இனிய சுதந்திர தின வாழ்த்துகள் !
---------------------------------------------------------
மரம் சும்மா இருந்தாலும் காற்று சும்மா இருக்க விடாது :)
''கொசுக்கடி வாங்கியே அவர் கவிஞர் ஆகிவிட்டாரா ,எப்படி ?''
''நான் சும்மா இருந்தாலும் கொசு சும்மா இருக்க விட மாட்டேங்குதே ன்னு சொல்றாரே !''
நேர்மையை படங்களில் வலியுறுத்தியவரா இப்படி ?
''சிலைக் கடத்தல் வழக்கில் அந்த இயக்குனர் மாட்டிக்கிட்டார் என்பதை உங்களால் நம்ப முடியலையா ,ஏன் ?''
''அவர் இயக்கிய படங்களில் எனக்கு மிகவும் பிடித்தது 'விரலுக்கேற்ற வீக்கம் 'ஆச்சே !''
இப்படித்தான் சிலர் தேசபக்தியை காசாக்குகிறார்கள்:)
''கொடியை ஏற்றிவிட்டு அந்த கஞ்சப் பிசினாறி கடைக்காரர் , புத்தியைக் காண்பிச்சிட்டாரா, எப்படி ?''
''மிட்டாயும் ,கொடியும் வேணுங்கிறவங்க ஒரு ரூபாய் கொடுத்து வாங்கிக்கணுமாம் !''
தலை கீழாய் நின்று கொடி வணக்கம் செய்ய முடியாதே !
''தலைநிமிர்ந்து கொடிவணக்கம் செய்யவேண்டியவங்க ஏன் தலைக் குனிஞ்சு நிற்கிறாங்க ?''
''தலைவர் ஏற்றின கொடி தலைக்கீழா பறக்குதே !
வீட்டிலாவது சுதந்திரம் உள்ளதா :)
எறும்புகளே ...
எந்தக் கோட்டையில் கொடியேற்ற
நீண்ட அணிவகுப்பு நடத்துகிறீர்கள் ?
பாதுகாப்பாய் எப்படி வாழ்வதென்று
உங்களிடம் இருந்துதான் நாங்கள் கற்றுக் கொள்ள நினைக்கிறோம் ...
பிரதமரே பாதுகாப்பாய் குண்டு துளைக்காத கண்ணாடி பின்னால் இருந்து எங்களை வாழ்த்துவதால் !
|
|
Tweet |
உங்களுக்கும் இனிய சுதந்திரதின வாழ்த்துக்கள்.
ReplyDeleteம் ...வாழ்த்துக்கு நன்றி :)
Deleteசுதந்திர தின நல்வாழ்த்துகள்.....
ReplyDeleteத.ம. +1
நன்றி ,காலையிலேயே வந்துட்டீங்க ,செங்கோட்டை பக்கம் போற ஐடியா ஏதும் இருக்கா ஜி :)
Deleteகொசு இவரையே கவிதையா நினைத்து இவர் காதில் பாடுது போலும்!
ReplyDeleteரசித்தேன் ஜி.
பாட மட்டுமா செய்யுது ?அவரை அவரே அடித்துக் கொள்ளும் அளவுக்கு திறமையைக் காட்டுதே :)
Deleteநம்மை கொலைகாரனா ஆக்கிடுச்சே...! அதனால்தானோ ‘டெங்கு’வாய் கொல்கிறதோ...?
ReplyDelete‘மூடப்பழக்க மில்லை... கேரளத்துப் பெண்களுக்கு மூடப்பழக்க மில்லை...!’ முடிஞ்சா கடித்திப் பார்...!
எதையும் ஓசியா வாங்கினா அதன் அருமை தெரியாதாம்...!
தலைவர் தலைகுனிய வச்சுட்டு அவரு மட்டும் குப்புற விழுந்து கிடக்கிறாரு...!
