1 August 2016

பிறந்த நாளைக் கொண்டாட பணம் இருந்தால் போதுமா :)

இது உண்மையா ,இல்லையா :)           
            '' அர்ச்சகரிடம்  என்ன  கேட்கணும்னு  நினைக்கறே ?''
             ''சாமி பக்கத்திலேயே இருக்கிற நீங்க  சாமி ஆட மாட்டேங்கிறீங்க  ,ஆனா ,கோவிலுக்கு  ஒண்ணரை மைல் தூரத்தில் வரும் போதே கருப்பாயி  சாமி ஆட ஆரம்பித்து விடுகிறாரே  ,எப்படின்னுதான் !''

விட மனசில்லை என்றாலும் :)         
         ''காசிக்குப் போனா எதையாவது விட்டுட்டு வரணும்னு சொல்வாங்க ,நீங்க எதை விட்டீங்க?''
        '' என் பல் செட்டை விட்டுட்டு வந்தேன், குளிக்கும் போது அடிச்சுகிட்டு போயிடுச்சே !''

பெண்டாட்டின்னா இந்த பயம் இருக்கணும் !
              ''தக்காளி விக்கிற விலையிலே குப்பையிலே போடுறீங்களே ,ஏன் சார் ?''
               ''அதெல்லாம் உடைஞ்ச தக்காளி .... நல்ல தக்காளி மட்டும் பொறுக்கி எடுத்தால் கடைக்காரனுக்கு பிடிக்கலே ,உடைஞ்ச தக்காளியை கொண்டு போனா பெண்டாட்டிக்குப் பிடிக்கலே ,அதான் !''

 வயசுப் பிள்ளைங்களை பூட்டி வைக்க முடியுமா ?
               ''என்னங்க ,காணாமப் போன நம்ம பையன் போன்லே என்ன சொன்னான் ?''
              ''பிரியாவை தேட வேண்டாம்னு பக்கத்து வீட்டிலே போய் சொல்லச் சொல்றான் !'

 பிறந்த நாளைக் கொண்டாட பணம் இருந்தால்  போதுமா :) 
இறந்தபின்னும் நம் பிறந்தநாளைக் கொண்டாடவும் 
நாலு பேர்கள்  இருக்கிறார்கள் என்றால் ...
இன்று நாம் ,நம் பிறந்த நாளைக் கொண்டாடுவதில் அர்த்தம் உள்ளது !
அசையும் படம் தந்த ஈகரைக்கு நன்றி !

16 comments:

  1. 01. எனக்கும் இந்த சந்தேகம் உண்டு ஜி
    02. பல் செட்தானே... செட்டப்பு போகலையே..
    03. இவன் நிலை இப்படி
    04. டபுள் செய்தி சொல்லிட்டான்
    05. நியாயம்தான்

    ReplyDelete
    Replies
    1. கிச்ஷியானந்தவிடம் கேட்டு விட வேண்டியதுதானே :)
      தப்பு போனாலும் கவலைப் பட மாட்டார் ,செட்டப்பு போனால் ....:)
      இந்த நிலை என்று மாறுமோ :)
      இரண்டு வீட்டாருக்கும் நிம்மதி :)
      நாலு பேர் வருவார்கள் நிச்சயம் :)

      Delete
  2. ஆற்றில் குளிக்கும்போது துணி அடித்துக் கொண்டுபோய்விட்டால் மானத்தை விட்டு வருவார்களோ!!

    ரசித்தேன் ஜி.

    ReplyDelete
    Replies
    1. பல்செட்டைத் தேடி கொண்டு வரணும்னா சொல்றீங்க ?சுழன்று ஓடுகிற ஆற்று நீரில் எப்படி தேடி எடுப்பார் :)

      Delete
  3. ‘யாரு அம்பாளா பேசுனது...?’ சாமி வரணும்னா... கொஞ்சம் தூரம் இருந்தாத்தானே... சாமி வந்திடுச்சுன்னு சொல்ல வசதியா இருக்கும் ...! கருப்புதான் எனக்குப் பிடிச்ச கலரு...!

    காசியில் பல்செட் போனாலும்... மனைவி போகலைன்னு இதுக்குப் போயி வருத்தப் படவேண்டிய அவசியமில்லை... அடுத்த தடவை காசி தெய்வம் கைவிடாது...!

    மொத்தத்தில ஒங்க செயல் யாருக்குமே பிடிக்கலைன்னு சொல்லுங்க...!

    அவுங்க ஏன் பிரியாவைத் தேடப் போறாங்க... இது என்ன தெரியாததா...? இப்பத்தான் பிரியா இருப்பாங்க... கழுதை கெட்டா குட்டிச்சுவரு...!

    இறந்தபின்னும் நம் பிறந்தநாளைக் கொண்டாட நாலு பேர்கள் இருக்கிறப்ப... இப்ப ஏன் கொண்டாடி நாலு காச வீணாக்கனும்...?!

    த.ம. 1




    ReplyDelete
    Replies
    1. ஒட்டியிருந்தால் சாமி வராதோ :)

      இன்னொரு தடவை வேற வரணுமா :)

      தக்காளி வாங்காமலே விட்டுடலாமா :)

      எந்த ஏரியா கஊயச் சுவர்ந்னும் சொல்லியிருக்கலாம் :)

      சேர்த்து வச்சு போகும் போது கொண்டு போயிடுங்க :)

      Delete
  4. பல்செட் விட்டுட்டு வந்தாரா.... அதுவும் நல்ல ஐடியா தான்!

    த.ம. +1

    ReplyDelete
    Replies
    1. எவ்வளவு அசிங்கமாய் இருந்திருப்பார் ,எவ்வளவு பெரிய தியாகம் இது :)

      Delete
  5. கடைசியில் உள்ளது அருமை ஜீ,,,

    ReplyDelete
  6. ரசித்தேன் ஜி...
    கலக்குங்க...

    ReplyDelete
    Replies
    1. குமார் ஜி ,வர வேண்டிய நேரத்துக்கு கரெட்டா வர்றீங்க ,கரெட்டா செய்ய வேண்டியதை செய்ய மாட்டேங்கிறீங்களே :)

      Delete
  7. பிறந்த நாளைக் கொண்டாட பணம் இருந்தால்தானே ..நிணைப்பே வரும்.

    ReplyDelete
    Replies
    1. சரியாகக சொன்னீர்கள் :)

      Delete
  8. வயசுப் பிள்ளைங்களை பூட்டி வைக்க முடியுமா?
    ஒரு நாள் பார்த்து ஓடத் தான் செய்வாங்க...
    தொடருங்கள்
    தொடருகிறோம்

    ReplyDelete
    Replies
    1. ஓடிப் போனவங்களை நான் தொடர்வது இல்லை :)

      Delete