21 August 2016

தாலி கட்டிகிட்டவளுக்கு இல்லாத உரிமையா :)

நாக்கு மூக்க நாக்கு மூக்க தத்துவம் :)             
           ''அவருக்கு ஜலதோஷம்  வந்தாலும் வந்தது  தத்துவமா சொல்ல ஆரம்பித்து விட்டாரா ,எப்படி ?'' 
             ''ஜல தோஷம் கூட மூணு நாள் இருக்கும் ,சந்தோஷம்  வர்றதும் போறதும் தெரியாதுன்னு சொல்றாரே !''

கணவன் கையாலே பாஸ்ட் புட் சாப்பிட ஆசை :)
          ''உங்க லேடீஸ் கிளப் பக்கம்  என்னை வரவே கூடானுன்னு சொல்லுவே ,இப்ப எதுக்கு வரச் சொல்றே ?''
         ''சமையல் கலை நிபுணர் வந்து பாஸ்ட் புட் ஐட்டம் சமைக்க கற்றுக் கொடுக்கிறார்,நீங்க தெரிஞ்சுக்க வேணாமா ?''

இவருக்கு திட்டு வாங்கிறதே பொழப்பாப் போச்சு:)
         ''ஏண்டா ,கிடைச்ச கண்டக்டர் வேலையே ராஜினாமா பண்ணிட்டே ?''
         ''பஸ்ஸை ஸ்டாப்பில் நிறுத்தாம போனா வெளியே நிற்கிறவங்க திட்டுறாங்க ,எல்லா ஸ்டாப்பிலும்  நிறுத்தினா உள்ளே இருக்கிறவங்க திட்டுறாங்களே !"

தாலி கட்டிகிட்டவளுக்கு இல்லாத உரிமையா :)
          ''ஒரு நடிகையை உங்க பைலட் சீட்டிலே உட்கார வச்சதுக்காக சஸ்பென்ட் ஆகி  இருக்கீங்க  ,இதுக்காக வருத்தப் படுறீங்களா ?''
           ''இன்னொரு தரம் சஸ்பென்ட் ஆனாலும் பரவாயில்லே ,நானும் அந்த சீட்டிலே உட்கார்ந்தே ஆகணும்னு என் பெண்டாட்டி சொல்றதுதான் வருத்தமா இருக்கு !
நினைச்சாலே கண்ணீர் தருதே வெங்காயம் :)
         கவுன்ட் டௌன் ஆரம்பித்த பிறகும் 
        மேலே போக மறுக்கிறது GSLV ராக்கெட் ...
        அது அடைய வேண்டிய உயரத்தை 
        வெங்காயம்  அடிக்கடி தொடுவதாலா ?

20 comments:

  1. சமையல்கற்றுக்கொள்ள கூப்பிடும் மனைவி ரசித்தேன் ஜீ!

    ReplyDelete
    Replies
    1. சமையல் நளபாகம்தானே ,அதனால் உரிமையோடு சொல்கிறார் :)

      Delete
  2. Replies
    1. இரண்டு தோஷத்தையும் ரசீத்தீர்களா :)

      Delete
  3. ஜலத்தில கண்டமாமே...! சந்தோஷ்க்கு தோஷம் கழிக்க ஏதாவது வழி இருக்கா...?

    இனியாவது இனியவளுக்கு வாய்க்கு ருசியா சமைங்க... ஆமாம்...!

    ‘ஒங்க கண் டக்கரா இருக்கு’ன்னு கண்டக்டர் சொல்லக்கூடாதா...?

    அதான் பிளைட்டக் காணாமுன்னு தேடிக்கிட்டு இருக்காங்களா...?

    கவுன்ட் டௌன் தானே...! அப்புறம் எப்படி மேலே போகும்...?

    த.ம. 5



    ReplyDelete
    Replies
    1. தோஷம்தானே,ஒரு வாரம் குளிக்காம இருந்தாலே போதும் :)

      இல்லேன்னா டைவர்ஸ்தானா:)

      சொல்லலாம் ,வேலையில் நீடிக்க எண்ணம் இல்லையென்றால் :)

      இனிமேல் அதைக் கண்டுபிடித்து என்னதான் செய்யப் போறாங்களோ :)

      இனிமேல் கவுன்ட் அப் ஆக்கச் சொல்லலாமா :)

      Delete
  4. அடிப்பாவி... சமைக்கிறதுமில்லாம அதுல வெரைட்டியா கத்துக்க வேற கூப்பிடுறியே.... என்ன தகிரியம்...?

    வெங்காயம் ரசித்தேன்... இங்க தக்காளி ஆப்பிளை விட அதிக விலைக்கு விக்குது ஜி....

    ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. இந்த மனுஷன் சாப்பாட்டைச் சாப்பிட்டு நாக்கு செத்து போச்சாமே :)

      ஒரு கைப்பிடி கறிவேப்பிலை நூறு ரூபாயாம் அமெரிக்காவில் :)

      Delete
  5. நாக்கு மூக்க நாக்கு மூக்க தத்துவம் பிடித்தது என்றொரு வார்த்தை சொல்லலாமே :)

    ReplyDelete
  6. நீங்களும் இன்று ரொம்ப பிசியா ஜி :)

    ReplyDelete
  7. தாலி கட்டிகிட்டவக உரிமையை நிலை நாட்டுவதுதானே ஒவ்வொருத்த புருடனின் உரிமையாக இருக்கும்போது......

    ReplyDelete
    Replies
    1. சரியாகச் சொல்லுங்க ......மனைவிக்கு உரிமை ,கணவனுக்கு கடமை :)

      Delete
  8. ''ஜல தோஷம் கூட மூணு நாள் இருக்கும் ,சந்தோஷம் வர்றதும் போறதும் தெரியாதுன்னு சொல்றாரே !''//

    இவர் உலகம் புரிந்தவர்; நாலும் தெரிந்தவர்!

    ReplyDelete
    Replies
    1. நாலும் தெரிந்தவர் யார் யார் என்று கேட்டுக் கொண்டே இருந்தேன் ,இப்போது ஒருவரை அடையாளம் காட்டி விட்டீர்கள் நன்றி :)

      Delete
  9. அனைத்தும் ரசித்தோம் ஜி!

    ReplyDelete
    Replies
    1. வெங்காயம் அடிக்கடி தொடுவதாலா ?இந்த கேள்வி சரிதானே ஜி :)

      Delete
  10. ஜலதோஷத்துலேயும் தத்துவம் சொன்னவருக்கு பாராட்டுக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நானும் அந்த சீட்டிலே உட்கார்ந்தே ஆகணும்னு சொல்ற, அவரோட மனைவியை பாராட்ட வேண்டாமா :)

      Delete
  11. ஒவ்வொரு நகைச்சுவையும் நன்று நன்று நன்று

    ReplyDelete
    Replies
    1. மூன்று நன்றுக்கு மூன்று நன்றி நன்றி நன்றி :)

      Delete