12 August 2016

கணவனின் சந்தோசம் ,இதற்குத் தானா :)

 திறமைசாலிகளான  கொள்ளையர்கள் :)            
             ''நீதிபதி வீட்டிலேயே இருநூறு பவுன் கொள்ளையாமே ?''
            ''ஓடுற ரயிலிலேயே  கொள்ளை அடிக்கிறாங்க ,இது  என்ன அதிசயம் ?''

இந்த பயபிள்ள, பாஸாவானா :)            
          ''பரீச்சைத் தாளை லவ் லெட்டர் மாதிரி நினைச்சு எழுதணும்னு  ஏன் சார் சொல்றீங்க ?''
          ''மனசுக்குள்ள  ஒண்ணுமே இல்லைன்னாலும் பக்கம் பக்கமா எழுத வருமே !''

கொள்கைப் பிடிப்புள்ள மாணவர்கள் !                  
      ''பொன் விழா கண்ட நம்ம பள்ளி இதுவரை மாநில அளவில் முதல் இடம் வராததற்க்கு காரணம் ,பள்ளியோட இலச்சினை தானா?''
     ''ஆமா 'பிறர்க்கு வாழ் 'என்பதை  மாணவர்கள் அனைவரும் கடைப்பிடிக்கிறார்களே!''
கணவனின் சந்தோசம் ,இதற்குத் தானா ?
         ''என்னங்க , அரசாங்க வேலை  கிடைச்சாச்சு ... நான் சனி ...ஞாயிறு வீட்டுலேத்தான் இருப்பேன் !
         ''ரொம்ப சந்தோசம் ..... நீ  'சனி''ங்கிறதை இப்பவாவது ஒத்துக்கிட்டியே !''

இந்த இசையை ரசிக்க முடியலே !
   விடாமல் அடிக்கும் 'டய்ங் டய்ங்' மணி சத்தமும் ...
   இடை இடையே சங்கொலி சத்தமும் ...
  'பாடியை சீக்கிரம் தூக்குங்கடா 'என்றுச் சொல்ல வைத்து விடுகிறது !

32 comments:

  1. பரீச்சைத் தாளை
    லவ் லெட்டர் மாதிரி நினைச்சு எழுதினால்
    பயபிள்ள, பாஸாவானா?

    நல்லாச் சிந்திச்சா பதில் வரும் போல...

    ReplyDelete
    Replies
    1. பதிலைத் தவிர எல்லாம் வரும் :)

      Delete
  2. இருநூறு பவுன மொதல்ல கொள்ளை அடிச்சது யாருன்னு கண்டுபிடிக்கனும்...! பதிபக்தி இல்லாம போச்சே...! ஓடுற ரயிலிலே... ஒரு நரி கொள்ளை நரிதான்...!

    ‘ஒண்ணுமே நல்லா இல்லைன்னாலும்... ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்கன்னு சொல்ற மாதிரி...’ நீங்க சொல்லி மார்க்க அள்ளிப் போட மாட்டேங்கிறீங்களே சார்...!

    நமக்கு மாநிலமெல்லாம் முக்கியமே இல்லை... உலக அளவில்... ‘உள்ளுவ தெல்லாம் உயர்வுள்ளல்...!’

    ‘சனி’யன் பிடிச்சிடுச்சுன்னு சொல்லுங்க...!

    இனி யாரும் ‘ஒ சங்க அறுத்துடுவேன்’னு சொல்ல முடியாது...!

