28 August 2016

மேஜர் ஆகாதவன் மேனேஜரா வந்தா, இப்படித்தான் :)

ஜாக்கிரதை ,நகையைப் பார்த்து வாங்குங்க :)
            ''HALLMARK ன்னு போட்டு இருக்கு ,ஆனா  வாங்கின நகைங்க கறுத்துப் போச்சு !''
            ''கடையிலே போய் கேட்க வேண்டியது தானே ?''
           ''நல்லாப் பாருங்க ,நாங்க HALF MASS ன்னுதான்  போட்டு இருக்கோம்னு சொல்றாங்க !'


தோழியின் அருமையான யோசனை :)         
            '' ஒண்ணு ரெண்டுன்னு எண்ணினா, கோபம் போயிடும்னு நீ சொன்னது சரிதாண்டி !''
           ''பத்து வரைக்கும் எண்ணியிருப்பியா?''
           ''எட்டாவது அடிக்கே, என் வீட்டுக்காரர் மயங்கி விழுந்துட்டாரே!''
கோர்ட்டுக்கு போனாலும் அவர் வாதம் செல்லாது :)    
              '' கிழிஞ்சிருக்கிற  என் சட்டை ,பனியனைப்  பார்த்தாலே ,என் மனைவியோட கோபம் உனக்கு புரிந்து இருக்கணுமே !''
             ''அட நீ வேற ,நான் படுற ஊமை அடியை  எப்படி  காட்ட முடியும் ?'' 
மேஜர் ஆகாதவன் மேனேஜரா வந்தா, இப்படித்தான் :)             
             ''உங்க மேனேஜருக்கு நக்கல் ஜாஸ்தியா ,ஏன் ?''
            ''தலைக்கு மேலே வேலை இருக்குன்னு  லீவு கேட்டா ...ஹேர் கட் பண்ணிக்க பெர்மிஷனே போதுங்கிறாரே!''

திருமணம் வேண்டாம் என்ற தீர்க்கதரிசிகள் !
        குளிக்க ,துணி துவைக்க குடிநீரை பயன்படுத்தாதே என கணவன்மார்கள் சொன்னால் ...
        மனைவிமார்கள் கேட்கமாட்டார்கள் என்பதால்தான் ,
        பொதுநலம் விரும்பிய சில தலைவர்கள் திருமணமே வேண்டாம் என்றார்கள் போலும் !

30 comments:

  1. tha.ma.1 - நண்பரே காலை வணக்கம்! வெளியூர் செல்ல புறப்பட்டுக் கொண்டு இருக்கேன்.

    ReplyDelete
    Replies
    1. இந்த அவசரத்திலும் ,ஜோக்காளியைக் கவனித்து கொண்டமைக்கு நன்றி :)

      Delete
  2. Replies
    1. திருமணம் வேண்டாம் என்றவர்கள் தீர்க்கதரிசிகள்தானே :)

      Delete
  3. MASS value-ங்கிறது இதுதான்...! ஹலால் முறையில் செய்யப்பட்டது என்று சொல்கிறார்கள்... எல்லாம் அப்படியா...? அது போலத்தான்... போங்க ஜி...!

    அடி மேல் அடி கொடுத்தால் அம்பியும் நகருங்கிறது சரியாத்தான் இருக்கு...!

    ‘உள் குத்து’ இதுதானா...?!

    ‘தல’ பட ரிலிஸ்க்கு... கட் அவுட்டுக்குத் தலைக்கு மேல பாலாபிஷேகம் பண்ணனுமுன்னு உண்மையச் சொல்ல வேண்டியதுதானே பாழாப் போனவனே...! ஒ பொண்டாட்டி தாலிய அறுக்க...!

    திருமணம் ஆயிரம் காலத்துப் பயிர் என்பதால் அதை வளர்க்க நம்மால் முடியாது என்று நினைத்து விட்டார்களோ...?!

