6 August 2016

கேரளக் குட்டியை மணந்ததால் வந்த குழப்பமோ :)

  துட்டை எவன் கொடுப்பான் :)           
                    ''இந்த சேலை, பார்டரில் மாங்காய் டிசைன் கொடுத்துள்ளார்கள்,சேலைக்கு மேட்சிங்கா ஜாக்கெட் பிட் கொடுத்துள்ளார்கள் ,சிகப்பு பார்டருக்கு ரோஸ் பாடி கலரை கொடுத்துள்ளார்கள் ...இப்படி வர்ற டி வி விளம்பரத்தைப் பார்த்து  ஏன் சிரிக்கிறீங்க ?''
              '' இதை வாங்க ,யாருக்கு யார்  காசைக்  கொடுத்துள்ளார்கள்  என்பதையும் சொன்னால் சரியாக இருக்குமே !''
                                                        
அகலக்கால் வைச்சா  சிக்கல்தான் :) 
            ''ஓடுற பஸ்ஸிலே ,கண்டக்டர்  அகலக்கால் வச்சுக்கிறது வழக்கம்தானே ,இதுக்காகவா சஸ்பென்ட் பண்ணிட்டாங்க ?''
            ''அகலக்கால் வைச்சு, டிக்கெட் கிழிச்சு கொடுத்திருந்தா பரவாயில்லை ,காசை  மட்டும் வாங்கி போட்டுகிட்டாராமே!''

இவருக்கு பேய் பயம் இருக்கும் போலிருக்கே !
           ''என்னங்க ,இந்த லாட்ஜிலே அறைகள் சுத்தமாத் தானே இருக்கு ...ஏன் இங்கே தங்க வேண்டாம்னு சொல்றீங்க ?''
           ''எல்லா அறைகளிலும் சீலிங் ஃபேன்களைக் கழற்றிவிட்டு பெடஸ்டல் ஃபேன்களை மாட்டி இருக்கிறதைப் பார்த்தால்,விபரீதமா ஏதோ நடந்த மாதிரி தோணுதே !''

கேரளக் குட்டியை மணந்ததால் வந்த குழப்பம் !
        ''நான்  காதலிச்சு  கல்யாணம் செய்துக்கிட்டது  ,என் பையன் மூலமா  தெரிஞ்சதா, எப்படி?''
        ''அவன்  ,மலையாளம்  என் 'தாய் 'மொழி ,தமிழ் என் 'தந்தை 'மொழின்னு பயோ டேட்டாவிலே எழுதி இருக்கானே !''

தனிக் குடித்தனம் போகத் தடுக்கும் தாய்ப் பாசம் !
        திருமணமானவுடன் ஆணின் வாழ்க்கை ...
         வால் கிளாக் பெண்டுலம் போல் 
        அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் அலைகிறது ...
        இரு பெண்மணிகளின் தயவால் !

21 comments:

  1. கடை ஓனர்தான் கொடுத்து வைத்தவர்...!

    நல்ல வேளை ஓட்டுநர் அகலக்கால் வைக்கவில்லை... அப்புறம் அகாலம்தான்...!

    பேய்க்குப் போய் பயப்படுறீங்களா...? பயப்படாதிங்க... அதான் நான் கூடவே இருக்கேன்ல்ல...!

    பையனோட பையன் தாய்மொழி ‘தெலுங்கு’ன்னு செப்புறானே...!

    இவன் என்ன பிரபுதேவாவா...?!

    த.ம. 2


    ReplyDelete
    Replies
    1. நம்மிடம் பறித்துக் கொள்வதால் , உண்மையில் அவர்தான் கொடுத்து வைத்தவர் :)

      பயணிகள் செய்த புண்ணியமோ :)

      அதனாலேதானே பயமாயிருக்கு :)

      வாழ்க பாரத விலாஸ் :)

      பிரபுதேவா எங்கே ஒரே இடத்தில் நின்று ஆடினார் :)

      Delete
  2. அனைத்தையும் ரசித்தேன் ஜி.

    ReplyDelete
    Replies
    1. மாங்காய் பார்டர் அருமைதானே :)

      Delete
  3. அவனோட பயோ டேட்டாவும் அருமைதானே :)

    ReplyDelete
  4. Replies
    1. வேற வழியில்லையே :)

      Delete
  5. 01. நாமதான்...
    02. காலை ஒடிச்சிட்டாங்களோ...
    03. இப்ப எல்லா லாட்ஜுமே இப்படித்தான்
    04. உண்மைதானே..
    05. இது கடைசிவரை இப்படித்தானோ...

    ReplyDelete
    Replies
    1. இளிச்சவாயர்கள் :)
      கை செய்த தப்புக்கு காலை ஏன் ஓடிக்கணும்:)
      பயப் படவே வேண்டாம் :)
      நீங்க சொன்ன மாதிரி ,இவங்களும் கோவை வாசிகள் தான் :)
      கீ இருக்கும் வரை பெண்டுலம் ஆடிக்கொண்டுதானே இருக்கும் :)

      Delete
  6. ரசித்துப் படித்தேன்

    ReplyDelete
    Replies
    1. பார்த்தும் ரசிக்கலாமே :)

      Delete
  7. ''அவன் ,மலையாளம் என் 'தாய் 'மொழி ,தமிழ் என் 'தந்தை 'மொழின்னு பயோ டேட்டாவிலே எழுதி இருக்கானே !''//

    அழகான கேரளக் குட்டி அதிபுத்திசாலிப் பையனைப் பெற்றிருக்கிறாளே!!!

    ReplyDelete
    Replies
    1. கிராசிலே பிறந்தவன் அப்படித்தான் இருப்பான் :)

      Delete
  8. தனிக்குடித்தனம் நல்ல நகைச்சுவையுடன் கூடிய யதார்த்தம் நன்று

    ReplyDelete
    Replies
    1. நல்ல மனுஷன் யோசிக்கத்தானே செய்வான் :)

      Delete
  9. நண்பர் கில்லர்ஜீ பதிவில் கூறியபடி..இப்படியும் மலையாளிகள் தமிழ் நாட்டில் வளர்ச்சி அடைந்துவிடடார்கள்...

    ReplyDelete
    Replies
    1. அங்கு கோவைத் தமிழ் அழிந்து மலையாளத் தமிழ் வாழ்ந்து கொண்டிருக்கிறது :)

      Delete
  10. Replies
    1. நீங்கள் படத்தைச் சொல்லவில்லைதானே :)

      Delete
  11. Replies
    1. இரு பெண்மணிகளின் தயவால் அலைக்கழிக்கப் படும் நிலையை ரசிக்க முடியுதா :)

      Delete