23 August 2016

ஷ என்றாலே ஷகிலா நினைப்புதானா :)

பஞ்ச்  டயலாக்  சொன்னாதான் பயபிள்ளே  மண்டையில் ஏறுது  :)
             ''என்னடா ,ஸ்கூலுக்கு சீக்கிரமா கிளம்பிட்டே ?''
             ''புதுசா வந்திருக்கிற  வாத்தியார் 'எனக்கு எல்லா  மதமும் பிடிக்கும்  ,தாமதம் மட்டும் பிடிக்கவே பிடிக்காது'ன்னு சொல்றாரே !''

இருந்தால் தானே சலவை செய்ய :)                  
         ''என்னங்க ,நம்ம பையன் சரியா படிக்க மாட்டேங்கிறான் ,தீவிரவாதி ஆயிடுவான் போலிருக்குங்க !''
          'ஒண்ணும்  கவலைப் படாதே ,யாரும் அவனை 'மூளைச் சலவை 'செய்ய முடியாது !''
                                                                                                
 ஷ என்றாலே ஷகிலா நினைப்புதானா ?                    
              ''தமிழ் வாத்தியார்  எதுக்கு உன்னை வகுப்பை விட்டு வெளியே போகச் சொன்னார் ?''       
             ''ஷ என்பது வடஎழுத்து நாம பயன்படுத்தக் கூடாதுன்னு அவர் சொன்னப்போ...ஷகிலாவுக்கு வர்ற ஷ தானேன்னு கேட்டேன்  !''
என்னவோ ஏதோன்னு பயந்தே போனேன் !           
        ''நாலாவது மாடி ஜன்னலிலே பெயிண்ட் பண்ணிக்கிட்டு இருந்தேன் ,மேலேயிருந்து கீழே விழுந்து ...''
        ''அய்யய்யோ என்னாச்சு ?''
        ''பெயிண்ட் எல்லாம் கொட்டிப் போச்சு !''

மனைவியினால் அதுவும் கிடைக்கும் ,இதுவும் கிடைக்கும் !
        மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்தான் ...
        சில வீடுகளில், கணவன்மார்களுக்கு வாய்க்கு ருசியா சாப்பாடும்...
        சில வீடுகளில் ,கணவன்மார்கள் வலி தாங்க முடியாமல் போடும்     கூப்பாடும் ...
        எல்லாமே மனைவி கையில் இருக்கும் கரண்டியின் 'கை'ங்கர்யத்தால் !

27 comments:

  1. வாத்தியாருக்குத்தானே தாமதம் பிடிக்காதுன்னு சொல்லாரு... ‘பிடிச்சத செய்யாதவனும்... பிடிக்காதத செய்தவனும் உலகத்தில நல்லா வாழ்ந்ததா சரித்தமே இல்ல...!’

    இதுக்குத்தான் மட்டன் கடையில மூளை வாங்கிட்டு வாங்கன்னு தலையால அடிச்சிக்கிறேன்...! நீங்க பாட்டுக்கு மூலையில ஒக்காந்திருக்கீங்க... ஏங்க ஒங்களுக்கு ஏதாவது இருக்கா...?

    நல்லா கவனிக்கனும்... தமிழ் வாத்தியார் ‘ஷ’ என்ற வடஎழுத்தத்தான் நாம பயன்படுத்தக் கூடாதுன்னு சொல்லாரு...!

    வீட்டுக்காரர் கூலியக் கூட்டிக்கொடுக்கனுமுன்னா நேரா கேக்க வேண்டியதுதானே...! இதுக்காக அவரு தலையிலையா பெயிண்ட கொட்டனும்...!

    ‘வரங்களே சாபங்களானால்...’ மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வதைதானா...?

    த.ம. 1






    ReplyDelete
    Replies
    1. அப்படிப்பட்டவன் வாழ்க்கை தரித்திரம் ஆனதா சரித்திரம் இருக்கே :)

      மூளை கீளை இருக்கான்னு நேரடியா கேட்டுற வேண்டியதுதானே :)

      A என்று போட்டிருக்கும் ஆங்கிலப் படங்களைப் பார்க்கலாம் ,அப்படித்தானே :)

      அடக் கண்றாவியே பெயிண்ட் அபிஷேகம் அவர் தலையில் தானா :)

      வடையோ இல்லை இல்லை வதையோ ..அவரவர் கணவன்நடந்துக் கொள்ளும் முறையில் இருக்கிறது :)


      Delete
  2. வாத்யார் செம பஞ்ச் டயலாக் விடறாரே...

