16 August 2016

நடிகைக்கு கோவில் என்றால் ,உடை ? :)

ஆபீஸுக்கு சைக்கிளில் செல்வதே நல்லதோ :)         
             ''என்ன சொல்றே ,கார் வாங்கினாலும்  மறுபடியும் சைக்கிள்தான் ஓட்ட வேண்டியிருக்குமா ?''
             ''கொஞ்ச நாள்லே தொப்பை வந்துடும் ,அதைக் கரைக்க ஜிம்மிலே சைக்கிளிங் பண்ணவேண்டி வரும்னு சொன்னேன் !''

இவன் காதுலே தீயை வைக்க :)                        
                 ''தீக்குச்சி கேட்டீங்க ,லைட்டரே தந்தாலும் ஏன் வேண்டாங்கிறீங்க ?''
                 ''காது குடைய லைட்டர் எதுக்கு ?''
                                     
 அப்பன்காரன் இப்படியா பேர் எடுக்கிறது ?
            ''நிலாச் சோறுன்னா அம்மா ஞாபகம் வருது சரி ,அப்பா ஞாபகம் எப்போ வரும் ?''
            ''தண்டச் சோறுன்னா !''

நடிகைக்கு கோவில் என்றால் ,உடை  டூ பீஸ் தானே :)
            ''அடபரவாயில்லையே,அந்த நடிகை தனக்கு கோவில் கட்ட வேண்டாம்னு   ரசிகர்களை தடுத்து விட்டாராமே !''
            ''அடநீங்கவேற !நீச்சல்உடையிலே இருக்கிறமாதிரி சிலைன்னு சொன்னது, அவங்களுக்கு பிடிக்கலையாம் !''
பல கணவர்கள் அடுத்த பிறவியில் ஆக நினைப்பது :)
      பல கோடி ஆண்டுகளாக உருவம் மாறாமல் இருக்கிறது                  என்பதற்காக கரப்பான்பூச்சி மேல் கணவன்மார்களுக்கு  பொறாமை இல்லை ...
         அது மனைவிமார்களை  பயமுறுத்தும் வித்தையை  கற்று வைத்திருக்கிறதே ,என்பதால்தான் !

24 comments:

  1. Replies
    1. முதல் வருகைக்கும் வாக்குக்கும் நன்றி :)

      Delete
  2. அனைத்தையும் ரசித்தேன். நிலாச்சோறு-தண்டச்சோறு ஒரு நிமிடம் சிந்திக்க வைத்தது. அம்மாக்கள் அப்படி சொல்லவே மாட்டார்களோ!

    ReplyDelete
    Replies
    1. பெரும்பாலும் பெற்ற வயிறு அப்படி சொல்வதாகத் தெரியவில்லை :)

      Delete
  3. வாழ்க்கையே ‘சைக்கிள்’தானே...!

    இந்தக் குடச்சல்தானே ஆகாதுங்கிறது...!

    தண்டச் சோறு தின்னிட்டு ‘தண்டால் எடுங்கடா தண்ணியை விடுங்கடா... பஸ்கி எடுங்கடா விஸ்கியை விடுங்கடா...!’

    அவுங்களுக்கு உடைன்னாலே பிடிக்காதே...! கோவில் சிலைகளை நல்லாப் பாத்திட்டு அப்புறம் நடிகைகிட்ட அனுமதி கேளுங்க... !

    மனைவிமார்கள்தான் பயமுறுத்துகின்றன...!

    த.ம. 4







    ReplyDelete
    Replies
    1. ரீ சைக்கிளிங் கூட :)

      காதுக்குள்ளே கொஞ்சம் அனலைக் காட்டி அழுக்கை எடுத்துக்க வேண்டியதுதானே :)

      பசங்க ,எடுங்கடா ,விடுங்கடாவை தலைக் கீழா எடுத்துக்கிறாங்களே :)

      வைக்கப் போறது அம்மன் சிலை இல்லை ,அதுக்காக அம்மண சிலை வைக்க முடியுமா :)

      பெண்களுக்கு மட்டுமா ,கரப்பான் என்றாலே எல்லோருக்கும் அருவெறுப்புப்புதானே :)

      Delete
  4. Replies
    1. நிலாச் சோறுன்னா ரசித்து சாப்பிடத்தானே தோன்றும் :)

      Delete
  5. Replies
    1. ஆபீஸ் கிளம்ப நேரமாயிட்ட மாதிரிமிருக்கே ,+ ஒன்றைப் பார்த்தால்! நன்றி :)

      Delete
  6. Replies
    1. உங்களின் மன மாற்றத்தை நானும் ரசிக்கிறேன் ,நன்றி :)

      Delete
  7. நடிப்பது நீச்சல் உடை..கோவில் மட்டும் நீச்சல் உடை வேண்டாமா.... என்ன..ஒரு அறிவு...

    ReplyDelete
    Replies
    1. சினிமாவில் உடை குறைய குறைய துட்டு கூடும் ,இங்கே உண்டியல் நிறைந்தாலும் வந்து சேருமா :)

      Delete
  8. 01. சைக்கிள் மட்டும் போதுமோ...
    02. இப்படி கிராக்கிகளும் இருக்கு.
    03. பொங்கச்சோறுன்னா.....
    04. அவள்தான்தான் சேலையில் வரவேயில்லையே.....
    05. உண்மைதான்.

    ReplyDelete
    Replies
    1. போதும் ,நின்ற இடத்திலேயே நடக்க வேண்டி வராது :)
      காது குடைஞ்சாதான் வேலையே ஓடும்னு வேற சொல்றாரே :)
      அவர்தான் உங்க பூஜையும் வேண்டாம் பொங்கச் சோறும் வேணாம்னு ஓடுறவராச்சே :)
      பிறகெப்படி எந்த மாடலை வைத்து சிலை வடிப்பது :)
      கரப்பானுக்கே உரிய சிறப்பம்சம் :)

      Delete
  9. ரசித்தேன்
    த ம 11

    ReplyDelete
    Replies
    1. படம் இருக்கட்டுமா ,தூக்கிறலாமா:)

      Delete
  10. கோடிக் கணக்கில் செலவு செய்யும் தயாரி்பாளர்களுக்கு, நடிகைகளுக்கு உடை வாங்கும்போது கஞ்சத்தனம் வந்து விடுகிறதே

    ReplyDelete
    Replies
    1. அவர் காலியான கல்லாவை நிரப்ப ,கதையை விட சதையைத் தானே நம்புகிறார் :)

      Delete
  11. Replies
    1. கணவர்கள் அடுத்த பிறவியில் ஆக நினைப்பது,சரிதானே :)

      Delete
  12. மகிழுந்துப் (கார்) பயணம்
    தொப்பை வைக்குமென்றால்
    மதிவண்டிப் (சைக்கிள்) பயணம்
    தொப்பையைக் கரைக்குமா?
    சிறந்த உளநல வழிகாட்டல்

    ReplyDelete
    Replies
    1. நீங்கள் மட்டும்தான் ,உளநல வழிகாட்டலைக் கண்டு பிடித்து விடுகிறீர்கள் ,இரண்டு நாளுக்கு முன்னும் சொல்லி இருந்தீர்களே :)

      Delete