    த.ம. 1








    ReplyDelete
    Replies
    1. ஜட்ஜஸ் குவார்ட்டர்ஸ் என்று எழுதி இருப்பதைப் பார்த்தும் கொள்ளை அடிக்கிறான்னா ,அவன் பதிபக்தி இல்லாத ஆளாகத்தான் இருக்கணும் :)
      இவ்வளவு பக்கம் எழுதி இருப்பதற்கே மார்க் போட்டிருக்கணுமே :)
      மாவட்ட அளவிலேயே வர முடியலே ,எங்கே உலக அளவில் வருவது :)
      அது சும்மா வரலே ,சடை பின்னிக்கிட்டு வந்திருக்கு :)
      அந்த சங்கை அறுத்து ஊதவாமுடியும் :)

      Delete
  3. முன்பு எல்லாம் இங்கிலிஷ் படத்தை டிவிடிலயாவது பார்த்து தமிழ்ல படம்தான் பண்ணினாங்க... இப்போ அதுல வர்ற காட்சியைப் பார்த்து கொள்ளையே அடிக்கறாங்க.. முன்னேற்றம்தான்!

    அப்படிச் சொல்லுங்க... பரீட்சைத்தாளை சினிமா கேள்வி மாதிரி நினைச்சு எழுதணும்!

    வீட்டுக் கொடுக்கற மனப்பான்மை அதிகம் போல!

    ஹா.. ஹா... ஹா..

    பொறுமை போய்விடுகிறதா!

    ReplyDelete
    Replies
    1. படத்தைக் காட்டி மறைமுகமா கொள்ளை அடிச்சாங்க ,இப்போ நேரடியாவே கொள்ளை அடிக்காங்கிறாங்களோ:)
      சினிமா நாயகியின் பாட்டி பேர் கூட ஞாபகத்தில் இருக்கிற மாதிரியா :)
      நானும் அப்படி விட்டுக் கொடுத்தவர்களில் ஒருவன் :)
      சனியைக் கண்டால் இப்படி சிரிக்கத் தோணுமா :)
      பொறுமையை சோதிப்பதில் முதலிடம் அந்த இசை ,இல்லை இல்லை ,நாராச ஒலிக்குத்தான்:)

      Delete
  4. சனிக்கு இப்படியும் பொருள் கொள்ளலாமா?

    ReplyDelete
    Replies
    1. இரண்டெழுத்து சொல்லுக்கு இரு அர்த்தம் இருக்கே :)

      Delete
  5. அருமை நண்பரே!
    த ம 6

    ReplyDelete
    Replies
    1. அடுத்து தொடருங்கள் நண்பரே :)

      Delete
  6. நீதிபதி தண்டனை வாங்கித் தருவாரா
    ஸ்ரீராம் சொல்கிறபடி எழுதினால் வெற்றி கிடைக்கலாம்
    உங்கள் பள்ளியா ?
    யாருக்கு அரசாங்க வேலை
    கர்நாடகத்தில் இந்த இசை அல்லது ஓசை பூஜை நடப்பதைக் குறிக்கும்

    ReplyDelete
    Replies
    1. 01. அதானே... ?
      02. நல்ல யோசனை
      03. உண்மைதான்
      04. மனைவி சதியா ? சனியா ?
      05. இ(ம்)சை

      Delete
    2. G.M Balasubramaniam ஜி ,
      இவ்வளவு தைரியமாய் கொள்ளை அடித்தவனை நேரில் பார்க்க விரும்புவாரா நீதிபதி :)
      சினிமா அளவுக்கு பாடம் மனதில் ஏற மாட்டேங்குதே :)
      ஆம் ,அரண்மனை போல இருக்கா :)
      என்னங்க என்பதில் இருந்தே புரிந்து இருக்கணுமே :)
      பிணத்துக்கு என்ன நாள் முழுதும் பூஜை வேண்டிக் கிடக்கு :)

      Delete
    3. KILLERGEE ஜி ,
      டெக்னாலஜி நல்ல முன்னேறிட்டு வருது :)
      இந்த யோசனை நடை முறைக்கு வந்தால் பேப்பர் போதாது :)
      பிறர்க்கு விட்டுக் கொடுப்பதில் உள்ள சந்தோசம் இருக்கே ,உணர்ந்தால் தான் தெரியும் :)
      புருஷன் பதி என்றால் மனைவி சதி தானே :)
      இசை என்றே சொல்லப் படாது :)

      Delete
  7. சபாஷ்,உங்களை எனக்கு ரொம்பப் பிடிக்குது :)