    மற்றவர்களையும் ரசித்தேன் ஜி.


    ReplyDelete
    Replies
    1. இந்த கால பசங்களுக்கு இப்படியெல்லாம் சொல்லித் தர வேண்டியிருக்கே :)

      Delete
  3. Replies
    1. வாத்தியார் அவர்களுக்கு வணக்கம் ,நீங்களும் இப்படி பஞ்ச் வசனம் வகுப்பிலே சொல்வீங்களா :)

      Delete
  4. Replies
    1. ஷகிலா என்றதும் ,என்னவோ ஏதோன்னு பயந்து போகவில்லையே :)

      Delete
  5. // மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்தான் ...//

    கணவன் அமைவதெல்லாம் இறைவி கொடுத்த வரம்! சரியா பகவான்ஜி?

    ReplyDelete
    Replies
    1. கணவன் துறவி ஆவதும் இறைவி கொடுத்த வரம்தான் :)

      Delete
  6. வாத்தியார் டயலாக் ஹஹஹ்

    மூளைச் சலவை..ஹஹஹ் ரசித்தோம் ஜி

    ReplyDelete
    Replies
    1. நீங்களும்வாத்தியார்தானே,இப்படி டயலாக் சொல்ல வேண்டாமா :)

      மூளை இருந்தால் அல்லவா செய்ய முடியும் :)

      Delete
  7. பஞ்ச் டயலாகால் பயபுள்ளை நேரத்தோடு வந்தால் சரி
    மூளை இல்லாவனை எப்படி தீவிர வாதி ஆக்க முடியும்
    ஷ்ஃஅகிலாவுக்கு வர ஷ மட்டும் அல்ல ஷகிராவுக்கும் வர ஷதானே
    இவர்தான் விழுந்தாரோ என்று நினைப்போம் என்று நினைத்தீர்களா
    அனுபவப்பதிவோ

    ReplyDelete
    Replies
    1. லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வருவேன் என்று சொல்லக்கூடும் :)
      ஆக்குகிறார்களே,இல்லாவிட்டால் கோழி கழுத்தை அறுப்பதுபோல் மனிதன் கழுத்தை அறுக்கிறார்களே :)
      உங்க அனுபவத்துக்கு ஷகிரா சரி :)
      நினைத்ததை சரியாக சொல்லி விட்டீர்களே :)
      அதுவும் இதுவும் சேர்ந்ததுதானே தாம்பத்தியம் :)

      Delete
  8. Replies
    1. இன்றைய பதிவு த ம மகுடம் சூடிக் கொள்ள உங்க எட்டாவது வாக்கு உதவியுள்ளது ,நன்றி !
      எட்டு திக்கும் வெற்றி என்று கொட்டு முரசே :)

      Delete
  9. கணவர்மாரே!
    எல்லாமே
    மனைவி கையில் இருக்கும்
    கரண்டியின் மகிமை தான்!

    ReplyDelete
    Replies
    1. எனவே ,கரண்டியை நீங்களே பிடியுங்கள் ,தப்பித்துக் கொள்வீர்கள் :)

      Delete
  10. வணக்கம்
    ஜி

    அனைத்தும் அருமை இரசித்தேன்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  11. தம +
    நகைப்பணி தொடர்க

    ReplyDelete
    Replies
    1. சேதாரமின்றி 'நகை'ப் பணி தொடர்கிறேன் ,நன்றி ஜி :)

      Delete
  12. நேரம் கிடைக்கும் போது போன் பண்ணுங்க ஜி ,சந்திக்க முயற்சி செய்கிறேன் :)

    ReplyDelete
  13. வாத்தியார் ரமணா டைப் ஆளா இருப்பார் போலிருக்கே! அனைத்தும் சிரிப்பை வரவழைத்தன!

    ReplyDelete
    Replies
    1. மன்னிப்பு என்ற வார்த்தைக்கே என் அகராதியில் இடமில்லை என்பாரா அதுவா :)

      Delete
  14. ஷகிலா ஷகிலா நினைப்பில்..விஞ்சியது.. குருவை முந்திய சீடனா..? சீடனை முந்திய குருவா...????

    ReplyDelete
    Replies
    1. சீடன் பொடிப் பயல் ,குருவை மிஞ்ச முடியுமா :)

      Delete