19 August 2016

ஒருதலைக் காதல் என்பது இதுதானோ :)

                ''நேற்று உனக்கு துக்க நாளா  போச்சா ,ஏண்டா  ?''
               ''நான் யார் கழுத்தில்  தாலிக் கயிறு  கட்டணும்னு  நினைத்திருந்தேனோ ,அந்த  பொண்ணே வந்து என் கையில்  ரக்ஷா பந்தன் கயிறைக் கட்டிட்டுப் போயிட்டாளே !''
'மார்க் 'கண்டேயன்  என்றும்  பதினாறுதானே :)
            ''பையனுக்கு மார்க்கண்டேயன்னு பெயர் வச்சது தப்பா போச்சா ,ஏன் ?''
            ''எந்த பாடத்திலும் பதினாறு  மார்க்  மேலே எடுக்க மாட்டேங்கிறானே!''
                                 
ஜென்டில்மேன் இராவணன் ?:)     
           ''இராவணன்  சீதையை சரியாக 'பத்து மாதம்' சிறை வைத்து இருந்தாராம் ,இதில் இருந்து என்ன தெரியுது ?''
            ''இராவணன் சீதையிடம் சேஷ்டை எதுவும் செய்யலேன்னு தெரியுது !''

NECK less குண்டு மனைவிக்கு நெக்லஸ் எதுக்கு ?
          ''நீ கேட்ட நெக்லசை உன் வீட்டுக்காரர் வாங்கிக் கொடுத்தாரா ?''
         ''உனக்குத்தான் கழுத்தே இல்லையே ,நெக்லஸ் எதுக்குன்னு கிண்டல்தான் பண்றார் !''

தன் குணத்தை  மறக்கும் மனிதன் !
  பால் குடிப்பது பூனையின் இயல்பு ...
  சந்தேகப் படுவது மனிதனின் இயல்பு ... 
  'இந்த பூனையும் பால் குடிக்குமா 'என்று கேட்பது
  எந்த வகையில் நியாயம் ?

19 comments:

  1. ‘வஞ்சி அவள் உன்னை எண்ணவில்லை இன்றும்... உனக்கேன் ஆசை மன்மதன் போலே...!’

    ‘பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க...!’

    ‘தொட்டால் சுடும்...!’

    இடுப்பைக் காட்டி ஒட்டியானம் கேக்க வேண்டியதுதானே...!

    ‘நாம் குடிப்பதுபோல இந்த பூனையும் பால் குடிக்குமா...?’ன்னு கேட்கிறார்...!

    த.ம. 1





    ReplyDelete
    Replies
    1. சரி விட்டுத் தள்ளு ,அதையே நினைச்சி , கழுத்துலே கயிறு ஏதும் மாட்டிக்காதே :)

      பெருவாழ்வு எங்கே வாழுறது ,பத்தாம் வகுப்பு தாண்டுவதே கஷ்டம் :)

      தொட்டால் தானே தெரியும் சுடுவது நெருப்பென்று புரியும் :)

      பரம்பரை சொத்து இருந்தால் ஒட்டியாணம் வாங்கலாம் :)

      பூனை என்ன பூஸ்ட் கலந்தா குடிக்கப் போகிறது :)

      Delete
  2. Replies
    1. NECK less குண்டு மனைவி, நெக்லஸ் போட்டால் நல்லாவா இருக்கும் :)

      Delete
  3. Replies
    1. தன் குணத்தை மறப்பது அழகாகுமா மனிதனுக்கு :)

      Delete
  4. Replies
    1. ரசித்தேன் என்பதை வோட்டின் மூலம் சொன்னதற்கு நன்றி :)

      Delete
  5. Replies
    1. இந்த பூனையும் பால் குடிக்குமா என்று இனி கேட்க யோசிக்கத் தோணும் ,இல்லையா :)

      Delete
  6. சிரித்து மகிழ்ந்தேன்!

    ReplyDelete
    Replies
    1. இராவணன் ஜென்டில்மேன்தானே :)

      Delete
  7. ரசித்தோம் ஜி அனைத்தையும்

    ReplyDelete
    Replies
    1. தாலிக் கயிறுக்குப் பதில் ரக்ஷாபந்தன் கயிறு என்றால் துக்கம் பொங்கத்தானே செய்யும் :)

      Delete
  8. வணக்கம் பகவான் ஜி !

    இராவணனும் நெக்லசும் இதயம் தொட்டது கடைசிக் கேள்வி நானும் கேட்க்க நினைத்தேன் என்னிடமே
    அருமை அருமை தொடர வாழ்த்துகள் வாழ்க நலம் !
    தம +

    ReplyDelete
    Replies
    1. இராவணன் கெட்டவன் என்றால் சீதைக்கு இந்த பத்து மாதத்தில் ......:)

      Delete
  9. 'மார்க் 'கண்டேயன் என்றும் பதினாறு என்பது உண்மைதானே :)

    ReplyDelete
  10. பாவம் இப்படியும் ஏமாறுகிறார்கள் சிலர்
    பெயரிடும்போது மார்க்கை நீக்கி இருக்க வேண்டும்
    சேட்டை செய்தானா என்று தெரிய பத்து மாதம் தேவையா
    நல்லவேளை . கழுத்துள்ள மனைவியாய் இருந்தால் நெக்லேஸ் வாங்கவே அவர் சம்பாத்தியம் சரியாய் இருக்கும்
    சந்தேகம் மனிதனின் இயல்பு. அப்ஜெக்‌ஷன் யுவர் ஆனர்

    ReplyDelete
    Replies
    1. வெட்டியா என்னை நினைச்சி கனவு காணாதே என்று சொல்ல பொண்ணுக்கு வாய்ப்பை தருதே ,இந்த ரக்ஷா பந்தன் :)
      வெறும் கண்டேயன் என்றால் நல்லாவா இருக்கு :)
      ஊர் உலகத்துக்கு உறுதியாய் தெரிய வேண்டும்தானே :)
      இவர் கழுத்துக்கு அது தூக்கு கயிறு மாதிரி ஆகியிருக்குமோ :)
      எஸ் புரோசிட் வித்தௌட் டௌட் :)

      Delete