    ReplyDelete
  8. கோடி கணக்கான பணம் கொள்ளையடிக்கிற காலத்துல நீதிபதி வீடு, சாதாரண ஆள் வீடுன்னா பார்க்க போறாங்க. தற்போது வலைத்தளத்தை எனக்கு தெரிந்த வகையில் சரி செய்திருக்கிறேன். வாக்களிக்க முடிகிறதா என பார்த்து தகவல் சொன்னால் நல்லது

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் நினைப்பது போல் இல்லை ,கொள்ளைக் காரர்கள் ஒரே நாளில் திடீர் என்று வீட்டில் நுழைந்து கொள்ளை அடிப்பது போல்தெரியவில்லை ,கொள்ளை அடிப்பது ஒரு வீட்டை குறி வைத்து விட்டால் ,பக்கத்தில் இருக்கும் டீ கடையில் டீ குடிப்பது போல் ,பேப்பர் படிப்பது போல் நின்று கொண்டு கண்காணித்துக் கொண்டே இருக்கிறார்கள் ,எத்தனை மணிக்கு யார் வருகிறார்கள் ,போகிறார்கள் என்பதைப் பார்த்து விட்டு கொள்ளை அடிப்பது போல் தெரிகிறது !
      உங்கள் முயற்சி வெற்றி பெற்றுள்ளது ,முதல் வாக்கை போட்டு விட்டேன் ,மென்மேலும் வளர வாழ்த்துகள் :)

      Delete
  9. சூப்பர் ஜோக்ஸ்! டைமிங்கா முதல் காமெடியை அமைச்சிட்டீங்க அட்டகாசம்!

    ReplyDelete
    Replies
    1. நடக்கும் சம்பவங்கள் ஜோக்காதானே இருக்கு :)

      Delete
  10. அப்போ..சனி என்றால் கிழமையை குறிக்காது...மனைவியைத்தான் குறிக்குமா...நல்லா இருக்கு ஞாயம்.....

    ReplyDelete
    Replies
    1. மூளின்னா மூக்கைத் தொட்டுப் பார்த்துக்குவளாம் ,உங்களுக்கு எதுக்கு இந்த சனியன் எல்லாம் :)

      Delete
  11. உண்மையில் நீங்கள் ரசித்து உள்ளீர்கள் என்பது தங்களின் வாக்கு மூலம் தெரிகிறது ,நன்றி :)

    ReplyDelete
  12. Replies
    1. திறமைசாலிகளான கொள்ளையர்கள் தானே :)

      Delete
  13. 1,2,3,4 - அதெல்லாம் சரி..

    5) வாழ்நாள் முழுதும் தான் கசையடி.. கடைசியிலயாவது இசையடியோட போகட்டுமே!..

    ReplyDelete
    Replies
    1. தப்பித் தவறி பிணத்துக்கு உயிர் வந்தாலும் ,இந்த இசையைக் கேட்டு மீண்டும் மணடையைப் போட்டு விடுவார் :)

      Delete
  14. இருநூறு பவுன்! இரன்டாம் முறை கொள்ளைன்னு வச்சுக்கலாமா?

    ReplyDelete
    Replies
    1. அதென்ன, அள்ளஅள்ள குறையாத அட்சயா விலாசா அந்த வீடு :)

      Delete
  15. நீதிபதி வீட்டிலே 200 பவுனா? அப்ப அதுவே கொள்ளைதானே ஜி!!!!

    மனசிலே ஒண்ணுமில்லையும் சனியும்....ஹஹஹஹ்

    எல்லாமே ரசித்தோம் ஜி...

    ReplyDelete
    Replies
    1. வந்த வழியிலேயே போயிடுச்சா :)

      லவ் லெட்டர் என்றால்தானே கற்பனை பக்கம்பக்கமாய் ஊற்றெடுக்கும்:)

      Delete
  16. Replies
    1. இப்படிக்கொள்கைப் பிடிப்புள்ள மாணவர்கள் உங்கள் பள்ளியிலும் உண்டா :)

      Delete