26 August 2016

தாலி இறங்க பூஜை ஏதாவது இருக்கா :)

              ''என் மனைவி சுமங்கலி பூஜை செய்கிறாள் ,உன் மனைவியையும் வரச் சொல்லேன் !''
               ''அவளாவது வருவதாவது ?தாலி இறங்கினாலும் பரவாயில்லைன்னு நினைக்கிறவளாச்சே  அவ !''


சான்ஸ்  கிடைக்கும் போது விடுவாளா மனைவி :)             
            ''அதிர்ச்சியான செய்தியைச் சொன்னால் விக்கல் நின்னுடும்னு ,என் மனைவிகிட்டே உன்னை டைவர்ஸ் செய்யப் போறேன்னு சொன்னேன் ...''
            ''விக்கல் நின்றதா ?''
             ''விக்கல் நின்னுடுச்சு ,நான் சொன்னதை உண்மைன்னு நினைச்சு,எப்போ டைவர்ஸ் பண்ணப் போறீங்கன்னு அனத்த ஆரம்பிச்சுட்டாளே !'' 

தொந்தி உடையார் விழுவதற்கு அஞ்சார் :)
        ''ஏட்டையா,திருடனைப் பிடிக்க ஓடும்போது குப்புற விழுந்துட்டீங்களாமே ,மூக்கிலே அடி படலையா ?''
         ''நல்ல வேளை,தொந்தி இருந்ததால் மூக்குலே மண்ணு கூட படலே !''

 தாஜ்மகால் காதலின் சின்னமல்ல  ,எச்சரிக்கை :)
       தாஜ்மகாலை ...
      அன்பின் சின்னம்  என்கிறார்கள் ...
      அதீத அன்பும் ஆளைக் கொல்லும் என்பதற்கு எச்சரிக்கை           சின்னமாய்தான்  கண்ணுக்கு படுகிறது ...
      பதினான்கு  முறை பிரசவித்து 
      முப்பத்தொன்பது வயதிலேயே மரணமுற்ற 
      மும்தாஜை நினைத்தால் பாவமாய்த்தான் இருக்கிறது !

32 comments:

  1. ரெண்டாவது ஜோக் செம.

    Happy Diwali Wallpapers

    ReplyDelete
    Replies
    1. எப்படா கழண்டுக்குவோம்னு காத்துகிட்டு இருக்கிறாங்க போலிருக்கே :)

      Delete
  2. தாலி நமக்கு வேலின்னு... மோதிரம் மட்டும் போதுன்ட்டா...!

    இதுக்குத்தான் அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கக் கூடாதுங்கிறது... ஒன்னு கிடக்க ஒன்னு ஆயிப்போயிடும்...!

    கீழே விழுந்தாலும் மீசையில மண்ணு ஒட்டலங்கிறது இது தானா...?

    இன்னும் இரண்டு பெற்றால்... பதிறாறும் பெற்று பெறு வாழ்வு வாழ்ந்திருப்பார் மும்தாஜ்...! அந்த மும்தாஜ்தான் இந்த மும்தாஜ்... அப்ப அடுத்த பிறவிங்கிறது உண்மைதானா...?

    த.ம. 1

    ReplyDelete
    Replies
    1. நல்லவேளை வேலியைத் தாண்டவில்லை வெள்ளாடு :)

      எதிர்பார்த்த பலன் ஒன்று .வந்ததோ எதிர்மறையான பலனோ :)

      ஏட்டையா பழமொழிக்கு உதாரணம் ஆகிட்டாரே :)

      இந்த மும்தாஜ் ...பல பல பலே பலே, மும்தாஜா :)

      Delete
  3. ரசித்தேன்.

    தம இன்று செம ஃபாஸ்ட்!

    ReplyDelete
    Replies
    1. த ம மட்டுமா பாஸ்ட் ? பார்வையாளர்கள் எண்ணிக்கையும் செம பாஸ்ட் :)

      Delete
  4. Replies
    1. நெகடிவ் தலைப்பையும்தானே :)

      Delete
  5. tha.ma.4
    அதிகாலைப் பதிவாகப் போடுகிறீர்கள். தலைப்பில் முடிந்தவரை (தாலி இறங்குதல் போன்ற) சொற்களைத் தவிருங்கள். எனக்கு ஒன்றும் இதனால் பிரச்சினை இல்லை.

