18 August 2016

மலேசியாவில் மட்டும் கபாலி ஏன் கெட்டவரானார் :)

               ''மலேசியா சினிமா சென்சார்  போர்டிலே இருக்கிறவங்க ,ரொம்ப ரோசக்காரங்களா, ஏன்  ?''
              ''கபாலி  போலீசில் சரண் அடைந்தார்னு, கிளைமாக்சில்  போட்டால்தான் இங்கே ரிலீஸ்  பண்ண முடியும்னு சொல்லிட்டாங்களாமே !''

அப்பனுக்கு  எதிரி வேறெங்கும் இல்லே :)           
               ''மாப்பிள்ளை ,வரதட்சணையா  கார் கேட்குறீங்களே ,என்ன தைரியம் உங்களுக்கு ?''
               ''எல்லாம் உங்க பொண்ணு கொடுக்கிற தைரியம் தான் .கேட்கச் சொன்னதே அவங்கதானே !''

காதலியின் அந்த காலணிக்கு,இந்த காலணி சரிதானே :)
          ''காதலிக்கு  கொலுசு வாங்கித் தரப்போறீயா ,ஏன் ?''
           ''தயங்கித் தயங்கி நான் காதலை அவளிடம் சொன்னப்போ ,காலணியைக் கழட்டாம இருந்தாளே,அந்த நன்றிக்காகத்தான் !''
குடிகாரனின் சப்பைக்கட்டுக்கும் ஒரு அளவில்லை!                
             ''நீங்க மொடாக்குடியன் ஆவதற்கு  காரணம்   லேண்ட் லைன் போன்னு எப்படி சொல்றீங்க ?''
              ''அது ,டிரிங்க் ,டிரிங்க்ன்னு மணி அடிச்சுக்கிட்டே இருந்ததே !''

காசு பணம் துட்டு மணி இருந்தாதான் மதிப்பு !
  சாமிகளிலும் டாட்டா ,பிர்லாக்கள் உண்டு ...
  தரித்திர நாராயணன்களும் உண்டு !

24 comments:

  1. Replies
    1. அபிநயம் புரியும் மெட்டிக் காலையும்தானே:)

      Delete
  2. கபாலி ஜோக் நம்பர் ஒண்ணு.

    ReplyDelete
    Replies
    1. மலேசிய சென்சார் சொன்னதை ,இங்கேயுள்ளவர்கள் ஏன் சொல்லவில்லையோ :)

      Delete
  3. Replies
    1. டிரிங்க் ,டிரிங்க்ன்னு ஓசை வந்ததெல்லாம் அந்த காலம் இல்லையா :)

      Delete
  4. கடைசியில க(பா)லி... போலிஸுக்கு வேலை கொடுக்கனுமுல்ல...!

    ஆடித் தள்ளுபடியில... ஓர் ‘ஆடி’ கார் கேட்கச் சொன்னா... நா என்ன எனக்கா கேக்கிறேன்... ஒங்க பொன்னு சொகுசா போகனுமுல்ல... அதுக்குத்தான்...!

    ’நெருப்புடா... நெருங்குடா’ன்னு... ஏற்கனவே செருப்பு பிஞ்சுபோச்சாம்...! ’பிஞ்ச செருப்புல அடிக்கக்கூடாதாம்...’அநத நேரத்தில நீங்க நெருங்கிட்டீங்க... நல்லவேளை பிழைத்துக் கொண்டீர்கள்...!

    இப்ப ஒங்களுக்கு கடைசி மணியடிக்கிற மாதிரி ஆயிடுச்சே...!

    கண்ணத் திறக்கனும் சாமி...!

    த.ம. 2



    ReplyDelete
    Replies
    1. என்கௌன்டர்லே போட்டுத் தள்ளுற மாதிரி காட்டினாலே ,இங்கேயிருக்கிற கிறுக்குப் பய பிள்ளைங்க தற்கொலை பண்ணிக்கும் போலிருக்கே :)

      ஆடி காரை போதையில் ஒட்டி சாலையோரத்தில் படுத்துக் கிடக்கிறவனை மேலே அனுப்பிருவீங்க..வேண்டவே வேண்டாம் :)

      அன்னைக்கு யோகமான நாள்னு போட்டு இருந்தது ,இதுக்குத்தான் போலிருக்கு :)

      நல்லா அடிக்கட்டும்,காதுலே விழவா போகுது :)

      அவர் பாடே ததிங்கினத்தோம் ,உங்களை எங்கே பார்க்கிறது :)

      Delete
  5. Replies
    1. ஸ்ரீரங்கத்தில் அன்னதானம் சாப்பிட போகும் போது சொல்லுங்கள் ,நானும் வருகிறேன் ..ஹிஹி..வேறொன்றுமில்லை ,உங்களின் பதிவைப் படித்ததால் வந்த மறுமொழி இது :)

