல்பு கொடுத்து இருக்கலாம் ,ஆனால் என் இல்லாள் என் முதுகில் டின் கட்டி விடுவாளே :)

      Delete
  13. அனைத்தும் ஸூப்பர் ஜி

    ReplyDelete
    Replies
    1. பிரயாணம் முடிந்து வந்து விட்டீர்கள் போலிருக்கே ஜி!
      நீங்களே சொல்லுங்க குந்தாணியைப் பார்க்க நல்லாவாயிருக்கு :)

      Delete
  14. வணக்கம்
    ஜி

    அனைத்தும் சிறப்பு படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துகள்

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி :)

      Delete
  15. முழுவதும் முத்துகள்!

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் , பதிமூன்றாவதாய் ஒரு முத்தை கொடுத்து இருந்தால் மகுடம் ஜொலித்திருக்குமே :)

      Delete
  16. கொழுப்பு நல்லதல்ல...இருந்தாலும் உங்கள் கொழுப்பை ரசித்தோம்...ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்..

    அனுஷ்கா ரொம்ப அழகாக இருக்கிறார் இல்லையா ஜி...

    அனைத்தும் ரசித்தோம்

    ReplyDelete
    Replies
    1. ரோஜாவை எந்தப் பக்கம் இருந்து பார்த்தாலும் அழகுதானே :)

      Delete
  17. Replies
    1. I LOVE MEN வாசகம்தானே :)

      Delete