    த.ம. 3

    ReplyDelete
    Replies
    1. பூமியில் எல்லா உயிர்களுக்கும் வாழ உரிமையுண்டு ,அது ,தானாக இறப்பதற்கு முன் கொன்று விட்டு ,அதுக்கு வலி தெரியாமல் கொன்றேன் என்று சொல்வதில் என்ன நியாயம் :)

      அம்பிதான் அடி தாங்க முடியாம தும்பியா பறந்து விட்டானே :)

      தலைவரோட மகளாச்சே ,உள்குத்துக்கு சொல்லியா தரணும்:)

      பாலாபிஷேகம் செய்யப் போறவனுக்கு பெர்மிஷன்கூடத் தரக் கூடாது :)

      ஆனால், அவர்கள்தான் சரித்திரத்தில் ஆயிரம் காலம் வாழ்கிறார்கள் :)

      Delete
  4. எட்டாவது அடியை மிக ரசித்து, மற்ற அனைத்தையும் படித்து ரசித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. அடி வாங்கினவர் வலியிலே துடிக்கிறார் ,நீங்க ரசிச்சீங்களா :)

      Delete
  5. //ஒண்ணு ரெண்டுன்னு எண்ணினா, கோபம் போயிடும்னு//

    எண்ணினா கை வலி தெரியாதுன்னு சொல்லியிருக்கலாமோ?!

    ReplyDelete
    Replies
    1. அது வேற இருக்கா ?உரக்கச் சொல்லியே அடிக்கலாம் :)

      Delete
  6. அனைத்தையும் ரசித்தேன். எட்டாவது அடியை சற்றே அதிகமாக.

    ReplyDelete
    Replies
    1. என்னமோ எட்டாவது அதிசயத்தை ரசிச்ச மாதிரி ,எல்லோரும் அதையே சொல்றீங்களே ,நியாயமா :)

      Delete
  7. Replies
    1. எதுசரி ,ஊமை அடியா ,எட்டாவது அடியா :)

      Delete
  8. வாவ் ..
    நகைப்பணி தொடரட்டும்
    தம +

    ReplyDelete
    Replies
    1. எட்டே அடியிலா ...வாவ் ! உங்க வாவ் வுக்கு இதானே அர்த்தம் :)

      Delete
  9. தலைக்கு மேலவேலைன்னு இனிமே அந்த மேனேஜர் கிட்ட சொல்ல முடியாது.....:)))))

    அடிகளையும் அதனுடே நகைச்சுவைகளையும் ரசித்தேன் ஐயா...
    தம 9

    ReplyDelete
    Replies
    1. அடுத்தவன் அடி வாங்கிறது ,உங்களுக்கு ரசிக்கத் தோணுதா :)

      Delete
  10. Replies
    1. மேனேஜரின் நக்கலை ரசிக்க முடியுதா :)

      Delete
  11. Replies
    1. ஊமை அடிக்கு எட்டு அடியே தேவலையா :)

      Delete
  12. 8 வது அடியும் ஊமை அடியும் ஹஹாஹ்...

    அனைத்தும் ரசித்தோம்..ஜி

    ReplyDelete
    Replies
    1. அடியைத் தாங்கிக் கொள்ளலாம் ,ஊமை அடியை வாங்கிக் கொள்ளலாம் !உள்குத்தைத் தாங்க முடியாது !நீங்கள் த ம வாக்குரிமையை இன்று பயன்படுத்தாததில் 'உள்குத்து 'எதுவும் இல்லையே :)

      Delete
  13. Replies
    1. ஒரு சொல் !ஒரு வாக்கு !மிக்க நன்றி அய்யா :)

      Delete
  14. ஒரு கிராம் கோல்ட் போல் இருக்கிறதே
    எட்டுவரைதானே எண்ணினாள் இன்னும் கோபம் கொஞ்சம் மீதி இருக்கு
    இரண்டு பேரும்கையால் ஆகாதவர்கள். இதில் பெருமை வேறு
    நல்ல வேளை ஆஃபீசிலேயே தலைக்கு மேல் உள்ள வேலையைச் செய்யச் சொல்லவில்லை.
    குடிக்க குளிக்க நல்ல நீர் கொடுக்க முடியாதவர்கள் தலைவர்களா

    ReplyDelete
    Replies
    1. ஒரு கிராமிலேயே half mass என்றால் தங்கம் எங்கே இருக்கப் போகிறது :)
      மயக்கம் தெளிந்து எழுந்த பிறகு மீதியை வைச்சுக்கலாம் :)
      பெருமை இல்லை ,படும் பாட்டை பேசிக்கிறாங்க :)
      ஒட்டடை அடிக்கத்தான் ஆள் இருப்பாங்களே :)
      ரோடு வந்திருச்சி ,தெரு விளக்கு வந்திருச்சி ,நல்ல தண்ணீதான் பாக்கியாக்கும்:)

      Delete
  15. ஊமை அடி அடிக்க போலிஸ் டிரையினிங் எடுத்திருப்பார்களோ

    ReplyDelete
    Replies
    1. இந்த சந்தேகம் அவரோட வீட்டுக்காரருக்கும் இருக்கு :)

      Delete