எல்லாம் ஒங்களுக்குப் பயந்துதான் ஓடிக்கொண்டிருக்கிறோம்...!
த.ம. 4
கொசுவும் ஆவியாய் வந்து பலி வாங்குகிறதா :)
Deleteஒரு மூடப் பழக்கம் இல்லாததற்கு சந்தோசப் படலாம் :)
இப்படி வேறு ஒரு சால்ஜாப்பா :)
நைட்டு கொஞ்சம் ஓவரா அடிச்சிட்டாரோ :)
உள்ளூர்லேயே ஓடிக் கொண்டிருந்தால் போதாதா ,வெளி நாட்டுக்கு போகணுமா:)
கொசுவின் ராகம்...ஹஹஹ்
ReplyDeleteவீட்டிலாவது சுதந்திரம் உள்ளதா....ரசித்தோம்....அது சரி இதில் வேறு ஏதேனும் அர்த்தம் உள்ளதோ??!!! ஜோக்காளிக்கு எப்படியோ??!!!!!ஹிஹிஹி
அனைத்தும் ரசித்தோம் ஜி
கொசுவோட ராகத்தை யாராலும் காப்பி அடிக்க முடியவில்லை :)
Deleteஅந்த விசயத்தில் பதிவர்கள் அனைவருமே பேறு பெற்றவர்கள்தான்!வீட்டிலே சுதந்திரம் இல்லாட்டி ,இணையத்தையே கட்டி அழ முடியுமா நம்மால் :)
ரசித்தேன். அது சரி, அது சம்பந்தமில்லாமல் ஒரு பெண்ணின் சிலை.
ReplyDeleteஇனிய சுதந்திரதின நல்வாழ்த்துகள்.
சிலை என்று டைப்பித்து பார்த்தேன் ,இது வந்தது ,பதிவிலும் சிலை வருதே !இந்த சிலையை நீங்க நேரில் பார்க்க வேண்டும் என்றால் மலம்புழா டேமுக்கு போகணும்:)
Deleteவாழ்த்துக்கு நன்றி !
tha.ma.7
ReplyDeleteஎனது உளங்கனிந்த இந்திய சுதந்திரதின வாழ்த்துகள்.
வாக்குக்கும் ,வாழ்த்துக்கும் நன்றி :)
Deleteஉங்கள் நகைச்சுவைப் பதிவுகளுக்கு ஏற்றாற்போல் பின்னூட்டமிடும் மூடில் இல்லை நான் சுதந்திர தின வாழ்த்துகள்
ReplyDeleteசுதந்திரம் சம்பந்தமாய் உங்களின் சிந்தனைகளை எழுதியிருந்ததை உங்களின் தளத்தில் படித்தேன் .எனக்கும் மூட் அவுட் ஆகிவிட்டது .70 ஆண்டுகள் ஆனபின்னரும் இந்தியா முன்னேறவில்லையே :)
Deleteவாழ்த்துக்கு நன்றி !
அனைத்தும் அருமை.
ReplyDeleteத ம 8
முக்கியமாய் ,படமும் கூட !அப்படித்தானே :)
DeleteOK Jee
ReplyDeleteFrom Mobile
மீண்டும் பிரயாணமா ஆஆஆ :)
Deleteரசித்தேன் ஜி...
ReplyDeleteசுதந்திர தின வாழ்த்துக்கள்.
தம +1
ஆகா ,என்ன தவம் செய்தேனோ உங்களின் வாக்கும் ,வாழ்த்தும் பெற !நன்றி குமார் ஜி :)
Deleteசிறப்பான ஜோக்ஸ்! பாராட்டுக்கள்!
ReplyDeleteகஞ்சப் பிசினாறி கடைக்காரர் செய்தது தவறுதானே :)
Deleteசுதந்திர தின வாழ்த்துகள்
ReplyDeleteவீட்டுச் சிறையில் இருந்து சுதந்திரமே கிடைக்காது போலிருக்கே :)
Delete