      Delete
  6. அனைத்தும் ரசித்தேன் நண்பரே!
    த ம 6

    ReplyDelete
    Replies
    1. குப்பைகளை நம்ம நாட்டுக்கு அனுப்புகிறார்கள் என்று உங்கள் தளத்தில் வருத்தப் பட்டிருந்தீர்கள்,நாம்தான் குப்பையில் மாணிக்கம் என்று சொல்கிறோமே ,அதனால் ஆகியிருக்கும் :)

      Delete
  7. அப்படியா? நகைச்சுவையுடன் புதிய செய்தி கண்டேன். (கபாலி)

    ReplyDelete
    Replies
    1. குற்றம் செய்தவன் தண்டனை அடைந்தே தீரணும்,இல்லாவிட்டால் போலீசுக்கு அவமானம் ....படத்தின் முடிவு , ரசிகர்களின் முடிவுக்கு விடுவதைப் போன்று இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது .எனவே 'கபாலி ,போலீசிடம் சரண் அடைந்தான் 'என்று கடைசியில் காட்ட வேண்டுமென்று மலேசிய சென்சார் அதிகாரிகள் கூறியதன் அடிப்படையில் அதன் படியே வாசகம் சேர்க்கப்பட்டு, படம் வெளியாகி உள்ளதாம் !உண்மையில் அவர்களின் பொறுப்புணர்வை பாராட்டத்தானே வேண்டும் :)

      Delete
  8. கபாலி வாய்ஸ் மலேசியாவிலே பலிக்கலையோ? பொண்ணுங்க உஷாராத்தா இருக்குதுங்க! நன்றிக்கடன் போல! அனைத்தும் சிறப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. அவரோட பாச்சா இங்குதான் பலிக்கும் :)
      அப்பன்கிட்டே இப்ப கறந்தாதானே முடியும் :)
      இவனுக்கு கால்கட்டு ,காதலிக்கு கால் கொலுசா :)

      Delete
  9. மலேசியாவில் இருக்கிறவுக..சோறு தின்னுறவுக..அதனால்தான்..கபாலி அங்கு கெட்டவரானார்...

    ReplyDelete
    Replies
    1. சோறு மட்டுமா ?வன் தான் மீ என்ற சூப்பும் ரொம்ப பிரபலமாமே :)

      Delete
  10. ஒழுக்கத்துக்கும் சுத்தத்துக்கும் பேர்போன ஊர்ல அப்படித்தான் செய்வார்கள்.

    ReplyDelete
    Replies
    1. கபாலி கதைக் களம் மலேசியா என்பதால் ,அவர்கள் உத்தரவு சரிதான் என்று நினைக்கிறேன் :)

      Delete
  11. கபாலி படம் பார்க்கவில்லை இருந்தாலும் கதை முடிவை மாற்றச் சொன்னதில் நியாயம் இருக்கும்போல
    வரதட்சிணையை ஊக்குவிப்பதே பெண்கள் தானோ . பெண்களை நம்புவதற்கில்லை சரியான நேரத்தில் காலை வாரலாம்
    வித்தியாசம் தெரிய பாதசரம் என்று சொல்லலாம்
    குடிக்க ஒரு சப்பைக்கட்டுக் காரணம்
    காசுபணம் இருப்பவர்கள்தான் விளம்பரப்படுத்தப் படுகிறார்கள்

    ReplyDelete
    Replies
    1. மலேசிய சென்சார் சொன்னதும் உலகத்துக்கே பொருந்தும் :)
      ஒரு சில இஅடந்கலில் இப்படியும் நடக்கத்தான் செய்கிறது :)
      பாத ரசம் உண்டு .பாத சரம் உண்டா :)
      அந்த டிரிங் சத்தம்தான் இப்போ இல்லையே ,குடியை நிறுத்துவாரா :)
      திருப்பதி வருமானத்தில் கோடியில் ஒரு பங்கு கூட வராது அப்பன் திருப்பதி கோவிலுக்கு :)

      Delete
  12. கபாலி முடிவு அட போடவைத்தது.

    கடைசி...மக்கள் ஏற்படுத்த்வதுதானே ஜி...

    ReplyDelete
    Replies
    1. தங்களின் பொன்னான பத்தாவது வாக்கு விழுந்து இருந்தால் ,அது என்னையும் 'அட' போட வைத்திருக்கும் ,அதை தின்று பசியாறி இருப்பேன் :)

      நம்ம ஊர் கோயில் உண்டியலில் நாணயத்தைப் போடுறவன்தான்,பக்கத்துக்கு மாநில கோவிலுக்கு கொண்டு போய் கொட்டுறானே :)

      Delete