28 November 2013

அன்று ஆனுக்கு 17,ஜானுக்கு 21... இன்றுவரை ஜாலிதான் !

 ஓடிப்  போய் கல்யாணம்தான் கட்டிக்கலாமா என்று நம்ம ஊர் இளசுகள் இப்போதுதான் பாடிக்கொண்டிருக்கிறார்கள் ...

1932லேயே ஓடிப்போய் மோதிரம் மாற்றிக்   கொண்டுள்ளார்கள்  ...
அமெரிக்காவைச் சேர்ந்த ஜான் ,ஆன் தம்பதியர்  !
பாரம்பரியம் மிக்க  நம்ம பாரதத்தில் ...
கள்ளக்காதல் ,கணவன் கொலை ,மனைவி கொலை ,காதலன் கொலை ,காதலி கொலை என்று தினசரி கொலை கொலையா பார்த்துக் கொண்டிருக்கிறோம் ...
உன் குழந்தைகள் ,என் குழந்தைகள் ,நம் குழந்தைகளுடன்  விளையாடிக் கொண்டிருக்கின்றன என்று தாம்பத்திய வாழ்க்கைக்கு அற்புத விளக்கம் சொன்ன 
அமெரிக்காவில்தான் ...
ஜான் ,ஆன் தம்பதியர் தங்களின் 81வது திருமண நாளை கொண்டாடியுள்ளனர் ...
ஜானுக்கு வயது 102 ஆனுக்கு வயது 98...
மூத்த மகளுக்கு வயது 80...
பேரப் பிள்ளைகள் 14,கொள்ளுப் பேரப் பிள்ளைகள் 16ம் அவர்களுக்கு உள்ளதாம் ...
நல்ல வேளை ,இவர்கள் இந்தியாவில் இல்லாமல் போனார்கள் ...
இருந்திருந்தால்  தனியாக பள்ளிக்கூடம் வைக்கும் அளவிற்கு வாரிசுகள் எண்ணிக்கை கூடியிருக்கும் ...
காதலர் தினத்தன்று இவர்களிடம் ஆசீர்வாதம் வாங்கும்இளைஞர்கள்எண்ணிக்கை 
கூடிக்கொண்டே வருகிறதாம் ...
ஆனால் ,டைவர்ஸ் செய்யாமல் வாழ்வோர் எண்ணிக்கைதான்  தெரியவில்லை !



12 comments:

  1. ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்...

    ReplyDelete
    Replies
    1. அதனால்தான் ஆசீர்வதித்துக் கொண்டிருக்கிறார்கள் !
      நன்றி

      Delete
  2. Replies
    1. வாழ்க வளமுடன் ,அப்படித்தானே ?
      நன்றி

      Delete
  3. ம்ம்ம்ம்ம். சரி தான்!

    த.ம. 3

    ReplyDelete
    Replies
    1. எது இந்தியாவில் பிறக்காகததா ?
      நன்றி

      Delete
  4. அதிசயம் ஆனாலும் உண்மை!

    ReplyDelete
    Replies
    1. அமெரிக்கா என்றாலே டைவர்ஸ்தான் என்று இனிமேல் நினைக்க வேண்டியதில்லை !நன்றி

      Delete
  5. நீங்க சொல்றதும் வாஸ்தவம்தான்..

    ReplyDelete
    Replies
    1. அமெரிக்கத் தம்பதிகள் இப்படி வாழ்கிறார்கள் என்றால் ,அது அவர்கள் செய்த தவம்தான் இல்லையா ?
      நன்றி

      Delete
  6. தவம் எல்லாம் கிடையாது..பகவான்ஜி! இது ரொம்ப சிம்பிள்! தமிழ் அறிவு இல்லை என்றால் கீழ் கண்ட வாக்கியம் புரியாது!

    உண்மை தான்: ஆணுக்கு ஜான் [John] மிக முக்கியம்!
    க+

    ReplyDelete
    Replies
    1. ஜான் ஏறினால் முழம் சறுக்கும் என்பதும் எல்லோருக்கும் புரியும் பழமொழி ஆச்சே !
      நம்ம ஜானுக்கு சறுக்கலே இல்லைன்னு உங்கள் விளக்கத்தின் மூலமாய் தமிழ் கூறும் நல்லுலகம் புரிந்துக் கொண்டிருக்கும் என்று நம்புகிறேன் !
      நன்றி

      Delete