    ReplyDelete
    Replies
    1. 'தூறல் நின்னுப் போச்சு'ன்னு நம்ம பாக்கியராஜ் தலைப்பு வைத்த போது இப்படித்தான் சொன்னார்களாம் ,ஆனாலும்,அந்த படம் சக்கைப் போடு போட்டதே !என் சோக கதையைக் கேளு தாய்க்குலமேன்னு பாட்டைப் போட்டாரே ,ஹிட் ஆகலையா ?
      இதுவும் ஒரு அதிர்ச்சி வைத்தியம் போலத்தான் ,கை மேல் பலன் கொடுத்துள்ளதே ,நேற்றைய பார்வையாளர்கள் எண்ணிக்கையை விட இன்று இரு மடங்கு :)

      Delete
  6. முதல் இரண்டு பதிவுகளும், இப்படியும் பெண்களா என்று யோசிக்க வைத்தன.

    // பதினான்கு முறை பிரசவித்து...//
    பாவம் மும்தாஜ்.

    ReplyDelete
    Replies
    1. யோசிச்சு என்ன முடிவுக்கு வந்தீங்க :)

      Delete
  7. Replies
    1. காதலாவது கத்தரிக்காயாவது என்று படத்தைப் பார்த்தால் சொல்லத் தோணுதா :)

      Delete
  8. அனைத்தும் ரசித்தோம் ஜி!

    ReplyDelete
    Replies
    1. சுமங்கலி என்பதற்கு எதிர்பதம் அமங்கலியா :)

      Delete
  9. தொந்தி ரொம்பவே உதவுமோ!!ஹிஹி

    ReplyDelete
    Replies
    1. தொந்தி உடையார் விழுவதற்கு அஞ்சார் என்பது சரிதானே :)

      Delete
  10. சுமங்கலி பூஜை எதற்கு தாலி காக்கவா தாலி ஏற்றவா
    இதற்குத்தான் வார்த்தையில் கவனம் தேவை என்பது
    தொந்திதாங்கிப் பிடித்தது மூக்கு தப்பித்தது
    காதல் சின்னம் அழகுச் சின்னமாயிற்றோ

    ReplyDelete
    Replies
    1. தாலியை நீட்டிக்க செய்ய :)
      அதிர்ச்சியை எப்படி தருவது :)
      இப்படியும் ஒரு நன்மையா :)
      தாஜ் மஹால் அழகுதான் ,மும்தாஜ் சின்னாபின்னமாகி இருப்பாரே :)

      Delete
  11. Replies
    1. ஜோடிக் கத்தரிக்காய் அழகுதானே :)

      Delete
  12. அனைத்தும் அருமை. வழக்கம்போலவே.

    ReplyDelete
    Replies
    1. வழக்கம் போல் வாக்களித்தமைக்கு நன்றி :)

      Delete
  13. அனைத்தும் அருமை. ரசித்தேன்.!
    த ம 9

    ReplyDelete
    Replies
    1. மும்தாஜை நினைத்தால் உங்களுக்கும் பாவமாய் இருக்கிறதா ,இல்லையா :)

      Delete
  14. Replies
    1. விக்கல் நின்றதையுமா :)

      Delete
  15. Replies
    1. உங்க இந்திய வருகையின் நோக்கம் நிறைவேறிய பின் சொல்லுங்க ,சந்தித்துப் பேசுவோம் !

      Delete
  16. ஓ..இருக்கே...தாலி இறங்க...டாஸ்மாக் இருக்கே......!!!!!!!

    ReplyDelete
    Replies
    1. நம்ம தங்கத் தமிழ் நாட்டில் டாஸ்மாக் இருக்கு ,சரிதான் !
      மற்றவர்களுக்கு ?:)

      Delete